திங்கள், 7 டிசம்பர், 2015

வெள்ளமும் உதவும் உள்ளங்களும்..

பெய்து முடித்த பெருமழை மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டிருக்கிறது. உறவுகள், நட்புகள் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்ட அனுபவங்களும், செய்திகள் மூலம் அறியவரும் மக்கள் படும் இன்னல்களும் கலவரத்தை அளிப்பதாக உள்ளன. அரசோ, ராணுவமோ யார் என்ன செய்கிறார்கள் எனப் பாராது நம்மால் என்ன முடியும் என ஓடி ஓடி உதவிக் கொண்டிருக்கிறார்கள் தன்னார்வலர்கள். பிற ஊர்கள், மாநிலங்களிலிருந்தும் உதவிப் பொருட்களோடு விரைந்து கொண்டிருக்கிறார்கள். நேரில் சென்றோ அல்லது நம்பகமான குழுவினர் மூலமோ பாதிப்படைந்தவர்களுக்கு சரியாகச் சென்று சேர்வதில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்கள். பெங்களூரிலும் அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் நண்பர் குழுக்கள் பொருட்கள், மற்றும் உடைகளை வீடு வந்து வாங்கிச் செல்கிறார்கள். உதவிக் கொண்டிருக்கும் அனைவரும், சிரமத்தில் இருப்பவர்களின் பலதரப்பட்ட தேவைகளையும் மனதில் கொண்டு கவனத்துடன் செயலாற்றி வருகிறார்கள். மனிதமும், சகோதரத்துவமும் மரித்துவிடவில்லை என்பது இப்பேரிடர் காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய ஆறுதல்.

உதவி வரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

வர்களில் சிலரோடு கைகோர்க்க விருப்பமா?

வா. மணிகண்டனின் நிசப்தம் அறக்கட்டளை மூலமாகச் செய்திடலாம்:
வங்கி விவரம்பணித் திட்டம்;  ஏற்பாடுகள்; உதவும் உள்ளங்கள் " . இவற்றைத் தொடர்ந்து நிசப்தத்தின் செயல்பாடுகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சேர்ந்து வரும் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு, முகாமில் அன்றி, வீடு திரும்பிய ஆயிரம் குடும்பங்களுக்கு பத்துநாட்கள் சமைக்கத் தேவையான பொருட்கள் வழங்கப்பட உள்ளன.  அடுத்த பகுதி 'நிலைமை ஓரளவு சீரடைந்த பிறகு அந்தப் பகுதி மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், காலணி போன்றவை' வாங்கிக் கொடுக்கப் பயன்படுத்தப்பட உள்ளது.

வசரத் தேவையை அடுத்து, மக்களது வருங்காலம் என்ன என்பதைச் சிந்தித்து, அவரவர் ஆற்றி வந்த தொழிலுக்கான உபகரணங்களை வாங்கித் தர முடிவு செய்துள்ளார்கள் சங்கர்ஜி மற்றும் குழுவினர். விவரங்கள் இங்கே:

பல வருடங்களாக இக்குழுவினர் பல நல்ல காரியங்களை வெளியில் தெரியாமல் செய்து கொண்டிருப்பதை அறிவேன். இயற்கையுடனான போராட்டத்தில் உடமைகளை இழந்து மனதளவிலும் தளர்ந்து போனவர்கள் எழுந்து நிற்கக் கைகொடுக்கப் போகும் இத்திட்டத்திற்கான நிதி, பொங்கல் வரைக்குமாகத் திரட்டப் படுகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸின் ”கலாமின் காலடிச் சுவட்டில்.. நூறு இளைஞர்கள்” திட்டத்தில் ஒருவராக ஆனந்த விகடன் தேர்ந்தெடுத்த விஜி ராம், அதில் கிடைத்த ஒரு லட்சத்தையும் இத்திட்டத்திற்குப் பயன்படுத்த உள்ளார்.

இயன்ற தொகை எதுவாயினும் இணைந்து செயலாற்ற உதவியானதாய் இருக்கும்.

**

6 கருத்துகள்:

 1. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 2. நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. திட்டமிட்டு செயலாற்றுகிறார்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. அத்யாவசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி ராமலெக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 5. கருணை பொங்கும் உள்ளம் கடவுள் வாழும் இல்லம்

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin