Thursday, June 5, 2014

சுற்றுச்சூழல் காப்போம்! - கைக்கொண்டனஹள்ளி ஏரி, பெங்களூரு (பாகம் 1)

5 ஜுன். உலகச் சுற்றுச் சூழல் தினமாகிய இன்று கைக்கொண்டனஹள்ளி ஏரியில் எடுத்த சில படங்களையும், ஏரியின் சுற்றுச் சூழலைப் பராமரிக்க அவர்கள் வலியுறுத்தும், கடைப்பிடிக்கும் விதிமுறைகளையும் பகிருவது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.

#1

#2

#3#4


#5 இளங்காலையில்..

#6

#7 மனம் மயக்கும் மஞ்சள் மலர்கள்

#8 சூரியக் குடும்பம்

#9 கட்டிடங்களாகி வரும் கரையோரங்கள்...

#10

சுற்றுச்சூழல் பராமரிப்பில் பெங்களூர்வாசிகள் பொதுவாகவே அக்கறை எடுப்பவர்கள்தாம். இருப்பினும் கூட அல்சூர் ஏரி உட்பட பல ஏரிகளின் சில பாகங்கள் சரியான பராமரிப்பின்றி இருப்பதை முன்னர் பகிர்ந்திருந்தேன். கைக்கொண்டனஹள்ளி ஏரி விதிவிலக்காக இருந்தது. தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளாக,
உட்புற வேலியைத் தாண்டாதிருப்பது
அனுமதியின்றி மீன் பிடித்தல்
படகுச் சவாரி
சிலைகளைக் கரைப்பது, பூஜைப் பொருட்களைக் கழிப்பது
துணி துவைப்பது
சிறுநீர் கழிப்பது, துப்புவது, குப்பையாக்குவது
பூக்களைப் பறிப்பது
மரங்கள் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது
சத்தமாகப் பாட்டுக் கேட்பது
சைக்கிள் தவிர்த்த மற்ற வண்டிகளை உள்ளே கொண்டு செல்வது
புகையிலை, மது
பொது நடவடிக்கைகள்
குடும்ப விழாக்கள்
மீன், பறவைகளுக்கு உணவு இடுதல்

இந்த விதிமுறைகள் மக்கள் அக்கறையுடன் பின்பற்றுவதை, ஒருசில தினங்கள் தங்கை வீட்டிலிருந்தபடி தொடர்ந்து அங்கு அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு சென்ற போது கவனிக்க முடிந்தது. ஏரியின் தூய்மை, ஏராளமான பறவைகள், கரையோர மரங்கள், மலர்கள் எல்லாமே பார்க்கப் பார்க்க இரம்மியம். வேறுசில ஏரிகளைப் போலின்றிப்  படகுச் சவாரி, குடும்ப விழாக்கள், பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருப்பது அமைதியான சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் படங்களுடன் ஏரியைக் குறித்து விரிவான விவரங்களைப் பாகம் இரண்டில் பார்க்கலாம்.

சுற்றுச் சூழல் காப்போம்!
***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
***

20 comments:

 1. படங்கள் அருமை. விதிமுறைகள் வகுப்பதோடு அவற்றைக் கடுமையாகப் பின்பற்றச் செய்தால் நம் மக்களும் சரியாக இருப்பார்கள்!

  ReplyDelete
 2. நல்ல விழிப்புணர்வுப் பதிவு ராமலெக்ஷ்மி.

  ReplyDelete
 3. இப்படியே எல்லா இடங்களிலும் கவனம் எடுத்தா நல்லா இருக்குமே..

  அழகான படங்களோடான பகிர்வு :)

  ReplyDelete
 4. Nice...!! I just wanted to replicate this in Puttenahalli lake where i stay near by. Which camera are you using madam?

  Thanks,
  Senthil

  ReplyDelete
 5. அற்புதமான படங்களுடன் சிறப்புப் பதிவு
  வெகு வெகு சிறப்பு
  நல்ல விழிப்புணர்வூட்டிப் போகும் பதிவினைத்
  தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete

 6. சுற்றுச் சூழல் காப்போம்!

  மகிழ்ச்சியான பகிர்வுகள்..

  ReplyDelete

 7. நல்லவிசயங்களை நல்லவிதமாய் எடுத்துரைத்த சகோதரிக்கு நன்றி.
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 8. @ஸ்ரீராம்.,

  உண்மைதான். நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 9. @சுசி,

  அதுதான் என் ஆதங்கமும். நன்றி சுசி.

  ReplyDelete
 10. எவரும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் இயல்பிலேயே மக்கள் இயற்கையை பேணும் தன்மையினராயிருப்பின் சுற்றுச்சூழல் அற்புதமாக பாதுகாக்கப்படும். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வைக் கைக்கொண்ட கைக்கொண்டனஹள்ளி ஏரி சார்ந்த பகுதி மக்களுக்கு நம் பாராட்டுகள். அழகான படங்கள் மனத்துக்கு இதம். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 11. @கீத மஞ்சரி,

  சரியாகச் சொன்னீர்கள்.

  நன்றி கீதா.

  ReplyDelete
 12. விதிமுறைகளை மதித்து மக்களும் நடக்கிறார்கள் எனத் தெரிந்து மகிழ்ச்சி....

  படங்கள் மிக அருமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin