செவ்வாய், 13 ஜூலை, 2010

வழிபாட்டுத் தலங்கள்- ஜூலை PiT போட்டிக்கு..

இம்மாதப் போட்டித் தலைப்பு: வழிபாட்டுத் தலங்கள். “கோவில்,சர்ச்,மசூதி,சிலை,கோபுரம்,கலசம்,தூண்,பக்தி,இப்படி எது வேண்டுமானாலும் படம் எடுத்து அனுப்புங்க...” என்கிறார்கள். ஆனால் எத்தனை வேண்டுமானாலும் என சொல்ல மாட்டேன்கிறார்களே:)! ஆகையாலே உங்கள் பார்வைக்கு அத்தனை தலங்களும் பதிவிலே..! இவற்றிலிருந்து போட்டிக்கும் போகும் ஒன்றே ஒன்று.

இதுவரையிலும் மீள் பதிவுகள் இட்டதில்லை. ஆனால் போட்டியின் தலைப்புக்கேற்ப என்ற ரீதியில் 'சில நேரங்களில் சில படங்கள்' மீள் காட்சிகளாக அமைந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. பொறுத்தருள்க:)!

படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் Ctrl மற்றும் minus பொத்தான்களை ஒருசேர அழுத்தி, சரியான அளவுக்குக் கொண்டுவரக் கேட்டுக் கொள்கிறேன்.


அப்பனே சண்முகா

1. மின்னும் கலசங்களுடன் கோபுரம் திருச்செந்தூரில்..
**

2. கடல் பார்த்து நீண்ட பிரகாரம்

**

3. அதன்வழி..

நாழிக்கிணறு நாடி நடைபோடும் பக்தர் கூட்டம்
**

5. கனகவேல் காக்க

வேலுண்டு வினையில்லை
சொல்லுகிறார் சூரியனாரும்..
***


6. கூடலழகர் திருக்கோபுரம்

மதுரை மாநகரத்தினுள்..
***


7. கற்பகவிநாயகர்

பிள்ளையார் பட்டியில்..
***8. மதுரை மீனாஷி சுந்தரேஷ்வரர்

**

9. தரணி போற்றும் தங்கத் தாமரைக் குளம்

**

10. குளம் நடுவே பளபளக்கும் பொற்கமலம்

கீழ் இதழ்களில் நிழல்நாடி அமர்ந்திருக்கும் குருவிகள் உணர்த்திடும்
கமலத்தின் பிரமாண்டத்தையும்
தனைநாடி வரும் பக்தருக்கு அம்மன் வழங்கும் பேரருளையும்..
***11. கோமதீஷ்வரர்

சரவணபெலகுலாவில்..
***12. ஹொய்சாலேஷ்வரர்

ஹலேபீடுவில்..
***


13. கோடிலிங்கேஷ்வரர்

கோலார் மாவட்டத்தின் கம்மசந்திராவில்..
***


14. ஓம்காரேஷ்வரர்

இஸ்லாமியக் கட்டிடக்கலையைத் தன்னுள் வாங்கி..
கூர்க், மடிக்கேரியில்..
***


15. திபெத்திய தங்கக் கோவில்

மைசூர் அருகே, பைலக்குப்பே ஊரின் குஷால்நகரில்..
***

16. புத்தம் சரணம்
தன்னை உணர, ஞானம் பெற, தியானமே வழியென உலகுக்குச் சொன்ன மகானுடன் அவரது கொள்கைகளை உலகுக்குப் பரப்பியவர்களும் தெய்வமாய் வீற்றிருக்கும் மாபெரும் தியான மண்டபம். [வலது கீழ் மூலையில் உற்று நோக்கினால் புலனாகும் மனிதரின் பார்வையில் சிலைகளின் உயரம். அந்த உயரமே விளக்கிடும் தியானத்தின் மேன்மையையும்.]
***
17. கடற்கரைக் கோவில்

மாமல்லபுரத்தில்..
***

18. "குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்"
அவ்வையார் சொன்னது..

[இங்குதான் ‘படையப்பா’ படப்பிடிப்பு நடந்ததாம். மக்கள் சொன்னது:)!]
கர்நாடகத்தின் மேலூரில்..
***

19. " நானுமிருப்பேன் குன்றின் மேலே.."

மலைக்கோட்டை பிள்ளையார் திருச்சியில்..


20. நீ இல்லாத இடமே இல்லை

பேரொளியாய்..
***


21. ஒன்றே கடவுள் ஒருவனே தேவன்
‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’- கீதை சொல்வதும்;‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ - பைபிள் சொல்வதும்; ‘ஒவ்வொரு தானிய மணியிலும் அதை உண்ணப் போகிறவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது’ போன்றதான நம்பிக்கைகளும் யோசித்துப் பார்த்தால் ஒன்றேதான் என்பது புலனாகும்.

வழிபடும் தெய்வத்தின் பெயர்களும் உருவங்களும், தலங்களும், நாம் பின்பற்றும் முறைகளும் மார்க்கங்களும் வேறு வேறாயிருப்பது அவரவருக்கு நெருக்கமாய் உணர்ந்து அமைதியைத் தேடவே அன்றி அவன் பெயரால் மட்டுமின்றி எதன் பெயராலும் சக மனிதரை சங்கடங்களுக்கு உள்ளாக்க அன்று. மனிதத்துள் வாழ்கிறது தெய்வம்.

தங்கள் மேலான கருத்துக்காக இம்மாதப் போட்டிப் படங்களின் அணிவகுப்பு இங்கே.

அதில் இடம்பெற கலசம் மின்னும் திருச்செந்தூர் கோபுரம் (அ) மீனாஷி சுந்தரேஷ்வர் கோபுரத்தை அனுப்ப எண்ணியுள்ளேன். உங்களைக் குறிப்பாக ஈர்த்த படம் (அ) படங்கள் இருப்பின் சொல்லிச் செல்லுங்களேன். எனக்கான பரிசாகக் கொள்வேன்:)!


14 ஜூலை 2010, யூத்ஃபுல் விகடன் பரிந்துரையில் இந்தப் பதிவு:
நன்றி விகடன்!

88 கருத்துகள்:

 1. வாழ்த்துகள்

  காண முடியாத இடங்களை ஒளிப்படங்களின் வாயிலாகப் பார்க்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
 2. /அதில் இடம்பெற கலசம் மின்னும் திருச்செந்தூர் கோபுரம் (அ) மீனாஷி சுந்தரேஷ்வர் கோபுரத்தை அனுப்ப எண்ணியுள்ளேன். உங்களைக் குறிப்பாக ஈர்த்த படம் (அ) படங்கள் இருப்பின் சொல்லிச் செல்லுங்களேன். எனக்கான பரிசாகக் கொள்வேன்:)!
  /

  அதே

  பதிலளிநீக்கு
 3. வாவ்... சூப்பர்ப்! மிகவும் அழகான அற்புதமான கலைநயம் கொண்ட கோவில்களை நேரில் பார்த்த திருப்தி.. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. மீனாட்சியம்மனை ரொம்ப பிடிச்சிருக்குங்க.

  பதிலளிநீக்கு
 5. //அதில் இடம்பெற கலசம் மின்னும் திருச்செந்தூர் கோபுரம் (அ) மீனாஷி சுந்தரேஷ்வர் கோபுரத்தை அனுப்ப எண்ணியுள்ளேன்//

  :))

  அதே! அதே!!

  பதிலளிநீக்கு
 6. ஓம்காரேஷ்வரர் & புத்தரின் படமும் அருமை ! கொஞ்சம் கிராப்’பினால் ஓம்காரேஷ்வரரும் கூட பட்டையை கெளப்புவாரு :)

  பதிலளிநீக்கு
 7. என் சாய்ஸ் மீனாட்சி அம்மா தான். முருகனும் அழகு. அம்மா வர்ணம் பூசிக்கொண்டு அழகா இருக்காங்க. அற்புதமான படங்கள் ராமலக்ஷ்மி. கண்ணில் ஒற்றிக் கொண்டேன். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. எல்லா தலங்களையும் அழகுற தரிசிக்கவைத்த உங்க
  ளுக்கு நன்றி நன்றி.. :)

  பதிலளிநீக்கு
 9. பொற்றாமரைக் குளம்

  அப்பனே ஷண்முகா..அவர்..பார்த்துக் கொள்வார்
  அருமையான தொகுப்பு

  பதிலளிநீக்கு
 10. அனைத்தும் சூப்பர்ர்!! என்னுடைய சாய்ஸ் திருச்செந்தூர் கோபுரம் அழகா இருக்கு ....

  பதிலளிநீக்கு
 11. படங்கள் அனைத்தும் கண்னை கவருதுங்க.....
  நீங்க அனுப்ப இருக்கும் படங்களில்... மதுரை மீனாட்சி கோயில் படம் தான் என்னை கவர்ந்தது.

  வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு
 12. மீனாஷி சுந்தரேஷ்வர்!
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. ஓம்காரேஷ்வரர் தான் அமைதியான நல்ல வழிப்பாட்டுத் தலமாக தெரிகின்றது.. ;-)

  பதிலளிநீக்கு
 14. திருச்செந்தூர்க் கோவில் நிறம் அழகு. ஆனால் ஒரிஜினலாக இல்லை. நிறத்தில் ஏதோ செயற்கை.
  நீண்ட பிரகாரம் ஒரு விர்ச்சுவல் எஃபெக்ட் தருகிறது.
  அதன் வழி, கனகவேல்... படம் போதுமான அளவு இல்லை.
  கூடலழகர் கோபுரம்....எடுக்க முடியாத இடத்தை வேறு ஒரு உயரத்திலிருந்து எடுத்தது போட்டியில் கணக்கிடப் படுமா?!!
  கற்பகவிநாயகர் ... எளிமையான அழகு.
  மீனாக்ஷி அம்மன் கோவில் கோபுரம் இயற்கையான அழகுடன் அழகு.
  பொற்றாமரைக்குளம் படம்... அழகோ அழகு. எதிரிலுள்ள சுவரில் சிவா சிவா என்ற எழத்துக்கள் தெளி..வாகத் தெரியுமளவு க்ளியர்.
  கோமதீஷவரர்...ஓகே.
  ஹோய்ச்சலீச்வரர்....பழமையைக் காட்டும் அழகு.
  ஓம்காரேஸ்வர்.. அழகு.
  எனவே என்னுடைய மதிப்பில் , ஒன்று பொற்றாமரைக்குளம், இரண்டு நீண்ட பிரகாரம், மூன்று ஹோய்ச்சலீச்வரர்,
  எப்படி நம்ம அலசல்...!
  வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 15. //வழிபடும் தெய்வத்தின் பெயர்களும் உருவங்களும், தலங்களும், நாம் பின்பற்றும் முறைகளும் மார்க்கங்களும் வேறு வேறாயிருப்பது அவரவருக்கு நெருக்கமாய் உணர்ந்து அமைதியைத் தேடவே அன்றி அவன் பெயரால் மட்டுமின்றி எதன் பெயராலும் சக மனிதரை சங்கடங்களுக்கு உள்ளாக்க அன்று. மனிதத்துள் வாழ்கிறது தெய்வம்.//

  ம்ம் சரியான கருத்துக்கள் ஆனா பாருங்க நம்மாளுங்க என் ஊர்க்காரன் ஏன் சாதிக்காரன் என் மதத்தை சேர்ந்தவன்னு பிரிச்சு பேசியே பழகிட்டாங்க ஓவ்வொரு மதத்தை சேர்ந்த கடவுள்களும் சொன்னது எதுவுமே மனதில் ஏற்றிக்கொள்ளாமல் மண்டையில் ஏற்றிக்கொண்டு திரிவதனால்தான் மதப்பிரச்சினைகள் வருகின்றன சாதி, மத, இன, வேறுபாடுகள் மனித சமூகத்தைச் சீரழிக்கின்றன,பேதங்கள் மறைந்து எல்லாரும் ஓர் குலம்,எல்லாரும் ஓர் இனம், எல்லாரும் இந்நாட்டு மக்கள், எனும் ஒற்றுமை உணர்வு ஓங்க வேண்டும். சாதி, சமயப் பிணக்குளற்ற ஒற்றுமைப்பட்டு உயர்ந்து நிற்கும் ஒப்பற்ற சமுதாயம் மலர வேண்டும்...

  பதிலளிநீக்கு
 16. நீங்கள் செலக்ட் செய்த திருச்செந்தூர் முருகன் படமே அனுப்புங்க அழகர் கோவில் படமும் மீனாட்சியம்மன் கோவில் கோபுரமும் கூட அழகாய் இருக்கின்றன...

  ஆனா இந்த மாமல்ல புரத்து கிளிக்ம், பொற்றாமரை குளமும் மட்டும் எங்கயோ பார்த்திருக்க மாறியே இருக்கு..

  பதிலளிநீக்கு
 17. என் வோட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும் புத்தருக்கும் தான். படங்கள் கொள்ளை அழகு:)

  பதிலளிநீக்கு
 18. கோபுரங்களைப் பார்க்கும்போது, ஆலயத்தில் இருக்கும்போது கிடைக்கும் அமைதி...மீண்டும் ஒருமுறை கோபுர தரிசனம் தந்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. //மனிதத்துள் வாழ்கிறது தெய்வம்//

  வாழ்த்துகள். அருமையான தொகுப்பு.சூப்பர்

  பதிலளிநீக்கு
 20. என்னோட தேர்வு.....
  மீனாட்சி அம்மன்...இல்லை
  திருச்செந்தூர்...இல்லையில்லை
  மீனாட்சிதான்.....இல்லவேயில்லை
  திருச்செந்துர்தான்.

  அட!ரெண்டில் ஒன்று. சேரியா?

  ஆங்....மதுரை அரசாளும் மீனாட்சிதான்!!!!!!!!!!!!!
  எப்படி?

  பதிலளிநீக்கு
 21. புகைப்படங்கள் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது !

  பதிலளிநீக்கு
 22. எத்தனை அற்புதமான சிற்பக் கலைகள்.அத்தனையுமே நம் கலை சொல்கிறதே.எதைச் சொல்லி எதை அழகில்லை என்பது.நீங்கள் தேர்ந்தெடுத்ததே அழகு.அதையே அனுப்புங்கள்.வாழ்த்துகள் வெற்றிக்கு.

  பதிலளிநீக்கு
 23. ராமலக்ஷ்மி அடி தூள் போங்க! பட்டைய கிளப்புறீங்க! :-)

  அனைத்து படங்களும் அருமை (சில பழையதாக இருந்தாலும்)

  அந்த கனகவேல் காக்க பட்டாசா இருக்கு! வெள்ளை வண்ண கோபுரமும் நீல வண்ண வேலும் அருமையாக உள்ளது (உடன் வேப்பில்லை)

  ஹி ஹி இப்ப நம்ம விமர்சனம் ;-)

  படையப்பரு கோவில் பார்த்தீங்கன்னா :-) ... படத்துல கோவிலை விட தென்னை மரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 24. வாழ்த்துக்கள். படங்கள் எல்லாமே அருமை. திருசெந்தூர் படம் நன்றாக இருக்கு. என்னோட செலக்‌ஷன் திருசெந்தூர்.

  பதிலளிநீக்கு
 25. அருமை!அற்புதம்!! கை வசம் பல தொழில்கள் முழுமையாய் தெரிந்து வைத்ருக்கிறீர்கள் மேடம்! :))

  பதிலளிநீக்கு
 26. திகழ் said...
  //வாழ்த்துகள்

  காண முடியாத இடங்களை ஒளிப்படங்களின் வாயிலாகப் பார்க்க முடிந்தது.//

  மகிழ்ச்சி. மிக்க நன்றி திகழ்.

  பதிலளிநீக்கு
 27. திகழ் said...
  **/ /அதில் இடம்பெற கலசம் மின்னும் திருச்செந்தூர் கோபுரம் (அ) மீனாஷி சுந்தரேஷ்வர் கோபுரத்தை அனுப்ப எண்ணியுள்ளேன். உங்களைக் குறிப்பாக ஈர்த்த படம் (அ) படங்கள் இருப்பின் சொல்லிச் செல்லுங்களேன்./

  அதே/**

  எனது தேர்வே உங்களுக்குப் பிடித்ததுமாய்..நல்லது. இரண்டில் ஒன்றே செல்லும் போட்டிக்கு. மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. ஈரோடு கதிர் said...
  //வாழ்த்துகள்//

  நன்றி கதிர்.

  பதிலளிநீக்கு
 29. Priya said...

  // வாவ்... சூப்பர்ப்! மிகவும் அழகான அற்புதமான கலைநயம் கொண்ட கோவில்களை நேரில் பார்த்த திருப்தி.. வாழ்த்துக்கள்!//

  நன்றி பிரியா. நமது கோவில்களின் கலைநயமும் சிற்பத் திறனும் என்றைக்கும் அகலாத பிரமிப்பே.

  பதிலளிநீக்கு
 30. அமைதிச்சாரல் said...

  // மீனாட்சியம்மனை ரொம்ப பிடிச்சிருக்குங்க.//

  உங்களைத் தொடர்ந்து பலரும் சொல்லியுள்ளார்கள். மனதில் வைக்கிறேன்:)! நன்றி அமைதிச்சாரல்.

  பதிலளிநீக்கு
 31. அழகான அற்புதமான கலைநயம் கொண்ட கோவில்களை நேரில் பார்த்த திருப்தி.. வாழ்த்துக்கள்!

  Thirusenthoor, Madurai Photos Super.

  பதிலளிநீக்கு
 32. அனைத்து படங்களும் அருமை அக்கா, வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 33. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்.

  பதிலளிநீக்கு
 34. அத்தனை படங்களும் அழகு.
  பொற்றாமரை குளம் மிக அழகு.
  வெற்றிக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 35. எல்லாப்படங்களும் ரொம்ப அழகா வந்திருக்குங்க
  வாழ்த்துக்கள் :-))

  பதிலளிநீக்கு
 36. ஆயில்யன் said...

  ***/ //அதில் இடம்பெற கலசம் மின்னும் திருச்செந்தூர் கோபுரம் (அ) மீனாஷி சுந்தரேஷ்வர் கோபுரத்தை அனுப்ப எண்ணியுள்ளேன்//

  :))

  அதே! அதே!!/***

  நன்றி நன்றி.

  பதிலளிநீக்கு
 37. ஆயில்யன் said...

  //ஓம்காரேஷ்வரர் & புத்தரின் படமும் அருமை !//

  நன்றிகள்.

  // கொஞ்சம் கிராப்’பினால் ஓம்காரேஷ்வரரும் கூட பட்டையை கெளப்புவாரு :)//

  சொல்ல விட்டு விட்டேன். இந்தப் படம் ‘கட்டமைப்பு’ தலைப்பில் முதல் சுற்றுக்கு முன்னேறிய படமாகும். ஆகையால் திரும்பத் தர இயலாது. தேதியை அப்போது க்ராப் செய்தே கொடுத்தேன். அப்படிச் செய்ததில் பின்னிருக்கும் domb பாதி தெரியாது போய்விட்டது. ஆக முழுமையான படம் இதிலே:)!

  பதிலளிநீக்கு
 38. வல்லிசிம்ஹன் said...

  // என் சாய்ஸ் மீனாட்சி அம்மா தான். முருகனும் அழகு. அம்மா வர்ணம் பூசிக்கொண்டு அழகா இருக்காங்க. அற்புதமான படங்கள் ராமலக்ஷ்மி. கண்ணில் ஒற்றிக் கொண்டேன். வாழ்த்துகள்.//

  அம்மா? சரி:)! ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 39. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  // எல்லா தலங்களையும் அழகுற தரிசிக்கவைத்த உங்களுக்கு நன்றி நன்றி.. :)//

  நல்லது முத்துலெட்சுமி:)! நன்றி.

  பதிலளிநீக்கு
 40. Dr.Rudhran said...

  //golden lotus is a good composition//

  நன்றி டாக்டர். என் ஃப்ளிக்கர் தளத்தில் பலரின் பாராட்டைப் பெற்ற படம் அது.

  பதிலளிநீக்கு
 41. goma said...

  // பொற்றாமரைக் குளம்//

  பெரிய கோபுரம் பார்த்தவாறு எடுக்கும் கோணம் ஒன்று. இது கிழக்குக் கோபுரம் பார்க்க நின்று எடுத்தது. முழு குளமும் கவர் செய்ய முடிந்தது. நன்றி கோமா.

  //அப்பனே ஷண்முகா..அவர்..பார்த்துக் கொள்வார்
  அருமையான தொகுப்பு//

  அப்படிதான் எப்போதும் இருக்கிறேன்:)! நன்றி கோமா.

  பதிலளிநீக்கு
 42. Mrs.Menagasathia said...

  //அனைத்தும் சூப்பர்ர்!! என்னுடைய சாய்ஸ் திருச்செந்தூர் கோபுரம் அழகா இருக்கு ....//

  குறிப்பான பாராட்டுக்கும் நன்றி மேனக சத்யா.

  பதிலளிநீக்கு
 43. சி. கருணாகரசு said...

  // படங்கள் அனைத்தும் கண்னை கவருதுங்க.....
  நீங்க அனுப்ப இருக்கும் படங்களில்... மதுரை மீனாட்சி கோயில் படம் தான் என்னை கவர்ந்தது.

  வெற்றி பெற வாழ்த்துக்கள்.....//

  அநேகமாய் அதுதான் அனுப்புவேன் என எண்ணுகிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி கருணாகரசு.

  பதிலளிநீக்கு
 44. James Vasanth said...

  // மீனாஷி சுந்தரேஷ்வர்!
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!//

  அவ்வாறே செய்திடலாம்:)! நன்றி ஜேம்ஸ்.

  பதிலளிநீக்கு
 45. தமிழ் பிரியன் said...

  //ஓம்காரேஷ்வரர் தான் அமைதியான நல்ல வழிப்பாட்டுத் தலமாக தெரிகின்றது.. ;-)//

  நிச்சயமாய். நல்ல அமைதியான சூழல். ஆனால் படம் ஏற்கனவே ’கட்டமைப்பு’ போட்டியில் முதல் சுற்றில் வந்ததாகும். ஆக இங்கே பார்வைக்கே. நன்றி தமிழ் பிரியன்.

  பதிலளிநீக்கு
 46. ஸ்ரீராம். said...

  //திருச்செந்தூர்க் கோவில் நிறம் அழகு. ஆனால் ஒரிஜினலாக இல்லை. நிறத்தில் ஏதோ செயற்கை.//

  செயற்கை ஏதுமில்லை. கோபுரம் இந்த நிறமே:)!

  //நீண்ட பிரகாரம் ஒரு விர்ச்சுவல் எஃபெக்ட் தருகிறது.//

  நன்றி. உள் இறங்கி நடக்கலாம் போல.. எனக்கும் உள்ளது:)!

  // அதன் வழி, கனகவேல்... படம் போதுமான அளவு இல்லை.//

  வேலினைப் பிரதானமாகக் காட்டும் முயற்சி..

  // கூடலழகர் கோபுரம்....எடுக்க முடியாத இடத்தை வேறு ஒரு உயரத்திலிருந்து எடுத்தது போட்டியில் கணக்கிடப் படுமா?!!//

  ஏன் கூடாது:)? வேறு ஒரு உயரத்திலிருந்து எடுத்ததைப் பாராட்டுங்க ஸ்ரீராம்.

  //கற்பகவிநாயகர் ... எளிமையான அழகு.
  மீனாக்ஷி அம்மன் கோவில் கோபுரம் இயற்கையான அழகுடன் அழகு.
  பொற்றாமரைக்குளம் படம்... அழகோ அழகு. எதிரிலுள்ள சுவரில் சிவா சிவா என்ற எழத்துக்கள் தெளி..வாகத் தெரியுமளவு க்ளியர்.
  கோமதீஷவரர்...ஓகே.
  ஹோய்ச்சலீச்வரர்....பழமையைக் காட்டும் அழகு.
  ஓம்காரேஸ்வர்.. அழகு.
  எனவே என்னுடைய மதிப்பில் , ஒன்று பொற்றாமரைக்குளம், இரண்டு நீண்ட பிரகாரம், மூன்று ஹோய்ச்சலீச்வரர்,
  எப்படி நம்ம அலசல்...!
  வெற்றி பெற வாழ்த்துக்கள்...//

  ஆகா, உங்கள் அலசல் மிகப் பிடித்தது. மீண்டும் மீண்டும் நன்றி:)!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் ஒருமுறை காணக் கிடைத்தது. நன்றி. ஆனால் இது சம்பந்தமாக இன்னொரு பதிவும் உள்ளதோ?

   நீக்கு
  2. அடேங்கப்பா. என்னவொரு நினைவாற்றல்! தேடிப் பிடித்து விட்டேன்! http://tamilamudam.blogspot.com/2009/12/blog-post_30.html கூடலழகர் கோபுரத்தை எங்கேயிருந்து படமாக்கினேன் எனக் கேட்டு நீங்கள் பதில் பெற்ற பதிவு:)!

   நீக்கு
 47. ப்ரியமுடன் வசந்த் said...

  ***/ //வழிபடும் தெய்வத்தின் பெயர்களும் உருவங்களும், தலங்களும், நாம் பின்பற்றும் முறைகளும் மார்க்கங்களும் வேறு வேறாயிருப்பது அவரவருக்கு நெருக்கமாய் உணர்ந்து அமைதியைத் தேடவே அன்றி அவன் பெயரால் மட்டுமின்றி எதன் பெயராலும் சக மனிதரை சங்கடங்களுக்கு உள்ளாக்க அன்று. மனிதத்துள் வாழ்கிறது தெய்வம்.//

  ம்ம் சரியான கருத்துக்கள் ஆனா பாருங்க நம்மாளுங்க என் ஊர்க்காரன் ஏன் சாதிக்காரன் என் மதத்தை சேர்ந்தவன்னு பிரிச்சு பேசியே பழகிட்டாங்க ஓவ்வொரு மதத்தை சேர்ந்த கடவுள்களும் சொன்னது எதுவுமே மனதில் ஏற்றிக்கொள்ளாமல்.../***

  சரியாகச் சொன்னீர்கள் வசந்த்.

  //பேதங்கள் மறைந்து எல்லாரும் ஓர் குலம்,எல்லாரும் ஓர் இனம், எல்லாரும் இந்நாட்டு மக்கள், எனும் ஒற்றுமை உணர்வு ஓங்க வேண்டும். சாதி, சமயப் பிணக்குளற்ற ஒற்றுமைப்பட்டு உயர்ந்து நிற்கும் ஒப்பற்ற சமுதாயம் மலர வேண்டும்...//

  இதுவேதான் இன்றைய தேவையும் பெரும்பாலோரின் ஆசையும்.

  பதிலளிநீக்கு
 48. ப்ரியமுடன் வசந்த் said...

  // நீங்கள் செலக்ட் செய்த திருச்செந்தூர் முருகன் படமே அனுப்புங்க அழகர் கோவில் படமும் மீனாட்சியம்மன் கோவில் கோபுரமும் கூட அழகாய் இருக்கின்றன...//

  நன்றி வசந்த். அழகர் கோவிலில் பின்னால் தெரியும் காட்சிகள் கவனத்தைக் கலைப்பதாக உள்ளனவோ என ஒரு ஐயம். அல்லது அதுவே எனது தேர்வாக இருந்திருக்கும். கோபுரமும் சிற்பங்களும் அற்புதமாய் தெரிகிறது.

  //ஆனா இந்த மாமல்ல புரத்து கிளிக்ம், பொற்றாமரை குளமும் மட்டும் எங்கயோ பார்த்திருக்க மாறியே இருக்கு..//

  எங்கேயோ இல்லை:))! அவை இரண்டும் மீள் படங்கள். என் முந்தைய புகைப்படப் பதிவுகளிலே பார்த்திருப்பீர்கள்.

  பதிலளிநீக்கு
 49. வித்யா said...

  //என் வோட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும் புத்தருக்கும் தான். படங்கள் கொள்ளை அழகு:)//

  வாங்க வித்யா. கருத்துக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 50. திருவாரூரிலிருந்து சரவணன் said...

  // கோபுரங்களைப் பார்க்கும்போது, ஆலயத்தில் இருக்கும்போது கிடைக்கும் அமைதி...மீண்டும் ஒருமுறை கோபுர தரிசனம் தந்ததற்கு நன்றி.//

  நல்லது சரவணன். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 51. ஜெஸ்வந்தி said...

  //மனிதத்துள் வாழ்கிறது தெய்வம்//

  // வாழ்த்துகள். அருமையான தொகுப்பு.சூப்பர்//

  நன்றிகள் ஜெஸ்வந்தி.

  பதிலளிநீக்கு
 52. நானானி said...

  // என்னோட தேர்வு.....
  மீனாட்சி அம்மன்...இல்லை
  திருச்செந்தூர்...இல்லையில்லை
  மீனாட்சிதான்.....இல்லவேயில்லை
  திருச்செந்துர்தான்.

  அட!ரெண்டில் ஒன்று. சேரியா?

  ஆங்....மதுரை அரசாளும் மீனாட்சிதான்!!!!!!!!!!!!!
  எப்படி?//

  அப்பாடி. முடிவாய் தேர்ந்தெடுத்து விட்டீர்கள்:)! நன்றி நானானி.

  பதிலளிநீக்கு
 53. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  // புகைப்படங்கள் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது !//

  மிக்க நன்றி சங்கர்.

  பதிலளிநீக்கு
 54. ஹேமா said...

  //எத்தனை அற்புதமான சிற்பக் கலைகள்.அத்தனையுமே நம் கலை சொல்கிறதே.//

  அதேதான் ஹேமா.

  //எதைச் சொல்லி எதை அழகில்லை என்பது.நீங்கள் தேர்ந்தெடுத்ததே அழகு.அதையே அனுப்புங்கள்.வாழ்த்துகள் வெற்றிக்கு.//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்:)!

  பதிலளிநீக்கு
 55. கிரி said...

  // ராமலக்ஷ்மி அடி தூள் போங்க! பட்டைய கிளப்புறீங்க! :-)

  அனைத்து படங்களும் அருமை (சில பழையதாக இருந்தாலும்)

  அந்த கனகவேல் காக்க பட்டாசா இருக்கு! வெள்ளை வண்ண கோபுரமும் நீல வண்ண வேலும் அருமையாக உள்ளது (உடன் வேப்பில்லை)//

  நன்றி கிரி:)!

  //ஹி ஹி இப்ப நம்ம விமர்சனம் ;-)

  படையப்பரு கோவில் பார்த்தீங்கன்னா :-) ... படத்துல கோவிலை விட தென்னை மரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல இருக்கு.//

  படையப்பருக்கு முக்கியத்துவம் குறைந்த ஆதங்கம் தெரிகிறது உங்கள் விமர்சனத்தில்:)! க்ராப் செய்திருக்கலாம்தான். படம் அடிவாரத்திலிருந்து எடுத்தது. குன்றின் உயரத்தைக் காட்டுவதாய் இருக்கட்டுமென தென்னையை விட்டு வைத்தேன்.

  பதிலளிநீக்கு
 56. Vijiskitchen said...

  //வாழ்த்துக்கள். படங்கள் எல்லாமே அருமை. திருசெந்தூர் படம் நன்றாக இருக்கு. என்னோட செலக்‌ஷன் திருசெந்தூர்.//

  நல்லது விஜி:)! வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 57. மோகன் குமார் said...

  // அருமை!அற்புதம்!! கை வசம் பல தொழில்கள் முழுமையாய் தெரிந்து வைத்ருக்கிறீர்கள் மேடம்! :))//

  நீங்கள் வேறு. அந்த அளவுக்கெல்லாம் தேர்ச்சி இல்லை. எல்லாம் ஒரு ஆர்வம்தான். நன்றி மோகன் குமார்:)!

  பதிலளிநீக்கு
 58. சே.குமார் said...

  //அழகான அற்புதமான கலைநயம் கொண்ட கோவில்களை நேரில் பார்த்த திருப்தி.. வாழ்த்துக்கள்!

  Thirusenthoor, Madurai Photos Super.//

  நன்றிகள் குமார்.

  பதிலளிநீக்கு
 59. சசிகுமார் said...

  // அனைத்து படங்களும் அருமை அக்கா, வெற்றி பெற வாழ்த்துக்கள்//

  நன்றிகள் சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 60. அன்புடன் மலிக்கா said...

  // போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்.//

  நன்றி மலிக்கா.

  பதிலளிநீக்கு
 61. அம்பிகா said...

  //அத்தனை படங்களும் அழகு.
  பொற்றாமரை குளம் மிக அழகு.
  வெற்றிக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி//

  நன்றிகள் அம்பிகா.

  பதிலளிநீக்கு
 62. கார்த்திக் said...

  // எல்லாப்படங்களும் ரொம்ப அழகா வந்திருக்குங்க
  வாழ்த்துக்கள் :-))//

  வாங்க கார்த்திக்:)! மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 63. மின்னஞ்சலில்..

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'வழிபாட்டுத் தலங்கள்- ஜூலை PiT போட்டிக்கு..' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th July 2010 02:42:02 AM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/301432

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் வாக்களித்தவர்களுக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 64. மிஸஸ் சொக்கனும், சுப்பையாவும் தான். யோசனையே வேண்டாம், அனுப்பிடுங்க. :))

  பதிலளிநீக்கு
 65. எல்லா படமும் நல்ல இருக்கு.
  எதை அனுப்பணும்னு சொல்லற அளவுக்கு ஞானாம் கிடையாதே..!

  எப்படியோ, ஜெயிக்கப்போறது நீங்கதான்.
  பிடிங்க என் வாழ்த்துக்களை...!

  பதிலளிநீக்கு
 66. ambi said...
  //மிஸஸ் சொக்கனும், சுப்பையாவும் தான். யோசனையே வேண்டாம், அனுப்பிடுங்க. :))//

  சுப்பையாவை வணங்கி விட்டு, திருமதி.சொக்கநாதரை அனுப்பிவிட்டேன். நன்றி அம்பி:)!

  பதிலளிநீக்கு
 67. அமைதி அப்பா said...
  //எல்லா படமும் நல்ல இருக்கு.
  எதை அனுப்பணும்னு சொல்லற அளவுக்கு ஞானாம் கிடையாதே..!

  எப்படியோ, ஜெயிக்கப்போறது நீங்கதான்.
  பிடிங்க என் வாழ்த்துக்களை...!//

  எல்லாப் படமும் நல்லா இருக்கு எனும் உங்கள் பாராட்டே எனக்கு ஜெயித்த மகிழ்ச்சியைத் தந்து விட்டது. ரொம்ப நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 68. அழகு.... அழகு.... கொள்ளை அழகு... காணத்தந்த தங்களுக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 69. அமுதா said...
  //அழகு.... அழகு.... கொள்ளை அழகு... காணத்தந்த தங்களுக்கு நன்றிகள்//

  ரசித்தமைக்கு நன்றிகள் அமுதா.

  பதிலளிநீக்கு
 70. எல்லா படமும் அருமை என்றாலும் அந்த திருசெந்தூர் கோபுரமும் அதன் கலசங்களும் அருமையோ அருமை. அது செப்பு கலசமா? இல்லை அதும் இரிடியமா ஆகிடுச்சா:-))))

  அந்த போட்டோ தான் என் சாய்ஸ்.

  அது போல அந்த பொற்றாமரை ரொம்ப அழகு. அப்படியே பள பளன்னு மின்னுது. ஏதோ பொங்கல் வாழ்த்து அட்டை பார்ப்பது போல அத்தனை ஒரு தெளிவு.

  வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். ஒரு + ஓட்டும் போட்டுடுறேன்!!!!!!!

  பதிலளிநீக்கு
 71. @ அபி அப்பா,

  செப்புக் கலசங்களாகத்தான் இருக்க வேண்டும். அதிலும் கிண்டல்தானா?

  பொற்றாமரைக்குளம்-பொங்கல் வாழ்த்து..
  அழகான யோசனையாய் இருக்கிறதே.

  பாராட்டுக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி:)!

  பதிலளிநீக்கு
 72. அன்பின் ராமலக்ஷ்மி

  அருமை அருமை - புகைப்படங்கள் அனைத்தும் அருமை ! கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம், கோபுர தரிசனம் பாவ விமோசனம் ! எத்தனை கோபுரங்கள் ! அத்தனையும் ராமலக்ஷ்மியின் கைவண்ணத்தில் மிளிர்கிறது ! ஒளிர்கிறது ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 73. @ சீனா சார்,

  மிக்க மகிழ்ச்சி. இந்தப் பதிவிலுள்ள மதுரைக் கோவில் படங்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்பது என் ஆசையாக இருந்தது:)! என் மனமார்ந்த நன்றிகள்!!!

  பதிலளிநீக்கு
 74. நானும்,என் மனைவியும்,குழந்தைகளும் நிறைய கோவில்கள் தமிழ்நாட்டுக்குள் சுற்றிப் பார்த்திருக்கிறோம்.தங்கள் வலைப்பூவை பார்த்தவுடன்.இந்த இடங்களுக்கெல்லாம் எப்போது பார்க்கப் போகிறோம் என்று கேட்கிறார்கள். அவ்வளவு இனிமை.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  பதிலளிநீக்கு
 75. @ சாமீ அழகப்பன்,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 76. picture card quality.

  நானும் 40 வருஷமா கேமிரா தூக்கிக்கிட்டு திரியிறேன். ஹும்.. இது மாதிரி ஒரு படம் எடுத்தா திருப்தியாக இருக்கும்.

  பாருங்களேன் ...

  பதிலளிநீக்கு
 77. நீங்களும்தான் மகாலிபுரக் கோபுரம் எடுத்திருக்கீங்க .. நானும் எடுத்திருக்கேன் பாருங்க 25-30 வருஷம் இருக்கும். எங்களுக்கும் தான் காக்கா பறந்திச்சி!

  நாங்க மட்டும் கோவில் படம் எடுக்க மாட்டோமா?

  நாங்க portrait எடுக்க மாட்டோமா?

  பதிலளிநீக்கு
 78. தருமி said...

  உங்கள் புகைப்படத் தளம் இன்றுதான் அறிய வருகிறேன்:). அருமையான படங்கள். இனித் தொடர்வேன்.

  // 40 வருஷமா கேமிரா தூக்கிக்கிட்டு//

  நான் 30 வருடங்களாக:)! ஆனால் கடந்த சில வருடங்களில்தான் திறனை மேம்படுத்திக் கொண்டேன் PiT மூலமாக.

  பதிலளிநீக்கு
 79. மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோபுரமும் (8)பின்னணி வானமும் இப்போது அகிகமாகக் கவர்கிறது.​

  பதிலளிநீக்கு
 80. ராமலக்ஷ்மி அனைத்து படங்களும் அழகு.
  கூடலழகர் அருமையாக இருக்கிறது.வித்தியாசமான கோணத்தில்.
  வேறு இடத்திலிருந்துதான் இப்படி எடுக்க முடியும்.
  மீனாட்சி கோபுரம் அழகோ அழகு.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin