செவ்வாய், 2 டிசம்பர், 2014

குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 4 & 5) - எலிஸபெத் பேரட் பிரெளனிங்

"நிஜம்,” என்றார்கள் குழந்தைகள், “எங்களுக்கான
காலம் வரும் முன்னரே நாங்கள் மரணிப்பது நடக்கிறது!
சென்ற வருடம் இறந்து போனாள் சின்னஞ்சிறு ஆலிஸ்
உறைபனியால் மூடிக் கிடக்கும் அவள் கல்லறை
வெண்பந்துபோலத் தோற்றமளிக்கிறது.
அவளுக்காக அன்று காத்திருந்த குழியினைப் பார்த்தோம்-
சுற்றி நெருக்கும் களிமண்ணுக்குள் எந்த வேலைக்கும் இடமில்லை
நிம்மதியாகப் படுத்துறங்கும் அவளை, “எழுந்திரு ஆலிஸ் குட்டி,
புலர்ந்தது பொழுது”  என எவரும் எழுப்பப் போவதில்லை.
வெயிலிலும் மழையிலும் காய்ந்து நனையும் அவள் கல்லறையில்
உங்கள் காதுகளைப் பொருத்தி உற்றுக் கவனிப்பீர்களானால் புரியும்,
சின்னஞ்சிறு ஆலீஸ் அழுவதேயில்லை.
அவள் முகத்தைப் பார்க்க நேர்ந்தால் புரியும்,
கண்கள் வரை பரவும் புன்னகையுடனான அவள், நாம் அறிந்திராதவள்.
மகிழ்ச்சியாகக் கழிகின்றன அவள் பொழுதுகள்.
புயலுக்குப் பின்னான மோன அமைதியில்,
திருக்கோவில் மணியோசைக்கு நடுவில்,
அசையாமல் உறங்குகிறாள் கல்லறைப் போர்வைக்குள்!
“இது நடந்தால் நல்லது” சொல்கிறார்கள் குழந்தைகள்,
“நமக்கான காலம் வரும் முன்னே நாம் இறப்பது!”

த்துணைத் துயரம் இந்தக் குழந்தைகளுக்கு!
ஆகச் சிறந்ததென
வாழும்போதே மரணத்தைத் தேடுகிறார்கள்!
உள்ளம் உடைந்து போகாதிருக்க
கல்லறைத் துணியிடத்தில் அடைக்கலம் வேண்டுகிறார்கள்.
“வெளியேறுங்கள் குழந்தைகளே,
இந்த நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து..
இந்த நாட்டிலிருந்து..-
பாடுங்கள் குழந்தைகளே, சிறுபறவைகளைப் போலே-
பறியுங்கள் உங்கள் கைநிறைய
பசும்புற்களை.. காட்டுச்செடிகளின் அழகிய மலர்களை..!
சிரியுங்கள் சத்தமாக, உங்கள் விரல்களால் அவற்றை ஸ்பரிசித்து!”
ஆனால் அவர்கள் பதிலளிக்கிறார்கள்,
“உங்கள் புல்வெளிகளின் மலர்களுக்கு பிடிக்குமா
எங்கள் நிலக்கரிச் சுரங்கத்தருகே விளைந்த பாசிகளை?
எங்களை விட்டு விடுங்கள்
உங்கள் அழகிய கொண்டாட்டங்களிலிருந்து,
எங்களை அமைதியாக இருக்க விடுங்கள்
கரி-நிழல்களின் இருண்மைக்குள்!
*
பாடல் 1 ; பாடல்கள் 2,3

மூலம்: “The Cry of the Children”
by Elizabeth Barrett Browning
*

படம் நன்றி: இணையம்
*

அதீதம் 2014 டிசம்பர் முதலாம் இதழ் வெளியீடு.

10 கருத்துகள்:

 1. எங்களை அமைதியாக இருக்க விடுங்கள்


  "குழந்தைகளின் அழுகை

  பதிலளிநீக்கு
 2. குழந்தைகளின் அழுகை...
  வலி நிறைந்த கவிதைகள் அக்கா...

  பதிலளிநீக்கு
 3. @ இராஜராஜேஸ்வரி,

  கருத்துக்கு நன்றி, இராஜராஜேஸ்வரி!

  பதிலளிநீக்கு
 4. @கோமதி அரசு,


  கருத்துக்கு நன்றி, கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 5. @ ஸ்ரீராம்.,

  கருத்துக்கு நன்றி, ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 6. @ -'பரிவை' சே.குமார்,

  கருத்துக்கு நன்றி, குமார்!

  பதிலளிநீக்கு
 7. @ விச்சு,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin