#1
சென்னையிலும், தமிழ்நாட்டின் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கில் மாட்டிக் கொண்டு மக்கள் படுகிற அவதி மனதைப் பதைக்க வைப்பதாக இருக்கிறது. இருப்பிடம், உணவு, மின்சாரம், உடல்நலம், பாதுகாப்பு என எல்லாமே கேள்விக் குறியாகி விட்டுள்ளது. இந்த நேரத்தில் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு மனித நேயத்துடன் களம் இறங்கி, உதவி வருகிற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வந்தனங்கள்.
உரிய நேரத்தில் உதவி பல இடங்களுக்கு கிடைக்கவில்லை என்ற செய்திகள் வந்தபடி இருந்தாலும் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் காட்டி வரும் அர்ப்பணிப்பு நெகிழ வைப்பதாகக் குறிப்பிட்டார் பின்வரும் படங்களை தன் மொபைலில் எடுத்து அனுப்பியிருந்த நண்பர்.
#2
நேற்று வெள்ளத்தால் மூழ்கி விட்ட தாம்பரம் மருத்துவமனையிலிருந்து அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளிகளை அக்கறையுடனும் அதீத கவனத்துடனும் வெளியேற்றிய தீயணைப்புப் படையினருக்கு வந்தனங்கள். அவர்தம் கடமை எனக் கடந்து விட முடியாத சேவை. கருணை உள்ளம் கொண்டிருந்தாலே இவை சாத்தியம்.
#3
#5
#6
நோயாளிகள் நனைந்து விடாதபடி..
#7
சிசேரியன் ஆன தாய்மார்களும் குழந்தைகளும் மட்டும் ஒரு மருத்துவர், தாதி மற்றும் ஊழியர்கள் துணையோடு நேற்றிரவு முதல் மாடியில் தங்க வைக்கப்பட்டு காலையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.
#8
தற்போது கடற்படை வீரர்கள் மீட்புப் பணிக்காகத் தருவிக்கப்பட்டிருப்பது ஆறுதலான செய்தி. ஆபத்தில் மாட்டியிருக்கும் மக்கள் எண்ணிக்கைக்கு எத்தனை படை வந்தாலும் போதாதுதான். ஆனால் கை கொடுக்கும் ஒவ்வொருவரும் இந்நேரத்தில் கடவுளுக்குச் சமமானவராகிறார்.
#9
அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் எனும் செய்தி அச்சமூட்டுவதாக இருக்கிறது. மின்சாரம் இல்லாமல், மொபைல் சார்ஜை இழந்து வரும் நிலையில், வீட்டை நீர் சூழ்ந்திருக்க, தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும் அபாயத்தில் பல நட்புகள் மற்றும் உறவுகள். இருக்கும் குடிநீர் இன்னும் ஓரிரு நாட்களுக்கே வருமென்கிறார்கள் . வீட்டிலிருக்கும் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகளுக்குக்கான அவசரத் தேவைகள், மருந்துகள் வாங்க முடியாத நிலையில் தைரியத்தை இழந்து வருகிறார்கள். இன்னும் பல இடங்களில் மக்கள் உடமைகள் அனைத்தையுமே இழந்து நிற்கிறார்கள். கால்நடைகள் வெள்ளத்தோடு செல்கின்றன.
தவித்து நிற்கும் மக்கள், நண்பர்கள், உறவினர்களுக்காகவும், திகைத்து நிற்கும் ஜீவராசிகளுக்காகவும் விடாது தொடர்ந்து பிரார்த்திப்போம்.
சென்னையிலும், தமிழ்நாட்டின் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கில் மாட்டிக் கொண்டு மக்கள் படுகிற அவதி மனதைப் பதைக்க வைப்பதாக இருக்கிறது. இருப்பிடம், உணவு, மின்சாரம், உடல்நலம், பாதுகாப்பு என எல்லாமே கேள்விக் குறியாகி விட்டுள்ளது. இந்த நேரத்தில் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு மனித நேயத்துடன் களம் இறங்கி, உதவி வருகிற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வந்தனங்கள்.
உரிய நேரத்தில் உதவி பல இடங்களுக்கு கிடைக்கவில்லை என்ற செய்திகள் வந்தபடி இருந்தாலும் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் காட்டி வரும் அர்ப்பணிப்பு நெகிழ வைப்பதாகக் குறிப்பிட்டார் பின்வரும் படங்களை தன் மொபைலில் எடுத்து அனுப்பியிருந்த நண்பர்.
#2
நேற்று வெள்ளத்தால் மூழ்கி விட்ட தாம்பரம் மருத்துவமனையிலிருந்து அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளிகளை அக்கறையுடனும் அதீத கவனத்துடனும் வெளியேற்றிய தீயணைப்புப் படையினருக்கு வந்தனங்கள். அவர்தம் கடமை எனக் கடந்து விட முடியாத சேவை. கருணை உள்ளம் கொண்டிருந்தாலே இவை சாத்தியம்.
#3
#5
#6
நோயாளிகள் நனைந்து விடாதபடி..
#7
சிசேரியன் ஆன தாய்மார்களும் குழந்தைகளும் மட்டும் ஒரு மருத்துவர், தாதி மற்றும் ஊழியர்கள் துணையோடு நேற்றிரவு முதல் மாடியில் தங்க வைக்கப்பட்டு காலையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.
#8
#9
அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் எனும் செய்தி அச்சமூட்டுவதாக இருக்கிறது. மின்சாரம் இல்லாமல், மொபைல் சார்ஜை இழந்து வரும் நிலையில், வீட்டை நீர் சூழ்ந்திருக்க, தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும் அபாயத்தில் பல நட்புகள் மற்றும் உறவுகள். இருக்கும் குடிநீர் இன்னும் ஓரிரு நாட்களுக்கே வருமென்கிறார்கள் . வீட்டிலிருக்கும் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகளுக்குக்கான அவசரத் தேவைகள், மருந்துகள் வாங்க முடியாத நிலையில் தைரியத்தை இழந்து வருகிறார்கள். இன்னும் பல இடங்களில் மக்கள் உடமைகள் அனைத்தையுமே இழந்து நிற்கிறார்கள். கால்நடைகள் வெள்ளத்தோடு செல்கின்றன.
தவித்து நிற்கும் மக்கள், நண்பர்கள், உறவினர்களுக்காகவும், திகைத்து நிற்கும் ஜீவராசிகளுக்காகவும் விடாது தொடர்ந்து பிரார்த்திப்போம்.
***
மிக வேதனையாகவுள்ளது. விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஅன்பு ராமலக்ஷ்மி. படங்கள் மனித நேயம் உச்சத்தில் இருக்கும் காடசியைத் தருகின்றன் இந்த அனபு என்றும் வளம் பெற வேண்டும்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதுயரத்திலும் துயரம்... என்ன செய்வது இயற்கை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆழ்ந்த பிரார்த்தனைகள்...
பதிலளிநீக்குகூட்டு பிரார்த்தனை பலன் தரும். மழை படி படியாக குறைந்து விடும். படங்கள் பார்க்க பயமாய் இருக்கிறது. உதவும் உள்ளங்கள் வாழ்க!
பதிலளிநீக்குஅனைவருக்கும் நன்றி. மக்கள் மீண்டு வர தொடர்ந்து பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்கு