கைபுனையாச் சித்திரங்கள்
பாகம் 1 ; பாகம் 2 .எனது 400-வது பதிவு. முத்துச்சரம் தொடர்ந்து இயங்கக் காரணமாய், வாசித்தும் ஊக்கம் தந்தும் வருகிற அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி!
#1
மயிலே மயிலே’ என, திருச்செந்தூர் மற்றும் பெங்களூர் பனர்கட்டா தேசியப்பூங்காவில் எடுத்த சில மயில் படங்களுடன் ‘எப்போதேனும் தோகை விரித்தாடும் மயில்களைப் படமாக்க வேண்டும்’ என்கிற எனது ஆசையையும் பகிர்ந்திருந்தேன். சிங்கப்பூர் ஜூராங் பூங்காவில் எப்படி ஆசை தீரக் கிளிகளை [ மூக்கும் முழியுமா.. கிளிகள் இத்தனை விதமா? ] விதம் விதமாய்ப் படமாக்கினேனோ, அதே போல இங்கு மயில்களைப் படமாக்க முடிந்தது. கிளிகளைப் போல் மயில்களில் பல விதம் கிடையாது என்றாலும் சில ரகங்கள் இருக்கவே செய்கின்றன. (14 படங்களுடன் ஒரு பகிர்வு..)