2026:
யுகங்கள் கடந்தும் கம்பீரம் குறையாத கோபுரங்களின் தரிசனம், சொர்ண புஷ்கரணியின் அமைதி, பிரகாரங்களிலும் மண்டபங்களிலும் சூரியக் கதிராக ஊடுருவி நிற்கும் இறையருள்! அண்மையில் எடுத்த 15 + படங்களுடன் ஒரு பகிர்வு.
#2 காந்திமதி தாயார் கோபுரம்
#3 அம்மன் சன்னதி கொடிமரம் (துவஜஸ்தம்பம்)
#4 பொற்றாமரைக் குளம் (சொர்ண புஷ்கரணி)
(மேற்கு நோக்கிய பார்வையில்..)
#5 நீரும் நிழலும் நிசப்தமும்
#6 ஆலய அமைதியின் காவல் தெய்வங்களாக..
#8 அருள் ஒளி சூடிய பிரகாரம்!
#9 ஆசி ஒளிக் கீற்றாக..
#10 ஒளி ஊடுருவும் இறைக் கூடங்கள்..
#11 பக்திப் பெருவெளியாக..
#15 மேகங்கள் வணங்கும் ராஜகோபுரம்
#20
**
2012, 2024_ஆம் ஆண்டுகளில் எடுத்து ஃப்ளிக்கரில் மட்டுமே பதிந்தவற்றை இந்த பதிவோடு சேமிக்கிறேன்:
பொற்றாமரைக் குளம்
2012:
2024:
#18
“கண்ணாரமுதக் கடலே போற்றி!”
(தெற்கு நோக்கிய பார்வையில்..)
#19
‘உலகாளும் ஈஸ்வரியே காந்திமதி!’
‘அன்பர்கட்கு அருள்பவளே காந்திமதி!’
**
தொடர்புடைய முந்தைய பதிவின் இணைப்பாக, ஒளிப்படக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்த காலத்தில்.., வலையுலகின் பொற்காலமாகிய 2010_ல், சிறிய கேமராவில் எடுத்த படங்களின் தொகுப்பு:
இந்தப் பதிவின் “இசைத் தூண்கள்” படம் விக்கிப்பீடியாவில் என் பெயர் (வாட்டர் மார்க்) நீக்கப்பட்டு :) பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்களில் ஒளிப்படங்கள் எடுக்கத் தனியாகக் கட்டணம் செலுத்தி அனுமதிச்சீட்டு வாங்கும் வசதி இருந்தது. காலப் போக்கில் எல்லாக் கோயில்களையும் போல அது நிறுத்தப்பட்டு விட்டது. கோயில் சிற்பங்கள், இசைத் தூண்கள் போன்றவற்றைப் படம் எடுக்கத் தடை இருக்கிறது. மக்கள் குளம், கோபுரம், வெளிப் பிரகாரங்களில் மட்டும் படம் எடுக்கிறார்கள். இந்த முறை, நானும் அவ்வாறே.
***



















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக