ஞாயிறு, 8 மார்ச், 2020

பெண்மொழி - உடைபடும் மெளனங்கள் - மகளிர் தின வாழ்த்துகள்!


த்திராஜ் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் இரா பிரேமா அவர்கள் தொகுத்துள்ள இந்நூலில் கடந்த அரைநூற்றாண்டில் பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட பெண்களின் வலியைப் பேசும் 30 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நான் எழுதிய ‘அவளும் நோக்கினாள்’ கதையும் இடம் பெற்றுள்ளது:

‘பாரதி புத்தகாலயம்’ வெளியீடான இந்நூலின் அணிந்துரையிலிருந்து முனைவர் இரா பிரேமாவின் வரிகள் சிலவற்றையும் மகளிர் தினமான இன்று இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

*ந்தத் தொகுதியில் உள்ள கதைகளை எழுதிய ஒவ்வொரு எழுத்தாளர்களுமே பெண்களின் வாழ்க்கையின் மீதும், சமூக இருத்தலின் மீதும், ஆழ்ந்த சிந்தனையும், கவலையும் பொறுப்புணர்வும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இந்தக் கதைகளை ஒட்டு மொத்தமாக அலசி ஆராய்ந்த பொழுது,
பெண்களுக்கு வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் தருணங்களிலும் எல்லைகள் குறுக்கப்பட்டுத் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை அவதானிக்க இயலுகிறது.

*ங்கெல்லாம் பெண்களின் வெளி குறுக்கப்பட்டு, வலிகள் அதிகரிக்கின்றனவோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழி, ஆளுமை உடையதாகவும் காத்திரம் உடையதாகவும் அமைந்து விடுகின்றது. இத்தொகுதியில் எடுத்தாளப்படும் கதைகளை எழுதிய பெண் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மொழி ஆளுகையினால், தங்களுக்கான அடையாளத்தை நிலைநிறுத்தத் தவறவில்லை. 

*ண் மொழியிலிருந்து பெண்மொழி முற்றிலும் வேறுபட்டது. பெண்ணுக்கான சில வலிகளை ஆண் அனுபவிக்க வாய்ப்பில்லை. அவன் கற்பனை செய்தாலும் அந்த வலியின் வீரியத்தை உணர்ந்து பிறருக்கும் உணர்த்த இயலாது. அதனால்தான், யுகம் யுகமாய் வலியை அனுபவ்குக்கும் பெண்களின் மொழி வீரிய வீச்சுக்களாக வெளிப்படுகின்றன.

*ல்லாப் பெண்களும் எல்லா வலிகளையும் அனுபவித்து இருக்க முடியாது. அதனால், அதை உணர்த்தும் நிலையிலும், புரிதல் நிலையிலும் அவர்களுக்குள் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

*பெண் மொழி வலியிலானது மட்டுமல்ல; வலிமையானதும் கூட. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் மெளனித்த அவர்கள் மொழி இன்று வீரியத்துடன் விதைக்கப்படுகின்றன. வாசகர்கள் பலர் கண்ணிலும் கருத்திலும் படாத பெண்களின் வலிகளை எடுத்துரைக்கும் காத்திரமான கதைக்களங்களை / சொல்லாடல்களை அவர்களுக்கு உணர்த்த விழைகிறேன்.

த்தொகுப்பிலுள்ள கதைகளைப் பற்றி பிறிதொரு சமயம் நூல் மதிப்புரையாகப் பகிர்ந்திடுகிறேன். 

ஒவ்வொரு கதையைப் பற்றிய தனது பார்வையையும் எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் இரா பிராமா அவர்கள் இந்நூலில் வழங்கியுள்ளார்கள். 

என்னைப் பற்றிய குறிப்பும்.. எனது கதை ‘அவளும் நோக்கினாள்’ குறித்த அவரது பார்வையையும்.. அடுத்த தூறல் பகிர்வில் பதிந்திடுகிறேன்.
*

'பெண்களின் உரிமை மற்றும் ஆண் பெண் சமத்துவம்' என்பது 2020 சர்வதேச மகளிர் தின மையக் கருவாக எடுத்துக் கொள்ளப்பட்டு உலகெங்கிலும் வலியுறுத்தப் படுகிறது. உண்மையான சமத்துவம் , உரிமை என்னவென்கிற புரிதலோடு அதற்காகப் பாடுபடுவோம். 


மகளிர் தின நல்வாழ்த்துகள்!
**

எனது கதையை இத்தொகுப்பில்
சேர்த்த முனைவர். இரா பிரேமாவுக்கு நன்றி!
***

9 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. மகிளிர் தின சிறப்பு பகிர்வு அருமை.
    மகளிர் தின வாழ்த்துக்கள்.

    உங்கள் கதையும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. சிறப்புப்பதிவின் மூலம் ஒரு அருமையான புத்தகத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி..அவசியம் வாங்கிப்படிக்கவேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டும் விமர்சனம்.அவசியம் வாங்கிப் படித்துவிடுவேன்..

    பதிலளிநீக்கு
  4. மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    தேர்ந்தெடுத்த கதைகளில் பேராசியர் எம்.ஏ. சுசீலா அம்மா அவர்களின் கதையும் - தில்லியில் சில காலம் அவர்கள் இருந்தபோது சந்தித்தது உண்டு. அவரும் சில காலம் பதிவுகள் எழுதி வந்தார். இப்போது எழுதுவது இல்லை எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.

      ஆம், பேராசிரியர் எம்.ஏ.சுசிலா அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ‘தேவந்தி’யில் இடம் பெற்றிருந்த கதை அது. தற்போது அவர் தமிழகத்தில் வசிப்பதாக அறிய வந்தேன்.

      நீக்கு
  5. @ மாதேவி,

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி மாதேவி. கைத் தவறியதில் தங்களது கருத்துரை நீங்கி விட்டது. வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin