திங்கள், 8 மார்ச், 2021

மகளிர் தினம் 2021ரு நூற்றாண்டுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது ‘சர்வதேச மகளிர் தினம்’. பெரும்பாலான மக்கள் இதைப் பெண் உரிமைகளை வலியுறுத்தும் தினமாக நினைக்கின்றனர். ஆனால் இதன் வேர், உழைக்கும் மகளிரின் இயக்கமாகவே ஆரம்பமானது. 1911_ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்க்ஸிய சித்தாந்தத்திலும்  கம்யூனிஸ கொள்கையிலும் பற்று கொண்டவரும், வக்கீலும் ஆன ஜெர்மனியைச் சேர்ந்த க்ளாரா ஜெட்கின் இதைத் தொடங்கி வைத்தார். அப்போதிலிருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

உலகெங்கிலும் பெண்கள் தம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் பயணத்தின் அடையாளமாக மகளிர் தினம் பார்க்கப்படுகிறது. எவ்வளவோ சாதிக்கப்பட்டிருந்தாலும் இப்பயணம் எவ்வளவு நீண்டது, இன்னும் எவ்வளவு செய்து முடிக்கப்பட வேண்டியுள்ளது என்பதற்கான நினைவூட்டலாகவும் இத்தினம் திகழ்கின்றது.

இந்த வருட மகளிர் தினத்திற்கான கரு, ‘சவால் விடுவோம்’ (#ChooseToChallenge)! சவால் விடப்படும் உலகம், எச்சரிக்கை உணர்வோடு இருப்பதோடு, சவால்களில் இருந்தே மாற்றங்களும் நிகழும் என்பதே இந்தக் கருவின் குறிக்கோளாகும். வரும் வருடம் மகளிர் தம்மைப் பின்னடைய வைப்பது எதுவாக இருப்பினும் அதை நோக்கிச் சவால் விட்டு வென்று காட்ட வேண்டும்.

போராட்டமான வாழ்க்கையை மன உறுதியுடன் எதிர்கொண்டு பயணிக்கும் மகளிரின் படங்கள் பத்தின் தொகுப்பு...

பெண் ஒரு முழுமையான வளையம். அவளுக்குள் இருக்கிறது உருவாக்கவும், பேணி வளர்க்கவும், உருமாற்றவும் முடிகின்ற ஆற்றல். 

#1


#2
#3


#4#5


#6


#7


#8#9

#10

"திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்."

எப்போதும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளோடு கடந்த வருடம் முழுவதும் மற்றும் தற்போதும் தீநுண்மியினால் உலகம் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்குத் தோள் கொடுக்கும் பெரும் பொறுப்பையும் வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர் மகளிர். எல்லா வகையிலும் மகளிர் வாழ்வு மேம்பட வேண்டுவோம்!


மகளிர் தின வாழ்த்துகள்!
***


8 கருத்துகள்:

 1. படங்களும் தகவல்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு...படங்களுடன் தகவல்கள் அருமை..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 3. தகவல்களும் படங்களும் சிறப்பு.

  மகளிர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. மகளிர்தின பதிவு அருமை.
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin