#1
ஹெப்பால் ஃப்ளை ஓவரில் எலஹங்கா செல்லும் திசைக்கு வலப்பக்கமாகத் திரும்பும் ரிங் ரோடில், மன்யாட்டா டெக் பார்க் தாண்டியதும் உள்ள நாகவரா ஏரியைக் கடந்து செல்ல நேரும் போதெல்லாம் நிற்கிற வாகனங்களின் எண்ணிக்கை என்னதான் இருக்கிறது இங்கே என எண்ண வைக்கும். அல்சூர், சாங்கி டேங்க் பூங்கா போன்றவற்றை வாகனங்களிலிருந்தே பார்க்க முடியும். மாறாக உயரமான சுற்றுச் சுவர்களோடு எழும்பி நிற்கிறது ஏரியைச் சுற்றி அமைந்த லும்பினி கார்டன்ஸ்.
‘லும்பினி’, புத்தர் சித்தார்த்தாக 29 வயது வரை வாழ்ந்த இடம். இராணி மாயாதேவி அவரை பிரசவித்தததும் அங்குதான் என நம்பப்படுகிற லும்பினி இப்போது புத்த மதத்தினர் புனித யாத்திரை செல்லும் ஸ்தலம் என்பதும் குறிப்பிடத் தக்கது. நேபாலின் ரூபன்தேஹி மாவட்டத்தில் இருக்கிற லும்பினியின் பெயரில்அமைந்த பூங்காவில், புத்தர் சிலைக்கு அருகே போக அனுமதி இருக்கவில்லை நான் சென்றிருந்த போது. ஏனென்று பிறகு பார்ப்போம்.
#2 மேக மூட்டமாய் இருந்த ஒரு நண்பகல் வேளை
சென்ற ஜூலை மாதம் சென்றிருந்தேன். ஆம், வருடம் ஒன்றாகப் போகிறது:)! எடுத்த படங்கள் சிலவற்றுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமே எனத் தோன்றியது.
#3 ‘அண்ணா அவரு’க்கு மரியாதை
#4 படகுச் சவாரியும் இருக்கிறது.
#5 பாதுகாப்பு உடைகள் (Life jackets) வழங்கப்படுகின்றன.
விரையும் படகில் செல்லும் குழந்தைகளை இரசித்தபடி பெற்றோர் |
பூங்காவெங்கினும் அழகழகான சிலைகள்
#6
#7
**
ஊகித்திருப்பீர்கள் இப்போது ‘இந்தச் சிலை’ இங்கேதான் எடுக்கப்பட்டது என்பதை:)!
#9 கரையோர முதலைகள்
செல்லும் முன் சேகரித்த தகவலின்படி அங்கே 25 அடி உயரத்தில் அழகான புத்தர் சிலை இருப்பதை அறிய வந்தேன். பால் வெண்மையில் பார்த்ததுமே மனதைக் கவர்ந்தது வடிவம். அதைப் படமாக்க வேண்டும் என்கிற ஆசையுடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டாவது வாயிலையும் தாண்டி உட்பக்கமாகச் சென்றால் சிலை இருக்கும் என்றார்கள்.
இணையத்திலிருந்து... |
நதியில்லாத இல்லாத குறையை சரி செய்யப் பதினாறாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டவை பெங்களூரின் பல ஏரிகள். இருபது ஆண்டுகளுக்கு
முன் வரையிலும் சுமார் 51 ஏரிகள் இருந்திருக்க, நகரமயமாக்கலுக்கு பலியானவை போக எஞ்சி நிற்பவை மிகச் சொற்பமே. தற்போது ஒரளவு பராமரிப்புடன் இருப்பவை 17 மட்டுமே என்கிறார்கள். பல மூடப்பட்டு பேருந்து நிலையங்களாக, கால்ஃப் மற்றும் விளையாட்டு மைதானங்களாக, குடியிருப்புகளாக மாறிப் போயிருக்கின்றன.
#11
தப்பிப் பிழைத்த ஏரிகளைக் காப்பாற்ற இப்போது அரசும் கவனம் எடுத்து வருகிறது. நாகவரா ஏரியின் பராமரிப்பைத் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். படகுச் சவாரி, food court ஆகியவற்றோடு குழந்தைகளை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது வாட்டர் தீம் பார்க். கடற்கரையில் கால் நனைக்கும் குதூகலத்தைக் கொடுக்க அலைகள் எழும்பும் குளம் சிறப்பம்சம்.
பறவைகள் வரவு குறைவே. ஹெப்பால், சர்ஜாப்பூர் சாலையில் இருக்கும் கைக்கொன்றஹல்லி போன்ற ஏரிகளுக்கு பறவைகளைக் காணவும், படமாக்கவும் செல்லுபவர் கூட்டம் அதிகம். மற்றபடி, காலை மாலை வேளைகளில் நடைப்பயிற்சிக்கென்றே பலரும் இங்கு செல்லுகின்றனர். பறவைகள் இல்லாவிட்டால் என்ன? இதோ அன்றைய தினத்தை அழகாக்கிய சில பூச்சிட்டுக்கள்....
#12 தளிர் நடை
#13 உற்சாகத் துள்ளல்
#14 ஓடி விளையாடு..
#15 ஓய்ந்திருக்கலாகாது..
#16 ஆச்சரியம்
# 17
இதுவரை சென்றிராத பெங்களூர்வாசிகள் வாய்ப்புக் கிடைத்தால் ஒரு முறை போய் வரலாம்:)!
***
அருமையான படங்களுடன் விளக்கங்கள் அருமை...
பதிலளிநீக்குகுழந்தைகள் படங்கள் சூப்பர்...!
படங்கள் அழகு..
பதிலளிநீக்குபுதிதாக நீர்நிலைகளை உருவாக்க முடியாவிட்டாலும் இருப்பதையாவது சரியாகப் பராமரிப்போம் என்ற சிந்தனை இல்லாத வரைக்கும் தண்ணீர்+மழை பிரச்சினைகள் இருந்து கொண்டுதானிருக்கும்..
அடுத்த முறை பெங்களூரு போய் வரும்போது பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்கு//பாவம் போல நின்றிருந்தவர் கேமராவைப் பார்த்ததும் பயங்கர டென்ஷனாகி விட்டார்.//
பதிலளிநீக்கு:))))
அந்த முகம் கோபப் படும்போது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்யச் சுவாரஸ்யமாய் இருக்கிறது. வழக்கம்போல அழகிய படங்களுடன் நல்லதொரு இடத்தைச் சுற்றிக் காட்டி விட்டீர்கள்.
படங்களும் பதிவும் அருமை.
பதிலளிநீக்குசொ.வினைதீர்த்தான்
ஜாலியான பதிவு
பதிலளிநீக்குஅனைத்துப் படங்களும், பதிவும் மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குலும்பினி பூங்காவை அழகாகச் சுற்றிக்காட்டியதோடு பல அருமையான தகவல்களையும் வழங்கியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி. நீர்நிலைகள் தூர்க்கப்படுவது போன்ற துக்ககரமான செயல் வேறெதுவும் இல்லை. புத்தரின் பெயரால் நிறுவப்பட்ட பூங்காவில் புத்தரின் நிலையை நினைத்து வருத்தமே மேலிடுகிறது.
பதிலளிநீக்குஅட! இப்படி ஒரு இடமா!!!!!
பதிலளிநீக்குஅருமை! அருமை!
அங்கே ஒரு பதிவர் சந்திப்பு வச்சுக்குவோமா?
படங்கள் ஒவ்வொன்னும் அழகோ அழகு.
அதிலும் அந்த தளர்நடை .... அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுதே!!!!
சரியாச் சொன்னீங்க டீச்சர்! தளிர் நடையும், தேவதை சிலையும் கண்ணை இறுக்கிப் பிடிச்சுட்டு நகரவே விடலை. லும்பினி பற்றிய தகவல்களும் அருமை! நிச்சயம் ஒரு முறை போய் வரணும்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன். நன்றி ராமலக்ஷ்மி மேடம்!
பதிலளிநீக்குகாவிரியை வச்சுகிட்டு நமக்கு ‘தண்ணி’ காட்டும் கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் நதியே இல்லையா!! இப்போத்தான் தெரிஞ்சுகிட்டேன். :-)
பதிலளிநீக்குபறவைகள் இல்லையென்றால் என்ன.... எனச் சொல்லி நீங்கள் பகிர்ந்த பூஞ்சிட்டுகள் மனதைக் கவர்ந்தார்கள்....
பதிலளிநீக்குஎத்தனை எத்தனை விஷயங்கள் உங்கள் ஊரில்... பார்க்க வேண்டும்.
லும்பினி கார்டன்ஸ் பற்றி இப்ப தான் கேள்விபடுறேன்.சிலைகள் மிக அழகு.படங்கள் அதை விட அழகு.அய்யோ அந்த ஜோடி முதலைகள் அருமை. சிலையா ? அல்லது உயிருள்ளவையா என்று வியக்கும் வண்ணம் உள்ளது..டென்சன் ஆன காவலாளி இந்தப் படத்தைப் பார்த்தால் மனம் குளிர்ந்து போய் விடுவார்.ஆக்ஷனுடன் குழந்தைப்படங்கள் தத்ரூபம்.எங்க மக்கள் எல்லாம் பெங்களூரில் இருக்காங்க,அவர்களுக்கு தெரிவிக்கிறேன்..
பதிலளிநீக்குஒரே ஒரு முறை எலஹங்கா போயிருக்கிறேன். அந்த ஹெப்பால் ஃப்ளை ஓவருக்கு சிறிது முன்னால் தான் என் அலுவலகம் (மான்யதா) இருக்கிறது. ஆனால் லும்பினி கார்டன்ஸ் பற்றி கேள்விப்பட்டதில்லை. :)). வாய்ப்பு கிடைக்கும் பொழுது பார்க்கிறேன். வழக்கம் போல் படங்கள் அருமை.
பதிலளிநீக்கு@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குஉண்மைதான் சாந்தி. நன்றி.
@ராஜி,
பதிலளிநீக்குநல்லது ராஜி:)! நன்றி.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். படம் எடுத்து பத்திரிகைக்குக் கொடுத்து விடுவேனோ என்கிற பதட்டம் அவருக்கு:)!
@s.vinaitheerthan,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி,
பதிலளிநீக்குநன்றி விஜி:)!
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி vgk sir.
@கீத மஞ்சரி,
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி கீதா.
@துளசி கோபால்,
பதிலளிநீக்குதாராளமாய் ஏற்பாடு செய்திடலாம்:)! நன்றி.
@பால கணேஷ்,
பதிலளிநீக்குநன்றி கணேஷ்:)!
@ஹுஸைனம்மா,
பதிலளிநீக்குஅட, இது புதிய தகவலா உங்களுக்கு:)? நன்றி ஹுஸைனம்மா.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@Asiya Omar,
பதிலளிநீக்குநட்புகளுக்குச் சொல்லலாம். விடுமுறை நாட்களில் கப்பன் பார்க் போல, சென்ற இடங்களுக்கே மீண்டும் மீண்டும் செல்லாமல் ஒருமுறை முயன்றிடலாம். நன்றி ஆசியா.
@தியானா மான்யதாவுக்கு ரொம்ப ரொம்பப் பக்கத்தில் இருக்கிறது:). லும்பினி கார்டனைத் தாண்டிதான் ஃப்ளை ஓவரை அடைய வேண்டும். நன்றி தியானா:)!
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு. மலரும் குழந்தைகள், கள்ளமில்லா சிரிப்புடன் களித்து விளையாடுவது அழகு.
பதிலளிநீக்குலிம்பினி கார்டன்ஸ் பார்க்கவில்லை, பார்க்க ஆவல்.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குஅடுத்த முறை வருகிற போது அங்கே சந்திப்பு வைத்துக் கொள்ளலாம்:)! நன்றி கோமதிம்மா.