சனி, 20 ஏப்ரல், 2019

சித்ரா பெளர்ணமி - Pink Full Moon 2019

சித்திரை நிலவு நமக்கு சித்ரா பெளர்ணமி. உலகின் சில பாகங்களில் ஏப்ரல் நிலவு ‘இளஞ்சிவப்பு நிலவு’ எனப் பார்க்கப் படுகிறது. அதற்காக நிலவு இளஞ்சிவப்பாகத் தெரியுமென நினைத்து விட வேண்டாம். அப்படி நேற்றிரவு தேடியிருந்தால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும்.


Exif: 1/160s, f/9, ISO 400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
19-04-2019 22:23
#HandHeld

ஓல்ட் ஃபார்மர்ஸ் அல்மனாக் (old farmer's almanac) என்பது ஓரளவுக்கு நம் ஊர் பஞ்சாங்கம் போல.
வானிலை முன் கணிப்பு; தேதி நேரங்களோடு நிலவின் அம்சம்; சூர்யோதயம், அஸ்தமனம் ஆகியன மட்டுமின்றி பருவங்களுக்கேற்ப பயிர் செய்வதற்கான ஆலோசனைகள், நாட்டுப்புறவியல் அடங்கிய நம்பகமான குறிப்பேடு. இந்தக் குறிப்பேட்டின் படி அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வசந்தகாலத் தொடக்கத்தில் பூத்துக் குலுங்கும் ஃப்ளாக்ஸ் (phlox) எனும் இளஞ்சிவப்பு வண்ணப் பூக்களைக் குறிக்கும் விதமாக ஏப்ரல் முழுநிலவுக்கு இந்தப் பெயர் வந்திருக்கிறது. 

மேலும் sprouting grass moon, the egg moon and the fish moon (முளைக்கும் புல், முட்டை, மீன்) போன்ற பட்டப் பெயர்களும் ஏப்ரல் நிலவுக்கு உண்டு. அவற்றுக்கான காரணக் கதைகளைப் பற்றிய விவரங்கள் இணையத்தில் காணக் கிடைக்கவில்லை :).



Exif: 1/400s, f/11, ISO 400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
19-04-2019 22:24
#HandHeld
இந்த முறை படங்களை ட்ரைபாட் (முக்காலி) உதவியின்றி கைகளில் கேமராவைப் பிடித்தபடியே எடுத்திருக்கிறேன்.
***
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

12 கருத்துகள்:

  1. படங்கள் சிறப்பு. நிலா, சூரியன், அருவி, இயற்கை ஆகியவற்றை எத்தனம் முறை படம் எடுத்தாலும் அலுப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  2. மிக அழகாய் வந்து இருக்கிறது முழுநிலவு.

    பதிலளிநீக்கு
  3. அழகாகவும் தெளிவாகவும் இருக்கிறது முழுநில்வு!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin