வெள்ளி, 31 டிசம்பர், 2021

2021 - தூறல்: 41



வேகமாக விடை பெற்ற 2021_யைத் திரும்பிப் பார்க்கிறேன்.

னது ஃப்ளிக்கர் பக்கத்தில் “ Uploads of 2021 ” எனத் தனி ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்ததால், அது 365 நாட்களில் 261 நாட்கள் நான் படங்கள் பதிந்து வந்திருக்கிறேன் எனக் கணக்குக் காட்டுகிறது :)! 

#

வழக்கமான இயற்கை மற்றும் பறவைகள் படங்களோடு, கொலுப் பொம்மைத் தொடரும், கார்த்திகை தீபத் தொடரும் நான் ரசித்துப் பதிந்தவை.

பிப்ரவரி மாதத்தில் ஃப்ளிக்கர் பக்கம் 50 இலட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்தது ஒரு மைல் கல்.  

(மே மாதத்தில் படங்களின் எண்ணிக்கையும் நான்காயிரத்தைக் கடந்தது.)

#


வருட இறுதியில் மேலும் நாலரை லட்சம் பக்கப் பார்வைகளைப் பெற்றுள்ளன இவ்வருடப் பதிவுகள். அடுத்த வருடம் எட்டிப் பார்க்கவென இங்கே அதை சேமித்துக் கொள்கிறேன்:)!

#


பெருந்தொற்றின் அச்சம் முழுமையாக நீங்கிடாத நிலையில் பயணங்களைத் தவிர்த்த வருடம் என்றாலும் இயற்கையும், தோட்டமும், டேபிள் டாப் படங்களுமாக ஃப்ளிக்கரில் தொடர்ந்து இயங்க முடிந்தது. 

**

முத்துச்சரம்:

சொல்லிக் கொள்ளும்படி எதையும் எழுதி விடவில்லை என்றாலும் முத்துச்சரத்தில் சராசரியாக மாதம் 5 பதிவுகள் தர முடிந்திருக்கிறது. 

* தமிழாக்கம் செய்த வாழ்வியல் சிந்தனைகளுடன் படத் தொகுப்புகள் - 32 பதிவுகள் 

(இவற்றில் ஒன்றிரண்டைத் தவிர்த்து மற்றன ‘ என் வீட்டுத் தோட்டத்தில்..’ அல்லது ‘ பறவை பார்ப்போம்' பகுப்பில் சேர்கின்றன.)

*'தெரிஞ்சுக்கலாம் வாங்க + பறவை பார்ப்போம்' பகுப்புகளின் கீழ் புதியதாக இவ்வருடம் பார்த்த பறவைகளின் படத் தொகுப்புகள்.. தகவல்களுடன்.. - 5 பதிவுகள்

(இந்திய மாங்குயில்கருஞ்சிட்டுசிட்டுக் குருவிவால் காக்கை மற்றும் சாம்பல் கரிச்சான்)

* கவிதைகள் - 3 

('நீர்க் கோலங்கள்' - மின் நிலாவில்; 'காலம் உறைந்த வீடு' மற்றும் 'தவறுகளும் ரகசியங்களும்' - சொல்வனத்தில்)

மொழிபெயர்ப்புக் கவிதைகளில் ஓரளவு கவனம் செலுத்தியிருக்கிறேன்:

* தமிழாக்கக் கவிதைகள் மொத்தம் - 13

*சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள்....

 ‘புன்னகை’ இதழில்.. - 3;

அலார கடிகாரத்தைத் தூக்கி எறிதல்

ஆக, உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம்?

முடிவு இல்லாத பாடல்

‘சொல்வனம்’ இதழில்.. - 2

அந்நியர்கள்

மழை

*

சொல்வனம் வங்காளச் சிறப்பிதழில்..

காஜி நசருல் இஸ்லாம் கவிதை - 1

சுகந்தொ பட்டாச்சார்யா கவிதைகள் -2

*

மேலும் சொல்வனத்தில்

பாப்லோ நெருடா கவிதைகள் - 4

கோபால் ஹொன்னல்கரே கவிதை - 1

*

வரும் வருடத்தில் என்ன செய்ய வேண்டுமெனப் பெரிதானத் திட்டமிடல்கள் ஏதும் இல்லை எனினும் தொடர்ந்து பதிவுலகிலும் ஃப்ளிக்கர் தளத்திலும் இயங்கிக் கொண்டிருக்க விரும்புகிறேன்.

வருட இறுதியில் அடுத்த சுற்று வந்து கொண்டிருக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதில் கவனம் தேவை. உலகம் இதிலிருந்து மீண்டு வரப் பிராத்திப்போம். 

நண்பர்களை அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

***

5 கருத்துகள்:

  1. ஐம்பது லட்சம் பார்வையாளர்கள்... வாழ்த்துகள்.

    வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்!

    வாழ்த்துப்படம் மிக அருமையாக இருக்கிறது!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் படங்களும் எழுத்துமே ஸ்பெஷல்தானே!

    உங்கள் புத்தாண்டு வாழ்த்துப் படம் மிக மிக அழகாக இருக்கிறது! பதிவையும் வித்தியாசமாக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

    ஃப்ளிக்கர் தளத்தில் உங்கள் படங்கள் ஆல்பம் கணக்கு வியக்க வைக்கிறது! வாழ்த்துகள்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பிளிக்கர் பக்கத்தில் உங்கள் பதிவுகள் எண்ணிக்கை சிறப்பு. அதற்கான பக்கப்பார்வைகள் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. வரும் வருடத்தில் மேலும் சிறப்பாக செயல்பட மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. புத்தாண்டு பிறக்கும்போதே புள்ளிவிவரங்கள். இவ்விவரங்கள் தங்களது அயராத உழைப்பைக் காட்டுகிறது. பொழுது போக்கு என்றில்லாமல் நல்லவை யாவும் எல்லோரையும் சென்றடையட்டும் என்று வலைத்தளங்களில் பிரசுரிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் சிறந்த பணி. 

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin