என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 120
பறவை பார்ப்போம் - பாகம்: (77)
#2
"நாம் எவ்வளவு உழைப்பைப் போடுகிறோமோ
அதற்கான பலனே கிட்டும்.
மேலும் முயன்றிடாமல்
மேலும் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது."
#3
#Italian Proverb
#4
"உங்கள் மெய்யியல்பை நீங்களே உருவாக்குகிறீர்கள்."
_ Jane Roberts
#5
“எந்தச் சூழலிலும் அமைதி காத்திடுங்கள்,
ஏனெனில் அமைதி ஆற்றலுக்குச் சமமானது.”
_ Joyce
#6
"எந்த அளவுக்கு நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோமோ,
அந்த அளவுக்கு நம் செயல் திறனும் இருக்கும்."
_ William Hazlitt
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது...]
***
வளைந்து நிமிர்ந்து கிளியும் அந்த இன்னொரு பறவையும் (ஹிஹிஹி பெயர் தெரியவில்லை) சொல்லும் வார்த்தைகளும் அழகு!
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடுவது முதல் பறவையெனில்.. காட்டுச் சிலம்பன் (Jungle Babbler). நான்காவது தேன் சிட்டு (பெண் பறவை). மைனா, கிளி நாம் அடிக்கடி பார்ப்பவையே.
நீக்குநன்றி ஸ்ரீராம்:).
படங்களும் வாசகங்களும் நன்று. ஐந்தாவது "எந்தச் சூழலிலும்" என்று வந்திருக்கலாமோ?
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.
ஆம், திருத்தி விட்டேன். கவனக் குறைவால் நேர்ந்த பிழை.
நீக்குநன்றி வெங்கட் :).
படங்கள் தெள்ளத் தெளிவு ராமலக்ஷ்மி!!! வியந்து வியந்து பார்த்து ரசிப்பதுண்டு நீங்கள் எடுக்கும் படங்களை!!!
பதிலளிநீக்குகிளி என்ன அழகாக எட்ட்டிப் பார்க்கிறது! நம்மை வழக்கமாக எடுப்பவர்தனா என்றோ?!!
வைல்ட் பேப்லெர் எங்கள் பகுதிகளிலும் வருகிறது. அது போல சன்பேர்டும். அது வீட்டுக் கறிவேப்பிலை மரத்திர்கும் ரோட்டில் இருக்கும் மரத்திலும் விளையாடும் பறந்து பறந்து அதைப் படம் எடுப்பது என்பதே கஷ்டம். அதுவும் என் கேமராவில்
நீங்கள் அதை ரொம்ப அழகா எடுத்திருக்கின்றீர்கள்.
ரசித்தேன் படங்களையும் வாசகங்களையும்
கீதா
ஆம், தேன்சிட்டு ஓரிடத்தில் நிற்காது. குறிப்பாக ஆண் சிட்டைப் படமாக்குவது மிகவும் சிரமம். பெண் சிட்டுகள் ஓரிரு நொடிகள் கூடுதல் அவகாசம் தரும்:)!
நீக்குவிரிவான கருத்துகளுக்கு நன்றி கீதா.
Thagavaluku Nandri
பதிலளிநீக்குArumaiyana Pathivu
பதிலளிநீக்கு