வியாழன், 20 ஆகஸ்ட், 2026

கார்முகில் நீங்கும் கரைந்து - ஈற்றடிக்கோர் பாட்டு - பண்புடன் இதழ்: 15

 


எதுவும் கடந்து போகும்

மழைக்குப் பின்
இரவெல்லாம்
சன்னலில்
சொட்டும் நீர்
தட்டும் ஓசை—
துளிக்குப் பின் துளியாக
இருளிடம் சொல்ல
இன்னும் ஏதோ இருப்பது போல்

அசைவின்றி நிற்கும் மரங்கள்—
இரவின் பாரத்தைச் சுமந்தபடி
அவற்றின் இலைகள்

அதிகாலைக்குள்
மண் செவிமடுப்பதை
நிறுத்தியிருக்கும்

மேகங்களின் ஊடே
நழுவி வரும் மெல்லிய வெளிச்சம்
ஈரமான கூரைகளில் படியும்

எங்கோ ஒரு பறவை
எழுப்பும் குரலில்
இருப்பதில்லை வாக்குறுதி ஏதும்
கிடைப்பதில்லை விளக்கம் எதுவும்

மெல்ல மெல்ல
வானம் வெளுக்கையில்—
கார்முகில் நீங்கும் கரைந்து

*

ஒளிப்படம்: ராமலக்ஷ்மி

*

‘பண்புடன் மின்னிதழ்’, கொடுக்கப்படும் ஈற்றடிக்கு வெண்பாக்களையும் கூடவே புதுக்கவிதைகளையும் வரவேற்கிறது. கடந்த 8 வாரங்களாக முகநூலில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறது. சிறந்த படைப்புகள் தேர்வாகி பண்புடன் மின்னிதழில் வெளியாகின்றன. சென்ற வாரம் தேர்வான கவிதைகளில் ஒன்றாக என்னுடையதும். நன்றி பண்புடன்!

ஈற்றடிக்கோர் பாட்டு – 8

ஆர்வமுள்ளவர்கள் முகநூலில் வெளியாகும் அறிவிப்பைப் பார்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin