ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ஒரு வார்த்தை.. நம் மொழியில்.. - ‘சொல்வனம்’ இருநூறாவது இதழில்..

ஒரு வார்த்தை.. நம் மொழியில்..


ங்களுக்கும் எங்களுக்கும்
தொடர்ந்து நடக்கிறது 
பேச்சு வார்த்தை
எங்கள் பக்கத்திலிருந்து
கோரிக்கைகளாகவும்
உங்கள் பக்கத்திலிருந்து
அறிக்கைகளாகவும்.
நாம் ஒரே மொழியைதாம்
உபயோகிப்பதாக நினைக்கிறோம்.
ஆனால் உங்கள் வாக்கியங்கள்
ஒன்றன் மேல் ஒன்றாக மடிந்து
காரண காரியங்களாகத் திரிந்து
எங்கள் புரிதலுக்கு அப்பாலானதாகவே
என்றைக்கும் இருக்கிறது.
இன்றைய கணமும்
உண்ணும் உணவும்
கேள்விக்குறிகளாக நிற்கையில்
எங்கோ நிகழ்ந்த நிலநடுக்கமும்
பேரழிவைக் கொடுத்த நிலச்சரிவும்
எம் சிந்தைக்கு எட்டாமல்
கடந்து செல்கிறோம்
இரக்கமற்றவர்களாய்.

உங்களுக்கு உதிக்கும் பகலவனே
எங்களுக்கும் உதிக்கிறான்
ஆனால் ஒளிக்காக 
ஏங்கி நிற்கிறோம்.
கரும்பு வளர்க்கவும்
கம்பு, சோளம் விதைக்கவும்
நெற்கதிர்களை கொத்த வரும்
மைனா, கிளிகளை விரட்டவும் 
தெரிந்த எங்களுக்கு
நாகப் பாம்பினைப் போல
வளைந்து நெளிந்து 
எங்களது விளைநிலங்களை
கபளீகரம் செய்யவிருக்கும்
எட்டு வழிச் சாலையால்
விளையவிருக்கும் நலன்கள்
புரியவில்லை.
இந்த அறிவிலிகள்
தேடிக் கொண்டேயிருக்கிறோம்
நம் மொழியில் 
ஒரு வார்த்தையை..
கண்ணீரைக் கண்ணீர் என 
உங்களுக்குப் புரிய வைப்பதற்காக.

*
படம் உதவி: நித்தி ஆனந்த்

(ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இந்தப் படத்தை எனக்கு அனுப்பிய ஒளிப்படக் கலைஞர் நித்தி ஆனந்த், இதற்கு ஒரு கவிதையோ கதையோ எழுத வேண்டுமெனக் கேட்டுக் கொண்டிருந்தார். நன்றி நித்தி ஆனந்த்! நீண்ட இடைவெளி ஆயினும் நிறைவேற்றி விட்டுள்ளேன். விரைவில் ஒரு கதையும்..)

**

இக்கவிதை, எழுத்தாளர் அம்பை அவர்களின் சிறப்பிதழாக வெளியாகியுள்ள சொல்வனம் 200_ஆவது இதழில்..,

 நன்றி சொல்வனம்!
இரு பெரும் பிரிவுகளாக அமைந்திருக்கும் இந்த இதழில், எழுத்தாளர் அம்பையின் 40 ஆண்டுக்கும் மேலான இயக்கம் பற்றியும், அவரது படைப்புலகு பற்றியும் பலர் எழுதிக்கொடுத்த கட்டுரைகளின் தொகுப்பு ஒரு பிரிவாகவும், இன்னொன்று எழுத்தாளர் அம்பை தனது நீண்ட கால இயக்கத்திலிருந்து தேர்ந்தெடுத்துக் கொடுத்த சில கட்டுரைகளின் தொகுப்பாகவும் வெளியாகியுள்ளது. அவற்றை வாசிக்க இங்கே செல்லலாம்:


 ***

16 கருத்துகள்:

  1. மிக அருமை. யார் காதில் விழுமோ. மழையாவது பெய்யலாம் அதுவும் இல்லை.
    படமும் பாடலும் மனதைப் பிசைகின்றன.

    பதிலளிநீக்கு
  2. நீண்ட கவிதை வரிகள் நீளும் ஏமாற்றத்தின் சோகத்தைச்ச்சொல்கின்றன. அருமை.

    பதிலளிநீக்கு
  3. // விரைவில் ஒரு கதையும்.... //

    எங்களுக்கும் டியூ இருக்கிறது!!! சென்ற வருடமே தவற விட்டதும் கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்கவில்லை. இந்தப் படத்துக்கான கதையை உங்களுக்குத் தரவே நினைத்துள்ளேன்.

      நீக்கு
  4. நல்ல கவிதை. மனதைத் தொட்டது.....

    கதை - காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. ஆனால் யதார்த்தம் புரிவதில்லை பலருக்கும் செவிடன் காது சங்கோ

    பதிலளிநீக்கு
  6. கவிதை மிக அருமையாக சொன்னீர்கள்.
    நெகிழ்வான கவிதை மிக அருமை.
    வாழ்த்துக்கள்.
    கவிதையை தொடர்ந்து கதையும் வரட்டும், காத்து இருக்கிறேன் படிக்க.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. விரைவில் எழுத முயன்றிடுகிறேன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. விவசாயிகளின் பிரச்சனைகளை உடன் இருந்து பார்த்தவர் நீங்கள். நன்றி குமார்.

      நீக்கு
  8. அருமையான வரிகள்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin