வியாழன், 7 நவம்பர், 2019

ஹொஸ்கொடே ஏரி, பெங்களூரு

#1
பெங்களூரிலிருந்து 21 கி.மீ தொலைவில், (ஓல்ட் மெட்ராஸ் ரோட்) பழைய சென்னை  சாலையில் இருக்கிறது ஹொஸ்கொடே எனும் தொழில் நகரம். இந்நகரின் நடுவே ஓடுகிற தக்ஷிண பினகினி நதியின் நீர்பிடிப்புப் பரப்பாக இருக்கிறது ஹொஸ்கொடே ஏரி.  

#2

கடும் குளிர் காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களில் உலகின் வட பகுதிகளிலிருந்து குறிப்பாக சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து பறவைகள் இந்தியாவை நோக்கி வருகின்றன.  தென்னிந்தியாவில் பல பெரிய ஏரிகளைக் கொண்டிருப்பதால்  பெங்களூரை நாடி வரும் பறவைகள் அதிகம்.   மிகப் பெரிய ஏரியான ஹொஸ்கொடே ஏரியைப் பறவைகளின் சொர்க்கம் என்றே அழைக்கிறார்கள். ஏனெனில் பெலந்தூர் மற்றும் வர்த்தூர் ஏரிகளைப் போல் ஆலை மற்றும் சுற்றுச்சூழல் கழிவுகள் கலக்காமல் சுத்தமான நீருடன் விரிந்து பரந்து இருக்கிறது இந்த ஏரி.  பறவைகளின் புலம்பெயர் பருவத்தில் சுமார் 70 வகைப் பறவைகளை இங்கே பார்க்க முடியும் என்கிறார்கள்.

#3

சுத்தமான நீராக இருப்பதால் கால்நடைகளை மேய்ப்பவர்கள் அவற்றை இங்கே குளிக்க அனுப்புவதைக் காணலாம். மணிக்கணக்கில் நின்று குளித்துவிட்டு வெளியேறுவதைக் காட்சி:
#4

ஏரியின் அருகே எந்த வகையிலும் சிறு வியாபாரிகள் ப்ளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யத் தடை விதித்திருக்கிறது நகராட்சி. மீறினால் அபராதம் விதிக்கிறது.


வெள்ளை நாரைகள் (white storks)
#5

#6

நெடுஞ்சாலையிலிருந்து நுழைந்து சில மீட்டர்கள் சென்றால் ஏரியை நின்று கவனிக்க, கரையில் கல்லால் ஆன பாதை உள்ளது. உயர்த்திக் கட்டப்பட்டுள்ள சாலையின் உயரத்திலேயே அந்தப் பாதையும் உள்ளது. பக்கத்தில் ஆஞ்சநேயர் கோயிலும்.

#7

 சற்றே இறங்கிச் சென்று ஏரியைப் பார்க்க அமைக்கப்பட்ட வாட்ச் டவர். 

#8

இரண்டு மாதங்களுக்கு முன் நான் சென்றிருந்தது நண்பகல் வேளையில். அதிகாலை மற்றும் மாலை வேளையில் சென்றால் அதிகமான பறவைகளைப் பார்க்கலாம். பெரும்பாலான பறவைகள் ஏரியின் நடுப்பகுதியில் மற்றும் மறுகரையில் இருந்த மரங்களில் இருந்தன. எனது 70-300mm எட்டிய அளவில் எடுத்த சில படங்களை அதுவும் கத்தரித்து (heavy cropping) இங்கே பகிர்ந்துள்ளேன். இது போன்ற இடங்களில் 500mm அல்லது 600mm வரையில் செல்லக்கூடிய லென்ஸுகள் இருந்தால்தான் தெளிவாக எடுக்க முடியும். லென்ஸ் மட்டுமே 2 கிலோ எடை என்பதால் கேமராவுடன் சேரும்போது அதைக் கையாளுவதில் இருக்கும் சிரமங்களை நினைத்து வாங்குவதில் தயக்கம் உள்ளது.


கூழைக்கடா (Pelican)
#9


#10


நீர்க்காக்கை (Cormorant)
#11

வானிலே வட்டமிட்டுக் கொண்டிருந்த கருடனை வளைத்து வளைத்து எடுத்த படங்கள் சில:


செம்பருந்து (Brahminy Kite)
#12

கிருஷ்ணப் பருந்து என்றும் அழைக்கப்படுகிறது இக்கருடன். திருமாலின் வாகனமாகக் கருதி இதைக் காணும் போது கன்னத்தில் போட்டுக் கொண்டு வழிபடும் நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

#13

#14

#15
 
இந்திய மைனா
#16
கரையோரத்தில்..

அதிக வகைப் பறவைகள் வருமெனச் சொல்லப்படும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் இங்கு சென்று பார்க்க எண்ணியுள்ளேன்.

#17
***
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

பெங்களூர் ஏரிகள்
மைசூர், குமரகம் ஏரிகள்

8 கருத்துகள்:

 1. விவரங்கள் சுவாரஸ்யம்.   படங்கள் அருமை.  குறிப்பக அந்த பறக்கும் நாரைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏரியின் நடுவே பறந்ததால் படமாக்க முடிந்தது :). மற்றவை என் லென்ஸுக்கு எட்டவில்லை.

   நீக்கு
 2. வழக்கமாக எங்கும் காணக்கிடைக்கும் காட்சி மரத்தினடியில் பிள்ளையார்தான் வீற்றிருப்பார்.  இங்கு ஆஞ்சநேயர் அருள்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெங்களூரில் பொதுவாகவே ஆஞ்சநேயருக்குக் கோயில்கள் அதிகம். இங்கே மரத்தடியில் எழுந்தருளியுள்ளார். ஏரியோரமாக இருந்தாலும் தவறாமல் பூஜை நடக்கிறது என்பது பார்த்தாலே தெரிகிறது.

   நீக்கு
 3. கிருஷ்ணப்பருந்தின் அருகாமைப் படம் அழகு.  மிக அழகு. 

  பதிலளிநீக்கு
 4. படங்கள் அருமை.
  ஏரியின் அழகும், மாடுகளின் வரிசையும் அழகு.
  நாறைகள் அழகு.


  கிருஷ்ணப்பருந்து பார்க்க மிக மிக அழகு.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin