இன்று 17 பிப்ரவரி 2016, தமிழ் யுவர் ஸ்டோரி.காமில் எனது நேர்காணல்.
நன்றி யெஸ். பாலபாரதி !
குழந்தைப்பருவம்
“சிறுவயது அனுபவங்களால் கிடைக்கிற பக்குவம் வாழ்நாள் முழுவதும் துணை வருவதாக நம்புகிறேன். பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி சிந்துபூந்துறையில். உறவுகள் சூழ்ந்த கூட்டுக் குடும்பத்து நினைவுகள் அனைத்துமே பொக்கிஷங்கள். உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், தம்பி, இரண்டு தங்கைகள். எனக்கு ஒன்பது வயதாக இருக்கையில் அப்பா விபத்தில் காலமாகி விட தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தோம். நான் கல்லூரி நுழைந்த சமயம், தாத்தா காலமானார். அதே வருடம் அண்ணனும் தவறியது ஆறாத ரணம். அதிலிருந்து அம்மா மீண்டு வர அவரது பெற்றோர் வசித்த பகுதிக்கு, எங்கள் கல்லூரிக்கு சற்று அருகே குடி பெயர்ந்தோம். பெண் பிள்ளைகளுக்கு படிப்பு எதற்கு, அடுத்தடுத்து திருமணம் செய்து வைத்து விடலாமே என உறவினர்கள் பலர் சொன்னபோது, உறுதியாக இருந்து எங்கள் மூவரையும் முதுகலைப் பட்டம் வாங்க வைத்தார் அம்மா.
பொருளாதார ரீதியான பிரச்சனைகள் பெரிதாக இருக்கவில்லை என்றாலும் அப்பாவின் மறைவுக்குப் பிறகு, எதிலும் அதிக ஆசை கூடாதெனச் சொல்லி வளர்த்தார் அம்மா. அதன்படி நாங்கள் நடந்து கொண்டதே தனக்குப் பெரிய பலமாக அமைந்ததென்று இப்போது அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே எந்த உயர்வுகளையும் இயல்பாக எடுத்துக் கொண்டு தற்போது நாங்கள் கடந்து செல்வதாகவும் சொல்வார். எந்த பிரச்சனையும் பாஸிட்டிவாக அணுகவும் அவரிடமே கற்றோம்.
கல்லூரி மற்றும் திருமணம்
நன்றி யெஸ். பாலபாரதி !
இணையம் பயன்படுத்தும் தமிழ்வாசகர்களிடம் மிகவும் அறிமுகமான பெயர் ராமலக்ஷ்மி. இவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட எழுத்தாளர். எழுத்தாளராகவும், நல்ல வாசகியாகவும் இருப்பது அவரது மொழியாளுமையைக் காட்டுகிறது என்றால் ஒரு புகைப்படக் கலைஞராக அவர் உருவாக்கும் படைப்புகள் அவரது காட்சி சார்ந்த நுன்ணுர்வைக் காட்டுகிறது. தான் கடந்துவந்த பாதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
![]() |
“..... இலக்கை நோக்கிய பயணமாக இல்லாமல் இயன்றவரை சிறப்பாகச் செய்யும் நோக்கத்துடன் பயணிக்கிறேன். ..." |
குழந்தைப்பருவம்
“சிறுவயது அனுபவங்களால் கிடைக்கிற பக்குவம் வாழ்நாள் முழுவதும் துணை வருவதாக நம்புகிறேன். பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி சிந்துபூந்துறையில். உறவுகள் சூழ்ந்த கூட்டுக் குடும்பத்து நினைவுகள் அனைத்துமே பொக்கிஷங்கள். உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், தம்பி, இரண்டு தங்கைகள். எனக்கு ஒன்பது வயதாக இருக்கையில் அப்பா விபத்தில் காலமாகி விட தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தோம். நான் கல்லூரி நுழைந்த சமயம், தாத்தா காலமானார். அதே வருடம் அண்ணனும் தவறியது ஆறாத ரணம். அதிலிருந்து அம்மா மீண்டு வர அவரது பெற்றோர் வசித்த பகுதிக்கு, எங்கள் கல்லூரிக்கு சற்று அருகே குடி பெயர்ந்தோம். பெண் பிள்ளைகளுக்கு படிப்பு எதற்கு, அடுத்தடுத்து திருமணம் செய்து வைத்து விடலாமே என உறவினர்கள் பலர் சொன்னபோது, உறுதியாக இருந்து எங்கள் மூவரையும் முதுகலைப் பட்டம் வாங்க வைத்தார் அம்மா.
![]() |
“உறவுகள் சூழ்ந்த கூட்டுக் குடும்பத்து நினைவுகள் அனைத்துமே பொக்கிஷங்கள். ” |
கல்லூரி மற்றும் திருமணம்