Friday, December 31, 2010

தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்.. - 2010_ல் முத்துச்சரம்

ஆய கலைகள் அறுபத்து நான்கு. எழுத்து, புகைப்படம், ஓவியம், நடனம், இசை, சமையல் என எந்தக் கலையானாலும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்தோமானால் அதைவிடச் சிறந்த தியானம் வேறில்லை என்றே தோன்றும். ஆழ்கடலின் அடிதொட்டு வந்தாலும் கையுக்குள் கிடைப்பது ஒரு முத்தாகவே இருக்கும். தேர்ச்சி பெற்று விட்டோம் என எண்ணி விட்டால் தேங்கி நின்று விடுவோம். முடிவற்ற தேடலிலும், கற்றலிலுமே கலைகள் வளருகின்றன.

சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா:)?

எனக்கும்... ஒரு மயக்கம்...’ எனும் தனது 199-வது பதிவில் தோழி கவிநயா நடனக் கலை மீதும் எழுத்தின் மீதும் தனக்கிருக்கும் மயக்கத்தை அழகாய் சொல்லியதோடு தொடர்பதிவாக அதை எடுத்துச் செல்ல வேண்டுகோளும் வைத்திருக்கிறார் இங்கே.

நெஞ்சுக்கு நெருக்கமான எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர், தனது 200-வது பதிவினைக் கடந்து விட்டுள்ளார் சமீபத்தில். இன்று போல் என்றும் அழகிய தமிழில் அருமையான பதிவுகளைத் தொடர்ந்து தந்து கொண்டேயிருக்க அவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!

அடுத்து நம்ம விஜி "2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்’ பற்றி தொடருமாறு அன்புடன் அழைப்பு விடுத்திருக்கிறார் இங்கே.

இருவரின் அழைப்புக்கும் ஏற்றவகையில் பகிர்ந்திட என்னிடம் எண்ணங்கள் இருக்கவே இந்தப் பதிவு, பேனாவையும் காமிராவையும் சார்ந்த கலைகளை முன் நிறுத்தி..:)!

எழுத்து:
எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே எழுத்தின் மேல் மயக்கம் இருப்பதை மறுக்க முடியாதென்றே எண்ணுகிறேன். பள்ளிப் பருவத்தில் அதாவது ஏழு எட்டாவது வகுப்புகளிலிருந்து, ஊரிலிருக்கும் அத்தைகளுக்கும், பெரியம்மா சித்திகளுக்கும், கோடை விடுமுறையில் தோழிகளுக்கும் நீண்ட கடிதங்கள் எழுதுவதுண்டு. எழுதிய கடிதங்களை பலமுறை நானே ரசித்து வாசித்த பின்னரே கோந்தின் பக்கம் விரல்கள் செல்லும்.

பள்ளி இறுதி, மற்றும் கல்லூரி காலத்தைய ஆண்டுமலர்கள் கவிதைகள், கதைகள் எழுத வைத்தன. அந்தச் சமயம் ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகை அறிமுகமாக திருமணத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் மும்பையிலிருந்தும் அதில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்தப் பத்திரிகை நின்று போக பிறகு வேறு பத்திரிகைகளுக்கு முயன்றுபார்க்கும் ஆவல் ஏற்படவில்லை.

இந்நிலையில் ‘முரசு’ எழுத்துரு தட்டச்சில் தமிழ் எனும் புரட்சியைக் கணினியில் கொண்டு வந்தது. 2003-ல் திண்ணை இணைய இதழை கோமா அவர்கள் அறிமுகப் படுத்த, இணையத்தில் பத்திரிகை.. அதில் நம் எழுத்து.. என்பது பரவசம் தந்தது. இரண்டு வருடங்கள் தொடர்ந்து எழுதி வந்தேன். பின் முரசு எழுத்துரு தந்த பிரச்சனையால் அதுவும் அப்படியே நின்று போனது. அப்போதுதான் அகலத் திறந்தன பதிவுலகக் கதவுகள். நெல்லை சிவாவின் மின்மினி வலைப்பூவே முதல் அறிமுகம். [நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று செம்மொழிப் பூங்கா பற்றி பதிவிட்டுள்ளார், பாருங்கள்!] நானானி அவர்களின் வலைப்பூவில் இ-கலப்பைக் கொண்டு பின்னூட்டமிடத் தொடங்கியதே முதல் பதிவுலகப் பிரவேசம்.

அப்புறமாக அதுவரை எழுதியவற்றை எல்லாம் ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியாகவே கோர்க்கத் தொடங்கிய முத்துச்சரத்தை இன்னமும் கோர்த்துக் கொண்டே.. இருக்கிறேன் தீராத ஆர்வத்துடன்.. மாறாத மயக்கத்துடன்..! நன்றி கவிநயா:)!

இப்போது விஜியின் அழைப்புக்குச் செல்கிறேன்!

2010 சிறப்பான வருடமாகவே தொடங்கியது என் எழுத்துக்கு, 'சமூகம்' பிரிவில் தமிழ்மணம் தந்த தங்கப் பதக்க விருதுடன். 'உயிரோசை' இணைய இதழில் முதன் முறையாக என் படைப்பு வெளியாகி, தொடர்ந்து இதுவரை கட்டுரை கவிதைகள் என 8 படைப்புகள் வந்ததில் மகிழ்ச்சி. யூத்ஃபுல் விகடனில் இவ்வருடம் 10 படைப்புகள். வார்ப்பு(10), வல்லமை(9), திண்ணை(11) இணைய இதழ்கள் தொடர்ந்து தந்து வரும் ஊக்கம் குறிப்பிடத் தக்கது. அகநாழிகை, வடக்குவாசல், புன்னகை பத்திரிகைகளில் வந்தன கவிதைகள். அனைத்து ஆசிரியருக்கும் என் நன்றிகள்.

ஒருமுறையே ஆயினும், தமிழ்மணம் வரிசைப்படுத்தி வரும் முன்னணி இருபது வலைப்பூக்களில் பத்தாவது இடம் கிடைத்ததில் தனி மகிழ்ச்சி.

நூறாவது இடுகை
யைத் தொட்டேன் இவ்வருடம்.

தேவதை மற்றும் கலைமகளில் கடந்த வருடம் வலைப்பூ அறிமுகமானது போல இந்த வருடம் ‘ லேடீஸ் ஸ்பெஷல்’ சிறப்பான அங்கீகாரம் தந்தது முத்துச்சரத்துக்கு எனது கட்டுரையையும் வெளியிட்டு.

பத்திரிகை உலகத்தில் பரவலாகப் பல இதழ்களில் தடம் பதிக்க முடிந்ததை என்னளவில் இவ்வருட சாதனையாகக் கருதுகிறேன். தேவதை, ஆனந்த விகடனில் கவிதைகள், தினமணி கதிரில் மூன்று சிறுகதைகள், கலைமகள் மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்களில் சிறுகதைகள். இப்படியாக என் எழுத்துப் பயணத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்து விட்டுள்ளது 2010.

இவ்வருட கவிதைகளில் பிடித்தமானவை: யார் அந்தச் சிறுவன்?; ஒற்றைப் பேனாவின் மை ; அகநாழிகை கவிதைகள்; ஆயிரமாயிரம் கேள்விகள்; ஒரு நதியின் பயணம் போன்றவை. சிறுகதைகளில் ‘வயலோடு உறவாடி..’. கட்டுரைகளில் உலகம் உய்ய.. ; தாயுமானவராய்..; செல்வக் களஞ்சியங்கள்; மேகங்களுக்குப் பின்னால்.. ஆகியன.

சொல்ல விழையும் கருத்துக்களைப் பத்து பதினைந்து வரிகளில் வெளிப்படுத்திவிட்டு நகரும் செளகரியமாகக் கவிதைகளை நான் கருதியதால், அவையும் ஓரளவுக்குக் கை கொடுத்ததால், கட்டுரை மற்றும் சிறுகதைகள் மேல் அதிக ஆர்வம் ஏற்படாமலே இருந்தது. இந்த வருடம் அதில் மாற்றம் வந்திருக்கிறது. காரணம் பதிவுலக நண்பர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தித் தந்த ஆலோசனைகளே. ஏற்று நடந்ததில் கை மேல் பலனாய் பத்திரிகைகளில் படைப்புகள். அவர்களுக்கும் கூடவே ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.

2011_ல் சிறுகதைகள் மேல் இன்னும் கவனம் செலுத்த எண்ணியுள்ளேன். நடையும் மொழியும் மேம்பட வளம் பெற ஒரே வழி வாசிப்பு. அதற்கே அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுவே என் புதுவருட நிலைப்பாடாக உள்ளது. இவ்விரண்டு எண்ணங்களையுமே செயல் படுத்த உதவும் வகையில் அருமையான ஆலோசனைகளுடன் அமைந்திருந்தது, ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய எழுத்தாளர் பெருமாள் முருகனின் கருத்துக்கள். அவற்றை அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார் பரிசல்காரன் இங்கே. காணொளியும் விரைவில் இணையத்தில் வருமென எதிர்பார்க்கப் படுகிறது.
*** *** ***

புகைப்படங்கள்:
பதினேழு வயதில் முதலில் கையில் பிடித்தது யாஷிகா-D. அப்பா மட்டுமின்றி அவரது சகோதர சகோதரிகளும் புகைப்படக்கலை வல்லுநர்கள். ஆர்வலர்கள். ஆக இயல்பாக வந்து விட்டிருந்தது எனக்கும் அண்ணனுக்கும் பதின்ம வயதில் இதன் மேலான ஆர்வம். அண்ணனும் நானுமாக அப்பாவின் யாஷிகா-டியில் படமெடுக்கப் படித்துக் கொண்டோம். [எங்களுக்கு முறையே ஒன்பது பத்து வயதாக இருக்கையில் அப்பா காலமாகி விட்டிருந்தார்.] ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் காமிரா. இப்போது எப்படி டிஜிட்டல் கேமிராவில் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உள்ளதோ, அது போன்றதானதொரு வசதி அதில் உண்டு.அண்ணனுக்கு ஃப்லிம் ரோலை வீட்டிலேயே கழுவி ப்ரிண்ட் போடுவதிலும் ஆர்வம் இருந்தது. எனக்கு நாட்டம் இல்லை. சின்னதாக ஒரு ஸ்டூடியோ செட் செய்திருந்தார். என் சின்னத் தங்கைதான் அவருக்கு அஸிஸ்டெண்ட். ஆரம்பத்தில் ப்ரிண்ட் போட்டவை பழுப்பு நிறத்தில் வந்தன. பின் சற்று முன்னேற்றம் வந்தது.

பள்ளி இறுதியில் [1982] நான் மும்பைக்கு சுற்றுலா செல்லுகையில் எடுத்துச் செல்ல எளிதாக இருக்குமென அண்ணன் சிபாரிசு செய்ய க்ளிக்-4 காமிரா வாங்கித் தந்தார் தாத்தா. இந்த இரண்டு காமிராவிலுமே நான் அடிக்கடி செய்த தவறு ஒரு படம் எடுத்ததும் அடுத்த படத்துக்கு ஃப்லிம் சுருளை கொண்டு செல்ல மறந்து விடுவது. 12 படங்கள் எடுக்க முடிகிற 120 ஃப்லிம் சுருள் விலை அப்போது பன்னிரெண்டரை ரூபாய்கள். அதில் இப்படித் தப்பு விட்டே நாலு படங்களின் கதை கந்தலாகி விடும்:(!

கல்லூரியில் இருக்கும் சமயத்தில்தான் கலர் படங்களுக்கான 35mm கேமிரா மற்றும் 36mm ஃபிலிம் சந்தைக்கு வர ஆரம்பித்திருந்தன. அம்மா பச்சை கொடி காட்ட ஹாட் ஷாட்-ல் கவனமாக ஆட்டோ வைண்டிங் ரிவைண்டிங் வசதியிருந்த காமிராவை தேர்வு செய்தேன். [ஆம், ஆலோசனை கேட்க என்னோடு காமிராவை கையில் எடுத்த அண்ணனும் இல்லாது போனார்.]

அப்போதெல்லாம் மனிதர்களைத் தவிர வேறெதையும் படம் எடுத்ததே இல்லை! ஃப்லிம் சுருள், பிரிண்ட் செலவு எல்லாம் ‘எதற்கு போட்டு இவற்றை எடுப்பானேன்?’ என்கிற மனோபாவமே பலரையும் போல எனக்கும் இருந்தது!

பள்ளி, கல்லூரியில் எடுத்தவற்றை நண்பருக்கும், உறவினர் மற்றும் அவர்தம் குழந்தைகளை எடுக்கும் படங்களை அவரவருக்கும் உடனுக்குடன் ப்ரிண்ட் எடுத்து அனுப்பி வைக்கிற வழக்கமும் அப்போதிருந்தே உண்டு. இந்த விஷயத்தில் நான் என் அப்பாவைப் போலவே என அடிக்கடி புகழ்வார் என் பெரியம்மா, அம்மாவின் அக்கா.

சமீபத்தில் என் பள்ளி, கல்லூரிகாலத் தோழி என் புகைப்படப் பதிவுகளைப் பார்த்து விட்டு ரொம்ப ஆர்வமாக யாஷிகா-டி, க்ளிக்-4, ஹாட் ஷாட் இவற்றை நினைவு கூர்ந்து இன்னும் உள்ளனவா அவை என்று குசலம் விசாரித்தார். யாஷிகா-டியை அப்பாவின் நினைவாகவும் antique piece ஆகவும் பார்வைக்கு வைத்திந்த தங்கை சமீபத்தில் என் வசம் தந்து விட்டாள். செல்ஃப் டைமர் உபயோகித்து பல படங்களை அதில் பள்ளி காலத்தில் எடுத்திருக்கிறேன். மறக்காமல் சிலாகித்தார் அதையும் என் தோழி.

90-களில் கணவர் நைகான் 70W வாங்கித் தந்தார். 2000_களின் தொடக்கத்தில் சோனி TRV140E வீடியோ கேமிரா கைக்கு வர ஸ்டில் படங்கள் எடுப்பது வெகுவாகு குறைந்து எங்கு சென்றாலும் வீடியோவாகவே எடுத்தபடி இருந்தேன். வந்தது டிஜிட்டல் புரட்சியும். நைகான்3700 முதல் டிஜிட்டல். இயற்கை காட்சிகள் கோவில்கள் என எல்லாவற்றையும் எடுக்க ஆரம்பித்தது இதிலிருந்துதான். இந்த சமயத்தில் கனமான வீடியோ காமிராக்கள் போய் கையடக்க வீடியோ கேமிராக்கள் வந்தன. கணவர் வற்புறுத்தியும் வாங்க மறுத்து விட்டேன். முக்கிய காரணம் எடுத்தவற்றை மறுபடி போட்டுப் பார்க்க நேரம், பொறுமை எவருக்கும் இல்லை.[பிற்காலத்தில் வரலாம்:)!]மகனும் பள்ளிப் படிப்பைப் முடிக்க, பள்ளி விழாக்களுக்கான பயன்பாடும் இராது என்ற நிலையில் அதிக பிக்ஸல்,க்ளாரிட்டி வேண்டி சோனிW80 வாங்கிக் கொண்டேன்.

2008 மே, பதிவுலகம் வந்த மாதத்திலிருந்து பிட் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொள்ள PiT உதவியது. உதவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆர்வம் தணியாது பார்த்துக் கொள்கிறது. நண்பர் பலரும் இந்த சமயத்தில் SLR-க்கு மாறும் நேரம் வந்து விட்டது என அடிக்கடி சொல்லியபடி இருந்தாலும் அதன் பயன்பாடு குறித்த தயக்கத்தால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். சென்ற மாதம் எங்கள் மணநாள் அன்று ‘பழகு’ என வாங்கிக் கையில் திணித்து விட்டார் கணவர்.

நைகான்-D5000 18-55mm பேஸிக் லென்ஸ்+ 55-200mm லென்ஸ், ட்ரைபாட் சகிதம் களமிறங்கியிருக்கும் எனக்கு, பால பாடங்கள் புரிபடவே சிலநாட்கள் ஆயிற்று. முதலில் ‘ஒளி.. ஒரு துவக்கமாய்’ என ஒரே ஒரு விளக்குப் படத்தை ஃப்ளிக்கரில் போட்டுவிட்டு பேசாதிருந்து விட்டேன். 'விளக்குப் பூஜையிலிருந்து இன்னுமா கேமிராவை எடுக்கவில்லை:)?’ என அக்கறையுடன் ஒரு மென் அதட்டல் போட்டார் கருவாயன் என்ற சுரேஷ்பாபு. [இத்தகு நட்புகளே பதிவுலகில் நமக்குக் கிடைத்த வரம்.]

அவர் கேட்டதில் தப்பில்லை. ரெண்டு நாளைக்குக் காமிராவைக் கையில் வைத்து உருட்டி உருட்டிப் பார்த்து விட்டு, அப்பெச்சர்,ஐ எஸ் ஓ, ஷட்டர் ஸ்பீட் எனத் தூக்கத்திலும் உளறி விட்டு, பையில் போட்டு ஜாலியாக மூடி வைத்து விட்டிருந்தேன். இவர் இப்படிக் கேட்டதும் வந்தது வேகம். காட்சிப் படுத்தினேன் அடுத்தநாள்காலை அதிகாலை வானின் மேகத்தை விரிந்த 18mm-ல்.

கடந்த பிட் பதிவின் அந்த மேக ஊர்வலம் இங்கும் ஃப்ளிக்கரிலும் நல்ல பாராட்டைப் பெற்றுத் தர, நம்பிக்கை பிறக்க, தொடர்ந்து இப்போது அதில் படங்கள் எடுக்கப் பழகி வருகிறேன். இருவாரம் முன்னே ஜீவ்ஸ் தலைமையிலான கப்பன் பார்க் புகைப்பட ஆர்வலர் சந்திப்பில் நான் கேட்ட ஒண்ணும் ஒண்ணும் எத்தனை மாதிரியான கேள்விகள் எல்லாவற்றிற்கும் சிரித்துவிட்டு ஆனால் பொறுமையாக பதில் தந்தார்கள் வந்திருந்த அத்தனை பேரும்.

ஆக, 2011_ல் காமிரா பயணத்தின் இலட்சியம் வேறென்னவாக இருந்திட இயலும்? SLR-ன் பயன்பாடுகளை முடிந்தவ்ரை கற்றுத் தேர்ந்திட வேண்டும் என்பதுதான்:)!

மற்றபடி 2010 புகைபடப் பயணமும் தமிழ்மண விருதுடனேயேதான் ஆரம்பித்தது ஜனவரியில். இரண்டு முறைகள் ஃப்ளிக்கரின் ‘இந்தவார சிறந்த படம்’ ஆகத் தேர்வாயின என் படங்கள். குமரகம் புகைப்படங்கள்;தண்ணி காட்டறேன்; லால்பாக் மலர் கண்காட்சி; மலரோடு மலராக; மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல.. போன்ற பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிக்கப் பட்டன.

வழிப்பாட்டுத் தலங்கள்; இறையும் கலையும்-நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள் ஆகியன இந்திய சிற்பக்கலையின் அருமையையும், சொந்த ஊரின் பெருமையையும் இற்றைப் படுத்த கிடைத்த வாய்ப்பாக அமைந்து மிகுந்த மனநிறைவைத் தந்தன.

என் மூன்றாம் கண்கள்:)!
இதில் க்ளிக்-4 மட்டும் மிஸ்ஸிங். படத்தை எடுத்தது லேட்டஸ்ட் நைகான் D5000-ல்.

எண்ணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமைந்த அழைப்புகளுக்காக கவிநயா, விஜி இருவருக்கும் என் நன்றிகள். விருப்பமானவர் தொடரக் கேட்டுக் கொள்கிறேன். விரிவான விவரங்களுக்கும், [நான் அப்படியே பின்பற்றாவிட்டாலும்:)] விதிமுறைகளுக்கும் அவர்களது பதிவுகளைப் பாருங்களேன்.


மிக நீண்ட பதிவாகி விட்டது. கொட்டாவி வந்திருந்தால் விரல்களால் இரண்டுமுறை சொடுக்குப் போட்டு விரட்டி விட்டு மேலே கவனமாக வாசிக்கவும்:)!

தமிழ்மணம் விருது 2010-ன்
1]காட்சிப் படைப்புகள் பிரிவில் ‘ஏரிக்கரை பூங்காற்றே..’[கேமிரா வடித்தது];
2]நூல் விமர்சனம் பிரிவில் ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்-என் பார்வையில்..’[பேனா வடித்தது];
3]பயண அனுபவங்கள்,ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் ‘மேகங்களுக்குப் பின்னால்..’[கேமிரா பேனா இரண்டும் கலந்து செய்த கலவை:)]
இவை முதல் சுற்றில் வெற்றி பெற வாக்களித்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் பதிவர்களோடு வாசகர்களும் கலந்து கொள்ளலாம் இங்கே. புதியவர்கள் தமிழ்மணத்தில் கணக்கு திறந்து பிறகு வாக்களிக்க வேண்டும். ஜனவரி நான்கு கடைசி தினம்!

முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கும் அத்தனை நண்பருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்! வெற்றி நோக்கிப் பயணப்படுவோம். யாருக்குக் கிட்டினாலும் நமக்கேயானதாய் மகிழ்வோம்.


இருதினம் முன் என் பிறந்த தினத்தன்று சுவரொட்டியில் வாழ்த்திய தமிழ் பிரியனுக்கும், பதிவிட்டு வாழ்த்திய நானானி அவர்களுக்கும், கவிதையால் மகிழ்வித்த திகழுக்கும் அப்பதிவுகளிலும் முகநூலிலும் வாழ்த்தியிருந்த நண்பர் யாவருக்கும், தமிழ்வாசல் குழுமத்தில் மடலிட்டு வாழ்த்துக்களை ஆசிகளை வாங்கித் தந்த எல் கே, மற்றும் அலைபேசியில் அழைத்தும், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்பியும் வாழ்த்திய அத்தனை தோழமைகளின் அன்புக்கும் நெகிழ்வான நன்றிகள். வெகு சிலரைத் தவிர எவரையும் நேரில் சந்தித்ததில்லை. ஆயினும் நெடுநாள் பழகிய உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றன இணைய நட்புகள்.புத்தாண்டு ஒளிமயமாக அமைந்து,
அனைவரது வாழ்விலும் ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்து விளங்க
என் அன்பான வாழ்த்துக்கள்!
***

96 comments:

 1. ""எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே எழுத்தின் மேல் மயக்கம் இருப்பதை மறுக்க முடியாதென்றே எண்ணுகிறேன்""


  வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  இதையும் படிச்சி பாருங்க
  சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

  ReplyDelete
 2. வளமும் நலமும்
  நிதமும் நிறையும்
  புத்தாண்டாக 2011
  அமைய வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம் 2011

  மேலும் பல படைப்புக்களோடு தொடருங்கள் :)

  ReplyDelete
 4. வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம் 2011

  மேலும் பல படைப்புக்களோடு தொடருங்கள் :)

  ReplyDelete
 5. ரொம்ப நாளா பதிவுலகப் பக்கம் வராமல் போனதில், எவ்வளவு miss பண்ணியிருக்கிறேன்..

  நெறைய கலக்கியிருக்கீங்க..! போட்டோக்கள் எல்லாம் ரொம்ப அருமை!

  புத்தாண்டு வாழ்த்துக்கள், புதிய ஆண்டு மேலும் மெருகு கூட்ட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. அருமையான நினைவுகளைப் பகிர்ந்திருக்கீங்க.

  அடுத்துவரும் 2011 ல் இன்னும் பல சிறப்புக்களைப் பெறவேண்டுமாய் வாழ்த்துக்கிறேன்..:)

  ReplyDelete
 7. ஒரு ஆலமரம் வளர்கிறது....

  ReplyDelete
 8. மென்மேலும் வளர, வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 9. 2011 இனிதாய் ஒளிபரப்பட்டும்.

  ReplyDelete
 10. பதிவு சற்று பெரிது ஆனதன் காரணம்: உங்க படைப்புகள் வந்த புத்தகங்கள் & நீங்கள் வாங்கிய விருதுகள் குறிப்பிட்டதால் தான்.. பின்னே வாரம் ஒண்ணு ரெண்டு பப்ளிஷ் ஆகிடுது. ம்ம். கலக்குங்க

  ஒரு பிரபலத்தின் பின்னணி அறிந்ததில் மகிழ்ச்சி

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 11. அருமையான பகிர்வு.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. //தேர்ச்சி பெற்று விட்டோம் என எண்ணி விட்டால் தேங்கி நின்று விடுவோம். முடிவற்ற தேடலிலும், கற்றலிலுமே கலைகள் வளருகின்றன.//

  ஆம் ராமலக்ஷ்மி.

  வாழ்க்கை என்பது முயற்சி.
  முன்னேற்றப் பாதையில் முன்னேறிக் கோண்டே இருங்கள் ராமலக்ஷ்மி.

  2011லில் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்!
  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 13. நீங்கள், பல தளங்களில் கலக்கிக் கொண்டிருந்தாலும், எழுத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் பங்கெடுக்கலாம் எனத் தோன்றுகிறது. எழுத எண்ணற்றவை இரைந்து கிடக்கின்றன என்பதையும் அறிவீர்கள்.

  வாழ்த்துகள்

  ReplyDelete
 14. எல்லோருக்குமே எழுத்தின் மீது மயக்கம் இருக்கும் என்று சொல்லி எழுத்துகள் பற்றியும் அதை விட புகைப் படம் எடுத்த அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டது சுவையாக இருந்தது. உங்கள் கேமிரா ரகசியமும் தெரிந்தது! இரண்டு நாள் முன்பு பிறந்த நாளா...பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழ் மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலஷ்மி..

  ReplyDelete
 16. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. அருமையாயிருக்கு உங்கள் எழுத்துலக, பதிவுலக, கேமராவுலக வரலாறு.

  புத்..புத்..புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 18. ***புத்தாண்டு ஒளிமயமாக அமைந்து,
  அனைவரது வாழ்விலும் ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்து விளங்க
  என் அன்பான வாழ்த்துக்கள்!***

  நீங்க சொன்னதே ரொம்ப அழகா இருக்கு. அதனால் அதைத் திருடி உங்களையும் உங்க குடும்பத்தினரையும் வாழ்த்துக்கிறேன்!

  புத்தாண்டு ஒளிமயமாக அமைந்து,
  அனைவரது வாழ்விலும் ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்து விளங்க
  என் அன்பான வாழ்த்துக்கள்!


  -வருண்

  ReplyDelete
 19. முதலில் ராமலஷ்மி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்க பொன்னான நேரத்தை தொடர் பதிவுக்கு உங்க கவிதை,கதை,ஒவிய,மற்றும் எல்லாம் சேர்ந்த எழுத்து நடையில் எழுதி எங்க எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திட்டிங்க அதற்க்கு கோடி நன்றி.

  நான் உங்க கவிதை விசிறி.
  உங்க புகைபட கலை நானும் ரசித்து பார்ப்பேன் எனக்கு மிகவும் பிடித்தது.
  நான் உங்களிடம் இருந்து நிறய்ய கற்று கொள்ளவேண்டும்.

  மேலும் மேலும் உங்க எழுத்துக்கள் வழி உலகம் முழுக்க பேரும் புகழும் பெறவேண்டும் என்று வாழ்த்தி வரும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  நன்றி நன்றி. நன்றி.

  ReplyDelete
 20. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீங்கள் மென்மேலும் பல படைப்புகளை தர வேண்டுகிறேன்

  ReplyDelete
 21. உங்களுடைய சாதனைகள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. இன்னும் நிறைய படைப்புகள் பத்திரிகைகளில் வெளிவர வாழ்த்துக்கள்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.

  ReplyDelete
 25. Muthan mathaai padiththen.vaazhga.

  ReplyDelete
 26. வாழ்த்துகள்

  வெற்றிகள் பற்பல பெற்றிட
  வேண்டுகிறோம் இறைவனிடம்

  கற்றததைக் கவிதையாய் கதையாய்
  வேண்டுகிறோம் உங்களிடம் :)))


  அன்புடன்

  திகழ்

  /வெகு சிலரைத் தவிர எவரையும் நேரில் சந்தித்ததில்லை. /

  கண்டிப்பாக நேரம் கிடைக்கும்பொழுது சந்திக்கிறேன்

  ReplyDelete
 27. ஒவ்வொரு படைப்பின் தலைப்புக்கும் லிங்க்குகள் கொடுத்து இந்த ஒரு பதிவை எழுதி முடிக்கவே எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று யோசித்தேன். அப்படி என்றால் மற்ற பதிவுகள் எழுதவும், மற்ற படைப்புகள் எழுதவும் எவ்வளவு உழப்பு தேவைப்பட்டிருக்கும் தங்களுக்கு. வாழ்த்துக்கள்..... புத்தாண்டுக்கும் சேர்த்து..

  ReplyDelete
 28. இன்று உங்களது பல திறமைகளை பற்றி கண்டு வியந்தேன்...! படித்து முடித்ததும் ஒரு நிறைவு வருகிறது...

  இந்த புது வருடம் உங்களுக்கு இன்னும் சிறப்பாக அமையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்...

  பிரியங்களுடன் கௌசல்யா

  ReplyDelete
 29. மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா.இனிதாய் மகிழ்ச்சியாய் வரட்டும் 2011 !

  ReplyDelete
 30. மனம் கனிந்த புத்தாண்டு வாழ்துக்கள்!

  ReplyDelete
 31. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய்
  மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.

  ReplyDelete
 32. புத்தாண்டு வாழ்த்துக்கள், ராமலக்‌ஷ்மி,
  உங்களை பற்றி அறிந்ததில் சந்தோஷம்,

  ReplyDelete
 33. 2011 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. //சொல்ல விழையும் கருத்துக்களைப் பத்து பதினைந்து வரிகளில் வெளிப்படுத்திவிட்டு நகரும் செளகரியமாகக் கவிதை//

  ஆமாக்கா, நறுக்-சுருக்னு சொல்லிடலாம். கட்டுரயா எழுதும்போது, சரியான வார்த்தை/வாக்கியங்களைத் தேடணும்!!

  புகைப்படக் கலை/கருவியைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. உங்கத் திறமையை வீணாக்காம, ஏன் இதையே தொழிலாகவும் செய்யக்கூடாது? இம்மாதிரி கலையார்வப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்குமே!

  ReplyDelete
 35. வாழ்த்துகள் அக்கா.

  ReplyDelete
 36. அழைப்பை ஏற்று பதிந்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி! உங்களுக்குள் இருக்கும் வைரத்தை பட்டை தீட்ட சுற்றியிருக்கும் நட்புகளும் உறவுகளும் கைகொடுத்த விதத்தையும் அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். முதல் சுற்றில் வெற்றி பெற்ற படைப்புகளுக்கும், வெற்றிகள் மென்மேலும் தொடரவும், உங்களுக்கு என்னுடைய மனம் கனிந்த நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 37. சண்முககுமார் said...
  //""எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே எழுத்தின் மேல் மயக்கம் இருப்பதை மறுக்க முடியாதென்றே எண்ணுகிறேன்""

  வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  இதையும் படிச்சி பாருங்க
  சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?//

  வாசித்தேன்.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சண்முககுமார்.

  ReplyDelete
 38. Dr.எம்.கே.முருகானந்தன் said...
  //வளமும் நலமும்
  நிதமும் நிறையும்
  புத்தாண்டாக 2011
  அமைய வாழ்த்துகிறேன்.//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் டாக்டர்.

  ReplyDelete
 39. ஆயில்யன் said...
  //வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம் 2011

  மேலும் பல படைப்புக்களோடு தொடருங்கள் :)//

  நன்றி ஆயில்யன்:)!

  ReplyDelete
 40. தமிழ் பிரியன் said...
  //வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம் 2011

  மேலும் பல படைப்புக்களோடு தொடருங்கள் :)//

  நன்றி தமிழ் பிரியன்:)!

  ReplyDelete
 41. நெல்லை சிவா said...
  //ரொம்ப நாளா பதிவுலகப் பக்கம் வராமல் போனதில், எவ்வளவு miss பண்ணியிருக்கிறேன்..

  நெறைய கலக்கியிருக்கீங்க..! போட்டோக்கள் எல்லாம் ரொம்ப அருமை!

  புத்தாண்டு வாழ்த்துக்கள், புதிய ஆண்டு மேலும் மெருகு கூட்ட வாழ்த்துக்கள்!//

  நன்றிகள் சிவா. இவ்வருடம் மாதம் ஒரு பதிவாவது தரப் பாருங்கள்:)!

  ReplyDelete
 42. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //அருமையான நினைவுகளைப் பகிர்ந்திருக்கீங்க.

  அடுத்துவரும் 2011 ல் இன்னும் பல சிறப்புக்களைப் பெறவேண்டுமாய் வாழ்த்துக்கிறேன்..:)//

  மிக்க நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 43. goma said...
  //ஒரு ஆலமரம் வளர்கிறது....//

  உரமிட்ட உங்களுக்கு நன்றிகள்:)!

  ReplyDelete
 44. அம்பிகா said...
  //மென்மேலும் வளர, வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் தோழி.//

  அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அம்பிகா.

  ReplyDelete
 45. மாதேவி said...
  //2011 இனிதாய் ஒளிபரப்பட்டும்.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 46. மோகன் குமார் said...
  //பதிவு சற்று பெரிது ஆனதன் காரணம்: உங்க படைப்புகள் வந்த புத்தகங்கள் & நீங்கள் வாங்கிய விருதுகள் குறிப்பிட்டதால் தான்.. பின்னே வாரம் ஒண்ணு ரெண்டு பப்ளிஷ் ஆகிடுது. ம்ம். கலக்குங்க

  ஒரு பிரபலத்தின் பின்னணி அறிந்ததில் மகிழ்ச்சி

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்//

  மலர்ந்த நினைவுகளின் பகிர்வும் நீளமே:)! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் மோகன் குமார்:)!

  ReplyDelete
 47. asiya omar said...
  //அருமையான பகிர்வு.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் ஆசியா.

  ReplyDelete
 48. கோமதி அரசு said...
  ***//தேர்ச்சி பெற்று விட்டோம் என எண்ணி விட்டால் தேங்கி நின்று விடுவோம். முடிவற்ற தேடலிலும், கற்றலிலுமே கலைகள் வளருகின்றன.//

  ஆம் ராமலக்ஷ்மி.

  வாழ்க்கை என்பது முயற்சி.
  முன்னேற்றப் பாதையில் முன்னேறிக் கோண்டே இருங்கள் ராமலக்ஷ்மி.

  2011லில் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்!
  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  வாழ்க வளமுடன்.//***

  உண்மைதான். கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் கோமதிம்மா.

  ReplyDelete
 49. ஈரோடு கதிர் said...
  //நீங்கள், பல தளங்களில் கலக்கிக் கொண்டிருந்தாலும், எழுத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் பங்கெடுக்கலாம் எனத் தோன்றுகிறது. எழுத எண்ணற்றவை இரைந்து கிடக்கின்றன என்பதையும் அறிவீர்கள்.

  வாழ்த்துகள்//

  தங்கள் ஆலோசனையை மனதில் நிறுத்தி செயல் படுகிறேன். நன்றிகள் கதிர்.

  ReplyDelete
 50. ஸ்ரீராம். said...
  //எல்லோருக்குமே எழுத்தின் மீது மயக்கம் இருக்கும் என்று சொல்லி எழுத்துகள் பற்றியும் அதை விட புகைப் படம் எடுத்த அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டது சுவையாக இருந்தது. உங்கள் கேமிரா ரகசியமும் தெரிந்தது! இரண்டு நாள் முன்பு பிறந்த நாளா...பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழ் மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  இனிய வாழ்த்துக்கள் யாவற்றிற்கும் நன்றிகள் ஸ்ரீராம்.

  ReplyDelete
 51. அமைதிச்சாரல் said...
  //புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலஷ்மி..//

  நன்றிகள் சாரல்.

  ReplyDelete
 52. கே. பி. ஜனா... said...
  //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 53. நானானி said...
  //அருமையாயிருக்கு உங்கள் எழுத்துலக, பதிவுலக, கேமராவுலக வரலாறு.

  புத்..புத்..புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!//

  ஆசிகளாய் வாழ்த்துக்கள். நன்றிகள் நானானி:)!

  ReplyDelete
 54. வருண் said...
  //நீங்க சொன்னதே ரொம்ப அழகா இருக்கு. அதனால் அதைத் திருடி உங்களையும் உங்க குடும்பத்தினரையும் வாழ்த்துக்கிறேன்!

  புத்தாண்டு ஒளிமயமாக அமைந்து,
  அனைவரது வாழ்விலும் ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்து விளங்க
  என் அன்பான வாழ்த்துக்கள்!

  -வருண்//

  நன்றிகள் வருண்:)!

  ReplyDelete
 55. Vijisveg Kitchen said...
  //முதலில் ராமலஷ்மி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்க பொன்னான நேரத்தை தொடர் பதிவுக்கு உங்க கவிதை,கதை,ஒவிய,மற்றும் எல்லாம் சேர்ந்த எழுத்து நடையில் எழுதி எங்க எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திட்டிங்க அதற்க்கு கோடி நன்றி.

  நான் உங்க கவிதை விசிறி.
  உங்க புகைபட கலை நானும் ரசித்து பார்ப்பேன் எனக்கு மிகவும் பிடித்தது.
  நான் உங்களிடம் இருந்து நிறய்ய கற்று கொள்ளவேண்டும்.

  மேலும் மேலும் உங்க எழுத்துக்கள் வழி உலகம் முழுக்க பேரும் புகழும் பெறவேண்டும் என்று வாழ்த்தி வரும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி:)! இதை எழுதும் எண்ணத்தை விதைத்த உங்களுக்கு மீண்டும் நன்றிகள் விஜி:)!

  ReplyDelete
 56. எல் கே said...

  //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீங்கள் மென்மேலும் பல படைப்புகளை தர வேண்டுகிறேன்//

  மிக்க நன்றி எல் கே.

  ReplyDelete
 57. அமைதி அப்பா said...
  //உங்களுடைய சாதனைகள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் அமைதி அப்பா.

  ReplyDelete
 58. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி புவனேஸ்வரி.

  ReplyDelete
 59. ஸாதிகா said...
  //இன்னும் நிறைய படைப்புகள் பத்திரிகைகளில் வெளிவர வாழ்த்துக்கள்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் ஸாதிகா.

  ReplyDelete
 60. சுசி said...
  //மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.//

  நன்றிகள் சுசி.

  ReplyDelete
 61. santhilal said...
  //Muthan mathaai padiththen.vaazhga.//

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 62. திகழ் said...
  //வாழ்த்துகள்

  வெற்றிகள் பற்பல பெற்றிட
  வேண்டுகிறோம் இறைவனிடம்

  கற்றததைக் கவிதையாய் கதையாய்
  வேண்டுகிறோம் உங்களிடம் :)))

  /வெகு சிலரைத் தவிர எவரையும் நேரில் சந்தித்ததில்லை. /

  கண்டிப்பாக நேரம் கிடைக்கும்பொழுது சந்திக்கிறேன்//

  மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் திகழ்:)!

  ReplyDelete
 63. yeskha said...
  //ஒவ்வொரு படைப்பின் தலைப்புக்கும் லிங்க்குகள் கொடுத்து இந்த ஒரு பதிவை எழுதி முடிக்கவே எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று யோசித்தேன். அப்படி என்றால் மற்ற பதிவுகள் எழுதவும், மற்ற படைப்புகள் எழுதவும் எவ்வளவு உழப்பு தேவைப்பட்டிருக்கும் தங்களுக்கு. வாழ்த்துக்கள்..... புத்தாண்டுக்கும் சேர்த்து..//

  மிக்க நன்றி எஸ் கா:)!

  ReplyDelete
 64. Kousalya said...
  //இன்று உங்களது பல திறமைகளை பற்றி கண்டு வியந்தேன்...! படித்து முடித்ததும் ஒரு நிறைவு வருகிறது...

  இந்த புது வருடம் உங்களுக்கு இன்னும் சிறப்பாக அமையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்...

  பிரியங்களுடன் கௌசல்யா//

  அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி கெளசல்யா.

  ReplyDelete
 65. ஹேமா said...
  //மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா.இனிதாய் மகிழ்ச்சியாய் வரட்டும் 2011 !//

  மிக்க நன்றி ஹேமா.

  ReplyDelete
 66. மனக்குதிரை said...
  //மனம் கனிந்த புத்தாண்டு வாழ்துக்கள்!//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் மனக்குதிரை.

  ReplyDelete
 67. சிவகுமாரன் said...
  //இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய்
  மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.//

  மிக்க நன்றி சிவகுமாரன்.

  ReplyDelete
 68. Jaleela Kamal said...
  //புத்தாண்டு வாழ்த்துக்கள், ராமலக்‌ஷ்மி,
  உங்களை பற்றி அறிந்ததில் சந்தோஷம்,//

  மிக்க நன்றி ஜலீலா:)!

  ReplyDelete
 69. சே.குமார் said...
  //2011 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்//

  நன்றிகள் குமார்.

  ReplyDelete
 70. ஹுஸைனம்மா said...
  ***//சொல்ல விழையும் கருத்துக்களைப் பத்து பதினைந்து வரிகளில் வெளிப்படுத்திவிட்டு நகரும் செளகரியமாகக் கவிதை//

  ஆமாக்கா, நறுக்-சுருக்னு சொல்லிடலாம். கட்டுரயா எழுதும்போது, சரியான வார்த்தை/வாக்கியங்களைத் தேடணும்!!/***

  உண்மைதான்:)! அதே நேரம் நீங்க சரளமா எழுதும் நடைக்கு ரசிகை நான்.

  //புகைப்படக் கலை/கருவியைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. உங்கத் திறமையை வீணாக்காம, ஏன் இதையே தொழிலாகவும் செய்யக்கூடாது? இம்மாதிரி கலையார்வப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்குமே!//

  அந்த அளவுக்குத் தேர்ச்சி பெறவில்லை இன்னும். எனவே அம்மாதிரியான சிந்தனை இதுவரையில் இல்லை:)! மிக்க நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 71. கடையம் ஆனந்த் said...
  //வாழ்த்துகள் அக்கா.//

  நன்றிகள் ஆனந்த். நலமா:)?

  ReplyDelete
 72. கவிநயா said...
  //அழைப்பை ஏற்று பதிந்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி! உங்களுக்குள் இருக்கும் வைரத்தை பட்டை தீட்ட சுற்றியிருக்கும் நட்புகளும் உறவுகளும் கைகொடுத்த விதத்தையும் அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். முதல் சுற்றில் வெற்றி பெற்ற படைப்புகளுக்கும், வெற்றிகள் மென்மேலும் தொடரவும், உங்களுக்கு என்னுடைய மனம் கனிந்த நல்வாழ்த்துகள்!//

  வாழ்த்துக்களுக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்த தங்கள் அழைப்புக்கும் மீண்டும் என் நன்றிகள் கவிநயா:)!

  ReplyDelete
 73. தமிழ்மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும், தமிழிஷில் வாக்களித்த 23 பேருக்கும் என் நன்றிகள்!

  ReplyDelete
 74. எந்த கல்லும் ஒரே ஒரு அடியில் சிற்பமாகிவிடாது என்ற தன்னம்பிக்கை வரிகளை உணர்த்தியது இந்த கட்டுரை. ஒருவன் தவறே செய்யவில்லை என்றால் அவன் எதுவுமே செய்யவில்லை என்று அர்த்தம்-இந்த வாக்கியம் நான் எங்கோ எப்போதோ கேட்டது.
  அச்சு ஊடகத்திலும் தொடர்ந்து முத்திரை பதிக்க வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 75. இனிய நினைவுகள்.. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 76. பிரமிப்பாக இருக்கிறது.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :-)

  ReplyDelete
 77. வாழ்த்துக்கள் அக்கா:)

  இந்தப் புத்தாண்டிலும் வெற்றிகள் தொடந்துவர அன்பான வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 78. நடையும் மொழியும் மேம்பட வளம் பெற ஒரே வழி வாசிப்பு. அதற்கே அதிக நேரம் ஒதுக்க வேண்டும் // சரியா சொல்லி இருக்கீங்க.. இத இந்த வருடம் செயல் படுத்தணும்பா நானும்..

  ReplyDelete
 79. சரண் said...
  //எந்த கல்லும் ஒரே ஒரு அடியில் சிற்பமாகிவிடாது என்ற தன்னம்பிக்கை வரிகளை உணர்த்தியது இந்த கட்டுரை. ஒருவன் தவறே செய்யவில்லை என்றால் அவன் எதுவுமே செய்யவில்லை என்று அர்த்தம்-இந்த வாக்கியம் நான் எங்கோ எப்போதோ கேட்டது.//

  உண்மைதான். அதைவிட தவறுகளில் கற்று மேலே கவனமாக செயல்படலாம்தான்! முக்கியமான விழா ஒன்றில் ஃப்லிம் ரோலே போட மறந்து படமெடுத்த அனுபவமும் உண்டு:)!

  //அச்சு ஊடகத்திலும் தொடர்ந்து முத்திரை பதிக்க வாழ்த்துக்கள் மேடம்.//

  மிக்க நன்றி சரண்:)!

  ReplyDelete
 80. க.பாலாசி said...
  //இனிய நினைவுகள்.. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...//

  மிக்க நன்றி பாலாசி:)!

  ReplyDelete
 81. "உழவன்" "Uzhavan" said...
  //பிரமிப்பாக இருக்கிறது.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :-)//

  உங்களது யதார்த்தமான, பெரிய பெரிய விஷயங்களைச் சுருங்கச் சொல்லும் அருமையான கவிதைகளைப் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருக்கிறேன் நான்:)! நன்றிகள் உழவன்.

  ReplyDelete
 82. சுந்தரா said...
  //வாழ்த்துக்கள் அக்கா:)

  இந்தப் புத்தாண்டிலும் வெற்றிகள் தொடந்துவர அன்பான வாழ்த்துக்கள் :)//

  மிக்க நன்றி சுந்தரா:)!

  ReplyDelete
 83. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  ***//நடையும் மொழியும் மேம்பட வளம் பெற ஒரே வழி வாசிப்பு. அதற்கே அதிக நேரம் ஒதுக்க வேண்டும் // சரியா சொல்லி இருக்கீங்க.. இத இந்த வருடம் செயல் படுத்தணும்பா நானும்..//***

  சொல்லியபடி செய்யணுமே என்கிற வேகத்தில்.. கவலையில்.. நானும்.., செய்வோம் வாங்க:)!

  ReplyDelete
 84. Now I know why your photos are great Ramalakshmi. Wishing you and your dear ones a great 2011

  ReplyDelete
 85. Nice post akka... neraya post ore edathil paarka mudintha sandhosamum kooda..nanri

  ReplyDelete
 86. பூங்கொத்துடன் மேலும் சிறக்க வாழ்த்துகள்!

  ReplyDelete
 87. 2010 உங்களுக்கு மிகச் சிறப்பாகவே இருந்திருக்கிறதென்று தெரிகிறது. இவ்வருடம் அதை விட சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் மேடம்.

  ReplyDelete
 88. சாய் said...
  //Now I know why your photos are great Ramalakshmi. Wishing you and your dear ones a great 2011//

  மகிழ்ச்சியும் நன்றியும் சாய் :)!

  ReplyDelete
 89. அப்பாவி தங்கமணி said...
  //Nice post akka... neraya post ore edathil paarka mudintha sandhosamum kooda..nanri//

  நன்றிகள் புவனா:)!

  ReplyDelete
 90. அன்புடன் அருணா said...
  //பூங்கொத்துடன் மேலும் சிறக்க வாழ்த்துகள்!//

  நன்றிகள் அருணா.

  ReplyDelete
 91. January 5, 2011 11:29 AM


  விக்னேஷ்வரி said...
  //2010 உங்களுக்கு மிகச் சிறப்பாகவே இருந்திருக்கிறதென்று தெரிகிறது. இவ்வருடம் அதை விட சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் மேடம்.//

  வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி விக்னேஷ்வரி:)!

  ReplyDelete
 92. அக்கா, புத்தாண்டிலும் மென்மேலும் சாதிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
  இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 93. @ Chitra,

  மிக்க நன்றி சித்ரா:)!

  ReplyDelete
 94. ""எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே எழுத்தின் மேல் மயக்கம் இருப்பதை மறுக்க முடியாதென்றே எண்ணுகிறேன்""

  மிகச்சரியான ஒன்று அக்கா...

  இந்த வருடம் உங்களுக்கு இன்னும் சிறப்புற அமைய என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
  உங்கள் எழுத்துக்களை தொடர ஆவலாய் நானும்....

  ReplyDelete
 95. @ கவிநா,

  மகிழ்ச்சியும் நன்றியும் கவிநா:)!

  ReplyDelete
 96. //நடையும் மொழியும் மேம்பட வளம் பெற ஒரே வழி வாசிப்பு. அதற்கே அதிக நேரம் ஒதுக்க வேண்டும்//

  மிகச்சரியான வார்த்தைகள்..

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin