வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ஜயந்தி சரோவர், ஜூப்ளி பூங்கா - ஜம்ஷெட்பூர் (2)

#1

மைசூரின் பிருந்தாவன் தோட்டத்தைப் போலவே வடிவமைக்கப்பட்ட ‘ஜூப்ளி பூங்கா’, ஜம்ஷெட்பூரின் ‘மொகல் கார்டன்’ என அறியப்படுகிறது. சுமார் 237 ஏக்கர் அளவில் பரந்து விரிந்திருக்கும் பூங்காவின் நடுவே நன்கு பராமரிக்கப்பட்டு வரும் அழகான ஜயந்தி சரோவர் (ஏரி) சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

#2

அழகான இந்த ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் உடற்பயிற்சிக்கான ஓட்ட மற்றும் நடை பாதைகள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

#3


பூங்காவெங்கும் பசுமையான செடிகள், மரங்கள், பூந்தோட்டங்கள் ஆகியவற்றோடு இரவில் ஒளிரும் நீருற்றுகள் இதன் சிறப்பு. மினுங்கி அணையும் விளக்குகளால் முழுத் தோட்டமும் ஒளிரும் அழகை செவ்வாய் மற்றும் ஞாயிறு மாலை கண்டு களிக்கலாம்.

#4
Ascent of the Trinity


#5

ஜம்ஷெட்பூர் நகரம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நினைவுற்றதைக் கொண்டாடும் விதமாக  உள்ளூர் மக்களுக்காக இப்பூங்காவை உருவாக்கி அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது டாடா ஸ்டீல் நிறுவனம்.

பூங்கா மற்றும் ஏரியின் எழில் படங்களாக இங்கே:

தோரணங்கள்
#6

#7




#8

எங்கும் அமைதி
#9

எழில்மிகு ஏரியின் முன்னே..
#a
#10

தாவரமாக டைனோஸர் 
#11

பகல் உறக்கம்
#12

இந்த வளாகத்தின் உள்ளே சஃபாரி, படகுச் சவாரி வசதிகளும் வவ்வால் தீவு, இயற்கை கல்வி மையம், புகைப்படக் கூடம் ஆகியவையும் நன்கு பராமரிக்கப்பட்டு வரும் டாடா உயிரியல் பூங்கா மற்றும் வண்ணத்துப்பூச்சிப் பூங்காவும் உள்ளன. கடைசி இரண்டையும் பற்றி அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம்.
***



8 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும் அழகு.
    எழில் மிகு ஏரியின் முன் எழிலாக நீங்கள் அருமை.
    பகல் உறக்கம் கொள்ளும் அத்தனை ஜீவனும் ஓரே மாதிரி இருக்கே! (கலர்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா :).

      ஆம், எல்லாமே ஒரே வண்ணத்தில் உள்ளன.

      நீக்கு
  2. கண்ணுக்கு விருந்தாகும் காட்சிகள் அனைத்தும்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin