Sunday, September 12, 2010

வளர்ப்புப் பிராணிகள்-செப்டம்பர் PiT

இம்மாதப் போட்டித் தலைப்பு வளர்ப்புப் பிராணிகள். வீட்டில் வளர்ப்பதாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. மனிதனால் பரமாரிக்கப்படக் கூடிய எவ்வகை விலங்குகளும் ‘ஓகே’தான் என PiT குழு அனுமதி வழங்கி விட்டபடியால்..

நெல்லையிலே காந்திமதி
வரவேற்கிறாள் கைதூக்கிஅழகிய திருமகள்
கம்பீரக் கஜேந்திரன்

கன்றுக்குட்டி போல் வாசலிலே
வாஞ்சை

‘புல்லு போதும்ங்கிறதே? சரிசரி வூட்டுக்குப் போயி பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் கரைச்சு வச்சுடுவோம்’, வாடியே தன் வயிறு இருந்தாலும் வாயில்லாப் பிராணியை வாஞ்சையாய்க் கவனிக்கும் பெரியவர்.மொசல்பூக்குவியல்

மதில் மேல் கொரங்கு

“இஞ்சியத் தின்னாலும் இப்படித்தான் முழிப்போம்.”நிமிர்ந்த நன்னடை

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரியுமாயின் Ctrl மற்றும் minus பொத்தான்களை ஒருசேர அழுத்தக் கேட்டு கொள்கிறேன்.]

முதல் படம் போட்டிக்கு. மற்றவை பார்வைக்கு.

போட்டிப் படங்களின் அணிவகுப்பு இங்கே.

88 comments:

 1. ஆகா நீங்க நெல்லை காந்திமதிய படம் புடிச்சாச்சா? நான் அவயாம்பாள் படம் எடுத்துட்டு வர்ரேன். இருங்க மீதி படம் எல்லாம் இப்ப தான் ஓப்பன் ஆகுது பார்த்துட்டு வர்ரேன்!

  ReplyDelete
 2. நான் யானையைப் பார்த்ததே பத்தாம் வகுப்பு படிக்கும் போதுதான். அதுவரை யானையை படமாகத்தான் பார்த்திருந்தேன். அதனால், இப்பொழுதும் யானையை வேடிக்கைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி அதிகம்.
  நல்ல படங்கள்.
  நன்றி.

  ReplyDelete
 3. அழகு அழகு..அதும் அந்த பூக்குவியல் நீங்க குடுத்த தலைப்பைப்போலவே அழகு.. தும்பக்கையை ஆட்டிக்கிட்டு
  காந்திமதியும்..
  வீட்டுவாசலில் கஜேந்திரனும்.. அட்டகாசமா இருக்காங்க..

  ReplyDelete
 4. யானை டாப்பு! பூக்குவியல் அருமை. குரங்கு டக்கரு. மாட்டை தவிர அந்த வாஞ்சையுள்ள அந்த மனிதன் அருமை! அதிலும் அந்த அழகிய திருமகள் (அந்த கால் சங்கிலி மாத்திரம் இல்லாட்டி இன்னும் நல்லா இருந்திருக்கும்) அருமையோ அருமை!

  ReplyDelete
 5. They are beautiful! Very nice photos. :-)

  ReplyDelete
 6. அனைத்துப் புகைப்படங்களின் தொகுப்பும் அருமை . அதிலும் முயல்களின் புகைப்படம் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. முயல் படம் சூப்பர்...

  ReplyDelete
 8. பூக்குவியல், நிமிர்ந்த நடை, தலைப்பைப் போலவே படங்களும் அழகு. காந்திமதி, அம்சமா இருக்காங்க.

  ReplyDelete
 9. என்னுடைய ஓட்டு நிமிர்ந்த நன்னடை .

  ReplyDelete
 10. அழகு... அத்தனையும் அழகு..!

  ReplyDelete
 11. எல்லாம் அழகு.... வாஞ்சை அருமை

  ReplyDelete
 12. கேமரா பிடிச்ச விதம் அழகு மாடும் அழகிய திருமகளும் நாய்ஸ் இல்லாம பளிச்சுன்னு தெளிவா இருக்கு மேடம் போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. அக்கா...எல்லாப் படங்களுமே அழகு.காந்திமதி நேரே நிற்பதுபோல அவ்வளவு அற்புதம்.

  ReplyDelete
 14. ரொம்ப அழகா இருக்கு எல்லாமே...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. பூக்குவியல்

  நிமிர்ந்த நன்நடை

  கலக்கல் அக்கா..

  ReplyDelete
 16. கலக்கல் படங்கள். எங்கிருந்துதான் பிடிக்கறீங்களோ

  ReplyDelete
 17. மொசலும், நிமிர்ந்த நன்னடையும் எடுத்தவிதம் சூப்பரா இருக்கு. நன்னடையில் இடதுபக்கம் கொஞ்சம் இடம் விட்டு எடுத்திருந்தா, இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.அதுங்க எங்கே போகுதுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு :-)))

  ReplyDelete
 18. யானையை நான் விட மாட்டேன் :)
  ஆனால் முயல் அதைவிட அழகா இருக்கே:(
  அதனால பூக்குவியலுக்கே என் வோட்.

  ReplyDelete
 19. அக்கா..காந்திம‌தி செம‌ அழ‌கு

  ReplyDelete
 20. இத்தனை வளர்ப்பு பிராணிகளா?
  ஆமா, யானையைக் கட்டி எப்படி தீனி போடுறீங்க? காந்திமதி முதல் படம் ரொம்ப அழகு.
  சகாதேவன்

  ReplyDelete
 21. வழக்கம் போல படங்கள் அருமை யானை அற்புதம் :-)

  ReplyDelete
 22. ஒன்னும் சொல்றதுக்கில்லை!!!!1

  எல்லாமே டாப்பு!!!!

  அதிலும் கஜேந்திரன்..... நோ ச்சான்ஸ்
  சூப்பர்.

  ReplyDelete
 23. என்னதான் சொல்லுங்க.. யானை அழகு அழகுதான்... அடுத்தது நிமிர்ந்த நன்னடை, மூணாவதா பூக்குவியல். (என் சாய்ஸ்)

  ReplyDelete
 24. முயலுக்கு தான் என் வோட்டு.

  ரங்கமணிகள் போட்டோவும் ஓகேயா..? அவங்களும் வீட்டு பிராணிகள் தானே..? :))


  of course, மனிதனே ஒரு சமூக பிராணி தானே!

  ReplyDelete
 25. \\ரங்கமணிகள் போட்டோவும் ஓகேயா..? அவங்களும் வீட்டு பிராணிகள் தானே..? :))\\

  அம்பி! நான் இதை டைப்பிட்டு பின்னே எடுத்துட்டேன் பாட்டு விழுமேன்னு:-)) ஆனாலும் அந்த வால் மாதிரி என்னவோ சமூகம் அப்படி இப்புடின்னு ஏதோ பயத்திலே டைப் அடிச்ச மாதிரி என்னவோ எழுதியிருக்கீங்களே அது என்ன:-))

  ReplyDelete
 26. காந்திம‌தி அழ‌கு.

  ReplyDelete
 27. நல்லாவே இருக்குங்க... ஒவ்வொன்றிலும் இருக்கும் தெளிவு கண்ணுல ஒத்திக்கலாம்.... அழகு... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 28. தொடரும் உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துகள். இங்கே வண்டி ஸ்டெப் எடுக்கமாட்டேங்குது. ஹிஹி..

  ReplyDelete
 29. புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உயிரோட்டம் நிறைந்ததொரு காட்சிப்பொருளாய் தெரிகிறது, யதார்த்தமான இந்த புகைப்படங்களை பார்க்கையில் மனச்சுமைகளை இறக்கிவைத்த திருப்தி வந்து சேர்கிறது. பாராட்டுக்கள்

  ReplyDelete
 30. அத்தனையும் அழகிய கிளிக். பார்க்கவே சூப்பராகயிருக்கு
  பாராட்டுக்கள் ராமு மேடம்.

  ReplyDelete
 31. அக்கா எப்படி இருக்கிங்க?
  ரொம்ப அழகு யானைய சொன்னேன்.
  எங்க வீட்டில் பேக்யார்டில் நிறய்ய வெள்ளை முயல்கள் இருக்குப்பா. எல்லாம் வந்து நிறய்ய கேர்டகளை சாப்பிட்டு போயிடும்.

  ReplyDelete
 32. யானை படங்களை பார்க்கும் போது எனக்கு எங்க ஊரில்(பாண்டிச்சேரி) உள்ள மனகுல வினாயகர் கோவிலில் ரொம்ப வருடங்களாக இருக்கும் 'லக்ஷ்மி' எனும் யானைதான் நியாபகம் வந்தது. அங்கு வரும் மற்ற நாட்டு சுற்றுலாவினரின் கேமராவில் இந்த யானை நிச்சயம் இடம் பிடித்து விடும்! அவ்வளவு ஃபேமஸ்!!!

  வழக்கம்போல படங்கள் கொள்ளை அழகு!

  ReplyDelete
 33. படங்கள் எல்லாம் வழக்கம் போல் அழகோ அழகு. ஆனால் போட்டிக்கு என் சாய்ஸ் “மொசக்குட்டிகள்தான்”

  கேரளாவில்தான் யானையை கட்டி தீனி போடுவார்கள். மதுரையில் சங்க காலத்தில் ஆனை கட்டி போரடித்தார்கள். ஹூம்! அதெல்லாம் பழங்காலம். இப்பொது எலியைக் கட்டித்தான் போரடிக்கணும்.

  போரடிக்கில்ல..? இத்தோடு நிறுத்திக்கிறேன்.

  வாழ்த்துக்கள் வெல்ல.

  ReplyDelete
 34. அன்பின் ராமலக்ஷ்மி,

  அழகான படங்கள்..வாழ்த்துக்கள் சகோதரி..

  நானும் யானையும் முயலும் :-)

  ReplyDelete
 35. அபி அப்பா said...
  //ஆகா நீங்க நெல்லை காந்திமதிய படம் புடிச்சாச்சா? நான் அவயாம்பாள் படம் எடுத்துட்டு வர்ரேன். //

  பல ஊர்களில் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாளின் பெயரே ஆனைகளுக்கும். அவயாம்பாளைப் பார்க்கக் காத்திருக்கிறோம்:)!

  //யானை டாப்பு! பூக்குவியல் அருமை. குரங்கு டக்கரு. மாட்டை தவிர அந்த வாஞ்சையுள்ள அந்த மனிதன் அருமை! அதிலும் அந்த அழகிய திருமகள் (அந்த கால் சங்கிலி மாத்திரம் இல்லாட்டி இன்னும் நல்லா இருந்திருக்கும்) அருமையோ அருமை!//

  சங்கிலி தவிர்க்க முடியாதே! அழகிய திருமகளே சென்றாள் போட்டிக்கு:)! நன்றி அபி அப்பா.

  ReplyDelete
 36. அமைதி அப்பா said...
  //நான் யானையைப் பார்த்ததே பத்தாம் வகுப்பு படிக்கும் போதுதான். அதுவரை யானையை படமாகத்தான் பார்த்திருந்தேன். அதனால், இப்பொழுதும் யானையை வேடிக்கைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி அதிகம்.
  நல்ல படங்கள்.
  நன்றி.//

  நன்றிகள் அமைதி அப்பா.

  ReplyDelete
 37. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //அழகு அழகு..அதும் அந்த பூக்குவியல் நீங்க குடுத்த தலைப்பைப்போலவே அழகு.. தும்பக்கையை ஆட்டிக்கிட்டு
  காந்திமதியும்..
  வீட்டுவாசலில் கஜேந்திரனும்.. அட்டகாசமா இருக்காங்க..//

  நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 38. Chitra said...
  //They are beautiful! Very nice photos. :-)//

  நன்றி சித்ரா.

  ReplyDelete
 39. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  //அனைத்துப் புகைப்படங்களின் தொகுப்பும் அருமை . அதிலும் முயல்களின் புகைப்படம் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி//

  மிக்க நன்றி ஷங்கர்.

  ReplyDelete
 40. அஹமது இர்ஷாத் said...
  //முயல் படம் சூப்பர்...//

  நன்றி அஹமது இர்ஷாத்.

  ReplyDelete
 41. அம்பிகா said...
  //பூக்குவியல், நிமிர்ந்த நடை, தலைப்பைப் போலவே படங்களும் அழகு. காந்திமதி, அம்சமா இருக்காங்க.//

  மிக்க நன்றி அம்பிகா.

  ReplyDelete
 42. goma said...
  //என்னுடைய ஓட்டு நிமிர்ந்த நன்னடை .//

  என்ன ஒரு நடை:), இல்லையா? நன்றிகள் கோமா.

  ReplyDelete
 43. SurveySan said...
  //both yaanai's good. :)//

  நன்றி சர்வேசன்:)!

  ReplyDelete
 44. சே.குமார் said...
  //அழகு... அத்தனையும் அழகு..!//

  நன்றிகள் குமார்.

  ReplyDelete
 45. ஆ.ஞானசேகரன் said...
  //எல்லாம் அழகு.... வாஞ்சை அருமை//

  மிக்க நன்றி ஞானசேகரன்.

  ReplyDelete
 46. ப்ரியமுடன் வசந்த் said...
  //கேமரா பிடிச்ச விதம் அழகு மாடும் அழகிய திருமகளும் நாய்ஸ் இல்லாம பளிச்சுன்னு தெளிவா இருக்கு மேடம் போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துகள்!//

  அழகியே சென்றாள் போட்டிக்கு. நன்றிகள் வசந்த்:)!

  ReplyDelete
 47. ஹேமா said...
  //அக்கா...எல்லாப் படங்களுமே அழகு.காந்திமதி நேரே நிற்பதுபோல அவ்வளவு அற்புதம்.//

  மிக்க மகிழ்ச்சி ஹேமா. நன்றியும்.

  ReplyDelete
 48. Gayathri said...
  //ரொம்ப அழகா இருக்கு எல்லாமே...வாழ்த்துக்கள்//

  நன்றிகள் காயத்ரி.

  ReplyDelete
 49. சுசி said...
  //பூக்குவியல்

  நிமிர்ந்த நன்நடை

  கலக்கல் அக்கா..//

  நன்றி சுசி:)!

  ReplyDelete
 50. சின்ன அம்மிணி said...
  //கலக்கல் படங்கள். எங்கிருந்துதான் பிடிக்கறீங்களோ//

  அங்கங்கே செல்லுகையில் பிடித்து வைத்து விடுகிறேன்:)! நன்றி அம்மிணி!

  ReplyDelete
 51. அமைதிச்சாரல் said...
  //மொசலும், நிமிர்ந்த நன்னடையும் எடுத்தவிதம் சூப்பரா இருக்கு. நன்னடையில் இடதுபக்கம் கொஞ்சம் இடம் விட்டு எடுத்திருந்தா, இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.அதுங்க எங்கே போகுதுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு :-)))//

  மொசல்களும் வாத்துக்களும் குமரகம் தாஜ் விடுதி பண்ணையில் எடுத்தவை. பீடு நடை போட்டு இப்படிதான் நாள் முழுக்க உலாத்திக் கொண்டிருந்தன வாத்துக்கள்:)!

  ReplyDelete
 52. மோகன் குமார் said...
  As usual fantastic photoes.

  நன்றி மோகன்குமார்.

  ReplyDelete
 53. வல்லிசிம்ஹன் said...
  //யானையை நான் விட மாட்டேன் :)//

  என்னாலும் விட முடியவில்லை:)! ஆகையால் அதையே அனுப்பிவிட்டேன் போட்டிக்கு.

  //ஆனால் முயல் அதைவிட அழகா இருக்கே:(

  அதனால பூக்குவியலுக்கே என் வோட்.//

  பூக்குவியல் பலருக்கும் பிடித்துப் போனதில் எனக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 54. சசிகுமார் said...
  //வெற்றி நிச்சயம்//

  நீங்கள் பிட் எண்ட்ரி படங்களைப் பார்த்ததில்லை என நினைக்கிறேன்:)! இருந்தாலும் உங்கள் அன்புக்கு நன்றி!

  ReplyDelete
 55. தமயந்தி said...
  //அக்கா..காந்திம‌தி செம‌ அழ‌கு//

  நன்றி தமயந்தி:)!

  ReplyDelete
 56. சகாதேவன் said...
  //இத்தனை வளர்ப்பு பிராணிகளா?
  ஆமா, யானையைக் கட்டி எப்படி தீனி போடுறீங்க? காந்திமதி முதல் படம் ரொம்ப அழகு.//

  மிக்க நன்றி. யாருக்கும் கவலை வைக்காமல் அருமையாய் பார்த்துக் கொள்கிறார் அப்பன் நெல்லையப்பன்:)!

  ReplyDelete
 57. சிங்கக்குட்டி said...
  //வழக்கம் போல படங்கள் அருமை யானை அற்புதம் :-)//

  நன்றி சிங்கக்குட்டி:)!

  ReplyDelete
 58. துளசி கோபால் said...
  //ஒன்னும் சொல்றதுக்கில்லை!!!!1

  எல்லாமே டாப்பு!!!!

  அதிலும் கஜேந்திரன்..... நோ ச்சான்ஸ்
  சூப்பர்.//

  கஜேந்திரனை உங்களுக்கு பிடிக்காமப் போகுமா:)? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 59. ஸ்ரீராம். said...
  //என்னதான் சொல்லுங்க.. யானை அழகு அழகுதான்... //

  அதே. ஆக அவளே சென்றாள் போட்டிக்கு:)!

  //அடுத்தது நிமிர்ந்த நன்னடை, மூணாவதா பூக்குவியல். (என் சாய்ஸ்)//

  நன்றி ஸ்ரீராம். உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 60. ambi said...
  //முயலுக்கு தான் என் வோட்டு.//

  நன்றி அம்பி.

  //ரங்கமணிகள் போட்டோவும் ஓகேயா..? அவங்களும் வீட்டு பிராணிகள் தானே..? :))

  of course, மனிதனே ஒரு சமூக பிராணி தானே!//

  அபி அப்பாவின் அடுத்த பின்னூட்டத்தில் தப்பே இல்லை:))!

  ReplyDelete
 61. அபி அப்பா said...
  ***\\ரங்கமணிகள் போட்டோவும் ஓகேயா..? அவங்களும் வீட்டு பிராணிகள் தானே..? :))\\

  அம்பி! நான் இதை டைப்பிட்டு பின்னே எடுத்துட்டேன் பாட்டு விழுமேன்னு:-)) ஆனாலும் அந்த வால் மாதிரி என்னவோ சமூகம் அப்படி இப்புடின்னு ஏதோ பயத்திலே டைப் அடிச்ச மாதிரி என்னவோ எழுதியிருக்கீங்களே அது என்ன:-))//***

  பாட்டு விழுமென உங்களுக்கு இருந்த அதே பயத்தில்.. என்னவோ எழுதிவிட்டார், விடுங்கள்:))!

  ReplyDelete
 62. மாதேவி said...
  //காந்திம‌தி அழ‌கு.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 63. க.பாலாசி said...
  //நல்லாவே இருக்குங்க... ஒவ்வொன்றிலும் இருக்கும் தெளிவு கண்ணுல ஒத்திக்கலாம்.... அழகு... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....//

  மிக்க நன்றி பாலாசி!

  ReplyDelete
 64. ஆதிமூலகிருஷ்ணன் said...
  //தொடரும் உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துகள். இங்கே வண்டி ஸ்டெப் எடுக்கமாட்டேங்குது. ஹிஹி..//

  நன்றி ஆதி. நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு:)!

  ReplyDelete
 65. இடைவெளிகள் said...
  //புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உயிரோட்டம் நிறைந்ததொரு காட்சிப்பொருளாய் தெரிகிறது, யதார்த்தமான இந்த புகைப்படங்களை பார்க்கையில் மனச்சுமைகளை இறக்கிவைத்த திருப்தி வந்து சேர்கிறது. பாராட்டுக்கள்//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இடைவெளிகள்.

  ReplyDelete
 66. அன்புடன் மலிக்கா said...
  //அத்தனையும் அழகிய கிளிக். பார்க்கவே சூப்பராகயிருக்கு
  பாராட்டுக்கள் ராமு மேடம்.//

  வாங்க மலிக்கா. மிக்க நன்றி.

  ReplyDelete
 67. Vijiskitchen said...
  //அக்கா எப்படி இருக்கிங்க?
  ரொம்ப அழகு யானைய சொன்னேன்.
  எங்க வீட்டில் பேக்யார்டில் நிறய்ய வெள்ளை முயல்கள் இருக்குப்பா. எல்லாம் வந்து நிறய்ய கேர்டகளை சாப்பிட்டு போயிடும்.//

  நலமே விஜி, நன்றி! முயல்களைக் கவனிப்பதே ரசனையான விஷயம்.

  ReplyDelete
 68. Priya said...
  //யானை படங்களை பார்க்கும் போது எனக்கு எங்க ஊரில்(பாண்டிச்சேரி) உள்ள மனகுல வினாயகர் கோவிலில் ரொம்ப வருடங்களாக இருக்கும் 'லக்ஷ்மி' எனும் யானைதான் நியாபகம் வந்தது. அங்கு வரும் மற்ற நாட்டு சுற்றுலாவினரின் கேமராவில் இந்த யானை நிச்சயம் இடம் பிடித்து விடும்! அவ்வளவு ஃபேமஸ்!!!//

  அதுபோலவேதான் எங்கள் ஊர் காந்திமதியும் ப்ரியா:)!

  //வழக்கம்போல படங்கள் கொள்ளை அழகு!//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 69. நானானி said...
  //படங்கள் எல்லாம் வழக்கம் போல் அழகோ அழகு. ஆனால் போட்டிக்கு என் சாய்ஸ் “மொசக்குட்டிகள்தான்”

  கேரளாவில்தான் யானையை கட்டி தீனி போடுவார்கள். மதுரையில் சங்க காலத்தில் ஆனை கட்டி போரடித்தார்கள். ஹூம்! அதெல்லாம் பழங்காலம். இப்பொது எலியைக் கட்டித்தான் போரடிக்கணும்.

  போரடிக்கில்ல..? இத்தோடு நிறுத்திக்கிறேன்.

  வாழ்த்துக்கள் வெல்ல.//

  மொசக்குட்டிகளுக்கான ஸ்பெஷல் பாராட்டுக்கு நன்றிகள் நானானி:)!

  ReplyDelete
 70. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //அன்பின் ராமலக்ஷ்மி,

  அழகான படங்கள்..வாழ்த்துக்கள் சகோதரி..

  நானும் யானையும் முயலும் :-)//

  பார்த்தேனே நானும்:)! நன்றிகள் ரிஷான்.

  ReplyDelete
 71. தமிழ்மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 30 பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 72. நிமிர்ந்த நன்னடை சூப்பருங்கோ..:))

  ReplyDelete
 73. கஜேந்திரன் எனது தேர்வு. மிக நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறீர்கள். காந்திமதிக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)

  ReplyDelete
 74. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //நிமிர்ந்த நன்னடை சூப்பருங்கோ..:))//

  அதிலொன்று நேர் கொண்ட பார்வையுமாய்..:)! நன்றி தேனம்மை!

  ReplyDelete
 75. James Vasanth said...
  //கஜேந்திரன் எனது தேர்வு. மிக நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறீர்கள். காந்திமதிக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)//

  நன்றி ஜேம்ஸ்:)! காந்திமதியே சென்றாள் போட்டிக்கு.

  ReplyDelete
 76. படமெல்லாம் பளிச் பளிச்னு இருக்கு. என்ன கேமரா வச்சிருக்கீங்க? (ஏற்கெனவே எங்கயாவது சொல்லியிருப்பீங்க. எனக்குத் தெரியாதே)

  ReplyDelete
 77. @ Yeskha,

  பாராட்டுக்கு நன்றி எஸ்கா. திரும்ப சொல்லி விட்டால் போயிற்று:), Sony W80.

  ReplyDelete
 78. @ தியாவின் பேனா,

  ரசித்தமைக்கு நன்றி தியா!

  ReplyDelete
 79. ரெண்டாவதும், ஆறாவதும் ரொம்ப நல்லாருக்குங்க.

  ReplyDelete
 80. யானைனா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
  சின்ன வயசுல அதைபார்க்கவே பிரம்மாண்டமா இருக்கும் .
  உங்க படங்களைப் பார்த்ததும் அந்த ஞாபகம் வந்துடுச்சு..நன்றி .

  ReplyDelete
 81. விக்னேஷ்வரி said...
  //ரெண்டாவதும், ஆறாவதும் ரொம்ப நல்லாருக்குங்க.//

  அழகிய திருமகளும் பூக்குவியலும்:)! மிக்க நன்றி விக்னேஷ்வரி.

  ReplyDelete
 82. ஜிஜி said...
  //யானைனா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
  சின்ன வயசுல அதைபார்க்கவே பிரம்மாண்டமா இருக்கும் .
  உங்க படங்களைப் பார்த்ததும் அந்த ஞாபகம் வந்துடுச்சு..நன்றி .//

  இப்போதும் பிரமாண்டமாகவே உள்ளது எனக்கு:)! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜிஜி.

  ReplyDelete
 83. வளர்ப்பு பிராணிகள் என்றதும் என்னோட விருப்பம் நாய் இருக்கும் என்று நினைத்தேன் :-)

  படங்கள் அனைத்தும் பளிச்சுன்னு இருக்கு.

  யானை விமானம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin