Saturday, December 10, 2011

சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து..

# 1

நேற்று மாலை கார்த்திகை நிறைநிலா. இன்று மாலையிலோ கிரகணப் பிறைநிலா. ஆறு மணி பதினான்கு நிமிடத்தில் ஆரம்பித்து, மெல்ல மெல்லக் கீழிருந்து மேலாக இடமிருந்து வலமாகத் தேய்ந்து எட்டு மணி இரண்டு நிமிடத்தில் முழுமையாக மறைந்து மறுபடியும் கீழிருந்து மேலாகவே வலமிருந்து இடமாக வளர்ந்த இச்சந்திரக் கிரகணமே இதுகாலமும் வந்தவற்றில் நீண்ட ஒன்றாகுமாம் அடுத்து 2018-ல் வரவிருக்கும் கிரகணம் வரை.

# 2 ஃப்ளிக்கர் தளத்தில் நேற்றுப் பதிந்த கார்த்திகை முழுநிலவு


இன்று:

# 3 கண் முன்னே தேயும் அற்புதம்

முன் நேரத்தில் தேயும் நிலவை யூரோப், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய நாடுகள் பார்க்க முடிந்திருக்காதாம் சந்திரன் உதிக்கும் நேரம் வந்திருக்காததால். இந்தியாவின் எல்லாப் பாகங்களிலிருந்தும் நன்கு பார்க்கமுடியுமென்று சொல்லப்பட்டாலும் மேகங்கள் மனது வைக்காவிட்டால் முடியாதே:)! ஆம், எட்டாவது தளத்துக் குளிரில், மூடிய வானைக் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டிருந்த என் மேல் இரக்கம் கொண்டு மேகங்கள் போனால் போகுதென அவ்வப்போது கொஞ்சமே கொஞ்சம் நகர்ந்து நிலவைக் காண்பித்துக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன.

# 4 முகில்களின் கருணையில்..
இதற்கடுத்து பதிவின் முதல் படத்தையும் முடித்து 15 நிமிடங்களாகியும் அடர்த்தியாக நிலவை மூடிக் கொண்டு ‘அவ்வளவுதான்’கட்டு மூட்டையை’ எனச் சொல்லி விட்டது மேகக்கூட்டம்:(! இதனால் வளரும் நிலவைப் படிப்படியாக பிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

மறுபடி முழு நிலவாகும் நேரத்துக்குச் சிலமணித்துளிகள் முன்னே சரியாக மேலே சென்ற போது...

# 5

# 6

# 7
              பூமியின் நிழல் விட்டு விலக மீண்டும் வட்ட நிலாவாக..
இப்படியொரு அதி பிரகாசமான நிலவைக் கண்டதேயில்லை என சொல்லும்படியாக இருந்தது கிரகணம் முடிந்த உடன் ஒளிர்ந்த நிலவு:


அதுவரை சுற்றிச் சுற்றி வந்த மேகக் கூட்டம் இந்தப் பிரகாசத்தின் அருகில் நிற்க முடியாமலோ என்னவோ ஒருவித அதிர்ச்சி கலந்த வேகத்துடன் விலக ஆரம்பித்தன. அப்போது அவை வானில் வரிசை கட்டி நகன்ற கோணத்தைக் காணக் கண்கோடி வேண்டும். 18-55mm லென்ஸை உடன் எடுத்துச் சென்றிராததால் படமாக்க இயலவில்லை.

நேர்த்தியான படங்கள் என சொல்ல மாட்டேன். அப்பெச்சர் மோடிலிருந்து இப்போது மேனுவல் மோடிலுமாக முயன்ற பரிசோதனை முயற்சிகளில் சிலபடங்கள் திருப்திகரமாக இல்லைதான். இருந்தாலும் ஒரு அற்புத நிகழ்வைப் படமாக்கிய திருப்தி. சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வருகிற இப்பொழுதில், [தலைப்புக்கான பதில்:)] பூமியின் நிழலால் நிலவு இப்படித் தேய்ந்து மறைந்து மீண்டும் முழுமையாகத் தெரிகிற சந்திர கிரகணத்தை மீண்டும் காண நாம் 27/28 ஜூலை 2018 வரைக் காத்திருக்க வேண்டுமாம்.
***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1. என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON
2. சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..

51 comments:

 1. நேற்று நான் கிரகணத்தை நேரில் பார்த்தபோது கிடைத்த அதே மகிழ்ச்சி முழு நிலவை உங்கள் படத்தில் பார்த்தபோதும் கிடைத்தது! உங்களின் கேமராவுக்கு ஒரு ராயல் சல்யூட்!

  ReplyDelete
 2. நேரில் நேற்று முழுமையாக ரசித்து மகிழ்ந்தோம்.உங்கள் புகைப்படப்பகிர்வு அற்புதம்.

  ReplyDelete
 3. எட்டாவது மாடியில் பனியில் மூழ்கி முத்தெடுத்தீர்கள்... பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. நேற்று முழுமையாய் கிரகணம் பார்க்க முடிந்தது. பிற ஊர்களில் இருந்த மேகத் தடங்கல்கள் ஏதுமின்றி.
  இயற்கையின் ரகசியம்.. அதிசயம்.

  ReplyDelete
 5. உள்ளதை உள்ளப்படி தந்த உங்களுக்கு உங்களின் கேமராவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. கிரகணத்தைப் பார்க்காத குறையை ,படங்கள் போட்டு ஆற்றிவிட்டீர்கள்.
  நிலா வெறியே பிடித்துவிடும் போல இருக்கு:)
  அவ்வளவு அருமை படங்கள்.கணித்த கண்களுக்கும் இயக்கிய கைகளுக்கும் ஒத்துழைத்த காமிராவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. நேரில் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் கண்கூடாகக் கண்டது போல் இருந்தது. நன்றி ராமலகஷ்மி.

  ReplyDelete
 8. நேரிலும் பார்த்தோம். அதையே படத்தினில் பதிவாக்கி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள, பதிவாக்கித்தந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 9. அட்டகாசம். வாழ்த்துகள்

  ReplyDelete
 10. ஆகா ..நாங்களும் உங்க கூடவே இருந்துப் பார்த்தது போல ஆச்சு..:)
  நல்ல அனுபவம்..

  ReplyDelete
 11. அற்புதமான படங்கள். மிகவும் பிரமாதம். கிரகண நினைவு வந்தது, இரவு ஒன்பது முப்பதுக்குத்தான். செல் காமிராவுடன் மாடிக்கு விரைந்து பார்த்தபோது முழு கிரகணத்தை கோட்டை விட்டு விட்டோமே என்று நினைத்தேன். ஆனாலும் நிச்சயம் நீங்க படம் பிடித்திருப்பீர்கள் என்ற சமாதானத்துடன் திரும்பி வந்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை.

  ReplyDelete
 12. நானும் நேற்று நேரில் பார்த்தேன் அருமையாக இருந்தது...!!!

  ReplyDelete
 13. கிரகணத்தை பார்க்கத் தவற விட்டவர்களுக்கு, அந்தத் தருணத்தை காண ஒர் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது இந்தப் பதிவு.

  பாராட்டுக்களுடன் நன்றியும் சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 14. அருமையான படங்கள்
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  வாழ்த்துக்கள்
  த.ம 4

  ReplyDelete
 15. அபூர்வமான சந்திர கிரகணத்தை அழகாக பதிவாக்கி தந்தமைக்கு நன்றிங்க.

  படங்கள் அழகா வந்திருக்கு.

  ReplyDelete
 16. லைட் ஆரஞ்சு கலர்ல இருந்தது, விட்டுட்டேனே ன்னு பெங்களூர்வாசி ஒத்தர் பொலம்பிகிட்டு இருக்கார். நீங்களும் அப்படியா, இல்லை கருப்பு வெள்ளை ஆக்கிட்டீங்களா?
  :-))

  ReplyDelete
 17. முத்தக்கா...உண்மையில் உங்கள் பதிவையும்,படத்தையும் பார்த்தே சந்திரகிரஹணம் அறிந்துகொண்டேன்.படத்தை எப்பவும்போல பாராட்டிக்கொண்டே நன்றியும் சொல்கிறேன் !

  ReplyDelete
 18. "நிலவுப் (படங்கள்) வந்து வானத்தையே திருடிக் கொண்டது....." எங்கள் உள்ளங்களையும்! நல்ல பகிர்வு. . படங்கள் சுமார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். தரமாக இருக்கின்றன.

  ReplyDelete
 19. ராமலக்ஷ்மி இந்த மாதிரி நேரங்களில் உங்களை மொட்டை மாடியில் தான் வந்து பார்க்க வேண்டும் போல இருக்கு :-) படங்கள் ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 20. very nice photos thanks

  www.astrologicalscience.blogspot.com

  ReplyDelete
 21. நல்ல படங்கள். நன்றி.

  ReplyDelete
 22. நேர்ல பார்த்து ரசிச்சதை விட உங்க படங்கள்ல கிரகணத்தை ரசிச்சதுதான் கூடுதல்.. ரொம்ப அழகா வந்துருக்கு படங்கள்.
  உங்க கேமராவுக்கு நன்றி :-)

  ReplyDelete
 23. கணேஷ் said...
  //நேற்று நான் கிரகணத்தை நேரில் பார்த்தபோது கிடைத்த அதே மகிழ்ச்சி முழு நிலவை உங்கள் படத்தில் பார்த்தபோதும் கிடைத்தது! உங்களின் கேமராவுக்கு ஒரு ராயல் சல்யூட்!//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 24. asiya omar said...
  //நேரில் நேற்று முழுமையாக ரசித்து மகிழ்ந்தோம்.உங்கள் புகைப்படப்பகிர்வு அற்புதம்.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 25. குமரி எஸ். நீலகண்டன் said...
  /எட்டாவது மாடியில் பனியில் மூழ்கி முத்தெடுத்தீர்கள்... பாராட்டுக்கள்./

  நன்றி நீலகண்டன்:)! மேகமூட்டமாக இல்லாதிருந்தால் படிப்படியாக எடுத்திருந்திருக்கலாம்.

  ReplyDelete
 26. ரிஷபன் said...
  /நேற்று முழுமையாய் கிரகணம் பார்க்க முடிந்தது. பிற ஊர்களில் இருந்த மேகத் தடங்கல்கள் ஏதுமின்றி.
  இயற்கையின் ரகசியம்.. அதிசயம்./

  மிக்க நன்றி. தடங்கலின்றி பார்க்க முடிந்தது அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 27. தமிழ் உதயம் said...
  /உள்ளதை உள்ளப்படி தந்த உங்களுக்கு உங்களின் கேமராவுக்கு வாழ்த்துகள்./

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 28. வல்லிசிம்ஹன் said...
  //கிரகணத்தைப் பார்க்காத குறையை ,படங்கள் போட்டு ஆற்றிவிட்டீர்கள்.
  நிலா வெறியே பிடித்துவிடும் போல இருக்கு:)
  அவ்வளவு அருமை படங்கள்.கணித்த கண்களுக்கும் இயக்கிய கைகளுக்கும் ஒத்துழைத்த காமிராவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

  நன்றி வல்லிம்மா. ஒவ்வொரு மாதமும் ரசித்துப் படம் எடுக்கும் உங்கள் ஆர்வத்தில் சிறுபங்கே எனக்கு:)!

  ReplyDelete
 29. பாச மலர் / Paasa Malar said...
  //நேரில் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் கண்கூடாகக் கண்டது போல் இருந்தது. நன்றி ராமலகஷ்மி.//

  நன்றி மலர்.

  ReplyDelete
 30. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //நேரிலும் பார்த்தோம். அதையே படத்தினில் பதிவாக்கி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள, பதிவாக்கித்தந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். vgk//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 31. மோகன் குமார் said...
  //அட்டகாசம். வாழ்த்துகள்//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 32. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //ஆகா ..நாங்களும் உங்க கூடவே இருந்துப் பார்த்தது போல ஆச்சு..:)
  நல்ல அனுபவம்..//

  நன்றி.

  ReplyDelete
 33. kg gouthaman said...
  //அற்புதமான படங்கள். மிகவும் பிரமாதம். கிரகண நினைவு வந்தது, இரவு ஒன்பது முப்பதுக்குத்தான். செல் காமிராவுடன் மாடிக்கு விரைந்து பார்த்தபோது முழு கிரகணத்தை கோட்டை விட்டு விட்டோமே என்று நினைத்தேன். ஆனாலும் நிச்சயம் நீங்க படம் பிடித்திருப்பீர்கள் என்ற சமாதானத்துடன் திரும்பி வந்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை.//

  இப்படியொரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டேனா:)? மிக்க நன்றி.

  ReplyDelete
 34. MANO நாஞ்சில் மனோ said...
  //நானும் நேற்று நேரில் பார்த்தேன் அருமையாக இருந்தது...!!!//

  நன்றி மனோ.

  ReplyDelete
 35. அமைதி அப்பா said...
  //கிரகணத்தை பார்க்கத் தவற விட்டவர்களுக்கு, அந்தத் தருணத்தை காண ஒர் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது இந்தப் பதிவு.

  பாராட்டுக்களுடன் நன்றியும் சொல்ல வேண்டும்.//

  மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.

  ReplyDelete
 36. Ramani said...
  //அருமையான படங்கள்
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 37. கோவை2தில்லி said...
  //அபூர்வமான சந்திர கிரகணத்தை அழகாக பதிவாக்கி தந்தமைக்கு நன்றிங்க.

  படங்கள் அழகா வந்திருக்கு.//

  நன்றி ஆதி.

  ReplyDelete
 38. Vasudevan Tirumurti said...
  //லைட் ஆரஞ்சு கலர்ல இருந்தது, விட்டுட்டேனே ன்னு பெங்களூர்வாசி ஒத்தர் பொலம்பிகிட்டு இருக்கார். நீங்களும் அப்படியா, இல்லை கருப்பு வெள்ளை ஆக்கிட்டீங்களா?
  :-))//

  சில செட்டிங்குகளில் பழுப்பில் கிடைத்தனவே தவிர எனக்கு லைட் ஆரஞ்சு தெரியவில்லை. நான் பார்த்த நேரமும் குறைவுதான் என்பதால் தவறவிட்டிருக்கலாம்:)!

  ReplyDelete
 39. ஹேமா said...
  //உண்மையில் உங்கள் பதிவையும்,படத்தையும் பார்த்தே சந்திரகிரஹணம் அறிந்துகொண்டேன்.படத்தை எப்பவும்போல பாராட்டிக்கொண்டே நன்றியும் சொல்கிறேன் !//

  மிக்க நன்றி ஹேமா.

  ReplyDelete
 40. ஸ்ரீராம். said...
  //"நிலவுப் (படங்கள்) வந்து வானத்தையே திருடிக் கொண்டது....." எங்கள் உள்ளங்களையும்! நல்ல பகிர்வு. . படங்கள் சுமார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். தரமாக இருக்கின்றன.//

  நிலவுக்குள் தெளிவான விவரங்கள் கிடைக்குமாறு அமையவில்லை படங்கள். மேகம், குளிர், அவசரம் இவற்றால் நிறைய பரிசோதிக்க இயலவில்லை. பாடல் அருமை. அடுத்த முறை நிலவை எடுக்கும் போது டைட்டில் ரெடி:)! நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 41. கிரி said...
  //ராமலக்ஷ்மி இந்த மாதிரி நேரங்களில் உங்களை மொட்டை மாடியில் தான் வந்து பார்க்க வேண்டும் போல இருக்கு :-) படங்கள் ரொம்ப நல்லா இருக்கு.//

  நன்றி கிரி:)!

  ReplyDelete
 42. arul said...
  //very nice photos thanks//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 43. கே. பி. ஜனா... said...
  //நல்ல படங்கள். நன்றி.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 44. அமைதிச்சாரல் said...
  //நேர்ல பார்த்து ரசிச்சதை விட உங்க படங்கள்ல கிரகணத்தை ரசிச்சதுதான் கூடுதல்.. ரொம்ப அழகா வந்துருக்கு படங்கள்.
  உங்க கேமராவுக்கு நன்றி :-)//

  மிக்க நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 45. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கும் என் நன்றி.

  ReplyDelete
 46. அருமையான படங்கள்
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 47. அருமையான பகிர்வு இராமலக்ஷ்மி....படங்கள் அருமை....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 48. ஆகா.... தொட்டுவிட்டோம் சந்திரனை.

  ReplyDelete
 49. Lakshmi said...
  //அருமையான படங்கள்
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  வாழ்த்துக்கள்//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 50. Nithi Clicks said...
  //அருமையான பகிர்வு இராமலக்ஷ்மி....படங்கள் அருமை....வாழ்த்துக்கள்//

  நன்றி நித்தி:)!

  ReplyDelete
 51. மாதேவி said...
  //ஆகா.... தொட்டுவிட்டோம் சந்திரனை.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin