ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

வாழ்க்கையின் எதிர்பார்ப்பு


#1
"ஏறுவதற்கு பயப்படாதீர்கள். நீங்கள் தடுமாறினாலும், ஒவ்வொரு கட்டத்திலும் காணக் கிடைக்கும் காட்சிகள் அழகானவை."

#2
"ஞானம், பேசும் நேரம் வரும் வரைப் பொறுமையாக காத்திருக்கும்."
#3
"நிதானமாக இருப்பது என்பது ஒவ்வொரு விளைவையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தைத் துறப்பது. வாழ்க்கையின் போக்கில் நம்பிக்கை வைப்பதில் அமைதியைக் கண்டடையுங்கள்."


#4
"உங்கள் கவனம் செல்லுமிடத்தில் ஆற்றலும் பாயும்."

#5
"நீங்கள் எவ்வளவு மெதுவாகச் செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நின்றிடாது இருக்கும் வரை." _ Confucius

#6
"உறுதி வலுவாக இருப்பின், பாதை பிரகாசமாகும்."

#7
"வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்ப்பது - இலக்கின் திசையில் உறுதியுடன் நகருங்கள், அதே நேரம் ஒவ்வொரு பாதையிலும் தகவமைந்து கொள்ளுங்கள்."

#8
"ஞானம் என்பது எப்போது சுருண்டு கொள்ள வேண்டும், எப்போது எழுந்து நிற்க வேண்டும் எனத் தெரிந்து வைத்திருப்பது."

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 213

**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin