வெள்ளி, 18 ஏப்ரல், 2014

முரளிதரன் அழகர் - கல்கி கேலரியில்..

கடந்த நாலைந்து ஆண்டுகளாக முரளிதரன் அழகரின் ஃப்ளிக்கர் பக்கத்தைத் தொடர்ந்து வருகிறேன். ஒளிப்படக் கலை, ஓவியக் கலை இரண்டிலும் அசத்தி வருபவர். இன்று வெளியாகியுள்ள கல்கி இதழின், கேலரி பக்கத்திற்காக இரு துறைகளிலும் தனது திறனை வளர்த்துக் கொண்ட விதத்தையும், அனுபவங்களையும் அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்:

பொக்கிஷத்தைக் காப்பதுதான் வேலை!  
கண்கள் இரண்டாய்.. கலைகள் இரண்டு..ஓவியங்களாகட்டும், ஒளிப்படங்களாகட்டும் அத்தனையும் ஜீவனுள்ள படைப்புகள்:


நாட்டின் பொக்கிஷங்கள்:

குழுக்கள் அமைத்து சக ஓவியர்களின் திறனை வளர்க்க ஆர்வம் காட்டுவதோடு நின்றுவிடவில்லை முரளிதரன். பள்ளிகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கும் நண்பர்களுடன் சென்று குழந்தைகளின் ஓவியத் திறனை வெளிக்கொண்டு வரும் நல்ல பணியையும் செய்து வருகிறார். குழந்தைகளின் கற்பனைத் திறன் பிரமிக்க வைப்பதாக அவர்களைக் கொண்டாடுகிறார். பெற்றோர் தம் குழந்தைகளின் ஓவியங்களைப் பகிர்ந்து கொள்ளவென “Kids & Wings" எனும் ஃபேஸ்புக் பக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

சிறு வயதிலிருந்து தந்தை திரு. அழகர், தாய் திருமதி. சகுந்தலா, டிராயிங் மாஸ்டர் திரு. தங்கவேலு ஆகியோர் தந்த ஊக்கம்.. மற்றும் பள்ளி, கல்லூரி நண்பர்களிடமிருந்து தொடர்ந்து கிடைத்த பாராட்டுகள்.. இவையே தன்னைத் தொடர்ந்து இயங்க வைத்ததாக நெகிழ்வுடன் அவர்களை நினைவு கூர்ந்தார்.

வருடக் கணக்காய் வாரயிறுதிகளைக் கலைகளுக்காகவே ஒதுக்கி வந்ததிலிருந்து இன்று உருவாகியுள்ள ‘அழகர் ஸ்டூடியோ’ வரையிலுமாய் இவரது அனைத்து செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து வரும் மனைவி திருமதி அன்பு செல்வியும் அருமையாக ஓவியம் வரைவார் என்பது நமக்கான கூடுதல் தகவல்.

மேலும் இவரது படைப்புகளை இரசிக்க: https://www.facebook.com/artofmurali/
**

வாழ்த்துகள் முரளிதரன்:)! சிறந்த கலைஞரை அறிமுகம் செய்யும் வாய்ப்பை அளித்த கல்கிக்கு நன்றி!


***


20 கருத்துகள்:

 1. ஜீவனுள்ள படைப்புகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 2. ஒரு சிறந்த கலைஞரின் அறிமுகத்துக்கு நன்றி. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 3. ஓர் அற்புதக் கலைஞரை
  அருமையாக கௌரவித்த கல்கிக்கும்
  அதை பதிவர்கள் அறியச் செய்த தங்களுக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அருமையான கலைஞரின் அறிமுகம்...
  வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 5. அற்புதமான கலைஞரின் அறிமுகம்.....

  வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 6. அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் அருமையான கலைவடிவங்கள்.

  பதிலளிநீக்கு
 7. இதுபோன்ற உயிருள்ள ஓவியங்களைப் பார்த்து எத்தனை நாளாயிற்று!

  பதிலளிநீக்கு
 8. வாவ். அருமையான கலைஞரின் அறிமுகத்திற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 9. இவரின் கலை ஆர்வம்
  நம்மை தொற்றிக்கொள்ளும்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin