வியாழன், 6 மார்ச், 2025

ஒளிப்பட சவால்.. கடைசி வாரம்; எனது நூல்கள் குறித்து.. - தூறல்: 47

 "சென்ற பதிவின்தொடர்ச்சியாக, தனது இருபத்தியோராவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக ஃப்ளிக்கர் தளம் அறிவித்த 21 நாள் ஒளிப்பட சவாலின் கடைசி வாரத் தலைப்புகளும் நான் சமர்ப்பித்தப் படங்களும் தொகுப்பாக இங்கே:

#நாள் 15: மகிழ்ச்சி


#நாள் 16: விசித்திரம்

#நாள் 17: குடும்பம்


#நாள் 18: உத்வேகம்

#நாள் 19: அன்பு

பார்வையற்ற இணைக்கு 
உணவளிக்கும் துணை

#நாள் 20: சமூகம்


#நாள் 21: பிரமிப்பு

இந்த சவாலில் உற்சாகமாகப் பல ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டிருந்தனர். வாழ்த்துகள் ஃப்ளிக்கர்!

***

ஃப்ளிக்கர் தளத்தில் ஜனவரி மாதத்தில் எனது பதிவுகளுக்கான புள்ளி விவரங்கள்: சேமிப்பிற்காக இங்கே:


நன்றி ஃப்ளிக்கர்!

***

மகளிர் சிறப்பிதழாக மலர்ந்துள்ள இந்த மாத மண்வாசனை இதழில் கவிதை ஒன்றுக்கு  பயன்படுத்தப்பட்டிருந்த, 2011_ஆம் ஆண்டில் நான் எடுத்த படம்:

வயதான காலத்தில் சுயமாக நிற்க விரும்பி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்த மூதாட்டியின் படம் முன்னர் தினமலர், குமுதம் பெண்கள் மலர், குங்குமம் தோழி ஆகிய இதழ்களிலும் இடம் பெற்றிருந்தன. 

***

னது நூல்கள் குறித்து எழுத்தாளரும், கவிஞருமான திருமதி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய விமர்சனங்கள் “இங்கும்” , “இங்கும்” உள்ளன. தனது யுடியூப் சேனலிலும் இந்நூல்கள் குறித்துத் தன் கருத்துகளைப் பதிந்துள்ளார்.

#அடைமழை


#இலைகள் பழுக்காத உலகம்

இலைகள் பழுக்காத உலகம் l ராமலெக்ஷ்மிராஜன் l தேனம்மைலெக்ஷ்மணன்

அன்பும் நன்றியும் தேனம்மை!

***

கவித்துளியாக ஒரு படத்துளி:

***

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

ஃப்ளிக்கர் - 21_ஆவது பிறந்தநாள் - 21 நாள் ஒளிப்பட சவால்!

ஒளிப்படக் கலைஞர்களுக்கு தமது படைப்புகளைப் பகிர்ந்திடவும் சேமித்திடவும் பரவலாகப் பலரைச் சென்றடையவும்  சிறந்ததொரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததோடு அதை 21 ஆண்டுகளாகத் திறம்பட நிர்வகித்து வருகிறது FLICKR.  இந்த வருடம்  தனது இருபத்தியோராவது பிறந்தநாளை அதன் உறுப்பினர்களுடன் கொண்டாட முடிவு செய்து, 21 நாள் ஒளிப்பட சவாலை அறிவித்துள்ளது. 

10 பிப்ரவரி 2025 தொடங்கி 3 மார்ச் 2025 வரையிலுமாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தலைப்பை அறிவித்து குறிப்பிட்ட பக்கத்தில் படங்களை சமர்ப்பிக்கக் கேட்டுக் கொண்டது. புதிதாக எடுத்த படங்களாக இருக்க வேண்டியதில்லை. நாம் ஏற்கனவே எடுத்த படங்களில் பொருத்தமானதை குறிப்பிட்ட தலைப்பு மற்றும் #flickr21challenge என tag செய்து அவர்கள் இதற்கென உருவாக்கியிருக்கும் “21 Day Flickr Birthday Photo Challenge” குழுவில் சேர்ந்து விட வேண்டும். 

பரிசுகளைத் தாண்டி பங்களிப்பு முக்கியம் என்பது நான் மற்றும் நம்மில் பலர் “PIT - தமிழில் புகைப்படக்கலை” தளப் போட்டிகள் காலத்திலிருந்து கடைப்பிடித்து வருவது. அதிலும் ஃப்ளிக்கரின் 21 வருடப் பயணத்தில் 17 வருடங்களாகக் கூடவே பயணித்து வரும் நான் பங்கு பெறாவிட்டால் எப்படி:)?

21 தலைப்புகளில் முதல் இரண்டு வாரங்கள் சமர்ப்பித்த படங்கள் உங்கள் பார்வைக்கு..! இவற்றில் 3 மற்றும் 4_ஆம் நாட்களுக்கு மட்டும் இதற்கென்றே எடுத்த படங்கள்.  மற்ற படங்களின் கீழ் அவை எடுக்கப்பட்ட வருடத்தைக் குறிப்பிட்டுள்ளேன்.

# நாள் 1: துணிவு

2015

# நாள் 2: புள்ளிகள்


#நாள் 3: 21

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

அதிவேக வேட்டையன் - வேங்கை ( Cheetah )

 #1

உயிரியல் பெயர்: Acinonyx jubatus
ஆங்கிலப் பெயர்: Cheetah
வேறு பெயர்: சிவிங்கிப்புலி

திமூன்று ஆண்டுகளுக்கு முன் மைசூர் உயிரியல் பூங்கா சென்று வந்த போது “சிங்கம்”, “புலி” மற்றும் “ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளைப் பற்றித் தகவல்களுடன் படங்களைப் பகிர்ந்திருந்தேன். 

அண்மையில் சென்று போது எடுத்த படங்களின் பாகம் 1 “இங்கே”. தற்போது ஓரிரு விலங்குகள் குறித்தேனும் தகவல்களுடன் பகிர்ந்திட எண்ணம். இப்பதிவில் ஆங்கிலத்தில் Cheetah எனப்படும் வேங்கை அல்லது சிவிங்கிப் புலியைப் பற்றிப் பார்ப்போம்.

#2

வேங்கைகள் சுமார் 40 இலட்சம் வருடங்களாக உயிர் வாழும் இனம் என அறியப்படுகிறது. முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த உயிரினம் இந்தியா உட்பட பல நாடுகளில் அருகி விட்டது. மைசூர் உயிரியல் பூங்காவிலும் கூட மிகப் பரந்த புல்வெளியைக் கொண்ட மைதானத்தின் அடைப்புக்குள்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

வேரும் மலரும்

 போர்ட்ரெயிட் (Portrait) எனப்படும் உருவப்படங்கள் தலைமுறைகள் கடந்து நினைவுகளைப் பத்திரப்படுத்துபவை. கடந்து வந்த காலத்தின் கணங்களை மீண்டும் ஒரு கணம் வாழ்ந்திட வரம் தருபவை.  ஒருவரின் தனித்துவம், ஆளுமை, வலிமை ஆகியவற்றோடு அவர்தம் கனவுகளையும் உணர்வுகளையும் கூட காண்போருக்குக் கடத்துபவை. உறவுகளுடனான குழுப் படங்கள் அவர்களுக்கிடையேயான பாசத்தை, பந்தத்தை பெருமிதத்துடன் வெளிப்படுத்துபவை. இந்த ஞாயிற்றின் தொகுப்பாக, அத்தகு படங்கள்.. பதினைந்து.

#1 வேரும் மலரும் 


#2 சின்னஞ்சிறு சூரியச் சுடர்


#3 தடுக்க முடியாத இளமை உத்வேகம்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

கோயில் யானைகள்; முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம் - தூறல் : 46

 முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்:

எழுத்தாளரும் பத்திரிகையாளரும் ‘நமது மண்வாசம்’ மாத இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 60_ஆவது நூலின் முகப்பு அட்டையாக இடம் பெற்றுள்ளது நான் எடுத்த இந்த ஒளிப்படம்.

இத்துடன் பத்தாவது முறையாக பத்திரிகை மற்றும் நூல் அட்டை முகப்பில்  இடம் பெறுகிறது நான் எடுத்த ஒளிப்படம்.

வெள்ளி, 17 ஜனவரி, 2025

வாழிடம் மாறி வசிக்கும் வனவிலங்குகள் - ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்கா, மைசூரு

 #1  ராஜ கம்பீரம்

[சிங்கம்]

கானகத்துக்குள் சென்று சந்தித்திராத, சித்திரங்களிலும் படங்களிலும் மட்டுமே அறிமுகமாகி இருந்த, உலகின் வெவ்வேறு பாகங்களைச் சேர்ந்த பல விலங்குகளை மக்கள் நேருக்கு நேர் காணும் தனித்துவமான வாய்ப்பை வழங்குபவை உயிரியல் பூங்காக்கள். 

#2

அவற்றுள் 157 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, 168_க்கும் மேற்பட்ட இனங்களைப் பராமரித்து வருகிற மைசூர் உயிரியல் பூங்கா, இந்தியாவின் மிகப் பழமையான, ஏன் உலகிலேயே மிகப் பழமையான உயிரியல் பூங்காக்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. 

#3 வனத்தின் கழுத்து

[ஒட்டகச் சிவிங்கி]

மைசூருக்குப் பலமுறைகள் சென்றிருக்கிறேன்.  2012_ஆம் ஆண்டு இந்த மிருகக் காட்சி சாலையில் எடுத்தப் படங்களைப் பல பதிவுகளாக “தெரிஞ்சுக்கலாம் வாங்க” பகுப்பின் கீழ் ஒவ்வொரு விலங்கை பற்றியும் விரிவான தகவல்களுடன் முத்துச்சரத்தில் கோத்திருக்கிறேன். இந்தப் பதிவில் கடந்த நவம்பரில் சென்ற போது எடுத்த படங்கள் அணிவகுக்கின்றன. 

#3 உள்ளத்தில் சாது, உருவத்தில் பூதம்

புதன், 1 ஜனவரி, 2025

ஃப்ளிக்கர் 5000 - 2024 குறிப்பேடு - தூறல்: 45

இந்த வருடம் சராசரியாக வாரம் ஒரு பதிவு.. 

வாழ்வியல் சிந்தனைகளுடனான ஞாயிறு படத் தொகுப்புகள் 30; மொழிபெயர்ப்பு கவிதைகள் 5; நூல் மதிப்புரை 1; பயணங்கள் குறித்த பதிவுகள்.. என.

2008_ல் ஆரம்பித்த ஃப்ளிக்கர் தளத்தின் பட ஓடை (photostream) 5000 படங்களைக் கடந்தது இவ்வருடம் நவம்பர் மாதத்தில்.. 

5000 படங்களைக் கடந்து விட்டதை சில தினங்கள் கழித்தே கவனித்தேன். பலரின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்த திருமலை நாயக்கர் மகாலின் இந்தப் படமே அந்த இடத்தைப் பிடித்திருந்தது.

டிசம்பர் முதல் வாரத்தில் “எனது ஃப்ளிக்கர் வருடம் 2024” என ஃப்ளிக்கர் தளம் அனுப்பி வைத்தத் தகவல் குறிப்பு:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin