செவ்வாய், 9 ஏப்ரல், 2019

தேடு, உனைக் கண்டடைவாய்.. - பேகல், கேரளம் (3)

#1
கேரளத்தை, குறிப்பாக உப்பங்கழிப் பகுதிகளை இறைவனின் சொந்த நாடு எனக் கொண்டாடுகிறோம்.  பேகலில் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்த தாஜ் விவான்டா, இயற்கையின் எழிலை ரசித்தபடி அமைதியாக விடுமுறையைக் கழிக்கச் சிறந்த இடம்.  “தேடு, உனைக் கண்டடைவாய்” எனும் வாசகம் இங்கே இருக்கும் நாட்களுக்குப் பொருந்திப் போகும் என்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான்.

#2தங்கியிருக்கும் குடில்களின் பின் பக்கத்தில் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நீரை, பாறைகளில் வந்தமரும் பறவைகளை, சுற்றி அசைந்தாடும் தென்னைகளை மெய்மறந்து இரசித்துக் கிடக்கலாம் அறையின் முதல் தளத்து பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் ஆடியசைந்தபடி.

#3


விடுதியின் முகப்பு, வரவேற்புக் கூடம், குடில்கள், மற்றும் அதன் நீண்ட தாழ்வாரம்.. காலையிலும் இரவிலும்..

#4


#5


#6

 #7

#8

#9

#10

#11

#12

#13

அமைதியான சூழலில்..
நீச்சல் குளம்
#14

#15
ப்பங்கழியை மட்டுமின்றி மற்றொரு பக்க வாசல் வழியாகக் கடற்கரையையும் எளிதாகச் சென்றடையலாம். கடலில் கால் நனைக்கலாம்.  அலைகளின் விளையாட்டை ரசிக்கலாம்மாலையில் சூரிய அஸ்தமனம் கண்டு மகிழலாம்.

#16


#17
பூவோடு பேசாத காற்றென்ன காற்று.. 
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது..
வரிகள்: கவிஞர் வைரமுத்து


 ‘கடல் கை மூடி மறைவதில்லை..’
#18“அலை கடலைக் கடந்த பின்னே 
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி..”
-கவிஞர். நா. முத்துக்குமார்
#19

#20

#21

#22
தேடு, உனைக் கண்டடைவாய்..

விவான்டா விடுதி எங்கும் ஆங்காங்கே அமைந்திருந்த அழகான சிற்பங்கள் மனதை வெகுவாகுக் கவர்ந்தன. அவற்றின் படங்கள் அடுத்த பாகத்தில்..

**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1.  பேகல் கோட்டை - கேரளம் (1)
2. உப்பங்கழி.. இயற்கையிடம் சரணாகதி.. -  பேகல், கேரளம் (2)

***

20 கருத்துகள்:

 1. இயற்கை அன்னையின் கோடி அழகு தங்கள் வழி எங்களுக்கும் கிடைத்தது ....

  அனைத்தும் மிக அழகு

  பதிலளிநீக்கு
 2. இயற்கை எழில் கொஞ்சும் இடம்.
  உங்கள் கை வண்ணத்தில் படங்கள் அனைத்தும் அழகு.
  பகல் இரவு படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 3. அல்லி மலரும், தலை சாய்ந்த மொட்டும் அழகு.
  பார்த்து ரசிக்க வேண்டிய இடம் தான்.

  பதிலளிநீக்கு
 4. இயற்கை அழகு..... அதைக் கவர்ந்து வந்து எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. படங்கள் எல்லாம் மிகவும் அழகு! இயற்கையின் ஆழ்ந்த அமைதி உங்கள் புகைப்படங்களில் கவிதையாய் தெரிகிறது. ஆலப்புழை, குமராக்கம் விடுதிகளில் தங்கியிருக்கிறேன். இந்த பேகல் எந்த மாவட்டத்தில் இருக்கிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காசரகோடு மாவட்டத்தில், மங்களூரிலிருந்து 65கிமீ தூரத்தில் உள்ளது. நன்றி மனோம்மா.

   நீக்கு
  2. தகவலுக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

   நீக்கு
 6. படங்களை ரசனையாக எடுத்தவிதம் போற்றுதற்குரியது.

  பதிலளிநீக்கு
 7. படங்கள் அட்டகாசம்!!!...

  இனி தொடர்கிறோம் உங்கல் இரு வலைத்தளங்களையும்.

  தின்னவேலியா!! ஆஹா நானும் அந்தப் பக்கம்தான்!!

  பேகல் பத்தி தெரியும் ஆனால் சென்றதில்லை.

  செம ரசனை உங்களுக்கு...ஒவ்வொரு படமும் அத்தனை அழகாக இருக்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
 8. தண்ணீரில் லைட்டிங்க் செமையா இருக்கு!!! அந்தப் பறவை கம்பில் உட்கார்ந்திருப்பது அனைத்தும். உங்களிடம் புகைப்படக் கலை நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

  இப்போது நானும் பங்களூரில்தான் இருக்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெங்களூரில் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள்?

   நீக்கு
 9. ஆஹா! சொல்ல வார்த்தைகள் இல்லை. நேரில் பார்க்கும் பொழுது இத்தனை அழகாக இருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால் காமிராவின் கண், நம் கண்ணுக்கு தென்படாத அழகை காட்டும். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin