சனி, 27 டிசம்பர், 2014

தூறல் 23: 2014_ல் FLICKR_ம் நானும்; சித்திரச் சந்தை 2015

தினம் ஒன்று அல்லது இரண்டு எனத் தொடர்ந்து ஃப்ளிக்கரில் படங்கள் பகிர்வதை ஒரு வழக்கமாகவே கொண்டிருப்பதால்தான் ஒளிப்படத் துறையில் ஈடுபாடு குறையாமல் இருந்து வருகிறது.

ஒளிப்படங்களைப் பகிர்வதற்கான பிரத்தியேகத் தளமான FLICKR குறித்து அடிக்கடி இங்கு பகிர்ந்திருக்கிறேன். ஃப்ளிக்கரை பின்பற்றி எத்தனையோ தளங்கள் வந்து விட்டிருப்பினும் பல அபிமானிகள் இன்னும் தொடர்ந்து ஃப்ளிக்கரை விடாமல் உபயோகித்து வருகின்றனர். நானும் அதில் அடக்கம்:)!

கடந்த ஒரு வருடத்தின் சுவாரஸ்யமான பதிவுகளாக.. அதிகம் பேரால் விரும்பப்பட்ட, பார்வையிடப்பட்ட பதிவுகளாக இவை:
(most liked and viewed shots in the last one year) 
இவையும் இவை போன்ற மற்ற வருடங்களின் மேலும் சிலபல படங்களும் சராசரியாக 400_லிருந்து 1500 வரையிலுமே பார்வையாளர்களைப் பெற்று வந்திருக்கின்றன. அப்படியிருக்க இம்மாதம் அடுத்தடுத்து EXPLORE ஆன  எனது இரு படங்கள் 7500+, 4500+ பார்வையாளர்களைப் பெற்றிருந்தன.

EXPLORE என்றால் என்ன?

தற்சமயம் சராசரியாக ஒருநாளில் ஃப்ளிக்கரில் பகிரப்படும் ஒளிப்படங்களின் எண்ணிக்கை 35 இலட்சம் என்கின்றன புள்ளி விவரங்கள். இந்த இலட்சக்கணக்கான படங்களிலிருந்து தினசரி 500 படங்களை ஃப்ளிக்கர் நிர்வாகம் தேர்வு செய்து “EXPLORE" பக்கத்தில் வெளியிடுகிறது. (முன்னொரு சமயம் அப்படித் தேர்வான என் Parrot Fish படம் குறித்தும் தூறல் பதிவொன்றில் பகிர்ந்திருந்தேன்.). எந்த அடிப்படையில் தேர்வாகின்றன, தேர்வான பின்னும் அந்நாளின் பட்டியலில் வேறுபடங்கள் அதிக பார்வையாளர்களைப் பெற்றிருப்பின் சில படங்கள் drop ஆவதும் உண்டு. சில நண்பர்களின் படங்கள் எல்லாம் தொடர்ந்து EXPLORE பக்கத்தில் இடம் பெற்றும் வருகின்றன என்றாலும், அடுத்தடுத்து தேர்வாகி அதிக அளவில் உலகளாவியப் பார்வையாளர்களைப் பெற்ற வகையில் இவற்றையும் இங்கு சேமிக்கிறேன்:)!
1. நின்னைச் சரணடைந்தேன், 2. சித்திரப் பூவிழியே..
நெல்லையில் தசராவை முன்னிட்டு நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் படமாக்கியவை இந்தப் படங்கள். இந்த நாட்டிய நிகழ்வில் எடுத்த படங்களை ஒவ்வொன்றாக ஃப்ளிக்கரில் பதிந்து வருகிறேன். மார்கழி தொடங்கிய பின் திருப்பாவை பாடல்களுடன் பகிருகிறேன். விரைவில் இங்கே தொகுப்பாகப் அளிக்கிறேன்.

சொல்ல வந்த விஷயம் இதுமட்டுமல்ல.

தற்போது Explore ஆகும் படங்களை, தங்கள் group_ல் இணைக்கக் கோரி “In Explore" தளம் அழைப்பு விடுக்கிறது. பார்வையாளர்கள், Favorites எண்ணிக்கை மட்டுமின்றி இந்த அழைப்பின் மூலமாகவும் நம் படம் தேர்வாகியிருப்பதை அறிந்து கொள்ள முடியுமென்றாலும், ஒரு வேளை தவற விட்டிருப்பின் bighugelabs தளம் நமக்கு கண்டுபிடிக்க உதவுகிறது. நீங்கள் ஃப்ளிக்கர் உபயோகிப்பவராயின்  உங்கள் Explored படங்களைக் கண்டறிய http://bighugelabs.com/scout.php  சென்று பயனடையலாம். இத்தகவலை அறியத் தந்த நண்பர் நித்தி ஆனந்துக்கு நன்றி!

***

தோ அறிவிப்பாகி விட்டது 2015 சித்திரச் சந்தைக்கான தேதி. இந்த வருடம் ஜனவரியின் கடைசி ஞாயிறில் நடைபெற்ற ஓவியத் திருவிழா வரும் வருடத்தில் முதல் ஞாயிறில் நடைபெற உள்ளது. சித்திரகலா பரீக்ஷத் இந்த விழாவுக்காகத் தயாராகி வருவதை சில வாரங்களுக்கு முன் சென்றிருந்த போது காண முடிந்தது:


விவரங்கள் இங்கே:
#

#

சித்திரச் சந்தை பற்றி அறிந்து கொள்ள முந்தைய என் சில பதிவுகள் உதவலாம்:

ஆர்வமும் வாய்ப்பும் உள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள். 4 ஜனவரி 2015!
***

டத்துளிகள்:

வில்லுடன் ராமர்; அஞ்சனை மைந்தர்; கோவில் மணி
#
#
பாறைச் சிற்பம்
#
மூன்று படங்களுமே பெங்களூர், சித்ரகலா பரீக்ஷத் வளாகத்தில் எடுக்கப்பட்டவை.
***

16 கருத்துகள்:

  1. வாழத்துக்கள் ராமலக்ஷ்மி.
    படங்களும், விபரங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. 35 லட்சம் படங்களிலிருந்து தேர்வாவது சாதாரண விஷயமா என்ன? வாழ்த்துகள். புகைப்படக் கலையில் உங்கள் திறமை, ஆர்வம் எல்லாம் தெரிந்ததே..! :)))

    கடைசி மூன்று படங்களில் முதலாவது முதல்!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


    பதிலளிநீக்கு
  3. வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  4. இனிய வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. புகைப்படங்களை நேர்த்தியோடும் கலைநயத்தோடும் எடுக்கும் உங்கள் திறமை மேலும் தொடர்ந்து சிறப்புற இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  5. இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin