வெள்ளி, 22 ஜனவரி, 2021

நீர்க் கோலங்கள் - மின்நிலா பொங்கல் மலர் 2021

விதைகளிலும் உண்டு
சாமர்த்தியசாலிகள்.
புருவங்களை உயர்த்த வைக்கும்
உருவகங்களோடு
நுணுக்கமான விவரங்களோடு
நளினமான வார்த்தைகளோடு
சுவாரஸ்யமான வரிகளில்  
அங்கும் இங்கும் வழுக்கியபடி
எதையுமே சொல்லாமல்
ஆனால் சொன்னதையை
மீண்டும் மீண்டும் சொல்லியபடி.
தொடக்கத்திற்கும் 
முடிவிற்கும் நடுவே 
நதிவெள்ளத்தின் வேகத்தோடு
பெருக்கெடுத்துப் பயணித்து
வெற்றிக் களிப்பில் 
இறக்கை விரிக்கும்
சாமர்த்தியசாலிக் கவிதைகள்
ஆன்மாவைத் தொடத் தவறி
வீழ்கின்றன அதே விரைவில்
வெற்று ஜாலத்தைச் சூழும்
வெறுமையின் பாரத்தால்.
உணர்வதில்லை 
ஒருபோதும் அவை தம் தோல்வியை.
அறிவதில்லை
மொழியன்னையின் ஆதங்கத்தை.
***

நன்றி மின்நிலா!

***

7 கருத்துகள்:

  1. நீங்கள் படித்த சில கவிதைகள் பற்றிய உங்கள் உணர்வாய் ஒலிக்கின்றதோ வரிகள்?  அருமை.  மீண்டும் மின்நிலா பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறுதியில் சொல்லியிருப்பதும் உண்மை:). நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin