Wednesday, December 21, 2011

மூக்கும் முழியுமா.. கிளிகள் இத்தனை விதமா..?- ஜூராங் பறவைப் பூங்கா - சிங்கப்பூர் (பாகம் 7)

# 1. ரோசாப்பூக் கழுத்துக்காரி / Galah


Galah என ஆஸ்திரேலியாவிலும், Rose-breasted cockatoo-ஆகப் பிற பிரதேசங்களிலும் அறியப்படுகிற இவை எல்லா காக்கட்டூ கிளிகளையும் போலப் பல்லாண்டு வாழக் கூடிய ஆரோக்கியமான பறவைகள். நன்கு பராமரிக்கப்பட்டால் 50 வயது வரை வாழுமாம்.


Blue-and-yellow Macaw (Ara ararauna):

# 2. மூக்கும் முழியுமாய்..
Blue-and-Gold Macaw என்றும் அதன் தங்க வண்ணம் கொண்டு அழைக்கப்படுபவை. இதன் அலகு நல்ல கருப்பு நிறத்தில் ‘நறுக் முறுக்’ என கொட்டைகளைக் கடித்துச் சாப்பிடும் பலம் பொருந்தியவை. கருப்பு வரிகள் ஓடும் வெள்ளை முகம் ‘காச் மூச்’ எனக் கத்துகையில் சிலநேரம் பிங்க் ஆகி விடுவதுண்டாம்.

# 3. அன்பிற்கும் உண்டோ..
நீல உடல், வால்; ஆழ்நீலத் தாடை, தகதகக்கும் தங்க அடிப்பாகம், பச்சை நெற்றியென இதன் கவர்ச்சியான தோற்றத்தால் வளர்க்க ஆசைப்படுபவர் அதிகம். ஆனால் கிட்டத்தட்ட 3 அடி உயரமும் அதற்கேற்றபடி சுமார் 4 கிலோ எடையுமாய் வளர்ந்து நிற்குமாகையால் பெரிய கூண்டில் வைத்து பராமரிப்பது சிரமம் என ஒதுங்குபவரும் உண்டாம். 15 மீட்டர் அதாவது 50 அடி அகலத்துக்குக் குறைவான கூண்டில் இவற்றை வளர்க்கக் கூடாதென சட்டமே போடுகிறது World Parrot Trust. இந்தப் பூங்காவில் இடப் பிரச்சனையின்றி சுதந்திரமாகக் காட்டிலிருப்பது போலக் கொஞ்சிக் குலாவி வாழ்கின்றன.# 4. என்ன பார்வை.. / The Red-and-green Macaw (Ara chloropterus)


இதை Scarlet Macaw (Ara macao)-வுடன் குழப்பிக் கொள்பவர் உண்டு. ஸ்கார்லட் மக்காவில் இதன் பச்சைப் பகுதி நல்ல மஞ்சளாக இருக்கும். இன்னொரு வித்தியாசம் இவற்றில் பிரத்தியேகமாகக் கண்ணைச் சுற்றி வரிவரியாகக் காணப்படும் சிகப்பு வரிகள். மிக மெல்லிய சிறகினலால் ஆனவை. படத்தில் அது நன்கு தெரிகிறது கவனிக்க. ஸ்கார்லட் மக்கா கிளிகளுக்கு இந்த வரிகள் இல்லாமல் முழு வெள்ளையாகவே இருக்கும். சட்டென வித்தியாசம் காண உதவும் ஒரு விஷயம் இது. சிகப்புப் பச்சை மக்காவின் அலகு மிக வலிமை வாய்ந்ததென்றும் 2000 psi வரை அழுத்தம் தர வல்லதென்றும் சொல்லுகிறார்கள். எத்தனை கெட்டியான கொட்டைகளையும் உடைத்துச் சாப்பிட்டு விடக் கூடியவை.

# 5. பாராமுகம்
மூன்றே காலடி உயரமுள்ள இப்பறவை (wing span) நான்கடி அகலத்துக்குச் சிறகை விரிக்கின்றன.
“சிறகை விரித்து இதயம் காட்டியும்
பாராமுகமேன் சொல்லடி கிளியே..?”

Red-fronted Macaw (Ara rubrogenys):

# 6. ‘என்ன சொல்லி விட்டேன்..?’
இரண்டடி உயரத்தில் பெரும்பாலான உடற்பகுதி பச்சையாக, சிகப்பு நெற்றி, சிகப்பிலிருந்து ஆரஞ்சாக முடியும் இறக்கைகள், கொஞ்சம் நீலம், கொஞ்சம் மஞ்சள் என பஞ்சவர்ணமெனச் சொல்லலாமோ என நினைக்க வைக்கும் கிளி.

# 7. ‘ஏன் தலை குனிந்தாயோ..?’
இதை வேகமாக அழிந்து வரும் கிளிவகையில் ஒன்றாகச் சொல்லுகிறார்கள். காட்டுப் பகுதிகளில் சுமார் 150 எனும் எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றனவாம். பிடித்து பராமரிக்கப்பட்டு வருபவை ஆரோக்கியமாகவே வாழ்கின்றனவாம்.

Moluccan or Salmon-crested Cockatoos:
# 8. ‘கணீர்’ கண்ணம்மா
அழகு, அதிபுத்திசாலித்தனம், கணீர் சத்தம் கொண்ட இக்கிளிகளை எளிதில் பழக்கப் படுத்தவும் முடிவதால் காட்சிகளுக்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

# 9. “விண்ணைத் தாண்டி வருவாயா?”
இவற்றை வளர்க்க மிகப் பெரிய கூண்டுகள் தேவைப்படும்.


# 10 எலக்டஸ்/Electus:


ஆண் கிளியும் பெண் கிளியும் முற்றிலுமாக வேறு வேறு வண்ணங்களில் தோன்றுவது இந்த வகையில் மட்டுமே.

Joseph Forshaw எழுதிய Parrots of the World-ல் முதன் முறையாக இந்த வகையினைப் பார்த்த ஐரோப்பிய பறவை ஆய்வாளர்கள் இரண்டும் வேறுவேறு வகையைச் சார்ந்தவை என்றே எண்ணியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

# 11. பெண் கிளி/ Electus (female)# 12. ஆண் கிளி / Electus (Male)


# 13. “சுத்தீ சுத்தீ வந்தீக”/ Electus Pair
# 14. Sun Parakeet or Sun Conure (Aratinga solstitialis)
இந்தப் பொற்கிளிகள் நடுத்தர அளவில் அதாவது ஓரடி உயரத்தில் பளிச் மஞ்சளில் ஆரஞ்சு கலந்து காணப்படுகின்றன. ஆலிவ் பச்சை வால்கள் நீல வண்ணத்தில் முடிகின்றன. அதிக அடுக்குகளில் இறக்கைகள் கிடையாது.


#15. சின்னத் தம்பி பெரிய தம்பி / Juvenile Scarlet with Red-and-green Macaw

மஞ்சள் கலந்த ஸ்கார்லட் மக்காவுடன் சிகப்புப் பச்சை மக்கா.# 16. மெட்டி ஒலி
இங்குள்ள எல்லாப் பறவைகளுக்கும் மெட்டி போலக் கால்களில் ரேடியோ காலர்கள் மாட்டி விட்டுள்ளார்கள். இவை பூங்காவினுள் பறவையின் அசைவுகளைக் கண்காணிக்க உதவுகின்றன.

# 17. நட்பாய் பழகவும் நன்கு பேசவும் கூடிய புத்திசாலிகள் Blue-and-yellow Macawபூவோ, விலங்கோ, பறவையோ எதுவானாலும் ஃப்ளிக்கரில் பதியும் பொழுது அந்த வகையின் சரியான பெயர்களைத் தேடி, அவசியப்பட்டால் விவரங்களுடன் பதிவது வழக்கமாகி விட்டது எங்களில் பலருக்கும். சிலவகைகளுக்குப் பெயர் இணையத்தில் தேடியும் கிடைக்காவிட்டால் படத்தைப் பதிந்து என்னபெயர் எனக் கேள்வியையும் முன் வைத்து விட்டால் பிட் க்ரூப்/பூல் நண்பர்கள் ஒருசில நிமிடங்களில் உதவிடுவார்கள். இது ஆரோக்கியமாகத் தொடர்வதில் பல விஷயங்களை அறிந்திட முடிகிறது. இங்கே நான் எடுத்த சில கிளி வகைகளை அடையாளம் காண உதவிய விஜயாலயனுக்கு நன்றி. அதேபோல் முதலில் பயணத்திட்டத்தில் இல்லாதிருந்த ஜூராங் பூங்காவின் சிறப்பை எடுத்துச் சொல்லி போக வைத்த முத்துலெட்சுமிக்கும் நன்றி:)!

# 18. விடை கொடுக்கிறது ஜூராங்


(தொடரும்)
***

பறவை பார்ப்போம் (3)

பி.கு:. பயப்பட வேண்டாம், இன்னும் இரண்டு பாகத்தில் பயணத் தொடரை முடித்து விடுவேன்:)!
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:64 comments:

 1. பயப்படவில்லை. ஆவலுடன் காத்திருக்கிறோம். கண்களுக்கு விருந்தாக புகைப்படங்கள்.ஜூராங் நானும் மிக ரசித்த ஒரு இடம்.

  ReplyDelete
 2. வாவ்..ரொம்ப அழகான படங்கள் சகோதரி..வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 3. உங்கள் படங்கள் பறவைகளை நேரில் பார்ப்பது போன்ற துல்லியமாக இருக்கின்றன

  ReplyDelete
 4. கிளிகளில் எத்தனை வண்ணங்கள்... எங்களுக்காக தேடி தேடி தருகிறிர்கள்.

  ReplyDelete
 5. போஸ்டராக பிரிண்ட் செய்தால் பிச்சிகிட்டு போகும்,அற்புதமான கிளிக்கிங்..நேரில் கண்டாலும் இந்த மாதிரி நச் புகைப்படப் பகிர்வு மனதை விட்டு அகலாது ராமலஷ்மி.

  ReplyDelete
 6. வீட்டுக்கு போனதும் என் பெண்ணிடம் காண்பிக்கிறேன். அவள் அனைத்து போட்டோவும் ஆசையாய் பார்த்தாலும் 12-ஆவது போட்டோவிற்கு மிக மகிழ்வாள். அது எங்க கிளி போல் இருப்பதால்

  ReplyDelete
 7. வண்ண மயம். அற்புதமான கலை உங்கள் கைவசத்தில் கச்சிதம்.

  ReplyDelete
 8. பேசுவது கிளியா??

  காணபது பதிவரசி படமல்லவா??பதிவுகளில் கண்கள் எடுக்கமனம் வரவில்லை..
  கிளிகொஞ்சும் அழகிய படங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. கேமராவை க்ளிக்கி ,கிளியைக் கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க...

  ReplyDelete
 10. பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். கிளிகள் எல்லாம் ஒவ்வொரு விதமாய் அழகாய் காட்சி அளிக்கிறது, ராமலக்ஷ்மியின் கை வண்ணத்தில்.

  ReplyDelete
 11. வாவ். ரொம்ப அழகான கிளிகள். குறிப்பாக Electus ஜோடியும், Sun Parakeet என்னும் பொன்வண்ணக் கிளிகளும்.

  ரொம்ப நாள்கள் ஆளாச்சு உங்க வலைப்பூ வந்து. தொடர்ந்து கலக்குங்க சகோ.

  ReplyDelete
 12. எங்கள் நாட்டை இவ்வளவு அழகாக படம்பிடித்து எங்களையே அதிசயிக்கச் செய்து விட்டீர்கள்...
  அருமை.. மிக்க நன்றி...

  ReplyDelete
 13. எல்லா படங்களுமே கண்களுக்கு நல்லதொரு விருந்தாக இருந்தது.

  மஞ்சள் ரொம்பவே அழகு.

  படங்கள் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் இடும் தலைப்பும் பிரமாதம்.
  அடுத்த பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 14. காத்திருக்கும் ஒற்றைக் கிளி...
  குறும்புப் புன்னகைக் கிளி...
  காதல் கிளிகள்...
  கோபக் கிளியா...உழைக்கும் கிளியா...
  அணைக்கத் தயாராகும் கிளி...
  செதில் குழப்பக் கிளி...(!)
  வெண் கிளிகள்......(அட...)
  ஒற்றைக் கொம்பில் ஒற்றைக் கிளியும், ரெட்டைக் கொம்பில் ரெட்டைக் கிளியும்....

  அபாரம். விவரங்கள் கொடுத்துப் பதிவைத் தரும் உங்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 15. ஒவொண்ணும் பூ மாதிரி அழகா இருக்கு அக்கா :)

  ReplyDelete
 16. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்கள்!

  ReplyDelete
 17. அருமை. அத்தனை படங்களும் அருமை.

  எனது மகளை கிளி என்று தான் அழைப்பேன். மிக்க மகிழ்ச்சி.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. இத்தனை வகைக் கிளிகளா என்று வியக்க வைக்கிறீர்கள் !

  ReplyDelete
 19. அழகா இருப்பவற்றை கிளி கொஞ்சுதுன்னு சொல்லுவாங்க.. இங்கே நிஜமாவே கிளி கொஞ்சுது அழகுப் படங்களில் :-)

  ReplyDelete
 20. கிளி கொஞ்சும் பதிவு! ரசித்தேன்.

  அங்கே கிளிகளை நம் தலை, தோள்களில் அமரவைத்துப் படம் எடுத்துக்கொள்ளலாம். அவர்களே இன்ஸ்டண்ட் போட்டோ எடுத்துத் தருவார்கள்.

  ReplyDelete
 21. படங்களை இவ்வளவு அசலாக பார்ப்பது நெருக்கமான உணர்வை தருகிறது.. புகைப்படங்களின் மீதான ஆசையை இன்னும் அதிகப்படுத்துகிறது..மிகநல்ல படங்கள், பகிர்வு...

  ReplyDelete
 22. கிளி கொஞ்சும் பதிவு தான்:))

  கொள்ளை கொள்ளுது மனசை :)

  ReplyDelete
 23. அழகான படங்கள் வாழ்த்துக்கள் akka

  ReplyDelete
 24. மிக அழகான படங்கள் கொஞ்சுங் கிளிகளின் அணிவகுப்பு பிரமாதம்..மேடம்..வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 25. அருமையான புகைப்படங்கள்,

  I'm Shankar Thiyagarajan from Dharmapuri living in NJ, USA, ஒரு தமிழ் FREE Educational iPhone/iPad APP Develop செய்து கொண்டிருக்கிறேன், அதற்கு உங்களின் சில புகைப்படங்கள்(Particularly Birds/Animals section) பொருத்தமாக இருக்கின்றன. In future planning to develop them into major Indian languages. So, I need non watermarked images, If you are interested in sharing... Please drop a line back to me at vtshankar77@gmail.com. Sharing based on credit/rayolty also fine with me. Please email back.

  Note: Since, Contact me is disabled, reaching out you in comments section.

  Thanks,
  Shankar

  ReplyDelete
 26. கிளி கொஞ்சும் பதிவு.

  ReplyDelete
 27. மிகவும் அருமை! த.ம. 12
  பகிர்விற்கு நன்றி!
  சிந்திக்க :
  "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

  ReplyDelete
 28. அழகிய கிளிகளுடன், உங்களின் அழகான வர்ணனையும் இணைந்து பதிவை சிறப்புற செய்திருக்கு

  ReplyDelete
 29. யப்பா! கிளி(கள்) கொஞ்சுது. சூப்பர்!

  ReplyDelete
 30. பயப்படுவதற்கு என்ன இருக்கிறது. உலகத்தையும் உன்னதப் பறவைகளையும் உங்கள் கலைத்திறனால் பார்க்க வைக்கிறீர்கள்... மிக்க நன்றி.

  ReplyDelete
 31. படங்களும் பகிர்வும்
  அருமை!..கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
  சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...

  ReplyDelete
 32. புதுகைத் தென்றல் said...
  //பயப்படவில்லை. ஆவலுடன் காத்திருக்கிறோம். கண்களுக்கு விருந்தாக புகைப்படங்கள்.ஜூராங் நானும் மிக ரசித்த ஒரு இடம்.//

  நன்றி தென்றல்.

  ReplyDelete
 33. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //வாவ்..ரொம்ப அழகான படங்கள் சகோதரி..வாழ்த்துக்கள் !//

  நன்றி ரிஷான், நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கும்:)!

  ReplyDelete
 34. கோவி.கண்ணன் said...
  //உங்கள் படங்கள் பறவைகளை நேரில் பார்ப்பது போன்ற துல்லியமாக இருக்கின்றன//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 35. தமிழ் உதயம் said...
  //கிளிகளில் எத்தனை வண்ணங்கள்... எங்களுக்காக தேடி தேடி தருகிறிர்கள்.//

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 36. asiya omar said...
  //போஸ்டராக பிரிண்ட் செய்தால் பிச்சிகிட்டு போகும்,அற்புதமான கிளிக்கிங்..நேரில் கண்டாலும் இந்த மாதிரி நச் புகைப்படப் பகிர்வு மனதை விட்டு அகலாது ராமலஷ்மி.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 37. மோகன் குமார் said...
  //போனதும் என் பெண்ணிடம் காண்பிக்கிறேன். அவள் அனைத்து போட்டோவும் ஆசையாய் பார்த்தாலும் 12-ஆவது போட்டோவிற்கு மிக மகிழ்வாள். அது எங்க கிளி போல் இருப்பதால்//

  காண்பித்தீர்களா:)? நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 38. Shakthiprabha said...
  //வண்ண மயம். அற்புதமான கலை உங்கள் கைவசத்தில் கச்சிதம்.//

  நன்றி ஷக்தி.

  ReplyDelete
 39. இராஜராஜேஸ்வரி said...
  //பேசுவது கிளியா??

  காணபது பதிவரசி படமல்லவா??பதிவுகளில் கண்கள் எடுக்கமனம் வரவில்லை..
  கிளிகொஞ்சும் அழகிய படங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 40. goma said...
  //..கேமராவை க்ளிக்கி ,கிளியைக் கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க...//

  நன்றி, அள்ளிக் கொண்டு வந்திருக்கிறேன்:)!

  ReplyDelete
 41. கோமதி அரசு said...
  //பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். கிளிகள் எல்லாம் ஒவ்வொரு விதமாய் அழகாய் காட்சி அளிக்கிறது, ராமலக்ஷ்மியின் கை வண்ணத்தில்.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 42. அனுஜன்யா said...
  //வாவ். ரொம்ப அழகான கிளிகள். குறிப்பாக Electus ஜோடியும், Sun Parakeet என்னும் பொன்வண்ணக் கிளிகளும்.

  ரொம்ப நாள்கள் ஆளாச்சு உங்க வலைப்பூ வந்து. தொடர்ந்து கலக்குங்க சகோ.//

  நன்றி அனுஜன்யா:)!

  ReplyDelete
 43. தமிழ் விரும்பி said...
  //எங்கள் நாட்டை இவ்வளவு அழகாக படம்பிடித்து எங்களையே அதிசயிக்கச் செய்து விட்டீர்கள்...
  அருமை.. மிக்க நன்றி...//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 44. கோவை2தில்லி said...
  //எல்லா படங்களுமே கண்களுக்கு நல்லதொரு விருந்தாக இருந்தது.

  மஞ்சள் ரொம்பவே அழகு.

  படங்கள் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் இடும் தலைப்பும் பிரமாதம்.
  அடுத்த பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.//

  நன்றி ஆதி.

  ReplyDelete
 45. mber 21, 2011 4:32 PM ஸ்ரீராம். ஸ்ரீராம் said...
  //காத்திருக்கும் ஒற்றைக் கிளி...
  குறும்புப் புன்னகைக் கிளி...
  காதல் கிளிகள்...
  கோபக் கிளியா...உழைக்கும் கிளியா...
  அணைக்கத் தயாராகும் கிளி...
  செதில் குழப்பக் கிளி...(!)
  வெண் கிளிகள்......(அட...)
  ஒற்றைக் கொம்பில் ஒற்றைக் கிளியும், ரெட்டைக் கொம்பில் ரெட்டைக் கிளியும்....

  அபாரம். விவரங்கள் கொடுத்துப் பதிவைத் தரும் உங்களுக்கு பாராட்டுகள்.//

  ரசனையுடனான வர்ணனைகள் அருமை. நன்றி ஸ்ரீராம்!

  ReplyDelete
 46. சுசி said...
  //ஒவொண்ணும் பூ மாதிரி அழகா இருக்கு அக்கா :)//

  ஆம் சுசி:)! நன்றி.

  ReplyDelete
 47. அமைதி அப்பா said...
  //மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்கள்!//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 48. Rathnavel said...
  //அருமை. அத்தனை படங்களும் அருமை.

  எனது மகளை கிளி என்று தான் அழைப்பேன். மிக்க மகிழ்ச்சி.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.//

  மகிழ்சியும் நன்றியும் சார்.

  ReplyDelete
 49. ஹேமா said...
  //இத்தனை வகைக் கிளிகளா என்று வியக்க வைக்கிறீர்கள் !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 50. அமைதிச்சாரல் said...
  //அழகா இருப்பவற்றை கிளி கொஞ்சுதுன்னு சொல்லுவாங்க.. இங்கே நிஜமாவே கிளி கொஞ்சுது அழகுப் படங்களில் :-)//

  நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 51. துளசி கோபால் said...
  //கிளி கொஞ்சும் பதிவு! ரசித்தேன்.

  அங்கே கிளிகளை நம் தலை, தோள்களில் அமரவைத்துப் படம் எடுத்துக்கொள்ளலாம். அவர்களே இன்ஸ்டண்ட் போட்டோ எடுத்துத் தருவார்கள்.//

  ஆம் கவனித்தேன்:)! அப்படியான படமொன்றை சென்ற பாகத்தில் பகிர்ந்துள்ளேன். நன்றி மேடம்.

  ReplyDelete
 52. க.பாலாசி said...
  //படங்களை இவ்வளவு அசலாக பார்ப்பது நெருக்கமான உணர்வை தருகிறது.. புகைப்படங்களின் மீதான ஆசையை இன்னும் அதிகப்படுத்துகிறது..மிகநல்ல படங்கள், பகிர்வு...//

  மகிழ்ச்சியும் நன்றியும் பாலாசி.

  ReplyDelete
 53. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //கிளி கொஞ்சும் பதிவு தான்:))

  கொள்ளை கொள்ளுது மனசை :)//

  நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 54. ஆனந்த் said...
  //அழகான படங்கள் வாழ்த்துக்கள் akka//

  நலமா ஆனந்த்:)? நன்றி.

  ReplyDelete
 55. அன்புடன் மலிக்கா said...
  //மிக அழகான படங்கள் கொஞ்சுங் கிளிகளின் அணிவகுப்பு பிரமாதம்..மேடம்..வாழ்த்துக்கள் !//

  வாங்க மலிக்கா. மிக்க நன்றி.

  ReplyDelete
 56. சங்கர் தியாகராஜன் said...
  //அருமையான புகைப்படங்கள், //

  மகிழ்ச்சி. மடலில் தொடர்பு கொள்ளுகிறேன்.

  ReplyDelete
 57. ரிஷபன் said...
  //கிளி கொஞ்சும் பதிவு.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 58. திண்டுக்கல் தனபாலன் said...
  //மிகவும் அருமை!
  பகிர்விற்கு நன்றி!//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 59. ராஜி said...
  //அழகிய கிளிகளுடன், உங்களின் அழகான வர்ணனையும் இணைந்து பதிவை சிறப்புற செய்திருக்கு//

  நன்றி ராஜி.

  ReplyDelete
 60. கவிநயா said...
  //யப்பா! கிளி(கள்) கொஞ்சுது. சூப்பர்!//

  நன்றி கவிநயா:)!

  ReplyDelete
 61. குமரி எஸ். நீலகண்டன் said...
  //பயப்படுவதற்கு என்ன இருக்கிறது. உலகத்தையும் உன்னதப் பறவைகளையும் உங்கள் கலைத்திறனால் பார்க்க வைக்கிறீர்கள்... மிக்க நன்றி.//

  நன்றி நீலகண்டன்:)!

  ReplyDelete
 62. அம்பாளடியாள் said...
  //படங்களும் பகிர்வும்
  அருமை!..கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
  சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...//

  நன்றி தங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 63. சே.குமார் said...
  //அழகான படங்கள்...//

  நன்றி குமார்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin