ஞாயிறு, 13 ஏப்ரல், 2014
வியாழன், 10 ஏப்ரல், 2014
தமிழ்ப் பறவை
#1
நீர் வண்ண ஓவியங்களில் அசத்தி வரும் பரணிராஜன் சத்தியமூர்த்திக்கு சொந்த ஊர் மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் உசிலம்பட்டி. ஓவிய ஆர்வம் துளிர் விட்டது சினிமாவினாலும், சினிமா கட்-அவுட்டுகளினாலும்தான் என்றது சுவாரஸ்யம். அவர் வரைந்த ஓவியங்களை இரசித்தபடியே அவரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:)!
#2
சிறுவயதில் உசிலம்பட்டியில் இருந்து மாதமொருமுறை மதுரை செல்லும் போது, பெரியார் பஸ்ஸ்டாண்ட் பக்கம், 40-50 அடியில் காணக் கிடைத்த சினிமா கட்டவுட்களே ஓவியனாகும் ஆசையை இவருக்குள் விதைத்திருக்கிறது. ஆனாலும் அதற்கான பயிற்சி என்பது பள்ளி ஓவியப் போட்டிகளில் கலந்து கொள்கிற மட்டிலேயே நின்று போயிருந்திருக்கிறது. பொறியியல் படித்து முடிக்கும்வரை அதற்கென அதிக நேரம் செலவழிக்க முடியாது போனாலும் பத்திரிக்கைகளில் வரும் மாருதி, ம.செ., ஜெ.., ராமு, அரஸ், ஷ்யாம் ஆகியோரின் ஓவியங்களை உள்வாங்கிக் கொண்டே இருந்திருக்கிறது இவரது ஓவிய ஆர்வம்.
#3
படிப்பை முடித்து பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த பின்புதான், ஓவியக் கலையின் கதவு இவருக்குத் திறந்திருக்கிறது. பெங்களூரின் குளுமை, மக்களின் கலையார்வம் மேலும் தன்னைத் தூண்டியது எனத் தெரிவிக்கும் பரணி எப்படி தன்னைச் செதுக்கிக் கொண்டார் என்பதை விவரிக்கிறார்:

லேபிள்கள்:
அனுபவம்,
கட்டுரை/அனுபவம்,
சித்திரம் பேசுதடி,
நேர்காணல்,
பெங்களூர்
செவ்வாய், 8 ஏப்ரல், 2014
ஞாயிறு, 6 ஏப்ரல், 2014
அடை மழை - திருமதி செல்வி ஷங்கரின் கருத்துக் கண்ணோட்டம்
அன்பின் ராமலக்ஷ்மி , அறிவது நலனே விழைவதும் அஃதே !
நூல்களில் கவிதையை முதலில் படிக்கலாமே என்று படித்தேன். சுருக்கமாய் இருக்கிறதே - தெளிவாகவும் சிறியதாகவும் இருக்கிறதே என்று வேக வேகமாகப் படித்து முடித்தேன்.
அடுத்தது - சிறுகதை தானே - இதை எல்லாம் படிக்கின்ற ஆர்வம் எல்லாம் எப்பொழுதோ போய்விட்டதென்று நினைத்துக் கொண்டு சில நாட்கள் தொடாமலேயே இருந்தேன்.
நூலின் பின்பக்க அட்டைப்படத்தினைப் பார்க்கும் போதெல்லாம் நம்ம புது வண்டு - பிரியா மாதிரியே இருக்கே - அவள் தான் இந்தக் கதை எல்லாம் எழுத வேண்டுமென்று எதிர்பார்த்து ஏமாந்தேன். சரியென்று மனதைத் தேற்றிக் கொண்டு நிச்சயம் படிக்க வேண்டுமென முடிவெடுத்தேன்.
வெள்ளி, 4 ஏப்ரல், 2014
புதன், 2 ஏப்ரல், 2014
நாம் என்ன செய்ய முடியும்? - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (4)
இருக்கிறது ஒரு சாந்தம் மனிதத்தின் சிறப்பில்
சில புரிதல்கள், சில நேரங்களில் செயல்களில் துணிச்சல்
மொத்தத்தில் அது ஒரு ஆற்றல்
அதிகம் காணப்படாத ஒன்றாக உலகத்தில்.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஒரு பெரிய விலங்கினை ஒத்ததாக
எந்த ஒன்றாலும் எழுப்ப முடியாததாக.
தூண்டப்படுகையில் விஸ்வரூபமெடுக்கின்றன
முரட்டுத்தனமும், சுயநலமும்,
நேர்மையற்ற தீர்ப்புகளும், கொலைகளும்.
நாம் என்ன செய்ய முடியும், இந்த மனிதத்தை?

செவ்வாய், 1 ஏப்ரல், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)