செவ்வாய், 20 ஜனவரி, 2015

சிந்தனை ஒன்றுடையாள்..

உலகில் உயர்வான ஒன்றாகப் போற்றப்படுவது தாய்ப்பாசம். அதையே இம்மாதப் போட்டிக்கானத் தலைப்பாகத் தந்திருக்கிறார் நடுவர் நித்தி ஆனந்த்: தாய்மை(Motherhood). மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் தாயன்பையும் காணத் தரக் கேட்கிறார். படங்களை அனுப்ப இன்றே கடைசி தினம் ஆகையால் நினைவூட்டலாக இந்தப் பதிவு. படங்கள் தாய்-சேய்க்கான பாசம், பரிவு, அக்கறை, மகிழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் வைக்கவும்.
#1

முன்னர் பகிர்ந்த படங்கள் 1+பதிமூன்றின் கொலாஜுடன், மேலும் புதிதாக 4 படங்கள் மாதிரிக்காகப் பகிருகிறேன்.

#2 சிந்தனை ஒன்றுடையாள்


#3 கனிவான அன்பு
பூந்தளிர் ஒரு கையில்.. புதுத் தளிர் மறு கையில்..


#4 தாய் மடி

5. பாலூட்டும் அன்னை


#6 அரவணைப்பேன் உனை என் ஆயுள் உளவரை..

இதுவரை வந்திருக்கும் படங்களைக் கண்டு இரசிக்க இங்கே செல்லலாம். அறிவிப்புப் பதிவு இங்கே. படம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி உட்பட விரிவான போட்டி விதிமுறைகள் இங்கே.

***

14 கருத்துகள்:

  1. அழகான படங்க்ள் தாய் சேய் நேசத்தை சொல்வது.
    நேற்று பேஸ் புக்கில் நான்பகிர்ந்தவை அப்படி பட்ட படங்கள் தான். நானும் கலந்து கொள்ளலாம் போலவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் கலந்து கொள்ளலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்புப் பதிவில் உள்ளன. நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. ஒவ்வொரு படமும் தாய்மையைப் பறைசாற்றுகின்றன. எக்ஸலண்ட்.

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள். போட்டியில் பங்குபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தாயன்பைக் காட்டும் படங்கள் அருமை.


    பதிலளிநீக்கு
  5. உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin