Monday, May 21, 2012

தூறல்: 5 - கல்கி சிறுகதைப் போட்டி; IRCTC

ல்கி 2012 சிறுகதைப் போட்டி அறிவிப்பைத் தவறவிட்டவர் வசதிக்காக இங்கே:கடைசித் தேதி 15 ஜூன் 2012. ஒவ்வொரு வாரமும் கல்கியில் வெளியாகிக் கொண்டிருக்கிற அறிவிப்புடன் இருக்கும் கூப்பனை நிரப்பிக் கதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும் எனும் புதிய விதிமுறையைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
***


IRCTC-யில் தத்கல் பயணச்சீட்டுக்களுக்கு முன்பதிவு செய்யும் நேரத்தை இப்போது 24 மணிநேரமாக்கி விட்டது அனைவரும் அறிந்ததே. அவசரப் பயணங்களுக்கு அதிகாலை 8 மணிக்கு தயாராகக் கணினி முன் காத்திருந்து மடமடவெனப் படிவத்தை நிரப்பி நிமிரும் முன் மின்னல் வேகத்தில் வேறு யாரேனும் வாங்கி விட்டிருக்க ஏமாந்த அனுபவம் உங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். கை கொடுக்க வந்திருக்கிறது ஐஆர்சிடிசியின் புதிய வசதியான மேஜிக் ஆட்டோ ஃபில். தத்கலுக்கு மட்டுமின்றி எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டுமானாலும் உபயோகமாகும். இணைய குழுமத்தில் உதயன் பகிர்ந்திருந்த தகவலைப் பார்த்து அறிய வந்தேன். உங்களுக்கும் பயனாகலாம்.

மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இப்பக்கத்தில் காணப்படும் படிவத்தை ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் செய்வது போன்றே பெயர், வயது உள்ளிட்ட விபரங்களையும் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே நிரப்பி தயார் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்தபின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும். அதை அப்படியே டிராக் செய்து, புக் மார்க் டூல் பாரில் நிறுத்தி விடுங்கள். முன்பதிவு செய்யும் போது விவரங்கள் நிரப்பும் பக்கம் வருகையில் டூல் பாரில் நிறுத்திய மேஜிக் ஆட்டோ ஃபில்-ஐ க்ளிக் செய்தால், பயணிகளின் விவரப் பட்டியல் ஒரு நொடியில் நிரம்பி விடும். தெளிவாகத் தெரிந்து கொள்ள யூட்யூபில் வீடியோ டெமோவும் தந்திருக்கிறார்கள்.
***

பெங்களூரின் கோடை வெப்பத்தைத் தணிக்கும் விதமாக சாரலைக் கொண்டு வந்து சேர்த்தார் மும்பையிலிருந்து வந்திருந்த (அமைதிச் சாரல்) சாந்தி மாரியப்பன். கடந்தவார இறுதியில் அவர் இங்கிருந்த நான்கு நாட்களும் மழையால் பூமி குளிர்ந்தது. சந்திப்பால் எங்கள் மனமும்:)! சென்ற திங்கட்கிழமை மாலை சொன்ன நேரத்தை விடச் சற்று தாமதமாகவே செல்ல முடிந்தது என்னால். அதுவரையிலும் மூன்றாம் ஆண்டைத் தொடங்கும் வல்லமை இதழின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள் நிறுவனர் அண்ணா கண்ணனும், துணை ஆசிரியரான சாந்தியும். எனது ‘புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்’ பதிவுக்காக வல்லமையாளர் விருது கிடைத்ததை ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான பரிசும் அன்று வழங்கப்பட்டது. நன்றி வல்லமை:)! சந்திப்பில் ஐயப்பன் கிருஷ்ணன், வா. மணிகண்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

***
ங்கள் ப்ளாகில் பாஹே அவர்கள் 'கதைக்குத் தலைப்பு'ப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்குமே பரிசு என அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வென்றவர்களை. “அடடா இப்படி நடக்குமெனத் தெரியாமப் போச்சே. இனி சொன்னால் பரிசு உண்டா?” கெஞ்சாத குறையாக ஆதங்கப்பட்டார்கள் கலந்து கொள்ளாத நண்பர் சிலர்:)! நல்ல பரிசைத் தவறவிட்டிருக்கிறார்கள்.மனைவியின் மறைவுக்குப் பிறகு அவரது பெயரையும் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு விட்ட திரு பாலசுப்ரமணியம் ஹேமலதா(பாஹே) எழுதிய தத்துவத் துளிகளால் நிறைந்தது இந்நூல். வாழ்வியல் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியும், மானுடரின் மனப்போக்குகளை அலசித் தன் கோணத்தில் விடைகளைத் தந்தும் நிறைய சிந்திக்க வைக்கிறார். முதிர்ந்த அனுபவம் தெளிந்த வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டுவதாக அமைந்திருக்கும் பின் அட்டையும், தத்துவச்சாரலில் நனையும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுமாக அட்டைப்படம் ஒரு அழகிய செய்தியைச் சொல்கிறது. பரிசுக்கு நன்றி 'எங்கள் ப்ளாக்'!

புத்தகத்திலிருந்து ஒரு துளி:

எவரெஸ்டை எட்டுவதிலா இருக்கிறது வெற்றி?
***

டத்துளி:
இப்ப நல்லாத் தெரியுதுப்பா!

***

42 comments:

 1. [அமைதிச்சாரல் ]சாந்திமாரியப்பனை சென்னைக்கு அனுப்பிவையுங்கள்...மாரி மாரி இங்கும் மாரி பொழியட்டும் அட்லீஸ்ட் சாரலாவது விழட்டும்

  ReplyDelete
 2. IRCTC முன்பதிவு பற்றி பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ ..!

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  கல்கி சிறுகதைப் போட்டிக்கு கடைசி நாள் ஜூன் 15 அல்லவா!

  ஜூன் 5 என்று தவறுதலாகப் போட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

  However Earlier is Better.

  அனைவரும் கலந்துகொண்டு பரிசு பெற என் அன்பான வாழ்த்துகள். vgk

  ReplyDelete
 4. goma said...
  //மாரி மாரி இங்கும் மாரி பொழியட்டும் அட்லீஸ்ட் சாரலாவது விழட்டும்//

  மீண்டும் பெங்களூருக்கே வரச் சொல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன்:)! அவர் சென்ற பின் மீண்டும் இங்கு அனல் வெயில்.

  ReplyDelete
 5. IRCTC விவரங்கள் உபயோகமானவை. அமைதிச்சாரலைச் சென்னைக்கு வரச் சொல்லுங்களேன்! நேற்று 112 டிகிரியாம். கொஞ்சம் மழை வந்தால் நலம்! தூறல்கள் மற்றும் எங்கள் பிளாக் பற்றிய வரிகளுக்கு நன்றி.

  ReplyDelete
 6. வரலாற்று சுவடுகள் said...
  /IRCTC முன்பதிவு பற்றி பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ ..!/

  மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 7. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  கல்கி சிறுகதைப் போட்டிக்கு கடைசி நாள் ஜூன் 15 அல்லவா!//

  திருத்தி விட்டேன். நன்றி:)!

  ReplyDelete
 8. @ ஸ்ரீராம்,

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  கேட்போம் சாந்தியை:)!

  ReplyDelete
 9. மிக ம்க நன்றி ராமலக்ஷ்மி. கல்கி அறிவிப்புக்காகவும்,
  ரயில் முன்பதிவுக்கும்.
  இப்பொழுதுதான் ஏஜண்டிடம் பணம் கொடுத்தேன் வரப்போகும் பயண டிக்கட்டுகளுக்காக. இனி முன் ஜாக்கிரதை முத்தண்ணாவக இருக்கக் கற்றுக்கொள்ளுகிறேன்.

  தூறலகள் புத்தகம் பார்க்கவும் படிக்கவும் நன்றாக இருக்கிறது.
  சர்ரலிடம் இப்போதுதான் சொன்னேன் சென்னை வாருங்கள் என்று . கொதிக்கிறது எங்களூர்.!!!

  ReplyDelete
 10. போட்டோல யாரு யாருனு தெரியலியே? பின்னால இருக்குறது என்ன பில்டிங். ரெண்டு ஆக்டப்ஸ் சிற்பங்கள்..?

  ReplyDelete
 11. பயனுள்ள அழகான முத்துச்சரத்திற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 12. அருமையான சந்திப்பையும் நினைவு கூர்ந்ததுக்கு மிக்க நன்றி :-)

  //அவர் சென்ற பின் மீண்டும் இங்கு அனல் வெயில்.//

  ஒண்ணும் சொல்றதுக்கில்லை :-))))))))))))))))

  ReplyDelete
 13. IRCTC முன்பதிவு பயனுள்ள தகவல் நன்றி

  ReplyDelete
 14. அத்தனையும் அருமை அக்கா.. கூடவே வாழ்த்துகளும் :)

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் அக்கா!!

  ReplyDelete
 16. கல்கி சிறுகதைப்போட்டி தகவலை ஞாபக்மூட்டியதற்கு நன்றி. கதைதான் தோணவேமாட்டுக்கு. தந்தையின் தோளில் அமர்ந்திருக்கும் அந்தப் பையன் சூப்பர்.

  ReplyDelete
 17. ஆஹா! அருமையான சந்திப்பு,போட்டி அறிவிப்பு,புத்தகப்பகிர்வும் மிக நன்று.

  ReplyDelete
 18. வல்லிசிம்ஹன் said...
  //தூறலகள் புத்தகம் பார்க்கவும் படிக்கவும் நன்றாக இருக்கிறது.
  சாரலிடம் இப்போதுதான் சொன்னேன் சென்னை வாருங்கள் என்று . கொதிக்கிறது எங்களூர்.!!!//

  நன்றி வல்லிம்மா:)!

  ReplyDelete
 19. கே. பி. ஜனா... said...
  //உபயோகமான தகவல்!//

  நன்றி.

  ReplyDelete
 20. அப்பாதுரை said...
  //போட்டோல யாரு யாருனு தெரியலியே? பின்னால இருக்குறது என்ன பில்டிங். ரெண்டு ஆக்டப்ஸ் சிற்பங்கள்..?//

  சொல்லியிருந்திருக்கணும்:). இடமிருந்து வலமாக வா. மணிகண்டன், ஐயப்பன் கிருஷ்ணன், நான், சாந்தி, அண்ணா கண்ணன். பில்டிங்: பாக்மனே டெக்பார்க்.

  ReplyDelete
 21. இராஜராஜேஸ்வரி said...
  //பயனுள்ள அழகான முத்துச்சரத்திற்குப் பாராட்டுக்கள்..//

  நன்றி.

  ReplyDelete
 22. அமைதிச்சாரல் said...
  //அருமையான சந்திப்பையும் நினைவு கூர்ந்ததுக்கு மிக்க நன்றி :-)

  //அவர் சென்ற பின் மீண்டும் இங்கு அனல் வெயில்.//

  ஒண்ணும் சொல்றதுக்கில்லை :-))//

  எப்போ சென்னை கிளம்புறீங்க? எத்தனை பேர் அழைச்சிருக்காங்க பாருங்க:)!!!

  இருந்த மூன்று நாட்களில் எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கு உங்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 23. r.v.saravanan said...
  //IRCTC முன்பதிவு பயனுள்ள தகவல் நன்றி//

  நன்றி சரவணன்.

  ReplyDelete
 24. சுசி said...
  //அத்தனையும் அருமை அக்கா.. கூடவே வாழ்த்துகளும் :)//

  நன்றி சுசி.

  ReplyDelete
 25. S.Menaga said...
  //வாழ்த்துக்கள் அக்கா!!//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 26. விச்சு said...
  //கல்கி சிறுகதைப்போட்டி தகவலை ஞாபக்மூட்டியதற்கு நன்றி. கதைதான் தோணவேமாட்டுக்கு. தந்தையின் தோளில் அமர்ந்திருக்கும் அந்தப் பையன் சூப்பர்.//

  நன்றி. முயன்றிடுங்கள்:)! வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. Asiya Omar said...
  //ஆஹா! அருமையான சந்திப்பு,போட்டி அறிவிப்பு,புத்தகப்பகிர்வும் மிக நன்று.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 28. பயனுள்ள தகவல்கள் தொடுத்த கதம்பமாக இந்த தூறல் அருமை!!! தகவல்கள் பலரையும் சென்றடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 29. @ Nithi Clicks,

  நன்றி நித்தி!

  ReplyDelete
 30. அனைத்து பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். முந்தைய பெயர் இருந்தால் பங்கேற்றனர். நன்றி
  Krishna From pnr status

  ReplyDelete
 31. // மேஜிக் ஆட்டோ ஃபில் //

  இந்த தளம் எதோ பிரச்சனை போல போகவில்லை. நல்ல ஐடியா தான். வடிவேல் ஒரு படத்துல சாமி கும்பிட்டு விட்டு திரும்பறதுகுள்ள அவரோட செருப்பை ஆட்டைய போட்டுருவாங்க அது மாதிரி கொஞ்சம் அசந்தா டிக்கெட் புக் ஆகி விடுகிறது :-)

  ReplyDelete
 32. அருமையான பதிவு.. இத்தனை நாட்களும் பெயரளவில் தெரிந்தவர்களை புகைப்படம் மூலம் அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி .. !

  ReplyDelete
 33. IRCTC குறித்து சொன்னது மிக பயனுள்ளது. நண்பர்கள் சந்திப்பை பகிர்ந்தது மகிழ்ச்சி.

  இன்று மாலை தான் நாங்கள் டூர் முடிந்து சென்னை திரும்பினோம்

  ReplyDelete
 34. கண்டுகொண்டோம் :))) நன்றி.

  ReplyDelete
 35. Krishna said...

  /அனைத்து பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். முந்தைய பெயர் இருந்தால் பங்கேற்றனர். /

  முதல் வருகைக்கு நன்றி. இரண்டாவதாக சொல்லியிருப்பது புரியவில்லையே!

  ReplyDelete
 36. கிரி said...

  /இந்த தளம் எதோ பிரச்சனை போல போகவில்லை./

  எனக்கு சரியாகத் திறந்ததே..

  /அசந்தா டிக்கெட் புக் ஆகி விடுகிறது :-)/

  ஆம்:)! நன்றி கிரி.

  ReplyDelete
 37. James Vasanth said...

  /அருமையான பதிவு.. இத்தனை நாட்களும் பெயரளவில் தெரிந்தவர்களை புகைப்படம் மூலம் அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி .. !/

  நன்றி ஜேம்ஸ்!

  ReplyDelete
 38. மோகன் குமார் said...

  /IRCTC குறித்து சொன்னது மிக பயனுள்ளது. நண்பர்கள் சந்திப்பை பகிர்ந்தது மகிழ்ச்சி.

  இன்று மாலை தான் நாங்கள் டூர் முடிந்து சென்னை திரும்பினோம்/

  நன்றி மோகன் குமார். பயணக் கட்டுரைக்குக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 39. மாதேவி said...

  //கண்டுகொண்டோம் :))) நன்றி.//

  நல்லது மாதேவி:)! நன்றி.

  ReplyDelete
 40. IRCTC-யில் தத்கல் பயணச்சீட்டுக்களுக்கு முன்பதிவு பற்றிய தகவளுக்கு நன்றி.

  ReplyDelete
 41. நன்றி அமைதி அப்பா!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin