“பெங்களூர் லால்பாக் குடியரசு தின சிறப்பு மலர்க் கண்காட்சி - 2015”
செவ்வாய், 27 ஜனவரி, 2015
‘தி இந்து’ போட்டோ கேலரியில்.. ( Bangalore Lalbagh Flower Show 2015 )
“பெங்களூர் லால்பாக் குடியரசு தின சிறப்பு மலர்க் கண்காட்சி - 2015”
லேபிள்கள்:
**தி இந்து,
அனுபவம்,
பேசும் படங்கள்,
மலர் கண்காட்சி
திங்கள், 26 ஜனவரி, 2015
பட்டொளி வீசி.. இந்திய தேசியக்கொடி.. 207 அடி உயரக் கம்பத்தில்..- குடியரசு தின வாழ்த்துகள்!
இந்தியாவின் பெரிய அளவிலான மூவர்ணக் கொடி, கர்நாடகத்தின் அதி உயரக் கம்பத்தில் பட்டொளி வீசிப் பறக்கும் காட்சிகள்:
#1
72 அடி நீளமும் 48 அடி அகலமும் கொண்ட இக்கொடியின் எடை 31 கிலோ. இது மழை, வெயிலினால் பாதிக்கப்படாத வகையில் பாலியஸ்டரில் தயாரிக்கப்பட்டதாகும். இருநூற்றேழு அடி உயரம் கொண்ட இக்கம்பம் நாட்டின் பதினோராவது இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுக் கொடிக் கம்பமாகும்.
#2

குடியரசு தினம்,
சமூகம்,
பேசும் படங்கள்,
வாழ்த்துகள்,
Republic Day
ஞாயிறு, 25 ஜனவரி, 2015
சனி, 24 ஜனவரி, 2015
தில்லி செங்கோட்டை - 2015 லால்பாக் குடியரசுதினக் கண்காட்சி ( 2015 Bangalore Lalbagh Flower Show ) - பாகம் 1
# அதிபர் ஒபாமாவுக்கு வரவேற்பு
17 ஜனவரி தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது பெங்களூரில் 2015_ன் குடியரசுதின மலர்க் கண்காட்சி. இது லால்பாகில் நடைபெறும் இருநூற்றியோராவது கண்காட்சி! வழக்கம்போல போகலாமா வேண்டாமா என யோசித்து, பின் வழக்கம்போல போய் வந்து விட்டேன்:)! கூட்டமில்லாத வாரநாளான வியாழன் அன்று, மேலும் கூட்டம் குறைந்த நண்பகல் நேரமாகச் சென்று மாலையில் திரும்பினேன்.
# 2
3 லட்சம் சிகப்பு, வெள்ளை ரோஜாக்கள் மற்றும் சம்பங்கி மலர்களாலான, 28 அடி உயரமும், 50 அடி அகலமுமாக விரிந்து நின்ற “தில்லி செங்கோட்டை”தான் இந்தக் கண்காட்சியில் கண்ணாடி மாளிகையில் இடம் பெற்றிருந்த பிரதான அலங்காரம். தலைநகரின் செங்கோட்டை தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

செவ்வாய், 20 ஜனவரி, 2015
சிந்தனை ஒன்றுடையாள்..
உலகில் உயர்வான ஒன்றாகப் போற்றப்படுவது தாய்ப்பாசம். அதையே இம்மாதப் போட்டிக்கானத்
தலைப்பாகத் தந்திருக்கிறார் நடுவர் நித்தி ஆனந்த்: தாய்மை(Motherhood).
மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் தாயன்பையும் காணத் தரக்
கேட்கிறார். படங்களை அனுப்ப இன்றே கடைசி தினம் ஆகையால் நினைவூட்டலாக இந்தப்
பதிவு. படங்கள் தாய்-சேய்க்கான பாசம், பரிவு, அக்கறை, மகிழ்ச்சி
போன்றவற்றை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில்
வைக்கவும்.
#1
முன்னர் பகிர்ந்த படங்கள் 1+பதிமூன்றின் கொலாஜுடன், மேலும் புதிதாக 4 படங்கள் மாதிரிக்காகப் பகிருகிறேன்.
#2 சிந்தனை ஒன்றுடையாள்
#3 கனிவான அன்பு
#1
முன்னர் பகிர்ந்த படங்கள் 1+பதிமூன்றின் கொலாஜுடன், மேலும் புதிதாக 4 படங்கள் மாதிரிக்காகப் பகிருகிறேன்.
#2 சிந்தனை ஒன்றுடையாள்
#3 கனிவான அன்பு
சனி, 17 ஜனவரி, 2015
ஆதி வெங்கட் பார்வையில்.. - “அடை மழையும், இலைகள் பழுக்காத உலகமும்..”
தனது “கோவை2தில்லி” வலைப்பக்கத்தில் சென்ற மாதம் இதே நாள் திருமதி. ஆதி வெங்கட் பகிர்ந்து கொண்ட என் நூல்கள் குறித்த வாசிப்பு அனுபவத்தை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்:
சமீபத்தில் தான் பதிவர் ராமலஷ்மி அவர்களின் இந்த இரு புத்தகங்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டுமே அருமையான புத்தகங்கள். ”அடைமழை” புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிய திரு ரிஷபன் அவர்கள் எனக்கு வாசிக்கத் தந்தார். ராமலஷ்மி அவர்களின் புகைப்படங்களுக்கு நான் என்றுமே ரசிகை. தான் பார்க்கும் காட்சிகளை தத்ரூபமாக படமாக்குவதில் இவருக்கு நிகர் இவரே தான். அதே போல் தான் இவருடைய கதைகளும், கவிதைகளும். பன்முகம் கொண்டவர் ராமலஷ்மி அவர்கள். நான் நேரில் சந்திக்க விரும்பும் நபர்களில் இவரும் ஒருவர்.
வியாழன், 15 ஜனவரி, 2015
பொங்கப்படி
லேபிள்கள்:
அனுபவம்,
பேசும் படங்கள்,
பொங்கல்,
வாழ்த்துகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)

.jpg)
.jpg)