ஞாயிறு, 16 ஜூலை, 2023

எல்லாம் நலம் - ஃப்ளிக்கர் 60 இலட்சம்

 #1

"மழைத்துளிகள் மனதுக்கு அமைதியையும் 
சாந்தத்தையும் கொண்டு வருகின்றன."


#2
"சரியான நேரம் வருகையில் 
நல்லன நடக்கும்."


#3
"துணிச்சலான வாழ்க்கை! 
வசீகரமான வாழ்வு!" 
_ Lailah Gifty Akita

#4
'ஆன்மா எப்போதும் அறியும் 
தன்னை எப்படிக் குணப்படுத்திக் கொள்வதென்பதை. 
சவால் என்னவெனில் 
மனதை அமைதிப்படுத்துவது.' 
_ Caroline Myss


#5
"சுயத்தை விட்டு விடாதீர்கள். 
நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 
உங்கள் வழியில் செல்லுங்கள். 
அனைத்தும் நலமாகும்."

#6
"ஒவ்வொரு வாழ்க்கைக்குள்ளும் 
கொஞ்சம் மழை பொழிய வேண்டும்."
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 168
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
**


*ஃப்ளிக்கரில் கணக்குத் துவங்கி ஆகின்றன 15 ஆண்டுகள்!
*நெடிய பயணம்.. 61 இலட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்து..!  
*தொடங்கிய பொழுதில் இருந்த ஆர்வம் வற்றாது தொடர்வதில் மகிழ்ச்சி. 
*படங்களைத் தொடரும் உங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
***

6 கருத்துகள்:

  1. அலைபேசி கேமிராக்கள் கோலோச்சும் காலத்திலும் பெரிய கேமிராவில் படங்கள் எடுத்துக் பகிர்வது சிறப்பு - கைவலியையும் பொருட்படுத்தாமல்.

    வழக்கம்போல வரிகளும் படங்களும் சிறப்பு.  சிறு தூறல் அமைதியைத்தரும்.  பெருமழை பயத்தைத் தரும்! :))

    பதிலளிநீக்கு
  2. எனது தளத்தில் Comment செய்வதில் பிரச்சனை இருப்பதாக அவ்வப்போது நண்பர்கள் தெரிவிப்பதுண்டு. என்ன காரணம் என என்னாலும் கண்டு பிடிக்க இயலவில்லை.

    இந்தப் பதிவிற்கும் அவ்வாறாக comment செய்ய இயலாமல் தனி மடலில் நண்பர் கிரி அனுப்பிய comment_யை எனது சேமிப்புக்காக இங்கே பதிந்துள்ளேன்:

    //

    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.


    படத்தைச் சேமித்து வைத்து அதை பின்னர் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம் :-) . அப்போது எப்படி எடுத்துள்ளோம், தற்போது எவ்வளவு முன்னேற்றம் ஆகியுள்ளோம் என்று காணலாம்.

    அதோடு ரசனைகள் எது மாறியுள்ளன, முன்னர் எதை அதிகம் எடுத்துள்ளோம், தற்போது எவையாக மாறியுள்ளது என்று உணர முடியும்.


    15 ஆண்டுகள் ஒரு விருப்பத்தைத் தொடர்கிறோம் என்பதே சாதனை தான். Passion என்ற ஒன்று இருந்தாலே எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர முடியும்.

    காரணம், ஆசைக்குச் முயற்சிப்பவர்களால் சில மாதங்களே தொடர முடியும், Passion இருந்தாலே தொடர்ந்து கொண்டே இருக்க முடியும்.

    சில நேரங்களில் இதற்காக செலவழித்த நேரத்தைக் கணக்கெடுத்தால் கிறுகிறுத்து விடும் ஆனால், Passion எல்லாவற்றையும் தாண்டிச் செயல்படுத்த வைக்கும்.

    வாழ்க்கையில் ஏதாவது ஒன்றில் பிடிப்பாக இருந்தால், அது நம் வாழ்க்கையை சலிப்பாக்காமல் உற்சாகமாக வைத்து இருக்க உதவும்.

    மேலும் தொடர என் அன்பான வாழ்த்துகள்.
    //

    கிரி
    https://www.giriblog.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மை. எத்தனை இடர் வரினும் interest and passion இருப்பதனாலேயே தொடர முடிகிறது. ரசனை மாற்றம், நம் படங்களை நாமே அலசிப் பார்ப்பது, உபயோகிக்கும் கருவிகள், தொடர்ந்த கற்றல் என எல்லாமே மனதை உற்சாகப்படுத்தும் விஷயங்கள்.

      தங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கிரி :).

      நீக்கு
  3. 15 ஆண்டுகளுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
    61 இலட்சம் பார்வையாளர்கள் ! இன்னும் மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்.
    பூக்கள் எல்லாம் அழகு. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin