புதன், 31 டிசம்பர், 2014

விடை பெற்றுச் செல்கிறது 2014!விடை பெற்றுச் செல்கிறது 2014. சற்று திரும்பிப் பார்க்கிறேன் நானும். எழுத்தினைப் பொறுத்தவரையில் மனதுக்கு நிறைவாக அமைந்த விஷயங்களாக..
சிறுகதை, கவிதை தொகுப்புகள் வெளியானது; அவை விருதுகள் பெற்றது; நண்பர்களின் மதிப்புரை; கல்கி, தென்றல், தினமணி, ஃபெமினாவில் என் நூல்களுக்கான விமர்சனங்கள்; தினகரன் குறுந்தொடர் வாய்ப்பு, குங்குமம் தோழியில் ஸ்டார் தோழி, Four Ladies Forum நேர்காணல்; சொல்வனம், ஃபெமினா சிறுகதைகள், ‘குங்குமம்’ மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் ஆகியன. அதிகம் மெனக்கிடா விட்டாலும் முத்துச்சரத்தில் சராசரியாக மாதம் 10 பதிவுகள் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியே. PiT தள நிர்வாகம், அதீதம் மின்னிதழில் பொறுப்புகள் தொடருகின்றன.

ஒளிப்படப் பயணம் பற்றிச் சென்ற தூறலில்தான் பகிர்ந்திருந்தேன். அதிலும் தொடர்ச்சியான இயக்கத்தில் திருப்தியே. AID பெங்களூரு கண்காட்சிக்கு எனது இரண்டு ஒளிப்படங்கள் தேர்வாகி இடம்பெற்றிருந்தன. இந்த வருடம் கூடுதலாக வந்து சேர்ந்த சில லென்ஸுகள், உபகரணங்களைச் சேர்த்துக் கொண்டு உள்ளரங்கிலும் நிறைய பரீட்சித்துப் பார்க்கவும் கற்றுக் கொள்வதுமாக இருக்கிறேன்.  நடு நடுவே கை, கழுத்து வலி வருவதும் போவதுமாகவே நகருகின்றன நாட்கள். கணினியில் அளவான நேரமே இருக்க வேண்டும் என ஒவ்வொரு முறை சிகிச்சையில் இருக்கும் போதும் நினைப்பதோடு சரி:). இப்போது மானிட்டரை முகத்தின் லெவலுக்கு வைத்துக் கொண்டு வயர்லெஸ் கீபோர்ட் மவுஸ் உபயோகிப்பது ஓரளவு பலன் தருகிறது.

இணையத்தில் மட்டுமே அறிமுகமாகியிருந்த ஃப்ளிக்கர், பதிவுலக, எழுத்துலக நண்பர்களில் சிலரை நேரில் சந்திக்கும் நல்ல வாய்ப்புகள் அமைந்தன. நெருங்கிய உறவினர்கள் இருவரது மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக இருந்தது. நிலையாமை கொண்ட இந்தக் குறுகிய வாழ்க்கையில் சக மனிதரை நேசிப்போம். அன்பை, நட்பை மதிப்போம். நல்லன நினைப்போம்.

பிறக்கிற புதுவருடத்தில்..
கனவுகள் மெய்ப்பட, காரியங்கள் கைகூடி வர 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

 ***

27 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  HAPPY NEW YEAR 2015 ! :)

  பதிலளிநீக்கு
 3. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. சுகதுக்கங்களை பகிர்ந்துள்ளீர்கள். வரும் ஆண்டு இனிமை நிறைந்ததாக இருக்கட்டும். மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், சக வலைப்பதிவுலக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. புது வருடத்தில் மேலும் பல புதிய சாதனைகளைப் படைக்க என் அன்பான வாழ்த்துகள்! உங்கள் தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பான மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 8. இந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள்..

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 9. இந்த புதுவருடத்தில் உங்கள் கனவுகள் நனவாக வேண்டும். மேலும் மேலும் சிறப்புகள் வந்து உங்களையும் உங்கள் குடுமத்தினர்களையும் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin