ஆயிரமாவது பதிவு
2008_ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கிய ‘முத்துச்சரம்’, பதினொன்றரை ஆண்டுகளாகச் சீராகப் பயணித்து ஆயிரமாவது பதிவைத் தொடுகிறது. முத்துச்சரமும் சரி, ஃப்ளிக்கர் ஒளிப்படப் பக்கமும் சரி, ஆரம்பித்தபோது நினைத்ததில்லை இத்தனைக் காலம் தொடர்ந்து இவற்றில் ஈடுபடுவேன் என்று. ஆனால் ஒரு ஒழுங்குடன் என் படைப்புகளைச் சேமித்து வர இவை உதவுகின்றன என்றால் அது மிகையாகாது.
வலைப்பூக்களின் காலம் முடிந்து விட்டது என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. பிற சமூக வலைத்தளங்களால் ஈர்க்கப்பட்டுப் பலரும் வலைப்பூக்களை விட்டு ஒதுங்கி விட்டது ஒரு புறமிருக்க, திரட்டிகளும் செயல்படாத நிலையில் பொதுவான இந்த எண்ணத்தைத் தவறென்றும் சொல்ல முடியாது. ஆனால் முன் போல வருகையாளர் எண்ணிக்கை இல்லாது போயினும் தனிப்பட்ட முறையில் நம் படைப்புகளைச் சேமித்து வர வலைப்பூ உதவுவதோடு நம் செயல்பாடுகளை நிறுத்தி விடக் கூடாதென்கிற முனைப்பையும் தருகிறதென்பதைத் தொடர்ந்து இங்கு செயல்படுகிறவர்கள் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்:).
கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை, மொழிபெயர்ப்பு இலக்கியம், வாழ்வியல் சிந்தனைகளின் தமிழாக்கம் போன்றவற்றோடு புகைப்படத் தொகுப்புகள், பயணப் பதிவுகள் எனத் தொடர்ந்து, எட்டு இலட்சத்து இருபத்தியாறாயிரத்து எழுநூறு +++ பக்கப் பார்வைகளைக் கடந்து கொண்டிருக்கிறது முத்துச்சரம். ஆரம்பக் காலத்தில் ஊக்கம் தந்த நண்பர்கள், தற்போது வரையிலும் உடன் வருகிறவர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.
*
-------------------------
-------------------------
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (65)
பறவை பார்ப்போம் - பாகம் (47)
“எனது பலம், எனது தனித்திறம் மற்றும்
நான் எதற்குத் தகுதியானவர் என்பது
எனக்குத் தெரியும்.”
_ William Gallas
#2
“உன்னை நீ காத்திடு;
உன் நம்பிக்கையில் நிமிர்ந்து நில்;
தைரியமாக இரு; உறுதியாய் இரு.”
_(1 Corinthians 16:13)
#3
“நான் தேடுவது வெளியில் இல்லை,
என்னிடமே உள்ளது.”
_ Helen Keller
#4
“இலக்கை அடைந்து விட்டீர்களா?
புதிய இலக்கை நிர்ணயிங்கள்!”
#5
“சரியான தருணத்திற்காகக் காத்திராதீர்கள்.
தருணத்தைச் சரியானதாக மாற்றிக் கொள்ளுங்கள்!”
#6
“அமைதியாக இருத்தல் என்பது அசையாது இருத்தல் அன்று.
அமைதியாக முன்னேறுவது.”
_ Eyen A Gardner
#7
“உங்கள் மனது, அறிவு, ஆன்மா இவற்றைச்
சின்னச் சின்ன செயல்களிலும் வையுங்கள்.
அதுவே வெற்றிக்கான இரகசியம்.”
**
“இங்கே” ஃபேஸ்புக் பகிர்வில் வாழ்த்தியிருக்கும் அனைவருக்கும் எனது நன்றி. [இணைப்பு, எனது சேமிப்புக்காக :) ]
***
“இங்கே” ஃபேஸ்புக் பகிர்வில் வாழ்த்தியிருக்கும் அனைவருக்கும் எனது நன்றி. [இணைப்பு, எனது சேமிப்புக்காக :) ]
***
இன்னும் பல நூறு பதிவுகள் வெளியிட்டு சிறப்பெய்த வேண்டும்..
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்...
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
நீக்குவாழ்த்துகள் மேடம்.
பதிலளிநீக்குநன்றி அமைதி அப்பா.
நீக்குஇன்னும் ஆயிரமாயிரம் பயனுள்ள பதிவுகள் காண வாழ்த்துகள். முன்புபோல கூட்டம் வருவதில்லை. உண்மைதான். என் கடன் பணிசெய்துகிடப்பதே என்று எழுதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆம். அப்படியே தொடருவோம்:).
வழக்கம்போலவே படங்களும், அதற்கான வரிகளும் போட்டி போடுகின்றன.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு1000..மகிழ்ச்சி. தொடர்ந்து மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஒவ்வொரு பதிவையும் சோர்வின்றி கிரமமாகச் சிரத்தையுடன் நேர்த்தியாகக் கோர்க்கும் உங்களது உழைப்பு ஆச்சரியம்!!
பதிலளிநீக்குஇலக்கை நிர்ணயித்து அதை அடைவதும், புதிய இலக்கை நோக்கிப் பயணிப்பதும் என்பது எத்தனை மகிழ்ச்சி!
இன்றைய சிந்தனை துளிகள் ஆயிரமாவதுப் பதிவுக்கு மிகப் பொருத்தம்.
வாழ்த்துக்கள்.
ஊக்கம் தரும் வரிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
நீக்குமிக மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் ...
பதிலளிநீக்குஉங்களின் படம் பார்த்து மேலும் மேலும் படம் எடுக்கும் ஆசை என்னுள் வரும் ..இது போல பலருக்கு ஊக்கம் தருபவை உங்களின் பதிவுகள் ...
மேலும் ஸ்ரீராம் சார் சொன்னது போல என் கடன் பணி செய்து கிடப்பதே ..என்னும் படி நாம் நமக்கு பிடித்த விடயங்களை சலிப்பு இல்லாமல் மகிழ்வோடு செய்வோம் ..
மகிழ்ச்சி. மிக்க நன்றி அனு.
நீக்குஆபிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்க்ஷ்மி.
பதிலளிநீக்குஇன்னும் இன்னும் நிறைய எழுதி சாதனை படைக்க வேண்டும்.
படங்களும் வாழ்வியல் சிந்தனைகளும் மிக அருமை.
மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குராமல்க்ஷ்மி
பதிலளிநீக்குஅழகான படங்கள். அவற்றுக்கான வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குஆயிரமாவது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் படைத்திட எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
வாழ்த்துகளுக்கு நன்றி வெங்கட்.
நீக்குஅற்புதமான தொகுப்பு. ஆயிரமாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி கீதா.
நீக்குஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள் தொடர்க வெற்றிகள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி. நலம்தானே?
நீக்கு