Friday, January 18, 2013

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை.. - பறவைப் பண்ணை - மைசூர் காரஞ்சி நேச்சர் பார்க் (2)


இருபது மீட்டர் உயரம், அறுபது மீட்டர் நீளம், நாற்பது மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்டமான கூண்டுடன், மக்கள் நுழைந்து பறவைகளை மிக அருகில் இரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது மைசூர் காரஞ்சி ஏரி பறவைப் பண்ணை. இந்தியாவிலேயே மிகப் பெரிய “walk-through aviary” இதுதான். பல வகைப் பறவைகள் முப்பது-நாற்பது வரை இருந்தன. படமாக்கிய ஒருசில வகைகள் இங்கே:

#1  Silver Pheasant
நிமிர்ந்த நன்னடை .

#2 தமிழில் “வெள்ளி நிறக் கோழி” என அறியப்படுகிறது

இந்தப் படங்களை ஃப்ளிக்கரில் பகிர்ந்த போது கிழக்கு ஆசியப் பகுதியில் இவற்றின் இயற்கையான வாழ்விடத்துக்கே சென்று எடுத்தேனோ என நினைத்து விட்டார் நண்பர்  விஜயாலயன். இவர் நூற்றுக்கும் மேலான வகை ஆஸ்திரேலியப் பறவைகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் படமாக்கியிருக்கிறார். எடுத்த படங்களை Birdlife Austrlia (www.birdlife.org.au) உபயோகத்திற்கு வழங்கியும் விட்டார். ஒரு சில படங்கள் educational slides ஆகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பதிவிலிருக்கும் சில பறவைகளின் பெயர்களை அறியவும் உதவினார். இவரைப் போலவும், திரு. கல்பட்டு நடராஜன் அவர்களைப் போலவும் காட்டிலும் மேட்டிலும் தேடிச் சென்று பறவைகளை அவதானிக்க இயலாத சிலருக்காகதானே இது போன்ற பூங்காக்கள் இருக்கின்றன:)?

#3 கருப்பு அன்னம்

ஒற்றைக் காலில் எதற்காக இந்தத் தவமோ?


#4 அமைதிப் புறா#5 Lady Amherst's Pheasant


பீடு நடை போடும் இந்தப் பறவையைப் படமாக்குவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. மின்னல் போல் நகருகின்றது.

என்ன நீளம் பாருங்கள்!

#6

#7 Cheer Pheasant

மனிதரைக் கண்டதும் குடுகுடுவென ஓடி விடுகிறது. துரத்திச் சென்று இன்னும் பயமுறுத்த விருப்பமில்லை.  தள்ளியிருந்து zoom செய்தும், கண்டு கொள்ளாமல் இருந்தவற்றையும், ஒத்துழைத்தவற்றையுமே படமாக்கினேன்.

#8 வெள்ளை மயில்
கண்ணாமூச்சி ஏனம்மா?

#9


#10  
உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!
-பாரதிதாசனார்

வெள்ளை மயில்  அபூர்வம் போலும். ஒன்றே ஒன்றுதான் இருந்தது. ஆனால் நம் தேசியப்பறவை பத்துக்கும் மேலான எண்ணிக்கையில் உள்ளன. பாறை இடுக்குகளில் இருந்து வெளிப்பட்டும், புதர்களில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டும், பாதைகளை மறித்து நின்றும், புல்வெளியில் மேய்ந்தபடியும், தோகை விரித்தாடியும், தலையை அப்படியும் இப்படியும் சிலுப்பி விதம் விதமாய் என் கேமராவுக்கு ஒத்துழைத்த அவற்றுக்காக ஒரு தனிப்பதிவு ஒதுக்குவதில் தப்பில்லைதானே:)?

(அடுத்த பாகத்தில்..
அழகிய மயில்கள்)

பாகம் ஒன்று “வனதெய்வங்களின் ஆசிர்வாதம்”: இங்கே

36 comments:

 1. படங்கள் அனைத்தும் அருமை.... மயில்களுக்காகவே தனிப் பகிர்வு - ஆவலுடன் காத்திருகிறேன்....

  த.ம. 1

  ReplyDelete
 2. அடடா என்ன அழகு.அருகே வந்துவிடாதேன்னு சொல்கிறதோ:)

  வெள்ளைமயில் யாரோட வாகனம்....
  அதென்னப்பா அந்தப் பறவை (பேர் தெரியலை) இவ்வளவு நீளமா இருக்கு?கொஞ்சம் ஊர்வன கொஞ்சம் பறப்பன ஜாதியோ:)
  ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூப்பர் படங்கள். ஒற்றைக்கால் வாத்து. :)ஸ்டைல் காட்டுதுப்பா.

  ReplyDelete
 3. வெள்ளை அன்னம் தான் பார்த்திருக்கோம். இங்க் கருப்பு அன்னமா? எல்லா படங்களுமே சூப்பராக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. அசத்த்த்தல் போங்க :-))

  வெள்ளை மயில் நம்ம திருவனந்தபுரம் மிருகக்காட்சிச்சாலையிலும் இருக்குது.

  ReplyDelete
 5. ம்ஹூம்... உங்களின் படங்கள் எல்லாம் சூப்பர். கண்ணையும் மனசையும் கவ்விப் பிடிக்குதுன்னு பாராட்டிப் பாராட்டி வார்த்தைகளே கிடைக்கைலை இப்போ. புதுசா ஏதாவது வார்த்தைகள் கண்டுபிடிச்சுட்டு வர்றேன். (தமிழ்ல வாட்டர் மார்க் போடறது அருமை. எப்படி முடிஞ்சது?)

  ReplyDelete
 6. அருமையான படங்கள் ராமலக்ஷ்மி. மைசூர் பல தடவை சென்றிருக்கிறேன் ஆனால் இந்த நேச்சர் பார்க் -- க்கு சென்றதில்லை. அடுத்த ட்ரிப் இங்கே தான். அவ்வளவு அருமையா இருக்கு உங்க படங்கள். என்னை அங்கே போக தூண்டுகிறது.

  ReplyDelete
 7. படங்களும் பதிவும் மிக அருமை.
  மைசூருக்கு பல முறை சென்றிருந்தும் இந்த பறவைப் பண்ணைக்கு சென்றதில்லை. அடுத்த முறை கட்டாயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்ய வைத்தது தங்களின் பதிவும், படங்களும்.

  ReplyDelete
 8. கருப்பு நிற அன்னம் மனம் கவர்ந்தது. அனைத்துமே அருமைதான். இதிலாவது பார்த்து ரசித்துக்கொள்வோம் என நீண்ட நேரம் ரசித்தேன் உங்கள் புகைப்படங்களை.

  ReplyDelete
 9. பறவை பண்ணையில் நீங்கள் எடுத்த படங்கள் எல்லாம் மிக அழகு ராமலக்ஷ்மி.
  அடுத்தபதிவில் மயில்களை காண ஆவல்.

  ReplyDelete
 10. அருமையான தொகுப்பு....படங்களும் அருமை...வாழ்த்துக்கள் இராமலஷ்மி

  ReplyDelete
 11. அழகான படங்கள், கேமரா விவரங்கள் சொல்லுங்களேன்!! படத்தில் உங்க பேரை போட்டது எப்படி?

  ReplyDelete
 12. எல்லாப் படங்களுமே அருமை. அந்த நீளமான பறவை பறக்குமா? பறந்தால் அந்த நீளத் தோகை வைத்து பேலன்ஸ் செய்ய முடியுமா?! வெள்ளை மயில் பார்க்க ஏனோ பாவமாய் இருக்கிறது!

  ReplyDelete
 13. அத்தனை பறவைகளுமே அழகு அக்கா.அது இது அழகென்று சொல்ல முடியேல்ல !  ReplyDelete
 14. வணக்கம் ..நல்ல படங்கள்..என்ன வகை கேமரா என்று முன்பே கேட்டு இருந்தேன்...செம....கிளாரிட்டி..எப்படியாவது சொல்லுங்களேன்...

  ReplyDelete
 15. படங்கள் அத்தனையுமே அழகு. நீண்ட வால் பறவை அழகோ அழகு தான். வெள்ளை மயிலை சமீபத்தில் திருவனந்தபுரத்தில் பார்த்தேன். சிறுவயதில் கோவையில் வ.உ.சி பூங்காவில் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 16. படங்கள் அனைத்துமே பார்த்ததும் பரவசப்படுத்துகிறது.

  ReplyDelete
 17. அக்கா...
  அழகிய போட்டோக்கள்...

  கலக்கலான போட்டோஸ்...

  ReplyDelete
 18. @வெங்கட் நாகராஜ்,

  நன்றி வெங்கட். விரைவில் பதிகிறேன்:).

  ReplyDelete
 19. @வல்லிசிம்ஹன்,

  நீளப் பறவை ‘Lady Amherst's Pheasant’. படம் ஐந்தில் இருப்பதும் அதுவே. நன்றி வல்லிம்மா:)!

  ReplyDelete
 20. @அமைதிச்சாரல்,

  மைசூர் மிருகக் காட்சி சாலையில் ஒரு வெள்ளை ஆண்மயில் இருக்கிறது.

  இங்கே பெங்களூரில் பனர்கட்டா தேசியப்பூங்காவில் 15 வருடம் முன் வெள்ளை மயில் தோகை விரித்தாடியதை வீடியோ எடுத்திருக்கிறேன். பனர்கட்டா சென்று வருடங்களாகி விட்டன. இப்போது இருக்கிறதா தெரியவில்லை.

  நன்றி சாந்தி.

  ReplyDelete
 21. @பால கணேஷ்,

  நன்றி கணேஷ்:)! தமிழில் பெயர் எழுத Paint மென்பொருள் உபயோகிக்கலாம்.

  ReplyDelete
 22. @Vanila,

  உங்களுக்கும் உங்கள் கேமராவுக்கும் நிச்சயம் பிடிக்கும் வனிலா:)! அவசியம் சென்று வாருங்கள்.

  ReplyDelete
 23. @RAMVI,

  மகிழ்ச்சி ராம்வி. நன்றி.

  ReplyDelete
 24. @விச்சு,

  மகிழ்ச்சியும் நன்றியும்:)!

  ReplyDelete
 25. @கோமதி அரசு,

  நன்றி கோமதிம்மா. மயில்கள் வந்து கொண்டேயிருக்கின்றன:)!

  ReplyDelete
 26. @Nithi Clicks,

  மிக்க நன்றி நித்தி:)!

  ReplyDelete
 27. @Jayadev Das,

  Nikon D5000. பெயரைப் பதிய Picasa, Photoshop, Paint என பல மென்பொருட்கள் உள்ளன.

  ReplyDelete
 28. @ஸ்ரீராம்.
  நீளப் பறவை மயில்கள் போல் பறக்கவில்லை. அதிவேகமாய் நகர மட்டுமே செய்தன. கோழி போல் குறிப்பிட்ட உயரம் வரை பறக்கக் கூடுமென எண்ணுகிறேன்.

  வெள்ளை மயில்.. உண்மைதான். தனியே விடப்பட்டதால் இருக்குமோ?

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 29. @கோவை நேரம்,

  முன்பு நீங்கள் கேட்ட பதிவிலேயே பதிலளித்திருந்தேன்:). Nikon D5000.

  நன்றி.

  ReplyDelete
 30. @கோவை2தில்லி,

  நன்றி ஆதி. சாந்தியும் திருவனந்தபுரத்தில் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.

  ReplyDelete
 31. @ஸாதிகா,

  வாங்க ஸாதிகா. மிக்க நன்றி.

  ReplyDelete
 32. பறவைகள் எல்லாமே அழகு கொஞ்சுகீறது. ஃபாரின் லொகேஷனுக்குப் போய் படம் பிடிச்ச மாதிரியே..!!

  //வெள்ளை மயில் பார்க்க ஏனோ பாவமாய் இருக்கிறது!//
  மயில்னா கண்ணைப் பறிக்கும் நிறங்கள்னு பார்த்துப் பழகிட்டு, நிறங்களே இல்லாத வெண்மை எனும்போது, “பாவம்” என்று தோன்றுகிறது போல!! :-))

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin