“பெங்களூர் லால்பாக் குடியரசு தின சிறப்பு மலர்க் கண்காட்சி - 2015”
மலர் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலர் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 27 ஜனவரி, 2015
‘தி இந்து’ போட்டோ கேலரியில்.. ( Bangalore Lalbagh Flower Show 2015 )
“பெங்களூர் லால்பாக் குடியரசு தின சிறப்பு மலர்க் கண்காட்சி - 2015”
லேபிள்கள்:
**தி இந்து,
அனுபவம்,
பேசும் படங்கள்,
மலர் கண்காட்சி
ஞாயிறு, 25 ஜனவரி, 2015
சனி, 24 ஜனவரி, 2015
தில்லி செங்கோட்டை - 2015 லால்பாக் குடியரசுதினக் கண்காட்சி ( 2015 Bangalore Lalbagh Flower Show ) - பாகம் 1
# அதிபர் ஒபாமாவுக்கு வரவேற்பு
17 ஜனவரி தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது பெங்களூரில் 2015_ன் குடியரசுதின மலர்க் கண்காட்சி. இது லால்பாகில் நடைபெறும் இருநூற்றியோராவது கண்காட்சி! வழக்கம்போல போகலாமா வேண்டாமா என யோசித்து, பின் வழக்கம்போல போய் வந்து விட்டேன்:)! கூட்டமில்லாத வாரநாளான வியாழன் அன்று, மேலும் கூட்டம் குறைந்த நண்பகல் நேரமாகச் சென்று மாலையில் திரும்பினேன்.
# 2
3 லட்சம் சிகப்பு, வெள்ளை ரோஜாக்கள் மற்றும் சம்பங்கி மலர்களாலான, 28 அடி உயரமும், 50 அடி அகலமுமாக விரிந்து நின்ற “தில்லி செங்கோட்டை”தான் இந்தக் கண்காட்சியில் கண்ணாடி மாளிகையில் இடம் பெற்றிருந்த பிரதான அலங்காரம். தலைநகரின் செங்கோட்டை தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
2014 சுதந்திர தினக் கண்காட்சி - பெங்களூர் லால்பாக் - பாகம் 2 ; படங்கள் 30 ( Bangalore Lalbagh Independence Day Flower Show 2014 )
![]() |
| மூவண்ண வாழ்த்து |
மலர்களால் மைசூர் அரண்மனை -
200_வது லால்பாக் சுதந்திர தின மலர்க் கண்காட்சி - படங்கள் 17
[பதிவைத் தவற விட்டவர்கள் பார்த்து விட்டு வந்து விடுங்கள்:).]
200_வது லால்பாக் சுதந்திர தின மலர்க் கண்காட்சி - படங்கள் 17
[பதிவைத் தவற விட்டவர்கள் பார்த்து விட்டு வந்து விடுங்கள்:).]
கூட்ட மிகுதியால் அதிக நேரம் நிற்க முடியாமல் வெளியேறி விட்டேன் க்ளாஸ் ஹவுஸிலிருந்து.
#2ஆகஸ்ட் 8ஆம்தேதி கண்காட்சி ஆரம்பித்த தினத்தில் ஏழாயிரமாக இருந்த வருகையாளர் எண்ணிக்கை நான் சென்றிருந்த 9ஆம் தேதி சனிக்கிழமை 27 ஆயிரமாகி, மறு நாள் ஞாயிறு 50 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. வாரநாட்களுக்குப் பிறகு சுதந்திர தினமான இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு நிச்சயம் கூட்டம் ஜே ஜே என்றுதானிருக்கும் எள் விழ இடமில்லாமல் :)! 3 இலட்சம் ரோஜாக்களால் உருவான அரண்மனையில் வாடிவிட்டிருந்த ஒன்றரை இலட்சம் ரோஜாக்களை சென்ற ஞாயிறு அன்று இரவோடு இரவாக மாற்றி விட்டிருக்கிறார்கள். இந்த மூன்று நாட்களுக்காகவும் கூட அவ்வாறு செய்திருக்கக் கூடும். 'திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகதான் இருக்கிறது' என ஒவ்வொரு வருடமும் எழுகிற முணுமுணுப்புகளைப் பின் தள்ளி விடுகிறது இது போல அவர்கள் எடுத்துக் கொள்கிற பிரயத்தனங்களும், பாராட்டுக்குரிய உழைப்பும்.
#3
பொன் விழா கொண்டாட்டத்தில் நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக புகைப்படக் கண்காட்சியும் இருந்தது ஒரு அரங்கில்.அங்கேயும் போய் வரலாம். மலர்களையும் சுற்றி வரலாம், வாருங்கள். படங்கள் திறக்க நேரம் எடுத்தால் ஏதேனும் ஒரு படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யுங்கள். வரிசையாக லைட் பாக்ஸில் பார்த்திடலாம்.
லேபிள்கள்:
அனுபவம்,
பெங்களூர்,
பேசும் படங்கள்,
மலர் கண்காட்சி
ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014
மலர்களால் மைசூர் அரண்மனை - 200_வது லால்பாக் சுதந்திர தின மலர் கண்காட்சி - படங்கள் 17 - ( Bangalore Lalbagh Independence Day Flower Show 2014 )
#1
இருநூறு வருடங்களாக இடைவிடாமல் வருடத்துக்கு இருமுறையென நடைபெற்று வரும் லால்பாக் மலர்க் கண்காட்சியின் இந்த வருட சிறப்பு அம்சங்களாக மைசூர் அரண்மனை, தேவி சாமுண்டீஸ்வரியை அம்பாரியில் ஏற்றி வரும் தசரா யானைகள் ஊர்வலம் மற்றும் மைசூர் கே. ஆர். சர்கிளில் இருக்கும் மகராஜா கிருஷ்ணராஜ உடையாரின் உருவச்சிலையுடனான மணி மண்டபம்.
#2
அரண்மனை 45 அடி நீளம், 12 அடி அகலம், 27 அடி உயரத்தில் மூன்று லட்சம் மஞ்சள், வெள்ளை, சிகப்பு ரோஜாக்களால் எழுந்து நின்றிருந்தது.

[படங்கள் திறக்கத் தாமதமானால் ஏதேனும் ஒரு படத்தின் மேல் க்ளிக் செய்து வரிசையாக லைட் பாக்ஸில் பார்க்கலாம்.]
#2
அரண்மனை 45 அடி நீளம், 12 அடி அகலம், 27 அடி உயரத்தில் மூன்று லட்சம் மஞ்சள், வெள்ளை, சிகப்பு ரோஜாக்களால் எழுந்து நின்றிருந்தது.
#3
லேபிள்கள்:
2014,
அனுபவம்,
பெங்களூர்,
பேசும் படங்கள்,
மலர் கண்காட்சி
ஞாயிறு, 26 ஜனவரி, 2014
ரோஜாப் பூந்தோட்டம் - லால்பாக் பெங்களூர் - ( Bangalore Lalbagh Flower Show 2014 )
#1 மலர்கள் பேசுமா...
17 ஜனவரி 2014 ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் லால்பாக் குடியரசுதினக் மலர்க் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த முறை ‘பூக்கும் பழங்கள்’ காட்சிப் படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது TOI. வெறொன்றுமில்லை.. பழங்கள், காய்கறிகளைச் சேர்க்கச் சிணுங்கும் குழந்தைகளைப் பார்த்துக் கைநீட்டி அழைக்கும் வகையில் மாம்பழம், வெங்காயம், கேரட், மாதுளை, பூண்டு ஆகிய வடிவங்களில் பூ அலங்காரங்கள் இடம்பெற்றிருக்கின்றன கண்ணாடி அரங்கில். கூடவே மெகா Bunny Rabit ஒன்றும். ஆர்வமுள்ள பெங்களூர்வாசிகள் சென்று வாருங்கள்.
வழக்கமாக இரண்டு பிரதான வடிவங்கள் முடிவு செய்யப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அப்படியில்லாமல் இந்தக் கருவை மையமாகக் கொண்டதற்கு ஒரு காரணமும் உள்ளது. பொன்விழா கொண்டாடுகிறது இவ்வருடம் கர்நாடகாவின் தோட்டக்கலை இலாகா. ஐம்பதாண்டு நிறைவை அனுசரித்தே இந்த காய்-கனி-மலர் அலங்காரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014
டாலியா, ஆம்பல் மற்றும் சூஸன் - ( Bangalore Lalbagh Flower Show 2014 )
பெங்களூர் லால்பாக் இன்னும் சில தினங்களில் வரப் போகும் குடியரசு தினக்
கண்காட்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 2013 சுதந்திர தினக்
கண்காட்சியில் அள்ளி வந்த அழகில் ஒரு பாதியைதான் உங்கள் கண்ணுக்குக்
காட்டியிருக்கிறேன். அதற்குள் இரண்டு பதிவாவது தர விரும்புகிறேன் மலர்களின்
அணிவகுப்போடு...
இன்று டாலியா, ஆம்பல் மற்றும் Black Eyed Susan ஆகியவற்றை ரசிக்கலாம் வாருங்கள்...
#1
#2

#3
இன்று டாலியா, ஆம்பல் மற்றும் Black Eyed Susan ஆகியவற்றை ரசிக்கலாம் வாருங்கள்...
#1
#2

#3
லேபிள்கள்:
அனுபவம்,
பேசும் படங்கள்,
மலர் கண்காட்சி,
மலர்கள்
வெள்ளி, 27 டிசம்பர், 2013
ஜினியா - இரட்டை வர்ணங்களில்.. - ( Bangalore Lalbagh Flower Show )
ஆகஸ்ட் லால்பாக் கண்காட்சியில் எடுத்த படங்களில் மலர் அலங்காரங்களையும்,
சிட்டுக் குருவிகள் போல் அங்குமிங்கும் தத்தித் திரிந்த மழலைகளையும்
தொகுப்பாகப் பகிர்ந்து கொண்டிருந்தேன். மேலும் எடுத்த வகை வகையான
மலர்களை... ஃப்ளிக்கரில் வரிசையாகப் பகிர்ந்தவற்றை.. சில தொகுப்புகளாக இங்கு பதிந்திட எண்ணியுள்ளேன்.
இன்று ஜினியா. அதுவும் Bicolor என அறியப்படும் இரட்டை வர்ண ஜினியாக்கள். இதழ்களில் ஏதேனும் இரண்டு வர்ணங்களைப் பிரதானமாகக் கொண்டவை.
விதைகள் பாகத்தில் தெரியும் வர்ணங்களும், சிலவற்றின் இதழ்களில் மூன்றாவதாக ஊடுருவப் பார்க்கும் வர்ணமும் கணக்கில் வரா என்பதை சொல்லிக் கொள்கிறேன்:)!
சில வகைகள் சட்டெனப் பார்வையை ஓட விடுகையில் ஒரே மாதிரியானவையோ எனத் தோன்ற வைத்தாலும் உற்றுப் பார்க்கையில் தெரிந்திடும் இறைவனின் தூரிகை எடுத்துக் கொண்ட கவனம்.
வாருங்கள் இரசிக்கலாம் அழகின் கொண்டாட்டத்தை.. அழுத்தமான வண்ணங்களிலும் மென்மையான நிறங்களிலும்...
#1 வெள்ளை - மஞ்சள்
#2 மஞ்சள் - பழுப்பு

திங்கள், 12 ஆகஸ்ட், 2013
விகடன் செய்திகள் .காமில்.. - ( Bangalore Lalbagh Flower Show )
#1 மஞ்சள் பூவின் மலர்ச்சி
# 2 டாலியா, கண்களுக்குக் குளிர்ச்சி
இந்தப் பூக்களையும் இணைத்துக் கொண்டு நான் எடுத்த லால்பாக் மலர் கண்காட்சிப் படங்கள்..
# 2 டாலியா, கண்களுக்குக் குளிர்ச்சி
இந்தப் பூக்களையும் இணைத்துக் கொண்டு நான் எடுத்த லால்பாக் மலர் கண்காட்சிப் படங்கள்..
லேபிள்கள்:
* ஆனந்த விகடன்,
பெங்களூர்,
பேசும் படங்கள்,
மலர் கண்காட்சி
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
உலகின் அதி உயர மண் குடம் “The Meltling Pot of Culture" , பெங்களூர்
சென்ற பதிவின், லால்பாக் சுதந்திர தின மலர்க்கண்காட்சிப் படவரிசையில் இப்படத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தேன் ஆயினும் அது குறித்த முழுமையான விவரங்கள் தந்திருக்கவில்லை. இந்த முறை சென்றிருக்கையில்தான் முதன் முறை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். லால்பாக் உள்ளே கெம்பகெளடா மண்டபம் எழும்பிய குன்றின் நேர் எதிரே இருக்கிறது போன்சாய் தோட்டம். அதனுள்ளே எழும்பி நிற்கிறது இந்த அதி உயர மண்குடம்.

படத்தை ஃப்ளிக்கரில் பதியும் முன் அதுகுறித்த விவரங்களைத் தேடிய போது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்திட விரும்புகிறேன். இதை சென்ற பதிவிலேயே இப்போது சேர்த்தால் ஏற்கனவே வாசித்தவர்கள் தவறவிடக் கூடுமாகையால், தனிப்பதிவாக இங்கு:
The Meltling Pot of Culture

படத்தை ஃப்ளிக்கரில் பதியும் முன் அதுகுறித்த விவரங்களைத் தேடிய போது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்திட விரும்புகிறேன். இதை சென்ற பதிவிலேயே இப்போது சேர்த்தால் ஏற்கனவே வாசித்தவர்கள் தவறவிடக் கூடுமாகையால், தனிப்பதிவாக இங்கு:
லேபிள்கள்:
அனுபவம்,
சுற்றுச் சூழல்,
பெங்களூர்,
பேசும் படங்கள்,
மலர் கண்காட்சி
சனி, 10 ஆகஸ்ட், 2013
2013 சுதந்திர தின மலர் கண்காட்சி - லால்பாக் பெங்களூரு - ( Bangalore Lalbagh Flower Show )
#1 # சூரியக் கதிரில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் மலர்கள்
#3 கண்ணாடி மாளிகை
#4 ஒவ்வொரு முறையும் இந்தப் படிகளில் இறங்கும் போது மனிதத் தலைகளை மட்டுமே காண முடியும். கூட்டமில்லாக் கண்காட்சி கொண்டாட்டத்தைக் கொடுத்தது:)!
கடந்த சில தினங்களாக மழையும் குளிருமாகவே இருந்த பெங்களூர் இப்போதுதான் சூரியனின் கதகதப்புக்குத் திரும்பியிருக்கிறது. இந்த நீரூற்றுக்கு எதிரேயிருக்கும் வாயிலின் வழியாகவே நுழைய வேண்டும் மாளிகைக்குள்..
#5
#2 ஆரம்பித்த இரண்டாம் நாள் (8 ஆகஸ்ட்) என்பதாலோ அல்லது மதிய நேரம் என்பதாலோ கூட்டமிருக்கவில்லை.
#3 கண்ணாடி மாளிகை
#4 ஒவ்வொரு முறையும் இந்தப் படிகளில் இறங்கும் போது மனிதத் தலைகளை மட்டுமே காண முடியும். கூட்டமில்லாக் கண்காட்சி கொண்டாட்டத்தைக் கொடுத்தது:)!
கடந்த சில தினங்களாக மழையும் குளிருமாகவே இருந்த பெங்களூர் இப்போதுதான் சூரியனின் கதகதப்புக்குத் திரும்பியிருக்கிறது. இந்த நீரூற்றுக்கு எதிரேயிருக்கும் வாயிலின் வழியாகவே நுழைய வேண்டும் மாளிகைக்குள்..
#5
நீல நதியில் மிதந்து கொண்டிருந்தது அங்கே இரண்டு இலட்சம் ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட, 35 அடி நீளமும், 13 அடி உயரமும் கொண்ட
பூப் படகு. விரிக்கப்பட்டிருந்தது முன்னே பூக்கம்பளம். நெருக்கடியோ கெடுபிடியோ இல்லாத சூழலில் படகைச் சுற்றி வந்து வேறு வேறு கோணங்களில்
எடுத்தவற்றை பார்வைக்கு வைக்கிறேன் நீங்கள் இரசித்திட. அப்படியே Mega Hand, Vertical Garden,
Melting Pot என இந்தக் கண்காட்சியின் சில சிறப்பம்சங்களையும் பார்க்கலாம்
வாங்க.
லேபிள்கள்:
அனுபவம்,
சுதந்திர தினம்,
பெங்களூர்,
பேசும் படங்கள்,
மலர் கண்காட்சி
புதன், 7 ஆகஸ்ட், 2013
பூவின் மொழி நிறமா.. மணமா..? - ( Bangalore Lalbagh Flower Show )
மீண்டும் மீண்டும் பூக்களா?
மீண்டு வர முடியாதபடி இயற்கை விரித்த வலையில் மாட்டிக் கொண்டதில்
வருத்தமில்லை. மகிழ்ச்சிதான்.
இங்கே பத்தாவது படத்தில் வைத்த கேள்விக்கு சாட்சியாக முதல் ஒன்பது படங்கள்.
கூடவே பெங்களூர் லால்பாக் சுதந்திரதினக் கண்காட்சி 2013 குறித்த தகவல்கள்..
#1 Canna Flower
பின் வரும் மூன்றும்.. PINK ALAMANDA
#2 மலரக் காத்திருக்கும் மொட்டுக்கள்
மீண்டு வர முடியாதபடி இயற்கை விரித்த வலையில் மாட்டிக் கொண்டதில்
வருத்தமில்லை. மகிழ்ச்சிதான்.
இங்கே பத்தாவது படத்தில் வைத்த கேள்விக்கு சாட்சியாக முதல் ஒன்பது படங்கள்.
கூடவே பெங்களூர் லால்பாக் சுதந்திரதினக் கண்காட்சி 2013 குறித்த தகவல்கள்..
#1 Canna Flower
![]() |
#2 மலரக் காத்திருக்கும் மொட்டுக்கள்
லேபிள்கள்:
அனுபவம்,
தகவல்கள்,
பூக்கள்,
பெங்களூர்,
பேசும் படங்கள்,
மலர் கண்காட்சி
வெள்ளி, 22 மார்ச், 2013
சனி, 26 ஜனவரி, 2013
குடியரசு தின மலர்க் கண்காட்சி 2013 - பெங்களூர் லால்பாக் - படங்கள்
#1

“18 ஜனவரி 2013, அன்று கர்நாடக முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு பெங்களூர் லால்பாகில் நடந்து கொண்டிருக்கிறது மலர் கண்காட்சி. இந்த வருடத்தின் பிரதான அம்சமாக 35 அடி உயரமும், 20X20 அடி பரப்பளவும் கொண்ட ஈஃபில் டவர் உருவாகியிருக்கிறது இரண்டரை இலட்சம் ரோஜாக்களாலும் பத்தாயிரம் ஆர்க்கிட் மலர்களாலும். அதன் முன்னே 6 அடி உயரத்தில் எழுந்தருளி நிற்கிறார் விவேகானந்தர். அவரது பொன்மொழிகளும் சிலையைச் சுற்றி பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தரின் 150-வது பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிற ஆண்டு இது. இந்த இரண்டு மலர்க் கட்டுமானங்களுடன் அந்தூரியம் மலர்களால் ஆன உடையணிந்த பார்பி பொம்மையும் இடம் பெற்றிருக்கிறது. போகச் சுற்றி வரப் பல மலர் அலங்காரங்கள், போன்சாய் பார்க்கில் 500 செடிகள் என நீள்கிறது மக்களைக் கவரும் அம்சங்கள். ....
#2
#3 முக்கிய அம்சங்களாய் பாரீஸின் ஈஃபில் கோபுரமும் விவேகானந்தரும்..

'இத்தனை வருடங்களிலும் பெங்களூரில் எது மாறினாலும், திருவிழா போல் வருடம் இருமுறை நடைபெறும் மலர்கண்காட்சிகளும், அலைமோதும் கூட்டமும், ஆர்வத்துடன் காண வரும் மக்களின் உற்சாகமும் மட்டும் மாறவேயில்லை' என ஒருவர் பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மையும் கூட.” என சென்ற பதிவில் கண்காட்சி
குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தேன். சென்று வந்து, படங்கள் இருபத்து
மூன்றைப் பகிர்ந்து கொள்கிறேன் குடியரசு தின வாழ்த்துகளுடன்.
#2
லேபிள்கள்:
அனுபவம்,
கட்டுரை/அனுபவம்,
பெங்களூர்,
பேசும் படங்கள்,
மலர் கண்காட்சி
வெள்ளி, 24 பிப்ரவரி, 2012
‘நிருத்யாஞ்சலி’ இந்தியப் பாரம்பரிய நடனங்கள் - பெங்களூர் மலர் கண்காட்சியில்..

இந்த வருடக் குடியரசுதின மலர் கண்காட்சியில் மக்கள் மனம் கவர்ந்த சிறப்பம்சங்களான மகாபாரத மணல் சிற்பம், மெகா சைஸில் ஒயிலாக நின்றிருந்த ஜோடி மயில், பொங்கி வந்த பூ அருவி என மேலிருக்கும் படத்திலிருப்பவற்றைப் பாகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த பாகமாகப் பகிர்ந்திடுவதாகச் சொல்லியிருந்த ‘நிருத்யாஞ்சலி’ எனும் நம் நாட்டின் பாரம்பரிய நடனங்களினாலான வணக்கம் விதம் விதமான மலர்கள் பழங்களால் சித்தரிக்கப்பட்டிருந்த காட்சிகளைக் காணலாம் வாங்க..
# 1 வரவேற்கிறது கம்பளம்..

# 2 நிருத்யாஞ்சலி

# 3 பரதம்

# 4 கதக்களி

# 5 கரகம்
கும்பத்தின் உச்சியிலே பச்சைக் கிளி:)!# 6 பொய்க்கால் குதிரை

# 7 ஒடிசி

# 8 டோலு

# 9 மூங்கில் நடனம்

# 10 பாங்ரா

# 11 குச்சுப்புடி

# 12. கம்சாலே

# 13. மணிப்புரி

இந்த நடன சித்தரிப்புகளை வித்தியாசமாகச் செய்திருக்கலாம் என்பது பலரின் கருத்தும். ஆனால் சிரமமேற்கொண்டு செய்த கலைஞர்களின் உழைப்புக்கான அங்கீகாரமாகப் படமெடுத்துப் பகிர்ந்து கொண்டுள்ளேன். அதுவுமில்லாமல் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமான அவர்களின் தொடர் முயற்சியும் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.
# 14. பளிங்கு மாளிகை அரிசி மணிகளில்..
அரிசிமணிகளாலான தேசியக் கொடியையும், கடுகினால் எழுதப்பட்ட தேசிய கீதத்தையும் சென்ற பதிவில் பதிந்திருந்தேன். அதுபோல தாஜ்மகாலை அரிசி மணிகளால் நுணுக்கமாகச் செதுக்கியிருந்தார்கள். அருகில் சென்று எடுக்க வழியில்லாததால் கண்ணாடியில் விழுந்த பிரதிபலிப்பைத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.# 15. பூங்கொத்திலிருந்து தலைநீட்டும் அன்னாசிப் பிஞ்சைப் பாருங்க:)

# 16. இன்னொரு மலர் விரிப்பு

“இந்த முறை போகணுமா...” என ஒவ்வொரு முறையும் கேள்வி எழும். வேண்டாமென எடுக்கும் முடிவு ஒவ்வொரு நாளும் காட்சி குறித்து வெளியாகும் செய்திகளால் மெல்ல மெல்ல வலுவிழந்து கேமராப் பையைத் தூக்க வைத்து விடும்:)! விதம் விதமான மலர்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லைதான். பாருங்க...
# 17. எத்தனை வண்ணங்கள்..
மொத்தமாய் காணும் போது மனம் மயங்கதானே செய்கிறது:)?தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1. 2012 குடியரசு தினக் கண்காட்சி - பெங்களூர் லால்பாக் - மகாபாரத மணல் சிற்பம், பூ அருவி, புத்தர் ஸ்தூபி..
2. தலைநகரின் தாமரைக் கோயில்-பெங்களூரு மலர் கண்காட்சியில்..-சுதந்திரதின சேதி சொல்லி..
3. ஆயிரம் மலர்களே.. - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சிப் புகைப்படங்கள் (பாகம்-1)
4. சித்திரப் பூக்கள் - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சி (பாகம்-2)
5. 2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்
6. பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010
7. மலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)
.jpg)

+Dahlia1.jpg)