வெள்ளி, 22 நவம்பர், 2019

காடு மல்லேஸ்வரர் - கல்கி தீபம் இதழில்..

5 டிசம்பர் 2019, கல்கி தீபம் இதழில்..


பெங்களூரின் மல்லேஸ்வரம் பகுதியில் புராதானக் கோவில்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றில் முக்கியமானது காடு மல்லேஸ்வரர் ஆலயம். இங்கே சுயம்பு லிங்கமாகத் தோன்றிய மல்லிகார்ஜூன் பெயராலேயே இப்பகுதிக்கு மல்லேஸ்வரம் எனப் பெயர் வந்திருக்கிறது. ‘காடு’ எனும் அடைமொழி அக்காலத்தில் இவ்விடம் வனத்தால் சூழப்பட்டிருந்ததால் வந்திருக்க வேண்டுமெனக் கருதப் படுகிறது. 

பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும், சத்ரபதி சிவாஜியின் தம்பியுமான வெங்கோஜி ராவ் போன்ஸ்லேயால்
திராவிடக் கட்டிடக் கலையைப் பின்பற்றி எழுப்பப்பட்ட கோயில்.  உயரமான அழகிய  நுழைவாயில் கோபுரத்துடனும், பக்கச் சுவர்களைக் கொண்ட சீரான 40 அகன்ற கற்படிகளுடனும்,  சுத்தமான பரமாரிப்புடனும் ஆக மிளிர்கிறது கோயில்.

கோயிலுக்குள் மல்லிகார்ஜுனாக வழிபடப்படும் சிவபெருமானை அடுத்து அடுத்து பார்வதி தாயாருக்கும், விநாயகர், முருகருக்கும் சன்னதிகள் உள்ளன. கொடி மரத்தின் அருகே அழகான கல்மண்படத்துக்குள் ‘ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்’ அழகிய நந்தியைக் காணலாம். பிரகாரத்தில் ஆஞ்சநேயர், தக்ஷணாமூர்த்தி ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. கோயிலின் கொடி மரம் அடிப்பாகத்தின்  நான்கு புறங்களிலும் சிவசக்தி, விநாயகர், முருகர் மற்றும் சூலாயுதம் செதுக்கப்பட்டுக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. 

கோயில் படிக்கட்டுகளுக்கு இருபுறமும் அமைந்திருக்கும் குன்றின் பகுதிகள் உயர்ந்த மரங்கள் மற்றும் பவளமல்லிச் செடிகளுடன்  சோலைவனமாகக் காட்சி தருகிறது. அதுமட்டுமின்றி இக்குன்று நாக தேவர்கள் எழுந்தருளி அருள்பாலிக்கும் இடமாகவும் உள்ளது. நூற்றுக்கும் அதிகமாக இருக்கலாம் சிலைகள். கருங்கல்லினால் ஆன நந்தி தேவர் சிலைகளும் சிவலிங்கங்களும் ஆங்காங்கே உள்ளன. மரத்தடிகளில் இஷ்ட தெய்வ வழிபாடுகளையும் காணலாம்.

ஒவ்வொரு மகாசிவராத்திரியின் போதும் இங்கே ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள்.
*

நன்றி கல்கி தீபம்!
**

மேலும் படங்களைக் காண.. தொடர்புடைய முந்தைய பதிவு.. 
https://tamilamudam.blogspot.com/2016/02/blog-post_23.html


***




12 கருத்துகள்:

  1. மகிழ்ச்சி. வாழ்த்துகள். பெங்களூர் செல்லும்போது அவசியம் செல்வேன்.
    தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது. திட்டமிட்டபடி செயலாற்றிட என் வாழ்த்துகள்.

      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. கோவில் பார்த்த நினைவுகள் வந்தன.

    பதிலளிநீக்கு
  4. எப்போதோ பார்த நினைவு நினைவுகளைப் புதுப்பிக்க மீண்டும்செல்ல முடியுமாதெரியவில்லையே

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin