திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 2014 ஆம் ஆண்டிற்காக ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கான விருதுகளை அறிவித்திருப்பதுடன், நாவல், கதை, கட்டுரை, கவிதை பிரிவுகளின் கீழ் ‘அரிமா சக்தி விருதினை’ பெண் எழுத்தாளர்களுக்கு அறிவித்துள்ளது. சிறுகதை பிரிவில் “அடை மழை” நூலுக்கு (அகநாழிகை வெளியீடு) அரிமா சக்தி விருது கிடைத்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
#
நான் அறிந்த தோழியரில் கவிதை பிரிவில் தேனம்மை லெஷ்மணனின் ‘அன்ன பட்சி’ (அகநாழிகை வெளியீடு); சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’ (புது எழுத்து வெளியீடு), மாதங்கியின் ‘மலைகளின் பறத்தல்’ (அகநாழிகை வெளியீடு) ஆகிய நூல்களுக்கும் கிடைத்துள்ளன. மூவருக்கும் வாழ்த்துகள்! அடைமழை உட்பட 3 அகநாழிகை பதிப்பக நூல்களுக்கு விருது! பதிப்பாளருக்கு வாழ்த்துகள்! மேலும்
விருது பெற்றிருக்கும் மற்ற பெண் எழுத்தாளர்கள், குறும்பட, ஆவணப் பட இயக்குநர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
“அரிமா விருதுகள் 2014” 25 டிசம்பர் 2014 அன்று மாலை ஐந்து மணிக்கு அரிமா திரு. பிரதீப்குமார் தலைமையில், திருப்பூர் அரிமா சங்க வளாகத்தில் (35B, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலனி, காந்தி நகர், திருப்பூர் 3) நடைபெற உள்ளது.
விருதுக்கும் விழாவுக்கான அழைப்புக்கும் அரிமா சங்கத்தினருக்கு என் மனமார்ந்த நன்றி. விழாவில் கலந்து கொள்ள இயலாவிடினும், விழா சிறப்பாக நடைபெற என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
**
இங்கே.. வாழ்த்தியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
***

அட, பரிசுமழை!
பதிலளிநீக்குஉங்களுக்கும், தேனம்மைக்கும், மற்ற இரு சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.
நன்றி ஸ்ரீராம்:).
நீக்குநாளைக்குப் போடலாம் என்று இருந்தேன். வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி :) நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள்:)!
நீக்குஉங்களுக்கும், தேனம்மைக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்களுடன் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி கோமதிம்மா!
நீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குவாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குநன்றி குமார்.
நீக்குஅடைமழை ராமலக்ஷ்மிக்கு என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குயோகியார் வேதம்