Wednesday, January 4, 2012

‘விரியும் எல்லைகளால் பெங்களூர் பெற்றதும் இழந்ததும்...’ - வடக்குவாசல் கட்டுரை - நான் எடுத்த படங்களுடன்

நான்கு பக்கக் கட்டுரையுடன், அட்டையில் என் படத்தையும் வெளியிட்டு அங்கீகாரம் தந்திருக்கும் வடக்குவாசலுக்கு நன்றி!

தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொருவர் ஆசிரியர் கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதி வருகிறார்கள். இம்மாதம் பெங்களூர் குறித்து எழுதும் வாய்ப்பினை ஆசிரியர் எனக்கு அளித்திருந்தார். எடுத்த படங்கள் ஏழுடன் கட்டுரை:

***

புதுவருடத்தின் தொடக்கத்தில் வடக்குவாசல் தந்திருக்கும் அங்கீகாரத்துடன் கிடைத்த இன்னொன்றாக, 1 ஜனவரி தமிழ்மணம் அறிவித்த சென்றவருட ‘முன்னணி 100’ வலைப்பூக்களின் பட்டியல். அதில் முத்துச்சரமும்.., நன்றி தமிழ்மணம்!
2011 blog rank 26

சென்றவருடம் போல் இவ்வருடம் வாரம் இரண்டு பதிவுகளாக வழங்க இயலுமா என்பது எனக்குள் கேள்விக்குறியாக இருக்கும் வேளையில் கிடைத்த இடம் ஊக்கம் தருவதாக இருப்பதை மறுக்க இயலாது. இதை சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு நன்றி! அதேநேரம் பல காரணிகளால் நிர்ணயிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிற இவ்வரிசையை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளாமல் அவரவர் வழியில் தொடர்ந்து நல்ல பதிவுகளைத் தருவதில் மட்டும் அக்கறை காட்டி வந்தால் அது பதிவுலகம் ஆரோக்கியமாக இயங்க வழிவகுக்குமென்பது என் தாழ்மையான கருத்து.
***

62 comments:

 1. அக்கா வாழ்த்துக்கள்... வடக்கு வாசலில் கதை வெளியானதுக்கும் தமிழ்மண ரேங்க்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. எளிய மொழியில் தெளிவான கட்டுரை அருமை

  தமிழ் மணம் குறித்து இறுதியில் நீங்கள் சொன்னது சரியே !!

  ReplyDelete
 3. எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 4. வாழ்த்துகள் ராமல்ஷ்மி.. வடக்குவாசல் உஙக்ள் எழுத்து வாசலை சிறப்பாக திறந்துவிட்டிருக்கிறது.

  ReplyDelete
 5. ராமலக்ஷ்மி, முதலில் வாழ்த்துக்கள்.
  வடக்கு வாசலில் கட்டுரை மிக அருமை.

  பெங்களூர் மக்கள் வாழ விரும்பி தேர்ந்தெடுக்கும் நகரமாய் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சி.

  மரங்கள் வெட்டப் படுவதுவேதனையான விஷயம்.

  விதான் செளதாவை நான் முதன் முதலில் பள்ளி சுற்றுலா வந்த போது பார்த்து அதன் அழகை கண்டு வியந்தது இன்னும் மறக்க முடியவில்லை.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் மாம் !

  படங்களும் கட்டுரையும் அருமை!
  பெங்களூருவில் அதிகமாகும் மக்கள் பெருக்கத்தையும் ,போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் அரசு திட்டங்கள் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் .
  No doubt!blore is the best place to live in India !!!

  ReplyDelete
 7. வடக்கு வாசலில் கட்டுரை மிக அருமை.

  பாராட்டுக்கள்..

  தமிழ்மண ரேங்க்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. வடக்கு வாசல் கட்டுரை மிகப் பிரமாதம்
  தங்கள் உழைப்புமிகச் சரியாக அங்கீகரிக்கப்பட்ட்து
  மகிழ்ச்சி அளிக்கிறது
  தங்கள் பதிவுக்கென பதிவுலகில் ஒரு தனியான
  உயர்வான இடம் உள்ளது
  தயவு செய்து வாரம் இரண்டு பதிவுகளாவது தவறாமல் தரவும்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 10. வடக்கு வாசலில் கதை வெளியானதுக்கும் தமிழ்மண ரேங்க்கும் வாழ்த்துக்கள்....


  கட்டுரை நல்லா இருக்கு.

  ReplyDelete
 11. விரியும் எல்லைகள் கட்டுரை அருமை

  சித்ரகலா பரிஷத் நடத்திய தஞ்சாவூர் பெயின்டிங்கில் என் சகோதரி மாலதி அவர்களும் ஒரு முறை கண்கட்ட்சி நடத்தி இருக்கிறார்கள்

  அவருக்கு வயது 70 க்கு மேல்
  அவ சமீபத்தில் அந்தக் கண்காட்சியில் கிட்டத்தட்ட 70 ஓவியங்கள்வைத்து பார்வையாளரைக் கவர்ந்தார்

  நானும் அங்கே வந்திருந்தேன்

  நீங்கள் சொல்வது போல் பெங்களூர் ஒரு காலத்தில் பூங்கா நகரமாக இருந்தது. இப்போது கட்டிடங்களும் , பாலங்களும் நிறைந்த நெரிசல் மிக்க நகரமாக விளங்குகிறது

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

  ReplyDelete
 12. எல்லை விரிய, விரிய - பெங்களுருக்கு மட்டுமல்ல அனேக நகரங்களுக்கு இது தான் ஏற்படுகிறது. சரியாக சொல்லி இருக்கிறிர்கள்.

  ReplyDelete
 13. பெங்களூரைப் பத்தி நான் மனசுல கற்பனை செஞ்சு வெச்சுருந்த பிம்பம் அதை முதன்முதல்ல பார்த்தப்பவே லேசா விரிசல் விட்டுடுச்சு. இப்ப மற்ற பெரு நகரங்களுக்கும் அதுக்கும் ரொம்பவும் வித்தியாசம் இருக்கறதா எனக்கு தோணலை.

  அங்கே இருக்கும் விஷயங்களை அருமையா கோடிட்டு காட்டியிருக்கும் கட்டுரை அருமை.

  ReplyDelete
 14. வாழ்த்துகள்
  வடக்கு வாசல் மற்றும் தமிழ் மணம் அங்கிகரிப்புக்களுக்காக
  இன்றைய பெங்களுரு குறித்து இதை விட பிரமாதமாக எழுதிவிட முடியாது என்பது என் கருத்து
  அன்றைய பெங்களூர் இன்ற பெங்களுருவில் இல்லை
  மரங்கள் என்றுமே இயற்கையின் கண்கள்
  அதை கான்க்ரிட் காடுகளால் ஈடுகட்டமுடியாது
  என்றும் அன்புடன்
  சா.கி.நடராஜன்.

  ReplyDelete
 15. உங்கள் வளர்ச்சி கண்டு மிகவும் சந்தோஷம்.வாழ்த்துகள் முத்தக்கா !

  ReplyDelete
 16. வடக்கு வாசல் உங்களை உயர்த்திப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை..வாழ்த்துகள்..

  ReplyDelete
 17. வடக்கு வாசல் கவுரவத்துக்கும் தமிழ்மண முன்னணி இடத்துக்கும் எங்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. அன்பின் ராமலக்ஷ்மி - மிக்க மகிழ்ச்சி - வடக்கு வாசலில் படத்துடன் கூடிய அருமையான கட்டுரை வெளிவந்தமைக்கும் தமிழ் மணத்தில் 26ம் இடம் பிடித்ததற்கும் - கருத்துடன் கூடிய புகைப் படங்கள் இட்டமைக்கும் நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 19. எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் பார்த்த் பங்களூர் நகரம் பின்னர் வந்த தொண்ணூறுகளிலோ,2000 ஆண்டுக்குப் பின்னரோ, சமீபத்தில் பார்த்தபோதோ இல்லை என்பது உண்மை. நகரம் நரகமாகிக் கொண்டு வருவதும் கண்கூடாய்த் தெரிந்தது. நல்லதொரு அலசல்.

  வடக்கு வாசலில் புத்தாண்டில் இடம்பெற்றமைக்கும், தமிழ் மணம் முன்னணிக்கும் வாழ்த்துகள்.

  பி.கு. எனக்கு இந்தத் தமிழ்மணம் ராங்கிங் பத்தி இப்போத் தான் தெரியும்! :)))))))))எப்போவோ தமிழ்மணம் போவதால் அந்த வட்டத்துக்குள் நடப்பது தெரிவதில்லை! :)))))))))))

  ReplyDelete
 20. கட்டுரை ரொம்ப அருமையா இருக்கு ராமலக்ஷ்மி. முன்னம் ஒரு காலத்துலே (1975) இந்த கெங்கேரி போகும் சாலையில்( சிட்டி பஸ் ஸ்டாண்டுலே இருந்து ஏழு மைல் தொலைவில்) வரும் ஒரு இடத்தில் குப்பை கொட்டினேன். நயந்தனஹள்ளின்னு நினைவு.

  டவுனுக்குப்போக ஜோடிபஸ் ஓடிக்கிட்டு இருந்துச்சு. நகரில் சாலையின் ரெண்டு பக்கங்களிலும் அடர்த்தியான பெரிய மரங்கள். சூரியன் கூட ஊடுருவி வரத்தயங்குவான். ஜாலியா பேசிக்கிட்டே(!!!) நடந்துபோன காலங்கள் நினைவுக்கு வருது. கெம்பகௌடா, மெஜஸ்டிக் சர்க்கிள்கள் எல்லாம் ரொம்பவே நல்லா இருக்கும்.

  பஸ் ஸ்டாண்டை விரிவு படுத்தறோமுன்னு மரங்களை வெட்ட ஆரம்பிச்சதுதான் ஆரம்பமுன்னு நினைக்கிறேன். அப்ப கூட்டம் கூட அவ்வளவா இல்லை. நாட்டுலே ஒரு 40 கோடி இருக்குமோ என்னவோ!

  ஒரு விஷயம் தெரியுமா? உங்க ஊரு, எங்க ஊருக்கு அக்காவாக்கும் கேட்டோ!!!!!!!
  http://thulasidhalam.blogspot.com/2005/02/blog-post_03.html

  வடக்கு வாசலில் வந்தமைக்கு இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.பெங்களூரு பற்றிய கட்டுரை அருமை.

  ReplyDelete
 22. பெங்களூர் பற்றிய தங்களது கட்டுரை சிறப்பாக இருக்கு.

  நானும் பெங்களூரில்தான் இருக்கிறேன்,நான் 1998 ல் பெங்களூர் வந்தேன்,அப்பொழுது இருந்த மாதிரி கூட இந்த ஊர் இப்பொழுது இல்லை,இருந்தாலும் எனக்கு பெங்களூர் ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 23. அக்கா, கதை கவிதை ஃபோட்டோ மட்டுமல்லாமல், சமூகக் கட்டுரையும் (சரியானப் பேரா?) அழகாக வருகிறது உங்களுக்கு!!

  பலரும் சொல்லிருப்பதுபோல, பாம்பே, டில்லி, பெங்களூர் நகரங்களை நான் 80-களில் பார்த்துப் பதிய வைத்திருக்கும் நல்ல-சுத்தமான பிம்பங்கள் உடைக்கப்படுமோ (சென்னையைப் போல) என்பதற்குப் பயந்தே அங்கேயெல்லாம் மறுபடி வர பயமாருக்கு!! (இல்லைன்னாலும் மாசாமாசம் நாங்க டூர் போயிட்டு இருக்கமாதிரித்தான் பில்டப்!! :-)))) )

  வடக்குவாசல், தமிழ்மணம் எல்லாவற்றிற்கும் வாழ்த்துகள் அக்கா!!

  ReplyDelete
 24. உங்க கட்டுரை மூலமா மறுபடியும் ஒருதடவை பெண்களூருக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு. அந்த ஊர்ல இருந்து பழகிட்டா வேற எந்த ஊரும் நமக்கு பிடிக்காது. வடக்கு வாசல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. அருமையான கட்டுரை.

  நீங்கள் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
 26. சசிகுமார் said...
  //அக்கா வாழ்த்துக்கள்... வடக்கு வாசலில் கதை வெளியானதுக்கும் தமிழ்மண ரேங்க்கும் வாழ்த்துக்கள்....//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 27. மோகன் குமார் said...
  //எளிய மொழியில் தெளிவான கட்டுரை அருமை

  தமிழ் மணம் குறித்து இறுதியில் நீங்கள் சொன்னது சரியே !!//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 28. Rathnavel said...
  //எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.//

  நன்றியும் தங்களுக்கு வாழ்த்துகளும் சார்.

  ReplyDelete
 29. ஷைலஜா said...
  //வாழ்த்துகள் ராமல்ஷ்மி.. வடக்குவாசல் உஙக்ள் எழுத்து வாசலை சிறப்பாக திறந்துவிட்டிருக்கிறது.//

  ஆம் ஷைலஜா. நன்றி.

  ReplyDelete
 30. கோமதி அரசு said...
  //ராமலக்ஷ்மி, முதலில் வாழ்த்துக்கள்.
  வடக்கு வாசலில் கட்டுரை மிக அருமை.

  பெங்களூர் மக்கள் வாழ விரும்பி தேர்ந்தெடுக்கும் நகரமாய் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சி.//

  ஆம், இழந்தவற்றுக்கு மத்தியிலும் இது ஆறுதலான செய்தி.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 31. ராஜ நடராஜன் said...
  //Oh!That's a good news.Congrats!//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 32. MangaiMano said...
  //வாழ்த்துக்கள் மாம் !

  படங்களும் கட்டுரையும் அருமை!
  பெங்களூருவில் அதிகமாகும் மக்கள் பெருக்கத்தையும் ,போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் அரசு திட்டங்கள் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் .
  No doubt!blore is the best place to live in India !!!//

  நன்றி மங்கை. இறுதியாக நீங்கள் சொல்லியிருப்பதும் உண்மையே:)!

  ReplyDelete
 33. இராஜராஜேஸ்வரி said...
  //வடக்கு வாசலில் கட்டுரை மிக அருமை.

  பாராட்டுக்கள்..

  தமிழ்மண ரேங்க்கு வாழ்த்துக்கள்..//

  மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 34. Ramani said...
  //வடக்கு வாசல் கட்டுரை மிகப் பிரமாதம் தங்கள் உழைப்புமிகச் சரியாக அங்கீகரிக்கப்பட்ட்து மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் பதிவுக்கென பதிவுலகில் ஒரு தனியான
  உயர்வான இடம் உள்ளது. தயவு செய்து வாரம் இரண்டு பதிவுகளாவது தவறாமல் தரவும்.//

  முயன்றிடுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 35. MANO நாஞ்சில் மனோ said...
  //வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!//

  நன்றி மனோ!

  ReplyDelete
 36. Lakshmi said...
  //வடக்கு வாசலில் கதை வெளியானதுக்கும் தமிழ்மண ரேங்க்கும் வாழ்த்துக்கள்....

  கட்டுரை நல்லா இருக்கு.//

  மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 37. தமிழ்த்தேனீ said...
  //விரியும் எல்லைகள் கட்டுரை அருமை

  சித்ரகலா பரிஷத் நடத்திய தஞ்சாவூர் பெயின்டிங்கில் என் சகோதரி மாலதி அவர்களும் ஒரு முறை கண்கட்ட்சி நடத்தி இருக்கிறார்கள்

  அவருக்கு வயது 70 க்கு மேல்
  அவர் சமீபத்தில் அந்தக் கண்காட்சியில் கிட்டத்தட்ட 70 ஓவியங்கள்வைத்து பார்வையாளரைக் கவர்ந்தார்

  நானும் அங்கே வந்திருந்தேன்//

  70 ஓவியங்களா? பாராட்டுக்குரியது. மீண்டும் இங்கு நடத்துவார்களெனில் அவசியம் தெரிவியுங்கள்.

  //நீங்கள் சொல்வது போல் பெங்களூர் ஒரு காலத்தில் பூங்கா நகரமாக இருந்தது. இப்போது கட்டிடங்களும் , பாலங்களும் நிறைந்த நெரிசல் மிக்க நகரமாக விளங்குகிறது//

  ஆம், வசிப்பவர் மட்டுமின்றி வருபவரும் இப்படியே உணருகின்றனர்.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 38. தமிழ் உதயம் said...
  //எல்லை விரிய, விரிய - பெங்களுருக்கு மட்டுமல்ல அனேக நகரங்களுக்கு இது தான் ஏற்படுகிறது. சரியாக சொல்லி இருக்கிறிர்கள்.//

  உண்மைதான். இந்த பிரச்சனைகள் பொதுவானதாகவே உள்ளன. கருத்துக்கு நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 39. அமைதிச்சாரல் said...
  //பெங்களூரைப் பத்தி நான் மனசுல கற்பனை செஞ்சு வெச்சுருந்த பிம்பம் அதை முதன்முதல்ல பார்த்தப்பவே லேசா விரிசல் விட்டுடுச்சு. இப்ப மற்ற பெரு நகரங்களுக்கும் அதுக்கும் ரொம்பவும் வித்தியாசம் இருக்கறதா எனக்கு தோணலை.

  அங்கே இருக்கும் விஷயங்களை அருமையா கோடிட்டு காட்டியிருக்கும் கட்டுரை அருமை.//

  20 ஆண்டுகளுக்கு முன் இருந்த அழகு இப்போது இல்லை சாந்தி.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 40. சா.கி.நடராஜன். said...
  //வாழ்த்துகள்
  வடக்கு வாசல் மற்றும் தமிழ் மணம் அங்கிகரிப்புக்களுக்காக
  இன்றைய பெங்களுரு குறித்து இதை விட பிரமாதமாக எழுதிவிட முடியாது என்பது என் கருத்து
  அன்றைய பெங்களூர் இன்ற பெங்களுருவில் இல்லை
  மரங்கள் என்றுமே இயற்கையின் கண்கள்
  அதை கான்க்ரிட் காடுகளால் ஈடுகட்டமுடியாது//

  சரியாகச் சொன்னீர்கள். காலத்தின் அவசியம் என மரங்களின் இழப்பை நியாயப்படுத்துவது சரியாகப் படவில்லை.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 41. ஹேமா said...
  //உங்கள் வளர்ச்சி கண்டு மிகவும் சந்தோஷம்.வாழ்த்துகள் முத்தக்கா !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 42. மதுமதி said...
  //வடக்கு வாசல் உங்களை உயர்த்திப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை..வாழ்த்துகள்..//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 43. ஸ்ரீராம். said...
  //வடக்கு வாசல் கவுரவத்துக்கும் தமிழ்மண முன்னணி இடத்துக்கும் எங்கள் வாழ்த்துகள்.//

  ‘உங்கள்’ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்!

  ReplyDelete
 44. cheena (சீனா) said...
  //அன்பின் ராமலக்ஷ்மி - மிக்க மகிழ்ச்சி - வடக்கு வாசலில் படத்துடன் கூடிய அருமையான கட்டுரை வெளிவந்தமைக்கும் தமிழ் மணத்தில் 26ம் இடம் பிடித்ததற்கும் - கருத்துடன் கூடிய புகைப் படங்கள் இட்டமைக்கும் நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - //

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா சார்.

  ReplyDelete
 45. geethasmbsvm6 said...
  //எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் பார்த்த் பங்களூர் நகரம் பின்னர் வந்த தொண்ணூறுகளிலோ,2000 ஆண்டுக்குப் பின்னரோ, சமீபத்தில் பார்த்தபோதோ இல்லை என்பது உண்மை. நகரம் நரகமாகிக் கொண்டு வருவதும் கண்கூடாய்த் தெரிந்தது. நல்லதொரு அலசல்.

  வடக்கு வாசலில் புத்தாண்டில் இடம்பெற்றமைக்கும், தமிழ் மணம் முன்னணிக்கும் வாழ்த்துகள்.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 46. SurveySan said...
  //nice. :)//

  நன்றி:)!

  ReplyDelete
 47. துளசி கோபால் said...
  //கட்டுரை ரொம்ப அருமையா இருக்கு ராமலக்ஷ்மி. முன்னம் ஒரு காலத்துலே (1975) இந்த கெங்கேரி போகும் சாலையில்( சிட்டி பஸ் ஸ்டாண்டுலே இருந்து ஏழு மைல் தொலைவில்) வரும் ஒரு இடத்தில் குப்பை கொட்டினேன். நயந்தனஹள்ளின்னு நினைவு.

  டவுனுக்குப்போக ஜோடிபஸ் ஓடிக்கிட்டு இருந்துச்சு. நகரில் சாலையின் ரெண்டு பக்கங்களிலும் அடர்த்தியான பெரிய மரங்கள். சூரியன் கூட ஊடுருவி வரத்தயங்குவான். ஜாலியா பேசிக்கிட்டே(!!!) நடந்துபோன காலங்கள் நினைவுக்கு வருது. கெம்பகௌடா, மெஜஸ்டிக் சர்க்கிள்கள் எல்லாம் ரொம்பவே நல்லா இருக்கும்.

  பஸ் ஸ்டாண்டை விரிவு படுத்தறோமுன்னு மரங்களை வெட்ட ஆரம்பிச்சதுதான் ஆரம்பமுன்னு நினைக்கிறேன். அப்ப கூட்டம் கூட அவ்வளவா இல்லை. நாட்டுலே ஒரு 40 கோடி இருக்குமோ என்னவோ!

  ஒரு விஷயம் தெரியுமா? உங்க ஊரு, எங்க ஊருக்கு அக்காவாக்கும் கேட்டோ!!!!!!!
  http://thulasidhalam.blogspot.com/2005/02/blog-post_03.html

  வடக்கு வாசலில் வந்தமைக்கு இனிய பாராட்டுகள்.//

  சூரியன் ஊடுருவ இயலாத அடர்த்தியான மரங்கள் கொண்ட பல சாலைகள், இப்போது அந்தக் குடைகளை இழந்து விட்டன:(!

  உங்க ஊருக்கு பெங்களூரு அக்காவா இன்னும் எத்தனை காலம் இருக்க முடியுமோ தெரியவில்லை.

  வருகைக்கும் விரிவான பகிர்வுக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 48. asiya omar said...
  //வாழ்த்துக்கள் ராமலஷ்மி.பெங்களூரு பற்றிய கட்டுரை அருமை.//

  மிக்க நன்றி ஆசியா.

  ReplyDelete
 49. RAMVI said...
  //பெங்களூர் பற்றிய தங்களது கட்டுரை சிறப்பாக இருக்கு.

  நானும் பெங்களூரில்தான் இருக்கிறேன்,நான் 1998 ல் பெங்களூர் வந்தேன்,அப்பொழுது இருந்த மாதிரி கூட இந்த ஊர் இப்பொழுது இல்லை,இருந்தாலும் எனக்கு பெங்களூர் ரொம்ப பிடிக்கும்.//

  எப்படியாக இருந்தாலும் பெங்களூர் எல்லோருக்கும் பிடித்துப் போவதையும் மறுக்க முடியாது. 1991-ல் பெங்களூர் வந்தோம் அந்த நாளின் பெங்களூர் அழகே தனி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 50. ஹுஸைனம்மா said...
  //அக்கா, கதை கவிதை ஃபோட்டோ மட்டுமல்லாமல், சமூகக் கட்டுரையும் (சரியானப் பேரா?) அழகாக வருகிறது உங்களுக்கு!!//

  நானும் யோசித்தபடியேதான் வகைப்படுத்தினேன்:)!

  //பலரும் சொல்லிருப்பதுபோல, பாம்பே, டில்லி, பெங்களூர் நகரங்களை நான் 80-களில் பார்த்துப் பதிய வைத்திருக்கும் நல்ல-சுத்தமான பிம்பங்கள் உடைக்கப்படுமோ (சென்னையைப் போல) என்பதற்குப் பயந்தே அங்கேயெல்லாம் மறுபடி வர பயமாருக்கு!! (இல்லைன்னாலும் மாசாமாசம் நாங்க டூர் போயிட்டு இருக்கமாதிரித்தான் பில்டப்!! :-)))) )

  வடக்குவாசல், தமிழ்மணம் எல்லாவற்றிற்கும் வாழ்த்துகள் அக்கா!!//

  இதற்குப் பயந்து வராம எல்லாம் இருக்க வேண்டாம். வாங்க ஒரு முறை:)! நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 51. தக்குடு said...
  // அந்த ஊர்ல இருந்து பழகிட்டா வேற எந்த ஊரும் நமக்கு பிடிக்காது. வடக்கு வாசல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்!//

  அதென்னவோ உண்மைதான் தக்குடு:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 52. கவிநயா said...
  //அருமையான கட்டுரை.

  நீங்கள் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள்!//

  மிக்க நன்றி கவிநயா.

  ReplyDelete
 53. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

  ReplyDelete
 54. //ராமலக்ஷ்மி said...

  ஹுஸைனம்மா said...
  //அக்கா, கதை கவிதை ஃபோட்டோ மட்டுமல்லாமல், சமூகக் கட்டுரையும் (சரியானப் பேரா?) அழகாக வருகிறது உங்களுக்கு!!//

  நானும் யோசித்தபடியேதான் வகைப்படுத்தினேன்:)!//

  கமெண்ட் எழுதுமுன் நான் உங்க லேபிளைப் பாக்கலைக்கா. இப்பத்தான் பாத்தேன். ஸேம் பிளட்!! :-)))))

  ReplyDelete
 55. @ ஹுஸைனம்மா,
  /ஸேம் பிளட்!! /

  யோசனையாய் இருந்தாலும் உங்களுக்கும் தோன்றியது அந்த வகைதானே? இரண்டு வாக்கு! அப்போ லேபிள் தப்பில்லை என எடுத்துக் கொள்வோம்:)! மீள்வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா!

  ReplyDelete
 56. வடக்கு வாசல் வெளியிட்ட அட்டைப்படக் கட்டுரை, தமிழ்மணம் இரண்டும் மகிழ்ச்சி தருகின்றன. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 57. மிக நேர்த்தியான கட்டுரை. பெங்களூர் பற்றி பல செய்திகளை அறிந்துக் கொண்டேன்.

  வடக்குவாசல் மற்றும் தமிழ்மணம் இரண்டிற்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 58. குமரி எஸ். நீலகண்டன் said...
  //வடக்கு வாசல் வெளியிட்ட அட்டைப்படக் கட்டுரை, தமிழ்மணம் இரண்டும் மகிழ்ச்சி தருகின்றன. வாழ்த்துக்கள்...//

  மிக்க நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 59. அமைதி அப்பா said...
  //மிக நேர்த்தியான கட்டுரை. பெங்களூர் பற்றி பல செய்திகளை அறிந்துக் கொண்டேன்.

  வடக்குவாசல் மற்றும் தமிழ்மணம் இரண்டிற்கும் வாழ்த்துகள்!//

  மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin