உலகமே கொரனாவால் ஸ்தம்பித்து நிற்கிறது. இந்தியாவில், பிழைப்புக்காக வேறு மாநிலங்களில் வசித்து வந்த உழைப்பாளிகள் ஊரடங்கு உத்திரவு வந்ததும் உணவுக்கு வழியில்லாத நிலையில் சொந்த ஊர்களை நோக்கி இன்னமும் கால்நடையாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள், கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி. இந்தப் பயணத்தை எதிர் கொள்ள இயலாமல் பெண்களும், குழந்தைகளும் இறந்து போகும் செய்திகளும் வருகின்றன. தற்போது அரசு அவர்களுக்காக இரயில்களை இயக்க ஆரம்பித்திருப்பது ஆறுதல்.
நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது முதன்மையானதாக இருக்கும் இந்தச் சூழலில், பலதரப்பட்ட துறைகளும் முடங்கியதால் அன்றாட உழைப்பில் வாழ்பவர்கள் உட்பட மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் ஏராளம். விரைவில் அனைத்துக்கும் தீர்வு வரட்டுமாக!
கொரானா நோயாளிகளுக்காக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புறவுத் தொளிலாளர்களை வாழ்த்துவோம்.
மே தின வாழ்த்துகள்!
கடந்த ஒரு வருடத்தில் ஃப்ளிக்கர் பக்கத்தில் பகிர்ந்த, உழைப்பாளர்களின் படங்கள்... தொகுப்பாக.. இங்கே..
#2
#3
#4
#5
#6
#7
**
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:1. மே தினம் - இவர்கள் இல்லையேல்..
https://tamilamudam.blogspot.com/2019/05/blog-post.html
2. மே தினம் : “பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே..”
https://tamilamudam.blogspot.com/2016/05/blog-post.html
3.மே தினம் - சிறு வியாபாரிகள்
https://tamilamudam.blogspot.com/2015/05/blog-post.html
4. மே தினம் - உழைக்கும் கரங்கள்
https://tamilamudam.blogspot.com/2012/05/blog-post.html
5. மே தினம் - தினமணி கதிரில்.. ‘பிடிவாதம்’
https://tamilamudam.blogspot.com/2011/05/blog-post.html
6. நட்சத்திரங்கள்
https://tamilamudam.blogspot.com/2010/05/blog-post_14.html
***
படங்கள் எல்லாம் அழகு . படம் 2 மற்றும் கடைசி படம் ரொம்ப அழகு. பாராட்டுக்கள்
பதிலளிநீக்குநன்றி. பிடித்த படங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும்.
நீக்குஅனைத்தும் சீக்கிரம் சரியாகப் பிரார்த்திப்போம். படங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஆம், பிரார்தனை மட்டுமே நம்மால் இயன்றது.
பசிப்பிணி நீக்குவதே முதல் செயலாக இருக்க வேண்டும்...
பதிலளிநீக்குநாடு மீண்டு வருமென நம்புவோம். நன்றி.
நீக்குபடங்கள் அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குஇன்றைய சூழல் விரைவில் சரியாக வேண்டும் என்பதே பலருடைய விருப்பமும் பிரார்த்தனையும்.
கருத்துக்கு நன்றி வெங்கட்.
நீக்குராமலக்ஷ்மி நலமா?
பதிலளிநீக்குஉங்களிடமிருந்து வெகு நாட்கள் ஆச்சே ! போஸ்ட் வரவில்லையே என்று நினைத்தேன்.அழகான படங்கள்.
அன்றாடம் கூலி வேலைப் பார்த்து ஜீவிக்கும் தொழிலாளர்கள் துன்பம் துடைக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
நானும் நேற்று உழைப்பாளர்கள் போஸ்ட் போடலாம் என்று நினைத்து அப்புறம் போடவில்லை. சாமானியர்கள் படங்கள் நிறைய இருக்கிறது.
ஸ்பான்டிலிடிஸ் பிரச்சனை மீண்டும். கழுத்து மற்றும் கை விரல்கள் வலி காரணமாக கணினி நேரத்தைக் குறைத்து விட்டுள்ளேன். இப்போது சற்று பரவாயில்லை. ஃப்ளிக்கரில் மட்டும் தினம் ஒரு படமென தொடர்ந்து இயங்கி வருகிறேன் ‘லெபக்ஷி’ பயணப் படங்களின் தொகுப்பு இருந்தபடியால்:).
நீக்குசாமானியரின் படங்களை ஒரு தொகுப்பாக எப்போது வேண்டுமானாலும் பதியலாமே. மே மாதம் பொருத்தமானதே. காத்திருக்கிறேன் தங்கள் பதிவுக்காக.
அக்கறையான விசாரிப்புக்கு நன்றி கோமதிம்மா.
இப்போது வீட்டிற்கே வந்து விற்பனை செய்கிறார்கள். மிகக் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். பொருட்களை விற்றுவிட்டு வீடு திரும்பினால் போதும் எனும் மனநிலை. பொருட்களின் அளவை கூட பார்க்காமல் அள்ளித் தருகின்றனர்.
பதிலளிநீக்குதுயரமான காலங்களில் எப்போதும் எளியவர்களுக்கே இழப்பு அதிகம்.
உண்மைதான். உழைத்து வாழ்ந்த எளியவர்கள் இப்போது உணவுக்கே திண்டாடுகிறார்கள்.
நீக்குகருத்துக்கு நன்றி.
வெளி மாநிலங்களில் இருப்போர் கால் நடையாக சென்று இறந்தது அறிந்து மிகுந்த துயரம்.
பதிலளிநீக்குதொழில் இல்லாமல் பசி என்பது இங்கும் உள்ளது இவர்களில் சிலர் வீடுகளுக்கு வந்து உணவுப் பொருட்கள் பணம் பெற்று செல்கிறார்கள்.
அருமையான பதிவு
பதிலளிநீக்கு