வியாழன், 10 ஜனவரி, 2013

நிலவு பார்த்தல் - மட்சுவோ பாஷோ ஜப்பானிய துளிப்பாக்கள் (ஏழு)


1.
உழவனின் குழந்தை
அரிசி குத்துவதை அவ்வப்போது நிறுத்தி
ஓய்வு எடுக்கிறது நிலவு பார்ப்பதில்.

2.
குதிரை மேல் உறக்கம்
தொடரும் கனவில் தூரத்து நிலவு
மணக்கிறது வறுபடும் தேயிலை.

3.
உதிக்கப் போகிறது நிலவு,
காத்திருக்கின்றனர் இவ்விரவில்
கைகளைத் தம் முட்டுகளில் வைத்து.

4.
எங்கே நிலவு?
கோவில் மணியைப் போல்
மூழ்கி விட்டதோ கடலில்..

5.
நிலவின் ஒளியில்
மெளனமாகத் துளையிடுகிறது புழு
வாதாம் கொட்டையை.

6.
கோவிலில் உறங்குகின்றனர்
கவலை தோய்ந்த ஒரு முகம்
நிலவு பார்த்திருக்கிறது.

7.
எப்போதேனும் தோன்றும் மேகங்கள்
நிலவு பார்த்தலுக்குக்
கொடுக்கின்றன ஓய்வு.
***

மூலம்:
ஆங்கில மொழியாக்கத்திலிருந்து 1 ஜனவரி 2013 அதீதம் இதழுக்காகத் தமிழாக்கம் செய்யப்பட்டவை.

----

மட்சுவோ பஷோ (1644 -1694) புகழ் பெற்ற ஜப்பானின் இடோ காலத்துக்கவிஞர். இவரது வாழ்க்கைக் காலத்திலேயே "ஹைக்காய் னொ ரெங்கா"  என்னும் கவிதைவடிவத்தில் பெயர் பெற்றவராக விளங்கினார். சுருக்கமானவையும் தெளிவானவையுமாகக் கொண்டாடப்படும் ஹைக்கூ கவிதைகளில் வல்லுனராக இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆசிரியராகத் தொழில் புரிந்த இவரது கவிதைகள் ஜப்பானில் நினைவுச் சின்னங்களிலும், மரபு சார்ந்த இடங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
இலக்கியத் துறையினரின் சமூக மற்றும் நகர் சார்ந்த வாழ்க்கை முறையைப் புறந்தள்ளி, எழுதுவதற்கான அகத்தூண்டலைப் பெற நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்தவர். இவர் பெற்ற நேரடி அனுபவங்களே இவரது கவிதைகளில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கலாம். காட்சிகளையும் உணர்வுகளையும் எளிமையான கூறுகளில் அடக்கியவர்.

***

32 கருத்துகள்:

 1. ஆஹா அங்கயும் நிலவு மோகம் நிறைய இருக்கிறதா. அருமையான மொழிபெயர்ப்பு ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா! எல்லாமே அருமையாக இருக்கிறது. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப நல்லா இருக்குங்க. பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொரு ஹைக்கூவும் ஒரு சித்திரத்தை மனதில் எழுப்பி ரசிக்க வைக்கின்றன. அழகான மொழிபெயர்ப்பில் ரசனைக்கு விருந்தென இருந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நிலவு பார்க்கும் ஆசையில் நெல்குத்துவதை நிறுத்தி ரசிப்பது அழகு.
  பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. கடைசி இரண்டு கவிதைகளும் அருமை..

  பதிலளிநீக்கு

 7. நிலவின் கனவில் வந்த கவிதைகள் அருமை.

  பதிலளிநீக்கு
 8. உங்க கவிதையால் நிலவை ஆழ்ந்து ரசித்தேன்,நன்றிக்கா...

  பதிலளிநீக்கு
 9. @வல்லிசிம்ஹன்,

  நன்றி வல்லிம்மா. இவற்றை வாசித்ததுமே உங்களைதான் நினைத்தேன்:)!

  பதிலளிநீக்கு
 10. எல்லாமே அருமை.

  ஆஹா.. நம்ம நிலாரசிகை வந்துட்டாங்க போலிருக்கே :-)))))))

  பதிலளிநீக்கு
 11. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

  பதிலளிநீக்கு
 12. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 13. @ezhil,

  நன்றி எழில். தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 14. @Ranjani Narayanan,

  நன்றி ரஞ்சனிம்மா.


  தங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 15. ஆறாவது கவிதை சரியா ! நிலவு பார்த்திருக்கிறது என்பது எங்கோ நெருடுகின்றது, பொருள் பிழைப்பட்டுள்ளதோ, சரி பார்க்கவும். ஏனைய கவிதைகளின் மொழிப்பெயர்ப்பு அருமை .

  பதிலளிநீக்கு
 16. எளிமையாய் சொல்லப்பட்ட
  அழகு நிலவின் கவிதை அருமையிலும் அருமை
  மொழிபெயர்ப்பு கூடுதல் சிறப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. @இக்பால் செல்வன்,

  ஆறுதல் வேண்டி நிலவைப் பார்த்திருப்பது பெண்ணாகவும் இருக்கலாம். ஆணாகவும் இருக்கலாம். மேலும் இவை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பொருள் தரக் கூடியவை. சொற்சிக்கனத்தோடு, விளக்கமாகச் சொல்ல முயன்று மற்றவர் பார்வைக்கு இடையூறாக அமைந்திடக் கூடாதென்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பாராட்டுக்கும் பகிர்ந்து கொண்ட கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. @Ramani,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin