ஞாயிறு, 24 நவம்பர், 2019

புதிய ஆரம்பங்கள்

#1
'பிரபஞ்சம் உங்களுக்கு வெளியே இல்லை.
உங்களுக்குள்ளேயே நீங்கள் பாருங்கள்; 
உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ, 
ஏற்கனவே நீங்கள் அதுவாக இருக்கின்றீர்கள்!'
_ரூமி

#2
"எப்படி வாழ வேண்டுமென்பதை 
நான் கற்றுக் கொண்டு விட்டதாக நினைக்கும் கணத்தில், 
வாழ்க்கை மாறத் தொடங்கி விடுகிறது."
_ Hugh Prather

#3
"அன்புதான் விடை, அது உங்களுக்கு நன்றாகத் தெரியும்;
அன்பு ஒரு மலர், அதை நீங்கள் மலர விட வேண்டும்."
_John Lennon


#4
'சில நேரங்களில் மனிதர்கள் அழகாக இருக்கின்றார்கள். 
தோற்றத்தில் அல்ல. 
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதாலும் அல்ல. 
அவர்கள் அவர்களாக இருப்பதில்!'
_Markus Zusak


#5
"ஒவ்வொரு புதிய ஆரம்பங்களும்
வேறொரு ஆரம்பத்தின் முடிவிலிருந்தே 
தொடங்குகிறது."
_Seneca


#6
“உங்கள் வருடங்களைக் கணக்கிட்டுக் கொண்டே வராதீர்கள், 
மாறாக அவற்றை மதிப்பிற்குரியதாக்கி வாருங்கள்.”
_George Meredith
**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***



6 கருத்துகள்:

  1. கொடுக்கப்பட்டிருக்கும் வரிகள், படங்கள் இரண்டுமே அழகு என்பதால் தனித் தனியாகத்தான் ரசிக்க வேண்டி இருக்கிறது!  முதலில் வரிகளை வரிசையாகப் படித்து விட்டேன். அடடா, படங்களை பார்க்க விட்டு விட்டோமே என்று அப்புறம் படங்களை பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  2. படங்களும், வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. அன்பு ஒரு மலர் ....

    ஆம் எங்கும் மலர்ந்து மணம் பரப்பட்டும்...

    அழகிய படங்களுடன் அற்புத வரிகள் .

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin