ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தினகரன் வசந்தத்தில்.. 'புகைப்படப் பிரியன்' மெர்வின் ஆன்டோ பேட்டி

மொபைல் போன் இருந்தால் ஹீரோ ஆகலாம்! :
அட்டைப்படக் கட்டுரையாக..

நன்றி தினகரன் வசந்தம்:)! 
 ***

மூன்றாவது கண்ணாகவேக் கேமராவைப் பாவித்து, தான் ரசித்த விஷயங்களை உலகோடு பகிரும் புகைப்படப் பிரியன் - மெர்வின் ஆன்டோ. நாகர்கோவில் தொழில் நுட்பக் கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் படித்த கையோடு மனதுக்குப் பிடித்தப் புகைப்படத் தொழிலில் இறங்கியவர்.

உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்று கேட்பதை போல் என்னிடம் சிலர் கேட்பதுண்டு... ‘நிக்கான் கேமரா சிறந்ததா? கானன் காமெரா சிறந்ததா?’ என்று. நம் பார்வையில் இரண்டும் ஒன்றே. ஆனால், நாம் பழகும் விதத்தில்தான் இருக்கிறது வித்தை. நமக்குள்ளே புதைந்து கிடக்கும் க்ரியேடிவிட்டிக்கு எந்தக் கேமரா என்பது முக்கியமே இல்லை.

_ மேலும் வாசியுங்கள்,  மெர்வின் எனக்கு அளித்த பேட்டியை..

அவர் எடுத்த அற்புதமான படங்களை ரசித்தபடி:)!

நல்வாழ்த்துகள் மெர்வின்:)! 
***


36 கருத்துகள்:

 1. திரு மெர்வினுக்கு எங்கள் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு எங்கள் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. ரசிக்க வைக்கும் புகைபப்டங்கள்.

  அந்த “உன்னை போல ஒருவன்” புகைப்படம் இதிலே இருக்கா?

  பதிலளிநீக்கு
 3. @ஹுஸைனம்மா,

  உன்னைப் போல் ஒருவன்.. ஒன்றுக்கு இரண்டாக படங்கள்!

  கட்டுரையின் முதல் பக்கத்து மேல் வரிசையில், வலதுபக்கப் படம் மெர்வின் தானே தோன்றி வெற்றி கண்டது. இன்னொன்று அதே பக்கத்தில், சிறுவன் குதிக்கிற படம்.

  நன்றி ஹுஸைனம்மா:)!

  பதிலளிநீக்கு
 4. //வலதுபக்கப் படம் மெர்வின் தானே தோன்றி //

  அது, அவர் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் படம் என்று நினைத்தேன்!!

  //சிறுவன் குதிக்கிற படம்//
  அது இரு வேறு சிறுவர்கள்தானே? ஒரே ஆள் அல்லதானே?

  ”உன்னைப் போல ஒருவன்” டெக்னிக்கை நாந்தான் சரியாப் புரிஞ்சுக்கலைபோல...

  பதிலளிநீக்கு
 5. @ஹுஸைனம்மா

  //கண்ணாடியில் தன்னை//

  டெக்னிக்கை இன்னொரு முறை வாசித்தால் புரிந்து கொள்வீர்கள்:

  //ஒரே ஷாட். படத்திலிருக்கும் சிறுவன் இரண்டு இடங்களுக்கு மாற வேண்டும். ஃப்ளாஷும் அவனை நோக்கி நகர வேண்டும். சிறிய நொடிப்பொழுதில் இவை நிகழ வேண்டும். ஃப்ளாஷ் மற்றும் காமெராவை இயக்க ஒரு நபர் மட்டுமே இருப்பார்.//

  இருவேறு நபரல்ல. நொடிப்பொழுதில் இடம் மாறி இருக்கிறார்கள். சிறுவன் மெர்வினின் மகன் என்பதை இப்போதுதான் அறிய வந்தேன்:)!

  பதிலளிநீக்கு
 6. //இருவேறு நபரல்ல. நொடிப்பொழுதில் இடம் மாறி இருக்கிறார்கள்.//

  யம்மாடி...!! இப்பப் புரியுது. எப்படி முடிகிறது என்று ஆச்சரியம்... இல்லை, பிரமிப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. திரு மெர்வின் அவர்களுக்கு பாராட்டுகள்.
  பகிர்ந்து கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள்.

  படங்கள் எல்லாம் பார்க்க வியப்பாய் தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. முதலில் வாழ்த்துகளைப் பிடியுங்கள். அந்த பிம்பம் பிரதி பிம்பம் நம் பிட் போட்டிக்கு வந்தது இல்லையா.நீங்கள் எவ்வளவு சொன்னாலும் இந்த காமிரா ஃப்ளாஷ் நகர்வது ரொம்பப் பிரமிப்பாக இருக்கிறது. அற்புதமான படங்கள். நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 9. @வல்லிசிம்ஹன்,

  அதே படம்தான்:)! ‘உன்னைப் போல் ஒருவன்’ தலைப்புக்காகத் தந்திருந்தார். நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 10. அருமையாய் எழுதி பெருமை சேர்த்த ராமலெட்சுமி மேடம் அவர்களுக்கும் வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 11. வாவ்!!!!

  உங்கள் பகிர்வுக்கும் பேட்டியின் மூலம் தகவல்கள் பல தந்த மெர்வினுக்கும் எங்கள் இனிய பாராட்டுகள்.


  நான் போக வேண்டிய தூரம் ரொம்பவே அதிகமுன்னு புரிஞ்சது:(

  பதிலளிநீக்கு
 12. அன்பு ராமலக்ஷ்மி,

  மெர்வின் ஆன்டோவுக்கு வாழ்த்துகள்!

  இந்தக் கட்டுரையின் மூலம் நீங்கள் ஒரு புகைப் படக் கலைஞர் மட்டுமல்ல. சிறந்த பத்திரிகையாளரும் கூட என்பதை நிரூபித்து விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 13. நல்லதொரு வித்யாசமான பகிர்வு.

  பேட்டி கண்டவருக்கும், பேட்டி அளித்தவருக்கும், இந்த அருமையான பகிர்வுக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் ,இன்னும் பல பதிவவுகள் எல்லா இதழ்களிலும் வர வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 15. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. வித்தை பற்றிய வித்தியாசமான பதிவு! படித்து அதிசயிக்கிறோம்! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. @mervin anto,

  மேலும் பல அங்கீகாரங்கள் உங்களை வந்தடைய வாழ்த்துகள் மெர்வின்:)!

  பதிலளிநீக்கு
 18. @துளசி கோபால்,

  நன்றி. ஆம், ‘நாம்’ போக வேண்டிய தூரம் ரொம்பவே. PiT போட்டிகளில் பரிசை வென்ற அவரது பல படங்கள் பிரமிப்புக்குரியவை.

  பதிலளிநீக்கு
 19. @நடராஜன் கல்பட்டு,

  அன்புக்கு நன்றி!

  உங்கள் வாழ்த்துகள் மெர்வினுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

  பதிலளிநீக்கு
 20. Congrats to Mervin and you Ramalakshmi ! :) (office-il irunth comment seygiren .. Azhagi illai - tamil-il type seyya.. :)

  பதிலளிநீக்கு
 21. @James Vasanth,

  நன்றி ஜேம்ஸ். விரைவில் பகிருகிறேன் ஃப்ளிக்கரிலும்:)!

  பதிலளிநீக்கு
 22. இருவருக்கும் வாழ்த்துகள்.

  அருமையான பகிர்வுக்கு நன்றி மெர்வின்ஜி :-)

  பதிலளிநீக்கு
 23. வாழ்த்துகள் அம்மா ....

  வழிகாட்டுங்கள்

  பதிலளிநீக்கு
 24. ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. இன்று தான் அந்த லிங்க்கிலிருந்து இங்கு வந்தேன் ராமலக்‌ஷ்மி. வேறென்ன சொல்ல. உங்களுக்கும் மெர்வினுக்கும் என்னுடைய மனம் நிறைந்த அன்பும் மகிழ்வும் வாழ்த்தும் பாராட்டுகளும்.

  புகைப்படப்பித்து கன்னா பின்னாவென்று என்னை இப்படியா ஆட்டுவிக்கும் :)

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin