திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தலைநகரின் தாமரைக் கோயில்-பெங்களூரு மலர் கண்காட்சியில்..- ( Bangalore Lalbagh Flower Show )

#1 தலைநகர் தில்லியின் தாமரைக் கோவில்



# 2 லால்பாக் குன்றின் மேல் கெம்பகெளடா மண்டபம்

இன்றுடன் முடிவடைகிறது பத்துநாட்களாக நடைபெறும் லால்பாக் சுதந்திர தின மலர்கண்காட்சி. ஒவ்வொரு கண்காட்சியின் போதும் லால்பாக் கண்ணாடி மாளிகையின் பிரதான மலர் கட்டமைப்பே மக்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாக இருப்பது வழக்கம். இம்முறை அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டியிருக்கிறது தோட்டக்கலைத் துறை.

வெண்மை என்பது அமைதிக்கும் சமாதானத்துக்குமான அடையாளம். தில்லியின் தாமரைக் கோவில் பளிங்கினால் ஆனதென்றால் அதன் பிரதியாக 22 அடிகள் உயர்ந்து, 36 அடிகள் விரிந்து மலர்ந்த இக்கோவில் 200 தேர்ந்த கலைஞர்களின் கைவண்ணத்திலும் உழைப்பிலும், இரண்டு இலட்சம் சம்பங்கி மலர்கள், 75 ஆயிரம் வெள்ளை ரோஜாக்கள், 10 ஆயிரம் நந்தியாவட்டைகள் கொண்டு உருவாகியுள்ளது.



# 3 சம்பங்கி, விரியும் இதழ்களிலும்..
ரோஜாக்கள், கூம்பாக உயரும் இதழ்களிலும்..


# 4 உள்ளம் கொள்ளை கொள்ளும் வெள்ளை ரோஜாக்கள்
உங்கள் கண்களுக்கு விருந்தாக..


# 5 நட்சத்திரங்களாகச் சிதறிச் சிரித்தபடி
நலம் விசாரிக்கும் நந்தியாவட்டைகள்..
இவை தாமரை இதழ்களின் உட்புற அலங்காரத்துக்குப் பயன்படுத்தப் பட்டிருப்பதை அடுத்து வரும் படத்தில் கவனியுங்கள்.

# 6 அமைதிக்கான செய்தியை
அடைகாத்து நிற்கிறது வெண்கமல இதழ்



# 7 ஒன்றே குலம் ஒருவனே தேவன்
சக மனிதரிடம் காட்டும் அன்பே உண்மையான மதம்.
கடவுள் விரும்புவதும் அதையே.

# 8. அமைதியும் சமாதானமும் 
உலகெங்கும் நிலவட்டும்!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

அறிவிப்பு: கண்காட்சியின் மீதப் படங்களைப் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். பெங்களூரு சிவாலயா படங்களும் இன்னும் பகிரப் படாமல் உள்ளன. தொடரும் கழுத்து மற்றும் கைவலி காரணமாக தட்டச்சுவதிலும், படங்களை வலையேற்றுவதிலும் சிரமம் உள்ளது. மருத்துவரோ மருந்துச் சீட்டில் தெளிவாக எழுதி நீட்டி விட்டார் முதலில் என் மடிக் கணினிக்கு முழு ஓய்வு தரச் சொல்லி:)! எனவே சிலகால இடைவெளிக்குப் பிறகு சந்திக்கலாம் நண்பர்களே!

***

64 கருத்துகள்:

  1. நேற்று இன்னொரு வலைப்பூவில் இதுகுறித்த படங்களைப் பார்த்தபோது, ராமல்க்‌ஷ்மிக்கா இந்தப் படங்களைப் போடக் காணோமேன்னு நினைச்சேன்.. போட்டுட்டீங்க!! அதுவும், நெருக்கமாக, விவரமாக...

    /தொடரும் கழுத்து மற்றும் கைவலி//
    ஸேம் பிஞ்ச்... உங்களுக்கு உங்க டாக்டர் ஆர்டர் போட்டாரா? எனக்கு எங்க இஞ்சினீர்!! ;-))))))

    பதிலளிநீக்கு
  2. அப்படியே பக்கத்திலே பக்கத்திலே சூம்ம்ம்ம்..பண்ணியதி நாங்களே பெங்களூரில் வந்து விழுந்து விட்டோம்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் மனதை கொள்ளை கொண்டன. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மிக மிக அழகான படங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கும் வாழ்த்துகள் அக்கா.

    கொள்ளை அழகை எங்க கூடவும் பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி :))

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு
    படங்கள் மிக மிக அருமை
    தயவுசெய்து டாக்டரின் அறிவுரைப்படி
    சில நாட்கள் ஓய்வெடுத்துப் பின் பதிவிடவும்
    விரைவில் குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. பிரமிப்பூட்டும் மலர் அலங்காரத்தில் தாமரைக் கோவில். அடுத்தடுத்த படங்களில் விரிவாக எப்படி உருவாக்கியுள்ளார்கள் என்று காட்டியிருப்பது அழகு. சுதந்திர தின வாழ்த்துகள். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. அற்புதமான புகைப்படங்கள். அற்புதமான பதிவு.
    வாழ்த்த எனக்கு வேறு வார்த்தைகள் தெரியவில்லை.
    உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
    வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  10. அட எங்க கோயில்..:) ரோஜாவும் நந்தியாவட்டையும் அழகோ அழகு..

    பதிலளிநீக்கு
  11. அழ‌கான‌ ப‌டங்க‌ள். உட‌ல் ந‌லம் முக்கிய‌ம். பார்த்துக் கொள்ளுங்க‌ள்.

    பதிலளிநீக்கு
  12. ஒவ்வொண்ணும் செம அழகு..

    முழு ஓய்வெடுத்துக்கிட்டு நல்ல ஆரோக்கியமா வாங்க :-))

    பதிலளிநீக்கு
  13. படங்கள் ரொம்ப க்யூட்.உடல் நிலை தேறி பழைய படி உற்சாகத்துடன் படங்களையும்,பதிவுகளையும் எங்களிடம் பகிர வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  14. மிகுந்த சிரமத்துக்கிடையிலும் எங்களுக்காக பதிவிட்டதுக்கு பாராட்டுக்கள். லால்பாக் எங்கும் பூ மழையோ பனி மழையோ சில்லென்று பூத்து கண்களுக்கு விருந்தளித்தது.

    பதிலளிநீக்கு
  15. சக மனிதரிடம் காட்டும் அன்பே உண்மையான மதம்.
    கடவுள் விரும்புவதும் அதையே.

    அமைதியும் சமாதானமும் உலகெங்கும் நிலவட்டும்!

    அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!//

    நம்மில் அமைதி நிலவட்டும், நம்மைசுற்றிலும் அமைதி நிலவட்டும், உலகமெங்கும் அமைதி நிலவட்டும்.

    இது தான் இப்போது வேண்டிய தாரக மந்திரம்.

    நீங்கள் சொல்லிய விதம் அழகு.
    படங்கள் அழகு.

    உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் ராமலக்ஷ்மி.
    மருத்துவர் அறிவுரைப்படி ஒய்வு எடுத்து கொண்டு நலத்துடன் வரலாம்.
    பூரண உடல் நலத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. மணம் வீசுகிற மலர்கள் மிக நன்றாக அழகாக இருந்தன. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான கண்காட்சி தெளிவான படங்களுடனும் விளக்கத்துடனும் தந்த தங்களுக்கு எனது நன்றிகள் .உங்கள் உடல்நலன் விரைவில்க் குணமடையப் பிரார்திகின்றேன் .சற்று டாக்டர் சொல்வதுபோன்று உடலுக்கு ஓய்வு கொடுங்கள் சகோதரி .சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம் இல்லையா?.....

    பதிலளிநீக்கு
  18. வெண்மலர்களின் அணிவகுப்பு மனத்தைக் கொள்ளை கொள்கிறது.


    உடல்நலத்துடன் வாருங்கள்.
    நலமுடன் வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
  19. கண்ணுக்கு விருந்தாய் அழகிய மலர்கள்...நன்றி ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  20. விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  21. மிகமிக அழகான படங்கள் அக்கா. அதிலும் அந்த வெள்ளை ரோஜாக்கள் கொள்ளை அழகு!

    விரைவில் உடல்நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகளும்!

    பதிலளிநீக்கு
  22. ஹுஸைனம்மா said...
    //நேற்று இன்னொரு வலைப்பூவில் இதுகுறித்த படங்களைப் பார்த்தபோது, ராமல்க்‌ஷ்மிக்கா இந்தப் படங்களைப் போடக் காணோமேன்னு நினைச்சேன்.. போட்டுட்டீங்க!! அதுவும், நெருக்கமாக, விவரமாக...//

    மீதிப் படங்களும் விரைவில் தரப் பார்க்கிறேன்:)!

    ***/தொடரும் கழுத்து மற்றும் கைவலி//
    ஸேம் பிஞ்ச்... உங்களுக்கு உங்க டாக்டர் ஆர்டர் போட்டாரா? எனக்கு எங்க இஞ்சினீர்!! ;-))))))/***

    ஆர்டர் வந்தால்தான் கட்டுப் படுகிறோம்:))! நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  23. goma said...
    //அப்படியே பக்கத்திலே பக்கத்திலே சூம்ம்ம்ம்..பண்ணியதி நாங்களே பெங்களூரில் வந்து விழுந்து விட்டோம்//

    நன்றி கோமாம்மா:)!

    பதிலளிநீக்கு
  24. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //மிகவும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.//

    நன்றிங்க vgk.

    பதிலளிநீக்கு
  25. தமிழ் உதயம் said...
    //படங்கள் மனதை கொள்ளை கொண்டன. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.//

    நன்றியும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  26. Lakshmi said...
    //மிக மிக அழகான படங்கள் பகிர்வுக்கு நன்றி.//

    நன்றிங்க லக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  27. சுசி said...
    //உங்களுக்கும் வாழ்த்துகள் அக்கா.

    கொள்ளை அழகை எங்க கூடவும் பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி :))//

    மிக்க நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  28. Ramani said...
    //அருமையான பதிவு
    படங்கள் மிக மிக அருமை
    தயவுசெய்து டாக்டரின் அறிவுரைப்படி
    சில நாட்கள் ஓய்வெடுத்துப் பின் பதிவிடவும்
    விரைவில் குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்//

    மிக்க நன்றிங்க. உரிய கால ஓய்வுக்குப் பிறகே பதிவிட உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம். said...
    //பிரமிப்பூட்டும் மலர் அலங்காரத்தில் தாமரைக் கோவில். அடுத்தடுத்த படங்களில் விரிவாக எப்படி உருவாக்கியுள்ளார்கள் என்று காட்டியிருப்பது அழகு. சுதந்திர தின வாழ்த்துகள். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  30. அன்புடன் அருணா said...
    /A bouquet! take care ..../

    நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  31. Rathnavel said...
    /அற்புதமான புகைப்படங்கள். அற்புதமான பதிவு.
    வாழ்த்த எனக்கு வேறு வார்த்தைகள் தெரியவில்லை.
    உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
    வாழ்த்துக்கள் அம்மா./

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. Kanchana Radhakrishnan said...
    /அற்புதமான பதிவு.Take care of your health./

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  33. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    /அட எங்க கோயில்..:) ரோஜாவும் நந்தியாவட்டையும் அழகோ அழகு../

    நன்றி முத்துலெட்சுமி. இந்தக் கோவிலின் படத்தை நான் முதன் முதலில் பார்த்ததே உங்கள் ப்ரொஃபைல் படத்தில்தான்:)!

    பதிலளிநீக்கு
  34. சே.குமார் said...
    /Photos Superb.../

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  35. ! ஸ்பார்க் கார்த்தி @ said...
    /சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!!!!!!/

    நன்றி.

    பதிலளிநீக்கு
  36. தீஷு said...
    /அழ‌கான‌ ப‌டங்க‌ள். உட‌ல் ந‌லம் முக்கிய‌ம். பார்த்துக் கொள்ளுங்க‌ள்./

    நன்றி தீஷூ அம்மா.

    பதிலளிநீக்கு
  37. அமைதிச்சாரல் said...
    /ஒவ்வொண்ணும் செம அழகு..

    முழு ஓய்வெடுத்துக்கிட்டு நல்ல ஆரோக்கியமா வாங்க :-))/

    ஆகட்டும் சாந்தி:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  38. August 16, 2011 8:15 AM
    ஸாதிகா said...
    /படங்கள் ரொம்ப க்யூட்.உடல் நிலை தேறி பழைய படி உற்சாகத்துடன் படங்களையும்,பதிவுகளையும் எங்களிடம் பகிர வாழ்த்துக்கள் சகோ./

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  39. சசிகுமார் said...
    /உடலை பார்த்து கொள்ளுங்கள்/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. நானானி said...
    /மிகுந்த சிரமத்துக்கிடையிலும் எங்களுக்காக பதிவிட்டதுக்கு பாராட்டுக்கள். லால்பாக் எங்கும் பூ மழையோ பனி மழையோ சில்லென்று பூத்து கண்களுக்கு விருந்தளித்தது./

    நன்றி நானானிம்மா.

    பதிலளிநீக்கு
  41. கே. பி. ஜனா... said...
    /படங்கள் அற்புதம்!/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  42. கோமதி அரசு said...
    /நம்மில் அமைதி நிலவட்டும், நம்மைசுற்றிலும் அமைதி நிலவட்டும், உலகமெங்கும் அமைதி நிலவட்டும்.

    இது தான் இப்போது வேண்டிய தாரக மந்திரம்.

    நீங்கள் சொல்லிய விதம் அழகு.
    படங்கள் அழகு.

    உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் ராமலக்ஷ்மி.
    மருத்துவர் அறிவுரைப்படி ஒய்வு எடுத்து கொண்டு நலத்துடன் வரலாம்.
    பூரண உடல் நலத்திற்கு வாழ்த்துக்கள்./

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  43. குமரி எஸ். நீலகண்டன் said...
    /மணம் வீசுகிற மலர்கள் மிக நன்றாக அழகாக இருந்தன. நன்றிகள்./

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  44. அம்பாளடியாள் said...
    /அருமையான கண்காட்சி தெளிவான படங்களுடனும் விளக்கத்துடனும் தந்த தங்களுக்கு எனது நன்றிகள் .உங்கள் உடல்நலன் விரைவில்க் குணமடையப் பிரார்திகின்றேன் .சற்று டாக்டர் சொல்வதுபோன்று உடலுக்கு ஓய்வு கொடுங்கள் சகோதரி .சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம் இல்லையா?...../

    ஆம், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  45. அமுதா said...
    /அழகு. பகிர்வுக்கு நன்றி/

    நன்றி அமுதா:)!

    பதிலளிநீக்கு
  46. மாதேவி said...
    /வெண்மலர்களின் அணிவகுப்பு மனத்தைக் கொள்ளை கொள்கிறது.


    உடல்நலத்துடன் வாருங்கள்.
    நலமுடன் வாழ்வோம்./

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  47. க.நா.சாந்தி லெட்சுமணன். said...
    /மிக மிக அழகான படங்கள். நன்றி./

    நன்றி சாந்தி. நலமா?

    பதிலளிநீக்கு
  48. பாச மலர் / Paasa Malar said...

    /கண்ணுக்கு விருந்தாய் அழகிய மலர்கள்...நன்றி ராமலக்ஷ்மி..//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  49. அமைதி அப்பா said...

    /விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்./

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  50. சுந்தரா said...

    /மிகமிக அழகான படங்கள் அக்கா. அதிலும் அந்த வெள்ளை ரோஜாக்கள் கொள்ளை அழகு!

    விரைவில் உடல்நலம்பெற என்னுடைய பிரார்த்தனைகளும்!/

    மிக்க நன்றி சுந்தரா.

    பதிலளிநீக்கு
  51. படங்கள் அனைத்தும் நேரில் காட்சியைக் கண்டால் எந்த உணர்வைப் பெறுவோமோ அப்படி இருக்கிறது.வாழ்த்துக்கள்.
    திண்ணை,உயிரோசை,வார்ப்பு,நவீன விருட்சம்,பதிவுகள்,வடக்குவாசல்,கீற்று போன்ற இணைய மற்றும் இலக்கிய சிற்றிதழ்களிலும் எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது.உடுமலை.காம்ல் கிடைக்கப்பெறலாம் முகவரி udumalai.com/?prd=sathurangam&page=products&id=10029

    பதிலளிநீக்கு
  52. @ ப.மதியழகன்,

    மிக்க நன்றி.

    கவிதை தொகுப்பு குறித்த தகவலுக்கும் நன்றி. மகிழ்ச்சியும் நல்வாழ்த்துக்களும்!!

    பதிலளிநீக்கு
  53. மிக வாசனையாக இருந்திருக்கும் போல இருக்கே ராமலெக்ஷ்மி:)

    பதிலளிநீக்கு
  54. ஹுஸைனம்மா said...
    நேற்று இன்னொரு வலைப்பூவில் இதுகுறித்த படங்களைப் பார்த்தபோது, ராமல்க்‌ஷ்மிக்கா இந்தப் படங்களைப் போடக் காணோமேன்னு நினைச்சேன்.. போட்டுட்டீங்க!! அதுவும், நெருக்கமாக, விவரமாக...

    /தொடரும் கழுத்து மற்றும் கைவலி//
    ஸேம் பிஞ்ச்... உங்களுக்கு உங்க டாக்டர் ஆர்டர் போட்டாரா? எனக்கு எங்க இஞ்சினீர்!! ;-))))))

    /// நெசம்தான் கழுத்து எலும்பு வீக் ஆகிக்கிட்டு வருது.. :))

    பதிலளிநீக்கு
  55. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  56. எப்படி இதை விட்டேன்? மனதுக்கு நிறைவான அருமையான படங்கள்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin