வெள்ளி, 5 ஏப்ரல், 2019

நட்பு - கலீல் ஜிப்ரான் (4)


ங்கள் நண்பன் உங்களது தேவைகளுக்குக் கிடைத்த பதில்.
வன் நீங்கள் அன்பை உழுது நன்றி நவிலுதலை அறுவடை செய்யும் உங்களது நிலம்.
வன் நீங்கள் இளைப்பாறும் குளிர்காயும் இடம்.
நீங்கள் அவனை நாடி உங்கள் பசியோடு வருகிறீர்கள், அமைதிக்காக அவனைத் தேடுகிறீர்கள்.

ங்கள் நண்பன் தன் மனதிலிருப்பதைப் பேசும் போது உங்கள் மனம் மறுதலிக்கும் ‘இல்லை’யை நினைத்து பயப்பட வேண்டியதில்லை, ‘ஆம்’ என்பதைச் சொல்லத் தயங்க வேண்டியதும் இல்லை.
வன் அமைதியாக இருக்கையில் உங்கள் இதயம் அவனது இதயத்தை  உற்றுக் கவனிப்பதை நிறுத்துவதில்லை.
ட்பில், வார்த்தைகளுக்கு அவசியமின்றி எல்லா எண்ணங்களும், எல்லா எதிர்பார்ப்புகளும் பிறக்கின்றன, ஆர்ப்பரிப்பற்ற ஆனந்தத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
ங்கள் நண்பனிடமிருந்து நீங்கள் பிரிய நேரும்போது துயரம் கொள்ளாதீர்கள்;
லையேறுகிறவனுக்கு சமநிலத்திலிருந்து மலை தெளிவாகத் தெரிவது போல, உங்கள் நண்பனிடம் நீங்கள் அதிகமாக நேசிக்கும் ஒன்று அவனருகில் இல்லாத போது தெளிவாகத் தெரியும்.
ட்பில் எந்தக் குறிக்கோளும் இல்லாதிருக்கட்டும், அதன் ஆழத்தைப் பலப்படுத்திக் கொள்வதைத் தவிர.
ன் சொந்த மர்மங்களைக் கண்டறிவதைத் தவிர வேறு தேடல்களைக் கொண்ட அன்பு அன்பே அல்ல, அது வீசப்படும் வலை: அதில் இலாபமற்றவை மட்டுமே மாட்டும்.

ங்களின் சிறந்தவை உங்கள் நண்பனுக்காக இருக்கட்டும்.
ங்கள் வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டுமெனில், அதன் வெள்ளப் பெருக்கும் அவனுக்குத் தெரிந்திருக்கட்டும்.
வன் என்ன உங்களது நண்பன், மணித்துளிகளைக் கொல்வதற்காக அவனைத் தேடுவீர்களானால்?
ப்போதும் தேடுங்கள் அவனை, மணித்துளிகளோடு வாழ்வதற்காக.
ங்கள் தேவைகளை அவன் பூர்த்தி செய்யலாம், ஆனால் உங்கள் வெறுமையை அல்ல.
ங்கள் நட்பின் இனிமையில் சிரிப்பும், மகிழ்ச்சியைப் பகிர்ந்தலும்  நிறைந்திருக்கட்டும்.
னெனில் சின்ன விஷயங்களான பனித்துளிகளில்தாம் இதயம் தன் காலையைக் கண்டு புத்துணர்வு கொள்கிறது.


***
மூலம்: On Friendship from “The Prophet
By Kahlil Gibran (1883 – 1931)
**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
மகிழ்ச்சியும் துயரமும் - கலீல் ஜிப்ரான் (1) 
சுயம் அறிதல் - கலீல் ஜிப்ரான் (2)
காலம் - கலீல் ஜிப்ரான் (3)
***

12 கருத்துகள்:

  1. கலீல் ஜிப்ரான் கவிதை மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது.
    நட்பின் வலிமையை, அது எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாய் சொல்லும் கவிதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு வரியும் உண்மை. நட்புக்கு அழகிய இலக்கணம்.//அவன் என்ன உங்களது நண்பன், மணித்துளிகளைக்..,// மொழிபெயர்ப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன் செமையான் மொழி பெயர்ப்பு...

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin