சனி, 31 டிசம்பர், 2011

2011-ல் முத்துச்சரம்ஒரு நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நேசம் அமைப்பு பற்றி அறிந்திட இங்கே செல்லக் கேட்டுக் கொள்கிறேன்.


சென்ற வருடம் இதே நாளில் நண்பர்கள் அழைத்ததன் பேரில் 2010-ல் முத்துச்சரம் [தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்] எழுதினேன். ‘2011-ம் நானும்’ எனத் தொடர் பதிவுகள் பதிவுலகில் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் முத்துச்சரம் பற்றிய ஒரு பார்வை, சுய அலசலாக அடுத்த ஆண்டை எதிர்நோக்க வைக்கும் என்பதால் இந்தப் பகிர்வு. எனக்கான ஒரு டைரிக் குறிப்பாகவும் கொள்கிறேன்.

வலையுலகில் முதல் மூன்று வருடங்களுமே மாதம் மூன்று எப்போதேனும் நான்கு என்ற அளவிலேயே பதிவிட்டு வந்த நான் இந்த வருடம் சராசரியாக மாதம் 10 பதிவுகள் தந்திருப்பதற்கு நண்பரின் ஊக்கம் காரணம் என்பதை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.

இந்த வருடச் சிறப்பாக அமைந்திருந்தன வலைச்சர வாரமும், தமிழ்மணம் நட்சத்திர வாரமும்.

வலைச்சர வாரத்தில் நண்பர்கள் பலரின் சிறந்த பதிவுகளை அறிமுகப்படுத்த முடிந்த மகிழ்ச்சியுடன் அங்கு ஒன்றும், அறிவிப்பாக முத்துச்சரத்தில் ஒன்றுமாக வழக்கத்துக்கு மாறாக 14 பதிவுகள் இட்டது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் மீள்பதிவுகள் இன்றித் தரமுடிந்த 16 பதிவுகள். நட்சத்திர வாரத்தில் தமிழ்மணம் வெளியிடும் வாராந்திர ‘டாப் 20’ பட்டியலில் முத்துச்சரத்துக்கு முதலிடம் கிடைத்தது.

இரண்டு வாரங்களிலும் நண்பர்கள் தந்த ஊக்கம் நெகிழ்வானது.

எழுத்துக்கும் புகைப்படப் பயணத்துக்குமான அங்கீகாரங்களாக அமைந்து ஊக்கம் தந்தன கீழ்வரும் வெளியீடுகள்:

பத்திரிகைகள்:

 • தினமணி கதிரில் மூன்று சிறுகதைகள். அதிலொன்று நட்சத்திரவாரத்தில் பிடித்த ஓவியர் ராமுவின் சித்திரத்துடன்..

 • வடக்குவாசல் இலக்கிய இதழில் 3 கவிதைகள்
 • நவீன விருட்சம் 89-90வது இதழில் கவிதை

இணைய இதழ்கள்:


 • உயிரோசையில் 3 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
 • கீற்றினில் 5 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
 • திண்ணையில் 4 கவிதைகள்; 4 புத்தக விமர்சனங்கள்; 1 சிறுகதை
 • நவீனவிருட்சத்தில் 11 கவிதைகள்
 • வல்லமையில் 2 புத்தக விமர்சனங்கள், 1 கவிதை
 • பண்புடனில் 1 கவிதை; 1 புகைப்படத் தொகுப்பு
 • அதீதத்தில் 3 புத்தக விமர்சனங்கள்; 1 மொழிபெயர்ப்புக் கவிதை

வெளியிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.


க்ளிக் க்ளிக்


புகைப்படங்களைப் பொறுத்தவரை ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பதிவுக்கு தமிழ்மணம் விருது 2010-ன் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது: 2009-லும் இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் என்பதில் இது தொடர் வெற்றியாயிற்று.

DSLR-ன் பயன்பாடுகளைக் கற்றுத் தேறிட வேண்டுமென்பதில் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. இருப்பினும் அதில் எடுத்த படங்களுடனான பதிவுகள் பல நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. PiT பதிவுகள் போக குடியரசு மற்றும் சுதந்திர தின மலர்கண்காட்சிகள், நிலவைப் பிடித்த கதைகள்(சூப்பர் மூன், சித்திரா பெளர்ணமி, சந்திரக் கிரகணம்), அதிவேகத்தில் எடுத்த இயற்கைக் காட்சிகள், பக் பக் பறவைகள், பெங்களூர் சிவாலயம் மற்றும் சிங்கப்பூர் பயணப் படங்கள் ஆகியன அவற்றில் சில.

மே மாதம் PiT குழுமத்தில் உறுப்பினராக இணைந்தது இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வைத் தந்தது.

29 நவம்பர், ஃப்ளிக்கர் எக்ஸ்போளரரில் அன்றைய சிறந்த படங்களில் ஒன்றாக என் படம் இடம் பெற்றது:

ஜூலையிலிருந்து அதீதம் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாக. அதன் ‘வலையோசை’ மற்றும் ‘ஃபோட்டோ கார்னர்’ பகுதிகளுக்கு முழுப் பொறுப்பு எடுத்து நல்ல வலைப்பக்கங்களையும் சிறந்த நிழற்படங்களையும் அறிமுகப்படுத்த முடிவதில் திருப்தி கிடைக்கிறது.

அதீதம் புத்தாண்டு இதழில்..அதீதத்தில் இந்த வருடம் மாதம் ஒரு சிறப்பாசிரியரை அறிமுகம் செய்வதை நடைமுறைப்படுத்தி உள்ளோம். புத்தாண்டு இதழுக்கு யார் ஆசிரியர் என அறிய இங்கே செல்லுங்கள். வலையோசையைக் காண இங்கே செல்லலாம். ஃபோட்டோ கார்னரில் புத்தாண்டை வரவேற்று ஆடும் அழகு மயில்களை எடுத்தவர் யார் என்பதைக் காண வேண்டாமா?

டந்த வருடம் கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடாக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டுமென எடுத்தத் தீர்மானம் ஓரளவு நிறைவேறியிருப்பதைப் புத்தக விமர்சனங்களின் எண்ணிக்கை காட்டுகிறது. சிறுகதைகள் அதிகம் எழுத வேண்டுமென எடுத்த தீர்மானம் காற்றில் பறந்தது. பல கரு மனதில் இருந்தும் வடிவம் கொடுக்காத சோம்பேறித்தனம் வரும் ஆண்டிலாவது மாறுமா தெரியவில்லை. கவிதைகள் தோன்றும் பொழுது மட்டுமே எழுதுவதால் எந்தத் தீர்மானமும் எடுத்திருக்கவில்லை.

ஆக, செயல்படுத்த முடிந்த புகைப்பட நுணுக்கங்கள் கற்பது, வாசிப்பு இதற்கே வரும் வருடத்திலும் அதிக நேரம் செலவிட வேண்டுமென்பது சுலபமான நிலைப்பாடாகத் தோன்றுகிறது:)! பதிவுகளைப் பொறுத்த வரையில் வாரம் இத்தனை எனும் திட்டமிடல் ஏதுமின்றி இயலும்போது பதியலாம் என்றிருக்கிறேன். எண்ணிக்கை இவ்வருடம் போல் அமைவது சிரமமே.

2012_ல் வேண்டுவது இயற்கையின் ஆசி, உலகில் அமைதி, அனைத்துதரப்பு மக்கள் வாழ்விலும் சுபிட்சம், ஆரோக்கியம். இயற்கையிடம் நன்றியுடன் இருப்போம். இயன்றவரை பிறருக்கு உதவுவோம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

71 கருத்துகள்:

 1. விருப்பங்கள் நிறைவேறவும்,வெற்றிகள் தொடரவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்...!!!

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் நிறைய வெற்றிக் கனிகளைப் பறித்து மேலும் பல சிகரங்களை இந்தப் புத்தாண்டில் எட்ட இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. பிறக்கும் புதுவருஷத்தில், பத்திரிகை உலகில் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

  பதிலளிநீக்கு
 6. வருடங்களோடு வளரட்டும் வெற்றிகளும் விருதுகளும் .... வாழ்த்துக்களுடன்
  குமரி எஸ். நீலகண்டன்

  பதிலளிநீக்கு
 7. 2012_ல் வேண்டுவது இயற்கையின் ஆசி, உலகில் அமைதி, அனைத்துதரப்பு மக்கள் வாழ்விலும் சுபிட்சம், ஆரோக்கியம். இயற்கையிடம் நன்றியுடன் இருப்போம். இயன்றவரை பிறருக்கு உதவுவோம்.//

  2012 ல் உங்கள் வேண்டுதல் மிகவும் நல்ல வேண்டுதல்.

  இறைவன் அருளால் வேண்டுதல்கள் நிறைவேற வாழ்த்துகிறேன்.

  வெற்றி மீது வெற்றி வந்து ராமலக்ஷ்மியை சேரட்டும்.
  வாழ்க வளமுடன்.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. உங்க achievement லிஸ்ட் பார்த்து பொறமையா கீது.

  *****

  புத்தாண்டு வாழ்த்துகள் !!

  பதிலளிநீக்கு
 9. நல்ல பகிர்வு....

  2012-லும் உங்கள் வெற்றி தொடர வாழ்த்துகள்...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 11. இன்னும் இன்னும் மேல்மேலும் வளர இனிதாய்ப் பிறக்கட்டும் 2012.அன்பு வாழ்த்துகள் முத்தக்கா !

  பதிலளிநீக்கு
 12. புத்தாண்டு உங்களுக்கு சகல சிறப்புக்களையும் மென்மேலும் கொண்டுவரட்டும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. மேலும் வெற்றிகள் குவிய வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 14. உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 15. உங்கள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.


  இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. வெற்றிகள் மேலும் மேலும் தொடரட்டும்.

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
  vgk

  பதிலளிநீக்கு
 17. புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
  இந்த வருடமும் மேலும் பல மகிழ்ச்சிகளை அள்ளித்தரட்டும். :)

  பதிலளிநீக்கு
 18. வெற்றிகள் மேலும் மேலும் தொடரட்டும்.  பூத்துவரும் பொன்னெழிலாய்
  பூக்கட்டும் புத்தாண்டு!
  ஏழுவண்ண வானவில்லாய்
  வண்ண வண்ண இன்பங்கள்
  நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. //2012_ல் வேண்டுவது இயற்கையின் ஆசி, உலகில் அமைதி, அனைத்துதரப்பு மக்கள் வாழ்விலும் சுபிட்சம், ஆரோக்கியம். இயற்கையிடம் நன்றியுடன் இருப்போம். இயன்றவரை பிறருக்கு உதவுவோம்.//

  2012 ஆம் ஆண்டு சிறப்பாக அமையுமென்று எதிர்பார்ப்போம்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முத்துச்சரத்தை வாசிக்கும் நண்பர்கள் அனைவருக்கும், எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.உங்கள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.!

  பதிலளிநீக்கு
 21. புத்தாண்டிலும் நல்லபல வெற்றிகளும் படைப்புகளும் பெருக நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. வரும் ஆண்டிலும் தொடர்ந்து இன்னும் நிறைய்ய்ய்ய சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துகள், ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 23. இனிய புதுவருட வாழ்த்துகள் அக்கா.

  உங்கள் எழுத்தும், புகைப்படங்களும் இந்த வருடமும் சிறப்பாக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 24. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 25. உங்கள் ஆசைகளும் வெற்றிகளும் தொடர வாழ்த்துக்கள். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. வாழ்வினில் துன்பங்கள் அகலும்
  நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
  ஆண்டிது பிறக்கிறது 2012.

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி....2012 இது போல் வெற்றி குவிய இன்னும் சிறந்து விளங்க பிரார்த்தனைகள் !!

  பதிலளிநீக்கு
 28. இந்த ஆண்டும் உங்கள் வெற்றி நடை தொடரட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 29. சுந்தரா said...
  //விருப்பங்கள் நிறைவேறவும்,வெற்றிகள் தொடரவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!//

  நன்றி சுந்தரா.

  பதிலளிநீக்கு
 30. MANO நாஞ்சில் மனோ said...

  //உங்கள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்...!!!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!//

  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 31. கணேஷ் said...

  //நீங்கள் நிறைய வெற்றிக் கனிகளைப் பறித்து மேலும் பல சிகரங்களை இந்தப் புத்தாண்டில் எட்ட இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 32. தமிழ் உதயம் said...

  //பிறக்கும் புதுவருஷத்தில், பத்திரிகை உலகில் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.//

  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 33. குமரி எஸ். நீலகண்டன் said...

  //வருடங்களோடு வளரட்டும் வெற்றிகளும் விருதுகளும் .... வாழ்த்துக்களுடன்
  குமரி எஸ். நீலகண்டன்//

  மிக்க நன்றி நீலகண்டன்.

  பதிலளிநீக்கு
 34. கோமதி அரசு said...

  //2012 ல் உங்கள் வேண்டுதல் மிகவும் நல்ல வேண்டுதல்.

  இறைவன் அருளால் வேண்டுதல்கள் நிறைவேற வாழ்த்துகிறேன்.

  வெற்றி மீது வெற்றி வந்து ராமலக்ஷ்மியை சேரட்டும்.
  வாழ்க வளமுடன்.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 35. மோகன் குமார் said...

  //உங்க achievement லிஸ்ட் பார்த்து பொறமையா கீது.

  *****

  புத்தாண்டு வாழ்த்துகள் !!//

  சாதனைகளாகச் சொல்ல வரவில்லை. திரும்பிப் பார்க்க என்னளவில் திருப்தி தரும் ஒரு பட்டியல், அவ்வளவே:)! நன்றி மோகன் குமார்!

  பதிலளிநீக்கு
 36. வெங்கட் நாகராஜ் said...

  //நல்ல பகிர்வு....

  2012-லும் உங்கள் வெற்றி தொடர வாழ்த்துகள்...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....//

  மிக்க நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 37. கே. பி. ஜனா... said...

  //இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...//

  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 38. ஹேமா said...

  //இன்னும் இன்னும் மேல்மேலும் வளர இனிதாய்ப் பிறக்கட்டும் 2012.அன்பு வாழ்த்துகள் முத்தக்கா !//

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 39. மாதேவி said...

  //புத்தாண்டு உங்களுக்கு சகல சிறப்புக்களையும் மென்மேலும் கொண்டுவரட்டும். வாழ்த்துகள்.//

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 40. ஷைலஜா said...

  //மேலும் வெற்றிகள் குவிய வாழ்த்துகள்!//

  நன்றி ஷைலஜா.

  பதிலளிநீக்கு
 41. ஆனந்த் said...

  //உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள் அக்கா.//

  நன்றி ஆனந்த்.

  பதிலளிநீக்கு
 42. Lakshmi said...

  //உங்கள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.


  இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.//

  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 43. வை.கோபாலகிருஷ்ணன் said...

  //வெற்றிகள் மேலும் மேலும் தொடரட்டும்.

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.//


  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 44. ஜோதிஜி திருப்பூர் said...

  //வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//


  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 45. ரிஷபன் said...

  //புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
  இந்த வருடமும் மேலும் பல மகிழ்ச்சிகளை அள்ளித்தரட்டும். :)//

  மிக்க நன்றி:)!

  பதிலளிநீக்கு
 46. மகேந்திரன் said...

  //வெற்றிகள் மேலும் மேலும் தொடரட்டும்.

  பூத்துவரும் பொன்னெழிலாய்
  பூக்கட்டும் புத்தாண்டு!
  ஏழுவண்ண வானவில்லாய்
  வண்ண வண்ண இன்பங்கள்
  நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

  இனிய வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 47. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி...
  தொடர்ந்து வெற்றிகள் பெற வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 48. அமைதி அப்பா said...

  //2012 ஆம் ஆண்டு சிறப்பாக அமையுமென்று எதிர்பார்ப்போம்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முத்துச்சரத்தை வாசிக்கும் நண்பர்கள் அனைவருக்கும், எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 49. ஜெஸ்வந்தி - Jeswanthy said...

  //இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.உங்கள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.!//

  நன்றி ஜெஸ்வந்தி.

  பதிலளிநீக்கு
 50. asiya omar said...

  //புத்தாண்டிலும் நல்லபல வெற்றிகளும் படைப்புகளும் பெருக நல்வாழ்த்துக்கள்.//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 51. கவிநயா said...

  //வரும் ஆண்டிலும் தொடர்ந்து இன்னும் நிறைய்ய்ய்ய சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துகள், ராமலக்ஷ்மி!//

  மிக்க நன்றி கவிநயா!

  பதிலளிநீக்கு
 52. சுசி said...

  //இனிய புதுவருட வாழ்த்துகள் அக்கா.

  உங்கள் எழுத்தும், புகைப்படங்களும் இந்த வருடமும் சிறப்பாக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள்.//

  நன்றி சுசி:)!

  பதிலளிநீக்கு
 53. Ramani said...
  //தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்//

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 54. விச்சு said...

  //உங்கள் ஆசைகளும் வெற்றிகளும் தொடர வாழ்த்துக்கள். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

  முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 55. Muruganandan M.K. said...

  //வாழ்வினில் துன்பங்கள் அகலும்
  நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
  ஆண்டிது பிறக்கிறது 2012.

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு
  வாழ்த்துக்கள்//

  தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டாக்டர்.

  பதிலளிநீக்கு
 56. T.V.ராதாகிருஷ்ணன் said...

  //புத்தாண்டு வாழ்த்துகள்//

  நன்றி டி வி ஆர் சார்.

  பதிலளிநீக்கு
 57. அன்புடன் அருணா said...

  //பூங்கொத்துப்பா!!//

  நன்றி அருணா!

  பதிலளிநீக்கு
 58. Shakthiprabha said...

  //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி....2012 இது போல் வெற்றி குவிய இன்னும் சிறந்து விளங்க பிரார்த்தனைகள் !!//

  நன்றி ஷக்தி!

  பதிலளிநீக்கு
 59. ஸ்ரீராம். said...

  //இந்த ஆண்டும் உங்கள் வெற்றி நடை தொடரட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி ஸ்ரீராம். 'எங்கள்' ப்ளாக் குழுவினருக்கும் என் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 60. Mangayar Ulagam said...

  //wish you a very happy new year -2012//

  மிக்க நன்றி மங்கையர் உலகம். தாங்கள் அறிவித்திருக்கும் போட்டிகள் சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 61. பாச மலர் / Paasa Malar said...
  //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி...
  தொடர்ந்து வெற்றிகள் பெற வாழ்த்துகள்..//

  மிக்க நன்றி மலர்.

  பதிலளிநீக்கு
 62. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

  பதிலளிநீக்கு
 63. புத்தாண்டில் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 64. புத்தாண்டு வாழ்த்துகள்.அதீதம் இதழில் என் வலைத்தளம் பற்றி அறிமுகம் செய்தமைக்கு நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 65. அமைதிச்சாரல் said...
  //புத்தாண்டில் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்..//

  நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 66. க.நா.சாந்தி லெட்சுமணன். said...
  //புத்தாண்டு வாழ்த்துகள்.அதீதம் இதழில் என் வலைத்தளம் பற்றி அறிமுகம் செய்தமைக்கு நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்//

  இந்த ஆண்டு நிறைய எழுதுங்கள் சாந்தி. உங்களுக்கும் என் வாழ்த்துகள். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 67. Glad to see "முத்துச்சரம்" is getting the deserved recognition these days! :)

  Congrats Mrs.Ramalakshmi!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin