முன்னரெல்லாம் மக்கள் கூடும் முக்கியமான திருவிழாக்களில் செய்திக்காகப் பத்திரிகையாளர்கள் மட்டுமே கேமராவுடன் செல்வது வழக்கமாக இருந்தது. வெளிநாட்டினர் மற்றும் ஒருசில புகைப்பட ஆர்வலர்கள் கேமராவுடன் தென்படுவார்கள். இப்போது இது போன்ற விழா சமயங்களில் குழுவாகவோ தனியாகவோ புகைப்படக் கலைஞர்கள் பெருமளவில் சென்று படமாக்கி, நேரில் பார்க்கும் உணர்வோடு அக்காட்சிகளை மற்றவருக்கு அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தேரோட்டங்கள், மதுரை சித்திரைத் திருவிழா, கூவாகம் திருவிழா, குலசை தசரா போன்ற பல விழாக்களுக்கு ஒவ்வொரு வருடமுமே செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் பல கலைஞர்கள். ஒருவர் எடுக்கும் படங்களைப் பார்க்கையில் மற்றவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொள்ள அடுத்தடுத்து அங்கு செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புகைப்படக் கலைஞர்களும் பயணக் கட்டுரைகள் எழுதுகிறவர்களும் சுற்றுலா துறைக்கு ஆற்றி வரும் சேவை அளப்பரியது. சுற்றுலா வளர்ச்சி பல மனிதர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவும் இருக்கிறது. திருவிழாக்களுக்குக் கூடுகிற கூட்டம் பிரமிப்பையும், நம் கலாச்சாரத்தின் மேல் மக்கள் கொண்டிருக்கும் மதிப்பையும் காட்டுகின்றன.
சென்ற பதிவின் தொடர்ச்சியாக.. சுற்றுலா வளர்ச்சிக்காக கர்நாடக அரசால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட அகில இந்திய ஒளிப்படப் போட்டியில் வென்ற படங்களில் சில உங்கள் பார்வைக்கு. சுமார் 120 காட்சியில் இருந்தன. என்னைக் கவர்ந்த இருபத்து இரண்டினை, எடுத்தவர்களின் பெயரோடு இங்கே பகிருகிறேன். அடுத்து இந்த இடங்களுக்குச் செல்பவர்களுக்கோ, அல்லது கர்நாடகா சுற்றுலாவுக்கு திட்டமிடவோ இவை உதவுமென நம்புகிறேன்.
#1
#2 கம்பாலா
எருமைகளை ஓட விடும் இந்தப் பந்தயத்தை தடைசெய்யக் கோரி வழக்கு நடைபெற்று வருகிறது. . “ஜல்லிக் கட்டினைப் போல இது ஆபத்தானது அல்ல. இதை நம்பிப் பல குடும்பங்கள் உள்ளன. எனவே இந்தப் பாரம்பரிய விளையாட்டைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என ஒரு சாரார் குரல் எழுப்பி வருகின்றனர்.
#3 வீடு திரும்பல்
#4 உறி அடி விழா
#5 யக்ஷ கானா
சென்ற மாதம் ராஜ்யோத்ஸவா கொண்டாட்டத்தில் இந்த நிகழ்வைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. சில படங்களும் எடுத்தேன். விரைவில் பகிருகிறேன். கிட்டத்தட்ட கேரளாவின் கதக்களி போன்ற அதீத அரிதாரப் பூச்சுடன், நம்ம ஊர் கதாக்காலட்சேபம் போல கதை சொல்லி, பாடி, ஆடி நடிக்கிறார்கள்.
#6 மஹாமத்ஸாபிஷேகம், ஷ்ராவணபெலகுலா
#7 மஹாமத்ஸாபிஷேகம், ஷ்ராவணபெலகுலா
பறவைப் பார்வையில்..
#8 மைசூர் அரண்மனை
#9 உத்சவ மூர்த்தி
#10 உடுப்பி லக்ஷதீபோத்ஸவா
#11 விட்டலா ஆலயம்
#12 தெப்போத்ஸவா, உடுப்பி
#13 நஞ்சங்கூடு தொட்ட (Dodda=பெரிய) ஜாத்ரா மஹோத்ஸவா
#14 பிஜாப்புரா
#15 ஹம்பி
#16 பிஜாப்புரா
#17 உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
#18 JOG FALLS
#19 கோமதீஸ்வரர், ஷ்ராவணபெலகுலா
#20 கே.ஆர்.சர்க்கிள் மைசூர்
#21 சோமநாத புரம்
#22 கைவினைப் பொருட்கள்
#23 நஞ்சங்கூடு பஞ்ச ரதோத்ஸவா
# 24
இத்தனை படங்களில் விளக்கொளியில் ஒளிரும் மைசூர் அரண்மனைப் படங்கள் பல இருந்தாலும், தசராக் காட்சிகள் இல்லாதது ஆச்சரியமாய் இருந்தது. ஆலயங்கள் எடுக்கப்பட்ட கோணங்கள், ஒளி அமைப்பு எனக் கவனிக்கவும் இரசிக்கவும் நிறைய இருந்தது.
***
முத்துச்சரமாய் ஒளிரும் படங்கள் அருமை..பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇரசித்தவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். பாராட்டுகள் படங்களை எடுத்தவர்களுக்கே :) . நன்றி.
நீக்குஅனைத்து ஒளிப் படங்களும் மிக அழகு, அற்புதம்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி. பறவை பார்வையில் ஒளிப்படம் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குஇந்தியாவில் சுற்றுலாத்துறையை மட்டும் இன்னும் நல்லபடியாக ஒழுங்குபடுத்தினால் பணத்தை அள்ளலாம். எத்தனையோ பேருக்கு வாழும் வழி கிடைக்கும்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
உண்மைதான். நன்றி.
நீக்குஅட்டகாசமான படங்கள்...
பதிலளிநீக்குஇரசித்ததற்கு நன்றி.
நீக்குஅருமையான படங்கள்.
பதிலளிநீக்குசோமநாதபுரம் ஆலயம் முழுமையாக
ஆம். அருமையான படம் அது. நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமையான படங்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு