வியாழன், 17 மே, 2012

பிரெஞ்சுக் கவிதைகள்: இரகசியம்; அதிசயம்; மணியொலி - அதீதத்தில்..

இரகசியம்

ஒலிக்காத மணி
உயிரற்ற பறவைகள்
ஒன்பது மணிக்கெல்லாம்
உறங்கிவிடுபவரைக் கொண்ட
வீட்டினுள்

பூமி சுற்றாமல் தன்னைத் தானே பிடித்திருக்க
யாரோ பெருமூச்சு விட்டதாக நீங்கள் சொல்லலாம்

மரங்கள் புன்னகைப்பது போல் தோன்றின
ஒவ்வொரு இலை நுனியினின்றும் நீர் சொட்டியது
மேகமொன்று இரவைக் கடந்து சென்றது

கதவின் முன்னே பாடிக் கொண்டிருக்கிறான்
ஒரு மனிதன்

திறக்கிறது ஜன்னல் சத்தமின்றி.
***
அதிசயம்

தலை தொங்கிக் கிடக்க
கண் இமைகள் சுருண்டிருக்க
உதடுகள் மெளனம் காக்க
ஒளிர்ந்தன விளக்குகள்

எதுவுமில்லை அங்கே
மறந்து போன பெயரைத் தவிர

ஒருவேளை கதவு திறந்தாலும்
நுழையும் துணிவில்லை
அங்குதான் அத்தனையும் நடப்பதால்

அவர்கள் பேச
நான் கேட்க வேண்டும்

என் விதி
அந்த அறையிலேதான்
பணயம் வைக்கப்பட்டுள்ளது.
***


மணியொலி

எல்லா விளக்குகளும் அணைந்தன
காற்று பாடிக் கொண்டே கடந்தது
மரங்கள் நடுங்கின
மிருகங்கள் மரித்தன
எவரும் விட்டு வைக்கப்படவில்லை

பார்
நட்சத்திரங்கள் மின்னுவதை நிறுத்தி விட்டன
பூமி கூடச் சுழலவில்லை

ஒரு தலை மெல்ல அசைய
கேசம் இரவைத் துப்புரவு செய்ய
காணாது போன ஊசிக்கோபுரத்திலிருந்து
ஒலிக்கின்றது
நள்ளிரவில் மணி.
***

மூலம் பிரெஞ்சு மொழியில்: PIERRE REVERDY(1889-1960)
ஆங்கில மொழியாக்கம்: Kenneth Rexroth

அதீதம் இதழுக்காக மொழிபெயர்த்த கவிதைகள்:
‘SECRET’ http://www.atheetham.com/atheetham/?p=328 [31 March 2012]
‘MIRACLE’ http://www.atheetham.com/atheetham/?p=331 [31 March 2012]
‘A RINGING BELL’ http://www.atheetham.com/?p=637 [2 May 2012]

28 கருத்துகள்:

 1. மூன்றுமே அருமையான கவிதை சகோ ..!

  'இரகசியம்' என்னை ரசிக்க வைத்தது ..!

  பதிலளிநீக்கு
 2. என் (மர) மண்டைக்குள்ள கவிதைகள் ஏற நேரமாச்சு. கொஞ்சம் பொறுமையாப் படிச்சதும் புரிஞ்சுக்க முடிஞ்சுது, நல்லாயிருக்கு கவிதைகள் எல்லாம்.

  பதிலளிநீக்கு
 3. ஐந்து கவிதைகளும் (இரு படங்களும் சேர்த்து) அழகு

  பதிலளிநீக்கு
 4. எனக்குப்பிடித்தது மணியொலி கவிதை. நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 5. இரவின் மணியோசை மிகவும் பிடித்தது ராமலக்ஷ்மி. மிக நுணுக்கமான கருத்தை அருமையாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. மணியோசை கவிதை ரொம்ப பிடிச்சிருக்குக்கா...

  பதிலளிநீக்கு
 7. கதவின் முன்னே பாடுபவனுக்கு சன்னல் திறக்கும் அதிசயம், ரகசியம்தான்.

  ஏனோ மூன்று கவிதைகளையும் முடிச்சிட்டு நோக்கும் மனம் முடிவில்லாத வெறுமையொன்றை நிறைக்கிறது நினைவில்.

  தனிமையும் வெறுமையும், மனச்சஞ்சலத்தில் உழல, இரவின் நிகழ்வுகளும் நிசப்தமும் துணைவர, மெல்லிய சோகம் கப்புகிறது, படித்து முடிக்கையில்.

  துல்லிய, தெள்ளிய, ஆழ்ந்த உணர்வுகளையும் அழகாய் வெளிப்படுத்தும் மொழிபெயர்ப்பு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 8. மூன்றுமே நிறைய யோசிக்க வைக்கும் கவிதைகள். //ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கி விடுபவரைக் கொண்ட வீட்டில்...// ஹி..ஹி.. நான் கூட அப்படித்தான்!

  பதிலளிநீக்கு
 9. மூணுமே ரொம்ப அருமைன்னாலும் மணியொலி மனசுக்குள்ளயே நிக்குது..

  பதிலளிநீக்கு
 10. மிக அருமையான மொழிபெயர்ப்புக் கவிதைகள் ராமலெக்ஷ்மி.. மற்ற இடுகைகளும் கண்டேன். வாழ்த்துக்கள், பண்புடன், அதீதம், பிட், அவள் விகடன், என் விகடன் என்று கலக்கி இருக்கிறீர்கள்..:)

  பதிலளிநீக்கு
 11. மணியொலி கவிதை. நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 12. மூன்று கவிதைகளும் முத்துக்கள்.
  வாழ்த்துக்கள் அக்கா.,

  பதிலளிநீக்கு
 13. நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. வரலாற்று சுவடுகள் said...
  //மூன்றுமே அருமையான கவிதை சகோ ..!//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 15. நிரஞ்சனா said...
  //நல்லாயிருக்கு கவிதைகள் எல்லாம்.//

  நன்றி நிரஞ்சனா.

  பதிலளிநீக்கு
 16. மோகன் குமார் said...
  //ஐந்து கவிதைகளும் (இரு படங்களும் சேர்த்து) அழகு//

  நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 17. விச்சு said...
  //எனக்குப்பிடித்தது மணியொலி கவிதை. நல்லாயிருக்கு.//

  பலருக்கும், என்னையும் சேர்த்து:). மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வல்லிசிம்ஹன் said...
  //இரவின் மணியோசை மிகவும் பிடித்தது ராமலக்ஷ்மி. மிக நுணுக்கமான கருத்தை அருமையாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.//

  நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 19. S.Menaga said...
  /மணியோசை கவிதை ரொம்ப பிடிச்சிருக்குக்கா.../

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 20. கீதமஞ்சரி said...
  /துல்லிய, தெள்ளிய, ஆழ்ந்த உணர்வுகளையும் அழகாய் வெளிப்படுத்தும் மொழிபெயர்ப்பு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி./

  மிக்க நன்றி கீதமஞ்சரி.

  பதிலளிநீக்கு
 21. ஸ்ரீராம். said...
  /மூன்றுமே நிறைய யோசிக்க வைக்கும் கவிதைகள். //ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கி விடுபவரைக் கொண்ட வீட்டில்...// ஹி..ஹி.. நான் கூட அப்படித்தான்!/

  நன்றி ஸ்ரீராம். அரிதாகி வரும் நல்ல பழக்கம்:)!

  பதிலளிநீக்கு
 22. அமைதிச்சாரல் said...
  /மூணுமே ரொம்ப அருமைன்னாலும் மணியொலி மனசுக்குள்ளயே நிக்குது../

  நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 23. Nithi Clicks said...
  /அருமை வாழ்த்துக்கள் :)/

  நன்றி நித்தி.

  பதிலளிநீக்கு
 24. Thenammai Lakshmanan said...
  /மிக அருமையான மொழிபெயர்ப்புக் கவிதைகள் ராமலெக்ஷ்மி.. /

  வாழ்த்துகளுக்கும் நன்றி தேனம்மை:)!

  பதிலளிநீக்கு
 25. Kanchana Radhakrishnan said...
  /மணியொலி கவிதை. நல்லாயிருக்கு./

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 26. சே. குமார் said...
  /மூன்று கவிதைகளும் முத்துக்கள்.
  வாழ்த்துக்கள் அக்கா.,/

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 27. விமலன் said...
  /நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள்./

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin