‘தி இந்து’ குழுமத்திலிருந்து ஞாயிறு தோறும் வெளிவரும் காமதேனுவின் பொங்கல் சிறப்பிதழில்.. எனது கவிதை..
ஆரஞ்சுத் தீட்டல்களுக்கு நடுவில்
விரைகின்றன ஆகாயத்தில் சத்தமின்றி.
உறங்கும் உலகத்திற்குக் கேட்பதில்லை
மென் சிறகுகளின்
காற்று கடத்தி வருகிற
அவற்றின் விதம் விதமான அழைப்பில்
மெல்ல விடிகிறது பொழுது.
மேகப் பொதிகளுக்குக் கீழ்
வயல்களுக்கு மேல்
வாய்க்கால்களுக்கு மேல்
நகரங்களுக்கு மேல்
கிராமங்களுக்கு மேல்
குன்றுகளுக்கும் குளங்களுக்கும் மேல்
எண் திசைகளிலும் பறக்கின்றன
பல அளவுகளில், பல வண்ணங்களில்.
சில காண அரிதானவை
சில அன்றாடம் பார்ப்பவை
வனப்பு சேர்ப்பவை வசீகரமானவை.
அண்டமே தமக்கானதாய்
ஆனந்தமாய்த் திரிந்தவை
இன்று காலூன்றிக் களைப்பாற
இரவு வந்தால் இளைப்பாற
கூடமைத்துக் குடும்பம் வளர்க்க
மிச்சமிருக்கும் மரங்களைத் தேடி
தவிப்போடு அலைந்தாலும்,
விருட்சங்களுக்கான
விதைகளைச் சுமந்து
எச்சங்களாய் விதைத்து
பறக்கின்றன புதிர்களாய்
புகார்கள் ஏதுமின்றி.
புகார்கள் ஏதுமின்றி.
***
அருமையான கவிதை! கவிதை 'காமதேனு 'வில் பிரசுரமானதற்கு அன்பு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஇப்போது தான் பார்த்தேன். 1000 பதிவுகள் நிறைவடைந்ததற்கு, அந்த இனிய சாதனைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி மனோம்மா.
நீக்குகவைதை அருமை.
பதிலளிநீக்குகாமதேனு வில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
//மிச்சமிருக்கும் மரங்களை தேடி //
இதை படிக்கும் போது கவலையாக இருக்கிறது.
நன்றி கோமதிம்மா!
நீக்குபல பறவைகளுக்கு வீடுகளாய் இருந்த பெருமரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதை நாமே பார்க்கிறோமே :( !
காமதேனுவில்வெளியானதற்கு வாழ்த்துகள். கவிதை அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமை... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குமுணுமுணுப்பின்றி கடமையைச் செய்வதில் சற்றும் சலிப்பின்றி பறக்கும் பறவைகள் மிக அழகு. நம்பிக்கை வரிகள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆம், அவற்றுக்குச் சலிப்பே கிடையாது.
நீக்குகருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
ஆகாசப் பறவைகள் அருமை. காமதேனுவில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு"இருக்க இடம் தேடி.... அவையும் புது வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டன.பால்கனி சாடி சிறு மரங்களிலேயே கூடு கட்டி வாழ்கின்றன.
உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.
நீக்குபுகார்கள் ஏதுமின்றி... உண்மை. மனிதர்கள் தான் எப்போதும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குநல்ல கவிதை. காமதேனுவில் வெளியீடு - பாராட்டுகளும் வாழ்த்துகளும்.